Sunday, April 17

கோ - ஏப்ரல் 22 முதல் மற்றும் சில சினி மினி



இந்த ஆண்டு ஆரம்பம் முதல் தமிழ் சினி உலகத்திற்கு சொல்லும்படியான விஷயங்கள் ஒன்றும் இல்லை .
காலாண்டு முடியும் இந்த நேரத்தில் இது வரை வந்த படங்களில் சூப்பர் ஹிட் படம் ஒன்று என்று சொன்னால் யாரும் எதிர்பார்க்காமல் திரை அரங்க உரிமையாளர் மற்றும் படம் பார்த்த எல்லோரையும் சிரிக்க வைத்த  சிறுத்தை மட்டுமே.
 இப்படத்தின் முக்கியமான 1 என்றால் நகைச்சுவை நிறைந்த திரைக்கதை கார்த்திக் மற்றும் சந்தானம் மட்டும் 
 
அதற்க்கு பின்பு தொடங்கிய உலக கோப்பை கிரிக்கெட் மற்றும் தேர்தல் ஐபில் என வரிசை கட்டி படங்கள் வெளியிட முடியாமல் திரை உலகம் திண்டாடியது என்றால் மிகை இல்லை 
 
இந்த ஐபில் நேரத்தில் திரைப்படம் வெளியிட எல்லோரும் தயங்கும் நேரத்தில் சன் டிவி தன்னுடைய மாப்பிள்ளை படத்தை வெளியிட்டது ,சன் டிவி மட்டும் அரை மணிக்கொரு முறை படம் ஹிட் என விளம்பரம் செய்கிறது

இந்த் ஐபில் சீசனில் துணிந்து வரும் மற்ற படம் கே வி ஆனந்த் இயக்கத்தில் பத்திரிகை புகைப்பட கலைஞரை மையபடுத்தி வரும் கோ படம் அவரின் முந்தைய அயன் படம் போல சிறப்பாக இருக்கும் என எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது முதல் காரணம் ஹாரிஸ் அவர்களின் இசை பாட்டு ஏற்கனவே பட்டி தொட்டி எல்லாம் கலை கட்டி உள்ளது

இந்த படத்தை பற்றி விஜய் டிவியில் வந்த அரை மணிநேர சிறப்பு நிகழ்ச்சி பார்க்கும் போது இந்த படத்திற்கு ஒரு எதிர்பார்ப்பு உண்டாக்கி உள்ளது

படத்தின் பெரும் (+)
ஹாரிஸ் ஜெயராஜ்
கே வி ஆனந்த்
ஜீவா & ரெட் ஜெயன்ட்

இந்த படம் பற்றிய திரை முன்னோட்டம் 






 

No comments:

Post a Comment

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை