Monday, November 28

சொந்தமா யோசிக்க தெரியாத வடநாட்டு கொலவெறி பாட்டு கும்பல் "Why this kolaveri di ( Female Version ) "    தனுஷ் அனிருத் உழைப்பில் வந்து இந்தியாவையே பித்து  பிடிக்க வைத்த கொலவெறி பாடலை ஒரு வடநாட்டு கும்பல் ஒரு பெண்ணை விட்டு பாட வைத்து
உண்மையான தனுஷ் பாடலின் ரேட்டிங்கை குறைக்க பார்க்கும் இந்த ஈன பயல்களை என்ன வென சொல்வது

   அதை விட கொடுமை இந்த பாடலின் வெற்றியை பாராட்டாமல் தமிழை கொள்கிறார் இதனால்  தமிழ் வளராது என்று சொல்லும்   தமிழ் ஆர்வலர்களே தமிழ் ஒன்றும் தனுஷ் போன்றவரால் அழியாது ஓரளவிற்கு வளரும்

  இப்படி பேசும் நீங்கள் முதலில் உங்கள் குழந்தைகளை தமிழ் அரசு பள்ளியில்  படிக்க வையுங்கள்  உங்கள் குழந்தைகளை மட்டும் ஆங்கில பள்ளிக்களில் படித்து உயர்ந்த வேலைக்கு செல்ல வேண்டும் இல்லாதவர் குழந்தைகள் மட்டும் தமிழ் மீடியம் படிக்க வேணும் என்ன கொடுமை சார்

   தமிழை வளர்ப்பதை விட மலையாளிகள்  போல  தமிழனிடம்  ஒற்றுமை  வளருங்கள் இல்லை என்றால் ஒற்றுமையாக இருங்கள்


   " உங்கள் நெஞ்சை தொட்டு சொல்லுங்கள் தமிழர்களிடம் உண்மையான ஒற்றுமை உள்ளதா "

   இன்றைய நிலைக்கு தமிழ் வளர்வதை விட தமிழனின் பொருளாதார தரம் உயர வேண்டும்
                        " இது ஒரு ஆதங்கம் மட்டுமே "
அந்த டுபாக்கூர் பாட்டு இது


Wednesday, November 23

தமிழர்கள் பெருமை பட வைத்த "Why This Kolaveri Di " இளைஞர்களின் தேசிய வார்த்தை  இந்த சாதனைகள் எல்லாம் செய்த தனுஷ் ஒன்றும் சூப்பர் ஹீரோ இல்லை மியூசிக் டைரக்டர் கூட உலக புகழ் இல்லை இவை எல்லாவற்றை விட எளிமை ஒன்றே காரணம்


   இன்று இந்தியா முழுவதும் கொலை வெறி என்ற வார்த்தை தேசிய சொத்து ஆகி விட்டது

 இந்திய செய்தி தொலைக்கட்சிகளில் இதை பற்றிய செய்தி
இந்தியா முழுவதும் ஒளிபரப்பான அதுவும்  அமோக ஆதரவுடன் ஒளிபரப்ப பட்ட ஒரே தமிழ் பாடல் இது

   தனுஷ் ஒரே பாடல் மூலம் தமிழர்கள் எல்லோரையும் பெருமை பட வைத்து விட்டார்

இரண்டரை மில்லியன் பார்வயாலர்களை தொடர்ந்து
ஒரு மில்லியன் பேஸ்புக் பரிமாற்றம்
இந்தியா முழுவதும் இளைஞர்களிடம் தேசிய வார்த்தை Why This Kolaveri Di கொலை வெறி  
அமிதாப் முதல் ஷாருக் வரை பாராட்டும் தமிழ் பாடல் 


Why This Kolaveri Di Full Song Promo Video 

 

Tuesday, November 1

ஒஸ்தி மாஸ் பாடல்கள் "முதல் முறையா சிம்பு படத்தில் "      சிம்பு படங்களில் பாடல்கள் நன்றாக இருக்கும் வித்தியாசமான முறையில்
இளைஞர்களுக்கு ஏற்ற முறையில் இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது 

     ஆனால் முதல் முறையாக சிம்புவுக்கு மாஸ் வசதி உள்ள பாடல்கள் கிடைதுள்ளது தரணி மற்றும் தமன் உதவியால்
இந்த ஆண்டின் முதல் ஹெவி மாஸ் மற்றும் கலக்கல் இசை உள்ள பாடல்கள் என்றால் இதை துணிந்து சொல்லலாம்

    ஏற்கனவே ஹிந்தி மொழியில் பட்டை கிளப்பிய படம் இதும் தபாங் சல்மான் கான் திரை வரலாற்றில் துணிந்து சொல்ல கூடிய படம் இது.அதிலும் அந்த முன்னி பாடல் கலக்கிய அளவிற்கு தமிழில் அதே தரத்துடன் ஒரு பாடல் இந்த இசை ஆல்பத்தில் உள்ளது    தரணிக்கு தன்னை மீண்டும் ஒரு வெற்றிகரமான இயக்குனராக காட்ட இந்த படம் தேவைபடுகிறது " குருவி என்ற தோல்வி படத்திற்கு பின்பு தரணி இயக்கத்தில் வரும் படம் இது
   குருவி அளவிற்கு இந்த படம் மோசமாக இருக்காது என்று எதிர்பார்க்கலாம்
  கில்லி ,தூள் ,thill போல இந்த படமும் தரணி படங்களில் ஒரு வெற்றி படமாக அமையும் என்று நம்புவோமாக

 ஆனால் பாடல்கள் ஆடியோ உலகில் விற்பனையில் முதல் இடத்தில உள்ளது கலக்கலான இசை மற்றும் தரணி குருவி படத்தில் செய்த தவறுகளில் இருந்து இந்த படத்திற்கு பாடங்கள் கற்று இருப்பது பாடல்களில் தெரிகிறது

 1 . உன்னாலே உன்னாலே
    தமன் ,எஸ் .ரீட்டா
    பாடலாசிரியர் " யுகபாரதி
    அமைதியான இசையுடன் ஆரம்பிக்கும் இந்த பாடல் மெதுவாக ஹை பிட்சில் கலக்கலான ஒரு காதல் பாடல் தமன் மற்றும் ரீட்ட குரல்  இந்த பாடலின் வெற்றிக்கு முக்கிய காரணம்
யுகபாரதி சிறப்பான பாடல் வரிகளை கொடுத்துள்ளார் மற்றும் ஒரு சிறப்பு

பாடல் ரேட்டிங் : 9 /10 


  ௨.நெடுவாலி நெடுவாலி
 ராகுல் நம்பியார் ,மஹாதி
  பாடலாசிரியர் :யுகபாரதி
 " அடடா மழைடா " பையா படத்தின் சூப்பர் ஹிட் பாடலுக்கு பிறகு ராகுல் நம்பியாருக்கு கிடைத்துள்ள மற்றும் ஒரு சிக்ஸர் இந்த நெடுவாலி
  கலக்கலான் இசை கோர்வைகள் மற்றும் கேட்க்க கேட்க்க பிடித்து போகும் பாடல்
பாடல் ரேட்டிங் :9 .5 /10


3 . பொண்டாட்டி  
பாடலை பாடி எழுதியவர் : யங்  சூப்பர் ஸ்டார்  எஸ் டி ஆர் (சிம்பு )

   சிம்பு இந்த பாடலை எழுதி பாடியும் இருக்கார் , சிம்பு பாடிய பாடல்களில் ஒரு நல்ல உற்சாகம் இருக்கும் இந்த பாடலில் அது உள்ளது
கலக்கல் பாடல் ரேட்டிங் :8 .5 / 10

4 .ஒஸ்தி மாமு
 பாடல் பாடியவர் : பாபா சேகல் ,ரஞ்சித் ,ராகுல் நம்பியார்
பாடலாசிர்யார் : வாலிப கவிஞர் : என்றும் இளமை வாலி

   பாபா சேகல் குரலில்  இந்த அதிரடி பாடல் கேட்க்கும்போது படம் எப்போ வரும் என்று எதிர்பார்க்க வைக்கிறது
குத்து பாடல் என்று ஒரு வரியில் சொல்லாமல் சரியான அளவில் இசை கோர்ப்பு வேலை இந்த படத்தின் தரத்தை குத்து பாடல் என்ற அளவையும் மீறி சரியான அளவில் வந்த மாடர்ன் குத்து பாடல் இது
பாடல் ரேட்டிங் :10 /10 

5 . கலாசலா  கலாசலா
  பாடல் பாடியவர் : வயதான  இளமை குரல்கள்  டி .ராஜேந்தர் .எல் ஆர் ஈஸ்வரி ,விஜயா
  இந்த டாப் பாடலை எழுதியவர் : வாலிப கவிஞர் நம்ம வாலிதான்

  படத்தில் டாப் விஷயமா இந்த் பாடல்தான் ஹிந்தி மொழியில் முன்னி பாடல் எப்படி ஒரு கலக்கு கலக்கியதோ அதை விட இரண்டு மடங்கு சிறப்பான பாடல் இது ,அதுவும்  எல் ஆர் ஈஸ்வரி குரல் இன்றைய யூத்தையும் ஆட வைக்கும்
வடக்கே கேட்டு பாரு என்று எல் ஆர் ஈஸ்வரி ஆரம்பிக்கும்போதே இந்த பாடலை எப்படி திரையில் தரணி கொண்டு வர போகிறார் என்று நம்மை எதிபார்ப்பை உண்டாக்கி விட்டார் தமன்
  இந்த ஒரு பாடலுக்கு மட்டும் மல்லிகா செகாவத்  குத்தாட்டம் சிம்புவுடன் ஆட போகிறார்

   நீண்ட நாட்களுக்கு பிறகு திரை அரங்கில் துணிந்து ஒன்ஸ்  மோர்  கேட்க்க வைக்கும் பாடல்கள் 

பாடல் ரேட்டிங் :10 /10

  ஆகா தமன் இசை அமைப்பில் அவருக்கு ஒரு மைல் கல் பாடல் இது

கண்டிப்பாக கேட்க்க கூடிய பாடல் இது SUPER OSTHI TRAILER