Monday, May 31

மழை வருது மழை வருது


          * பூமியில் உள்ள மொத்த நீரில் 3 சதம் மட்டுமே தூய்மையான நீர். மீதமுள்ளது, உப்பு  நீராக கடலில் உள்ளது.
            *மொத்தமுள்ள தூய்மையான நீரில், 11 சதம் பூமியில் உள்ள நிலத்தடி நீர். இவை நாம் பயன்படுத்த,   

            *800மீட்டர்  ஆழம் வரை கிடைக்கிறது.              
     *வரும் காலங்களில் கூடி நீர் வேண்டி பெரும் அளவில் சண்டை கூட நடக்கும்
      *தங்கத்தை விட நீரின் மதிப்பு உயரும்


 எப்படியோ கோடை வெயில் வாட்டி செல்லும் இந்த நேரத்தில் .நம்மை மிகவும்  கவலைக்குள்ளக்கியது வெயிலின் தாக்கம்
வெயில் போவுது விடுங்க இப்போ வர போகும் மழை காலத்தில் நாம் என்ன மாதிரியான செயல்கள் செய்ய வேண்டும் எப்படி மழை நீரை சேமித்து கோடை காலத்தில் தண்ணிர் பிரச்சினை இல்லாமல் காப்பது என்று முன் யோசனை செய்வதே சால சிறந்தது

மழை நீர் சேமிப்புக்கு பல வழிகள் இருந்தாலும் மழை நீரை சரியான நேரத்தில் நிலத்தில் சேமிக்க உதவும் மழை நீர் சேகரிப்பு தொட்டிகள் சிறந்த வழி எனலாம் .ஜெயலலிதா ஆட்சி காலத்தில் சட்டமாக கொண்டு வரப்பட்ட சிறந்த திட்டம் என்று கூட இதை சொல்லலாம் .இந்த திட்டம் மூலம் மழை நீரை சேமிக்க அதிக அளவில் செலவு ஆகாது .அனைவராலும் செய்யகூடியதே

மழை நீர் சேமிப்பு பற்றி நான் தனியாக பதிவு போடுவதை விட மழை நீர் சேமிப்பு மற்றும் நீர் சேமிப்பு பற்றி இருக்கும் இந்த தளங்களில் சென்று பயன் பயன் பெறவும்

மழை நீர் சேமிப்புக்கான இந்தியாவின் பிரத்யோக இணைய தளம் என சொல்லும்
தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரியம் சொந்தமான இணைய தளம் இது தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரியம் சொந்தமான இணைய தளம் செல்ல இதை அழுத்தவும்

மற்றது மத்திய அரசாங்கம் நடத்தும் இணைய தளம் 


மத்திய அரசாங்கம் நடத்தும் இணைய தளம் செல்ல இதை அழுத்தவும்

இரண்டு தளங்களும் மழை நீர் சேமிப்பு பற்றி மிக சிறப்பான தகவல்கள் தருகிர்ன்றன முடிந்தால் நம் வீட்டில் அழகிய முறையில் மழை நீர் சேமிப்பு தொட்டிகள் அமைத்து மழை நீர் சேமிப்போம் வருங்கால சந்ததிகளுக்கு உதவி செய்வோம்

இந்த பதிவை படித்த நீங்கள் இந்த பதிவின் கருத்து பல பேரை சென்றடைய உதவி செய்யவும் மறக்காமல் உங்கள் வோட்டை போடுங்க சார்
பேஸ் புக் மூலம் நண்பர்களுக்கு கூறவும்

Sunday, May 30

வெற்றி படமும் வெற்றி இசையும்


போன வருடம் ஏப்ரல்  முதல் இந்த ஆண்டு மே வரை எத்தனையோ படங்கள் வந்தாலும் வெற்றி படங்கள் என்பது குறைவே
அதிலும் படத்தின் வெற்றிக்கு பாடல்கள் அதிக அளவில் உதவிய படம் என்றால் மிகவும் குறைவே

1 அயன்  (ஹாரிஸ் ஜெயராஜ் )


            ஹாரிஸ் ஜெயராஜ் பின்னணி இசையும் சரி பாடல்களும்  சரி இந்த படத்தை இவரின் இசை இல்லாமல் நினைத்து பார்க்க முடியாது .நெஞ்சே நெஞ்சே நீ எங்கே, ஹனி ஹனி ,தமிழ் நாடும் முழுவதும் கலை கட்டிய
விழி மூடி கண்கள் ,  இந்த படத்தின் இசை இப்படத்திற்கு பெரும் அளவில் உதவியது .
அயன் படமும்  ஹாரிஸ் இசையும் வெற்றி கூட்டணி சதவிதம் சூப்பர் ஹிட்

2 விண்ணை தாண்டி வருவாயா (எ ஆர் ரஹ்மான் )


        ஹாரிஸ் இல்லாத கௌதம் முதல் படத்திலே ரஹ்மான் சிக்ஸர் அடித்த படம் ஆஸ்கர் விருதுக்கு பின் ரஹ்மானின் சிறப்பான இசை (புதுமையான இசை என்றால் இன்னும் சிறந்தது ) சில அரை குறை விமர்சகர்கள் பாடலை குறை சொன்னாலும்  .இந்த படத்தின் வெற்றிக்கு ரஹ்மானின்  இசை மிக பெரும் அளவில் உதவியது சால சிறந்த்தது .
கௌதமும் ரஹ்மானும் புது வெற்றி கூட்டணி வெற்றி சதவிதம் சூப்பர் ஹிட்

3 பையா (யுவன் ஷங்கர் ராஜா)              இந்த படத்தின் வெற்றிக்கு மற்ற படத்திற்கு இசை அமைத்த  இசை அமைப்பாளர்களின் பாடல்களை விட யுவனின் இசை வெற்றிக்கு நூற்றுக்கு நூறு உதவியது
யுவனின் ஒவ்வொரு பாடலும் சரி படத்தின் வெற்றிக்கு ஒவ்வொரு கட்டத்திலும் பெரும் அளவில் உதவியது
யுவன் லிங்குசாமி பைய வெற்றி சதவிதம் நூற்றுக்கு இருநூறு

ஒரு படத்தின் பாடல்கள் அந்த படத்தின் வெற்றிக்கு அதிகம் உதவியது என்றால் அது அரிதாக அமையும் அந்த வகையில் அமைந்த பாடல்கள் இவை

தொடர் ஆதரவு தரும் அனைவருக்கும் நன்றி    நஷ்டம் அடைந்த  திரை அரங்க உரிமையாளர்கள் சிங்கம் படத்தின் மூலம் சந்தோஷம் அடையும் இந்த நேரத்தில் நக்கீரன் தனமான விமர்சனம் செய்து படத்தினை பற்றி உங்களுக்கு பிடிக்க வில்லை என்ற காரணத்தால் படத்தின் வெற்றியை தடுக்க வேண்டாம் நல்லவர்களே

ஏன் என்றால் இன்று துபாய் கலேரிய திரை அரங்கு சென்று படம் பார்த்த என் நண்பர்கள் சொன்ன வார்த்தை "ரெண்டு மணி நேரம் படம் சரி ஜாலிய போச்சு  படம் பார்க்கலாம் சூப்பர் "
ஒரு சராசரி ரசிகன் முதல் அறிவு ஜீவி ரசிகன் வரை முதலில் எதிர் பார்ப்பது போரடிக்காமல் போகும் நல்ல திரைகதை  மட்டுமே
திரை அரங்கு நிறைந்து  இருந்ததது .என்பது அவர்கள் சொன்ன மற்றொரு விஷயம்

Friday, May 28

இங்கிலாந்தில் அதிகம் டவுன்லோட் செய்யப்படும் கலைஞர் எ ஆர் ரஹ்மான்

இப்போது இருக்கும் மொபைல் போன் உலகில் காலர் ட்யூன்.ரிங் டோன் என பல வழிகளின் நாம் நமக்கு பிடித்த பாடல்களை டவுன்லோட் செய்து கேட்க்கிறோம் .இதன் மூலம் ஒரு தனி வருமானம் இசை நிறுவனங்கள் மற்றும் இசை கலைஞர்களுக்கு கிடைக்கிறது


டவுன்லோட் செய்யப்படும் பாடல் அந்த பாடல் புகழ் மற்றும் அதில் உள்ள கலைஞர்கள் பொறுத்து டவுன்லோட் அதிகம் ஆகும் அதன் மூலம் ஒரு தனி வருமானம் கிடைக்கும்
இந்த விஷயத்தில் கூட ரஹ்மான் சத்தம் இல்லாமல் ஒரு உலக சாதனை புரிந்து உள்ளளர் .
இந்திய பாடல்கள் உலகம் முழுவதும் புகழ் பெற்று உள்ள நேரத்தில் இங்கிலாந்தில் NOKIA OVI இசை தளத்தின் மூலம் அதிக அளவில் டவுன்லோட் செய்யப்பட்ட இந்திய இசை கலைஞர் என்ற பெயரை பெற்று உள்ளார்
இங்கிலாந்தில் மட்டும் இல்லாமல் சிங்கப்பூர் .uae ,சவுத் ஆப்ரிக்க சுவிஸ் ,ஆஸ்திரேலிய மெக்ஸிகோ ரஷ்யா போன்ற நாடுகளில் கூட அதிக அளவில் டவுன்லோட் செய்யப்படும் இந்திய இசை கலைஞர் எ ஆர் ரஹ்மான் மட்டுமே


இந்த கருத்து கணிப்பு NOKIA OVI மூலம் 35 நாடுகளில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் வெளியிடப்பட்டது


சினி கொசுறு :

சிங்கம் படம் பார்க்க வில்லை ஆனால் நம் நண்பர்கள் வலை தளத்தில் எழுதிய வரையில் ஒரு விஷயம் புரிய வருகிறது .
ஒருத்தன் படம் பார்க்க போனால் அவனுக்கு தேவை உண்மையான பொழுது போக்கு மட்டுமே .அதை விட்டு விட்டு நக்கீரன் மாதிரி அது குறை இது குறை என்று பார்க்க மாட்டன்

அதிகமான அளவில் படித்த வரையில் சுறவை விட நூறு மடங்கு இந்த படம் சூப்பர் என்றே .
அந்த வகையில் சிங்கம் (அ)சிங்கம் ஆகவில்லை

ஆக்சன் படம் நடிப்பது ஈசி ஒரு நல்ல கதை உள்ள படத்தில் நடிப்பதே கஷ்டம்
இந்த விஷயத்தை இனியாவது விஜய் புரிந்தால் சரி

Monday, May 17

செய்தி துணுக்கு (காபி,காரம், கொஞ்சம் ஆதங்கம் )

உலக அளவில் தேடப்படும் தீவிரவாதிகள்

 போர்ப்ஸ் பத்திரிக்கை உலக அளவில் பெரிய மனிதர்களை மட்டும் வரிசைபடுதுவதில்லை இது போன்ற சில தீவிரவாதிகள் வரிசைபடுத்தி வெளியுடிகிறது அந்த அளவில் தேடப்படும் டாப் தீவிரவாதிகள்
  முதல்  இடத்தை பெறுபவர்
ஒசாமா பின் லேடன்
இரண்டாம் இடம் பிடிப்பவர்
மெக்ஸிகோ ஜோவாகின்  குஜ்மேன்
மூன்றாம் இடம்
தாவுத் இப்ராகிம்

நாட்டுக்கு ரொம்ப முக்கியமான விஷயம் சார் கருணாநிதி படத்திற்கு இசை அமைக்க ஆசை எ ஆர் ரஹ்மான்
          ரஹ்மான் சார் நீங்க இசை அடிச்சா அந்த படம் ஏதோ கொஞ்சம் எதிர்பார்ப்பு இருக்கும் .அந்த பேரை கெடுக்க வேணாம் வேண்டும் என்றால் .இன்னும் ரெண்டு தமிழ் பாட்டுக்கு வேணா இசை அமைங்க எங்களையும் சேர்த்து கொடுமை செய்ய வேண்டாம்
இப்படிக்கு அப்பாவி ரசிகன்எ ஆர் முருகதாஸ் "7 ஆம்  அறிவு "

 

 முருகதாஸ் ஹிந்தி கஜினியின் மாபெரும் வெற்றிக்கு பின் ஷாருக் கான் படம் இயக்குவர் அமீர் கான் படம் இயக்குவர் என்ற புரளிகளுக்கு பின் தமிழ் மொழியில்
உதயநிதி ஸ்டாலின் தயாரிக்க  சூர்யா கமல் மகள் ஸ்ருதி  நடிக்க ரவி கே சந்திரன் ஹரிஷ் ஜெயராஜ் என்று ஒரு பலமான கூட்டணியுடன் தமிழ் ஹிந்தி தெலுகு என மூன்று மொழியில் கலக்க போகும் படத்திற்கு வாழ்துக்கள் அஸ்லான் ஷா ஹாக்கி இந்திய தென் கொரியா கோப்பை பகிர்வு

இன்னுமாட இந்த ஊர் நம்பலை நம்புது? என்ற கணக்காய் இருபது இருபது உலக கோப்பை விளையாட்டில் இந்திய விளம்பர அணி தோற்றதை பற்றி செய்திகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் மீடியாக்கள்
 ஹாக்கி இனி இந்தியாவிற்காக விளையாடி வெற்றி பெற்ற விஷயத்தை  பெரியதாக காட்டுவதை விட கிரிக்கெட் விளம்பர அணி மதுபான கூடத்தில் தண்ணி அடித்த விஷயத்தை காட்டி இன்னும் கிரிக்கெட் விளையாட்டிற்கு முன்னுரிமை தருவதற்கு ஒரு குட்டு


 தொடர்ந்து என் பதிவுகள் சரியான  வோட்டுகள் இல்லாமல்  நிறைய பேரை அடைய வில்லை (ரொம்ப பேர் படிச்சா மட்டும் என்ன செய்ய போறாங்க ?எல்லாம் ஒரு ஆசை தான சார் எனக்கும் ஒரு குழு சேர்க்க வேண்டும் என நினைக்கிறேன் )

ரொம்ப பொறுமையா படித்ததிற்கு பொறுமை திலகம் என்று  பட்டம் உங்கள் மெயில் அனுப்பி வைக்கிறேன் நன்றி


Sunday, May 16

AR ரஹ்மான் செம்மொழி மாநாட்டு பாடல்

AR ரஹ்மான் இசையில் கோவை உலக தமிழ் மாநாட்டு பாடல் கரு பொருள் பாடல் வெளியுட்டு விழாவில் கருணாநிதி  சொன்னது போல விடிய விடிய கேட்க்க வில்லை பத்து முறை தொடர்ந்து கேட்டேன் நிச்சயம் ரஹ்மான் ரசிகனாய் எனக்கு சிறந்த பாடல் என்பேன் .இது ஒரு ரசிகனின் குரல் மட்டுமே உங்களுக்கு  பாடல் எப்படி என்று கூறவும்

கேட்க்க  கேட்க்க இனிக்குதடா உங்களுக்கு
இந்த பாடல் பற்றி ஒரு பதிவு போட வேண்டும் என்று நினைதால் சரியான பாடல் கிடைக்கவில்லை YOU TUBEல் தேடிய போது நண்பர் கோகுலராஜன் அவர்கள் ஏற்றிய இந்த பாடல் உதவியது நன்றி கோகுல ராஜன் அவர்களே

பாட்டை கேட்டு கருத்தை கூறவும்

THANKS :GOGULARAAJAN


Wednesday, May 12

இரும்பு கோட்டை சூப்பர் ஹிட்  என்னடா இந்த வார டாப் டென் படத்தில் சுறாதான்  முதல்ல இருக்கு இவன் போய் இரும்பு கோட்டை சூப்பர் ஹிட் என்று சொல்றன்னே என்று பாக்கிறிங்களா ?


வெற்றி என்பது இரு வகை படும் உண்மையான வெற்றி மற்றது ஏமாற்று வெற்றி எப்படி என்று சொல்கிறேன் .ரசிகன் என்பவன் அவன் திரை அரங்கு சென்று படம் முழுவதும் பார்த்து ச்சே! என்ன படம் இது என்று சொன்னால் இது என்று சொன்னால் அது முழு தோல்வி .
பரவாயில்லை சில இடம் மட்டும் தான் சரி இல்லை என்றால் அது வெற்றி வரிசையில்  சேரும்  .


ரசிகன் சொல்லும் கருத்து எப்போதும் உண்மை இருக்காது சில நேரங்களில் மட்டுமே அதில் உண்மை இருக்கும் .(நான் ரஹ்மானின் பாட்டு நல்ல இருக்கு என்று சொன்னால் அது என் கருத்து ஆகா இருக்குமே தவிர பொதுவான கருத்தாக இருக்காது )

  அந்த வகையில் எல்லோராலும் நன்றாக இருக்கு என்று சொல்லப்படும் இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்  உண்மையான ஹிட் என்பேன்.


பெரிய ஹீரோ இல்லை ,பெரிய அளவில் விளம்பரம் இல்லை இருந்த போதும் தமிழ் திரை உலகம் மறந்து போன நகைச்சுவை திரைப்படம் ரிஸ்க் அதிகம் உள்ள கௌ பாய் கதை அதிகமான செலவு .
எப்போதும் நல்ல கதை உள்ள படங்கள் புதுமைகளை  வரவேற்கும் தமிழ் மக்களை நினைத்து எடுக்கப்பட்டு இருக்கும் இந்த படத்தை 
மோசமான விமர்சனம் மூலம் பின்னடைவு செய்ய வேண்டாம், முடிந்தால் நல்ல முறையில் விமர்சனம் செய்யவும் இல்லை என்றால் விமர்சனம் செய்ய வேண்டாம் 


நீங்கள் இந்த படத்திற்கு செய்யும் எதிர் மறை விமர்சனம் .

புது மாதிரியான் நல்ல படங்கள் வருவதை தடுத்து
எறா,நெத்திலி ,கருவாடு  போன்ற தமிழ் திரை உலகை உருப்படாமல்  போக வைக்கும் படங்கள் இன்னும் அதிகம் தாக்கும்  என்ற பயத்தில்  சொல்கிறேன் .
நகைச்சுவை களத்தில் வரும் இது போன்ற படங்களில் சில தவறுகள் இருந்தால் மன்னிக்கலாம் பாஸ்

புதுமையா எடுக்கிறேன் என்று ரசிகனை மோசமாக சோதிக்க வில்லை.புதுமையான கதை என்று என்ன கதை சொல்ல வந்தோம் என்று சொல்ல வந்தவருக்கும் தெரியாமல் ரசிகன் என்பவனை இன்னும் சோதிக்கவில்லை சிம்பு  தேவன் இன்னும் நல்ல நகைச்சுவை  திரைப்படங்கள் தர ஆதரவு தருவோம்
மனிதனை தாக்கும் மிருகங்களிடம் இருந்து ரசிகனை காப்போம்

  ஆகா மீண்டும் சொல்கிறேன் "இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் "
 நம்மை சிரிக்க வைக்கும் நல்ல சிங்கம் சார்

இது வரை பொறுமையா படித்ததிற்கு நன்றி

 
புதுமையான முயற்சி இதில் சில தவறுகள் இருக்கும் இது மன்னிக்க கூடியதே 

                 மறக்காம உங்கள் பொன்னான வோட்டையும் குத்திட்டு போங்க 

Sunday, May 9

A R ரஹ்மானின் ட்விட்டர்& பேஸ்புக்                இந்த இணைய உலகின் காலத்தில்   சின்ன   ஆட்கள்  முதல்  பெரிய  ஆட்கள்  வரை  தொழில்நுட்ப  வசதியை  பயன்படுதுகின்றனர்
அந்த வகையில் அமிதாப் அமிர்கான் போன்றோரின் வரிசையில் ரஹ்மானும் பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் தன்

தன் குழந்தைக்கு நடந்த சிகிச்சை பற்றி ஒரு அப்பாவாக தன் ரசிகர்களுடன் கருத்து பரிமாறியது. ராவண் பாடல் பற்றி என தன் கருத்துக்களை ரசிகர்களுடன் பரிமாறுகிறார் ரஹ்மான் 


ரஹ்மானின் பேஸ்புக்  பார்க்க சேர இதை அழுத்தவும்ரஹ்மானின்  பேஸ்புக் இதுவரை 509 ,212 நபர்கள் விரும்புகின்றானர் நீங்கள் எப்போ
மனதில் உள்ளவைகள் மற்றும் புது பட பாடல் பற்றி சிறப்பாக பரிமாறுகிறார் ரஹ்மான்

Saturday, May 1

ராவண் இசை வெளியிடு புகைப்படங்கள்

இசை புயல் ar  ரஹ்மான் மணிரத்னம் கூட்டணியில் ஹிந்தியில் கலை கட்டும் ராவண் இசை வெளியியுட்டு புகைப்படங்கள்  சில

 
   
ஆறு பாட்டு அத்தனையும் முத்து
பாடல் விமர்சனம் விரைவில்
கேக்குறேன் கேக்கறேன் கேட்டுகிட்டே இருக்கேன் .ரஹ்மானின் மஜிக் இசை நீங்களும் கேளுங்கள்
உங்கள் பின்னுட்டம் இடவும்