Monday, May 30

ரஹ்மான் ஆஸ்கரை விலை கொடுத்து வாங்கினாரா ? (இஸ்மாயில் தர்பார் பிதற்றல் )



    

ஒரு இந்தியன் உலக அளவில் தன்னுடைய சாதனை செய்தால் அதை முதலில் பாராட்டுவது இந்தியனாக இருக்க வேண்டும் ஆனால் .அவன் செய்த சாதனையை குறை கூறுவது அந்த கலைஞனை பிடிக்காமல் இருக்க வேணும் அல்லது அவன் மேல் பொறாமை இருக்க வேண்டும்

    தமிழ் கலைஞர்கள் ஹிந்தி மொழியில் சென்று சாதனை செய்தால் பாராட்டும் மனபக்குவம் இல்லாதவர்களை கூட ரஹ்மான் அவரின் இசை சாதனை மூலம் வென்று காட்டினார்

   

ஹிந்தி மொழியில் மட்டும் வெற்றி கொடி நாட்டாமல் உலக அளவில் சாதனை செய்த ரஹ்மானை அவர் விருது வாங்கி இரண்டு ஆண்டுகள் சென்ற பின்பு   இஸ்மாயில் தர்பார் என்ற ஹிந்தி மொழி இசை அமைப்பாளர்  ரஹ்மான் இசை அமைத்த ஷ்லம்டாக் மில்லியனர் படம் பற்றி இப்படி கூறி உள்ளான் :ஆப்  ஹீ  படியே உஷ்  பிலிம்  கே  மியூசிக்  மெயின் ஆஸ்கார்  ஜெயிச  க்யா தா …குச்  பீ  தொஹ்  நஹி  தா   ( நீங்களே சொல்லுகள் இந்த படத்தில் ஆஸ்கர் விருதுக்கு தகுதியான இசை இருக்கா ? ஒன்றும் இல்லை  அப்படின்னு இந்த இஸ்மாயில் சொல்கிறான் )

  அதாவது இவன் இசை வாழ்கையில் ஒழுங்கா அடித்த உருப்படியான   படம் ஹம் டில் தே சுகே சனம் மற்றும் தேவதாஸ்  மட்டுமே அதற்க்கு பின்பு அவன் இருக்கும் ஹிந்தி மொழியல் கூட தன்னுடைய திறமை நிருபிக்க முடியாத இவன் உலக அளவில் இருக்கும் எல்லா இசை விருதுகளும்  பெற்ற படத்தை பற்றி அந்த இசை பற்றி ரஹ்மான் மீது உள்ள பொறாமையில் ரஹ்மான் ஆஸ்கர் விருதை விலை கொடுத்து வாங்கி விட்டார்  என்று சொல்வது   

  இவன் போன்ற பொறமை பிடித்த இசை கலைஞர்கள் இன்னும் எத்தனை இருக்கிறார்கள் என்று தெரியவில்லை
  ரொம்ப நாளாக இருந்த வயிற்று எரிச்சலை இப்படி கேவலமான கருத்துக்களை சொல்லி தன மீது புழுதி தெளித்து கொள்ளும் இவனை என்னவென்று  சொல்வது  


pirtam பற்றி அவன் சொன்ன வீடியோ இது




 இதற்க்கு முன்பு இவன் இசை அமைப்பாளர் pritam  பற்றி பிரதம் ஒரு இசை திருடர் என்று சொன்னவன்  அப்படி பட்ட  முட்டாள் இவன் 

  

இவனை எல்லாம் ஆளாக மதித்து ரஹ்மான் ஒரு மறுப்பு வெளியுட்டுள்ளார்
ஆஸ்கர் விருது என்பது 3000  பரிசலனைக்கு பின்பு தருவது என்னாலாம் எல்லாம் எல்லோரையும் விலைக்கு வாங்க முடியாது என்று கூறி உள்ளார் 

  இவனை எல்லாம் மதித்து மறுப்பு வெளியிட வேணாம்  ரஹ்மான்

Sunday, May 29

"ஜட்டி" குறும்பட விமர்சனம் (ஆட்டோ சவாரி விரைவில் )



நடிப்பு :அஷர் ,சாணக்கியன்
வசனம் :ஆர்.சரண்

கதை திரைக்கதை இயக்கம் எடிட்டிங் :பகுருதீன்




நிறுவனம் :பாசி சினிமாஸ்





ரொம்ப நீண்ட நாட்களுக்கு பின்பு மீண்டும் ஒரு குறும்பட விமர்சனம்

சொல்ல வந்த கருத்தை சுருக்கமா சொல்ல வருவது குறும்படம் அதிலும் படத்தின் கருவை நகைச்சவை கலந்து கொடுப்பது மற்றும் ஒரு வகை

இந்த படத்தில் ஒரு அன்றாட பொழப்புக்கு அல்லாடும் ஒரு இளைஞன் தான் வாங்க நினைக்கும் ஒரு பொருளை வைத்து இந்த படம் நகருகிறது (என்ன ஐ போன் மேக் ஐ பேட் சோனி வையோ அப்படியான்னு நீங்க கேட்பது தெரிகிறது )
ஆனா இந்த படத்தில் வரும் ஹீரோ ஆசை படும் ஒரு பொருள் ஜட்டி

பஸ் ஸ்டாண்டில் தினசரி வெள்ளரி காய் தண்ணீர் பாக்கெட் விற்கும் ஒருவரை வைத்து நகைச்சவை கலந்த படைப்பு

சில இடங்களில் பார்க்கும்போது நமக்கு ஒரு மாதிரி இருந்தாலும் சொல்லும்படியான படைப்பு 


 


பகுருதீன் அடுத்த படைப்பு :ஆட்டோ சவாரி (விரைவில் )


Thursday, May 26

4 மொழி நடிகர்கள் மோதும் 20/20 கிரிக்கெட்




உலக கோப்பை முடிந்த உடன் இப்போ ஐபில் 20/20 விளையாட்டு அதை முடித்த உடன் இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் செல்லுகிறது என கிரிகெட் உலகமே பரபரப்பாக இருக்கும் வேலையில்

திரை உலகமும் சும்மா இல்லாமல் 20/20 ஓவர் கிரிக்கெட் போட்டியை நடத்துகிறது

தமிழ் தெலுங்கு கன்னட ஹிந்தி மொழி நடிகர்கள் இடையில் நடக்கும் (நடிக்கும்) போட்டிகள் வரும் ஜுன்4முதல் தொடங்கி 12 வரை நடக்கும்.
போட்டிகளில் தமிழ் அணிக்கு சென்னை ரைநோஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது 
சென்னை அணி சூர்யா தலைமையில் விளையாடும் சூர்யா தலைமையிலான அணியில் சரத்குமார், விஷால், ஆர்யா, பரத், ஜெயம் ரவி, அப்பாஸ், மாதவன், ஷாம், ஜித்தன் ரமேஷ், விக்ராந்த், சாந்தனு, ரமணா, விஷ்ணு, கார்த்திக்குமார், சிவா இடம்பெற்றுள்ளனர்

அணிகள பெயர் தெலுங்கு வாரியார்ஸ்(வெங்கடேஷ் தலைமையில் ) ,கர்னாடக புல்டாசர்(அசோக் ) ,மும்பை ஹீரோஷ் (சல்மான் கான் தலைமையில் )

சென்னை அணிக்கு தனியாக லோகோ மற்றும் விளையாடு ஆடைகள் தனியாக வடிவமைக்ப்பட்டுள்ளது


  JUNE 4 தமிழ் தெலுங்கு pm,பெங்களூர்

JUN4
ஹிந்தி Vs
கன்னடா
5 pm, பெங்களுரு
June 5
கன்னட தமிழ்
1 pm, சென்னை
June 5
தெலுங்கு ஹிந்தி
5 pm, சென்னை
June 11
தமிழ் ஹிந்தி
1 pm, விசாகபட்டினம்
June 11
கன்னடா தெலுங்கு
5 pm, விசாகபட்டினம்
June 12
இறுதி போட்டி
ஹைதராபாத்

Wednesday, May 25

மிகப்பெரும் முட்டைப்புழு உயிரோடு சாப்பிடும் மனிதர் (Man vs. Wild)



டிஸ்கவரி சேனல் பார்பவர்களுக்கு அதில் வரும் Man vs. Wild நிகழ்ச்சி பற்றி தெரியும் .அதிலும் Bear Grylls அவர் தன்னந்தனி கட்டில் தனியாக உயிர் வாழ கற்று தரும் நுணுக்கம் சிறப்பானது அதில் அவர் உயிரோடு தவளை பாம்பு என கையில் கிடைப்பதை எல்லாம் சாப்பிட்டு உயிர் வாழ கற்று தரும் நிகழ்ச்சி மிக புகழ் பெற்றது

இந்த நிகழ்ச்சி மட்டும் இல்லை டிஸ்கவரி சேனல் கூட தமிழில் வருவது சிறப்பு






இன்றைய பதிவில் அவர் உயிரோடு ஒரு முட்டைப்புழு சாப்பிடும் video  பார்க்க போகிறோம்






DON'T FORGET VOTE

Tuesday, May 24

மொபைலை அழகாக மாற்ற ZEDGE (BEST MOBILE SITE )




உங்களிடம் எந்த மொபைல் இருந்தாலும் சரி ஐபோன் 4 இல்லை பிளாக்பெரி மொபைலாக இருக்கட்டும்
இந்திய மொபைல் மக்ஸ், கார்பன் முதல் மைக்ரோ மக்ஸ் எந்த மொபைல் நீங்கள் வாங்கினாலும் சரி


மொபைலை இன்னும் சிறப்பானதாக மாற்ற உதவுவது வால்பேப்பர் , மொபைல் சாப்ட்வேர் ,ரிங் டோன் போன்ற பலது உள்ளது

இவைகள் நீங்கள் காசு கொடுத்து வாங்க நினைத்தால் மொபைல் காசை விட இதற்க்கு அதிகம் ஆகும் இதற்க்கு ஒரே வழி

மொபைல் சாப்ட்வேர் டவுன்லோட் செய்ய பல இணைய தளங்கள் இருந்தாலும் இன்று நாம் பார்க்க போவது ZEDGE 

இந்த வலைத்தளத்தில் முதலில் உங்கள் மொபைல் மாடலை தேர்ந்தெடுத்தது பிறகு நீங்கள் உங்கள் மொபைலுக்கு ஏற்ற வீடியோ ,ரிங் டோன் ,தீம் மற்றும் பல விஷயங்கள் டவுன்லோட் செய்யலாம்


இருபது மில்லியன் மக்கள் தங்கள் விருப்பமானதை தேர்ந்தெடுக்க விரும்பும் இணையம் இது

உங்கள் மொபைல் மாடலுக்கு ஏற்ற சிறந்ததை தேர்ந்தெடுக்க சிறந்த தளம்

உங்கள் மொபைல் போன் இணையம் மூலமும் மொபைலில் டவுன்லோட் செய்யலாம்








ZEDGE இணையம் செல்ல இதை அழுத்தவும்

Saturday, May 21

இந்த வார சினி மினி & அவன் இவன் திரை முன்னோட்ட VIDEO

 



இந்த வார ஹாட் சினி செய்தி தனுஷ் ஆடுகளம் படத்திற்கு தேசிய விருது வாங்கியது .சிலர் என்ன அவர் சிறப்பா செய்து விட்டார் வெறும் லுங்கி கட்டி கொண்டு நடித்தார் என்று சொல்பவர்களுக்கு .முதலில் அவரின் ஆடுகளம் படத்தின் நடிப்பிற்கு தமிழகம் முழுவதும் கிடைத்த ஆதரவே இப்போ தேசிய விருது அளவில் கொண்டு போய் இருக்கு

ஆடுகளம் படத்தில் தனுஷ் அவர்களின் எதார்த்த நடிப்பு கூட அந்த படத்தின் வெற்றிக்கு ஒரு காரணாமாக இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது

" அவர் இந்த படத்தில் ஒரு சராசரி இளைஞன் பார்வையில் சிறப்பாக தன் நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்


ஆந்திரா தமிழ் திரை உலகை வசூலில் கலக்கிய சிறுத்தை பிரபுதேவா மூலம் இப்போ ஹிந்தி மொழியில் கலக்க போகிறது அக்ஷய் குமார் நடிப்பில் இந்த காமெடி சிறுத்தை எப்படி ஹிந்தி திரை உலகை கலக்க போகிறது என்று பார்க்கலாம்
ஆந்திராவில் ரவி தேஜா ,தமிழில் கார்த்திக் ,ஹிந்தி மொழியில் அக்ஷய் குமார் யார் டாப் விரைவில் பார்க்கலாம்




விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வரும் தெய்வதிருமகள் படத்திற்கு சிம்பொனி இசை பயன்படுத்தி இருக்கிறார் ஜி வி பிரகாஷ்


இன்றைய அளவில் தமிழ் திரை உலகில் முதன்மையான இசை அமைப்பாளர் என்றால் அது ஹாரிஸ் ஜெயராஜ் மட்டுமே கோ எங்கேயும் காதல் மட்டும் இல்லாமல் விரைவில் வர இருக்கும் ஒரு கல் ஒரு கண்ணாடி ,நண்பன் ,ஏழாம் அறிவு என இந்த ஆண்டு முழுவதும் கலக்க போகவது ஹாரிஸ் மட்டுமே



வரும் 29 தேதி ரஹ்மான் பெங்களூரில் இசை நிகழ்ச்சி நடத்த இருக்கிறார் பெங்களூர் நகர மக்கள் ரஹ்மான் நிகழ்ச்சியை மறக்காம பார்த்து ஒரு பதிவு போடவும்

இப்போ தேசிய விருது இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் வரும் அவன் இவன் திரை முன்னோட்ட வீடியோ



விஷாலின் நடிப்பில் இருக்கும் மாற்றத்தை பார்க்கும் போது அடுத்த வருடமும் ஒரு சிறந்த நடிகர் விருது தமிழுக்கு வரும் என பார்க்கலாம்





DON'T MISS VOTE

Wednesday, May 18

எப்படி தயாரிக்கிறார்கள் கண்ணாடி (MIRRORS) FM(13)



இன்று எப்படி தயாரிக்கிறார்கள் வரிசையில் நாம் பார்க்க போவது கண்ணாடி
கண்ணாடி அப்படின்னு சும்மா சொல்ல கூடாது நம் உருவத்தை நமக்கு பிரதிபலிக்கும் நண்பன்னு கூட சொல்லாம் 
 
போக்கிரி படத்தில் வடிவேல் கடையில் இருக்கும் கண்ணாடியில் தன்னுடைய முகத்தை பார்த்து அந்த குரங்கு பொம்மை வேணும் அப்படின்னு சொல்வார் அப்படி இல்லாமல் இருந்தால் சரி

ஒரு கண்ணாடி தயாரிப்பில் எவ்வளவு உழைப்பு இருக்கு 
 





பேஸ்புக்கில் வடிவேலுவை வைத்து எத்தனை காமெடி அதில் எனக்கு பிடித்தது இது 




நண்பர்களே நான் இருக்கும் DMK கட்சியில் போதிய பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் அம்மா
இருக்கும் இரும்புகோட்டையாகிய ADMKவுக்கு மாறுகிறேன்.இதனால் என்னை கோழை என்றோ,பச்சோந்தி என்றோ யாரும் எண்ண வேண்டாம் இருக்கின்ற இடத்திலே, இருக்கின்ற கட்சியை விட்டுத்தாவும் தைரியம் இந்தியாவிலே எனக்கு ஒருவனுக்கு தான் இருக்கிறது என்று தெரிவித்துக்கொள்கிறேன்


ஒரு வகையில் வடிவேலு ஹீரோதான் தான் எதிர்த்த விஜயகாந்த்   கட்சிகாரர்கள் இன்னும் அவர் வீட்டில் தாக்குதல் நடத்துவதில் இருந்து வடிவேலு மீது இன்னும் பயம் இருப்பது நிச்சயம்




 

Tuesday, May 17

இரண்டு இமயங்கள் இணைகின்றன (A.R.ரஹ்மான் யாஷ்ராஜ் சோப்ரா)



இந்தி() திரை உலகில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் சொல்லும்படியான இயக்குனரும் (யஸ்ராஜ் சோப்ரா)
நாற்பது ஆண்டுகளில் ஹிந்தி திரை உலகில் மிகப்பெரும் தயாரிப்பு நிறுவனமும் (யஸ்ராஜ் பிலிம்) உடன் ரஹ்மான் இணைகிறார்

ஹிந்தி திரை உலகில் இசையுடன் கூடிய வெற்றி பட நிறுவனமும் வெற்றி பட இயக்குனர் யஸ்ராஜ் தான் இயக்கும் அடுத்த படத்திற்கு இசை அமைக்க இசை புயல் ரஹ்மான் உடன் இணைந்துள்ளார் என்பது பாலிவுட் ரசிகர்களுக்கு மட்டும் இல்லை தமிழ் ரசிகர்களுக்கும் சந்தோஷம் தரும் செய்தி ஆகும் 
 

இதற்க்கு முன்பு வந்த யஸ்ராஜ் அவர்களின் முந்தைய படமான டில் தோ பாகல் ஹை ,வீர்ஜாரா போன்றவைகளின் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனது தெரிந்த விஷயம்

 


ஒரு இசை கலைஞன் எவ்வளவுதான் திறமைசாலியாக இருந்தாலும் அவன் இசை சரியான அளவில் கொண்டு செல்ல நல்ல இயக்கனர் தேவை அந்த வகையில் ரஹ்மானுக்கு சிறந்த இயக்குனர்கள் இயக்கம் படங்களில் பணியாற்ற வாய்ப்பு கிடைப்பது கூட அவரின் இந்த தொடர் வெற்றிக்கு காரணமாக இருக்கலாம் 
 

மணிரத்னம் கௌதம் மேனன் ஷங்கர் போன்ற தமிழ் இயக்குனர்கள்
அஷுதேஷ் கவ்ரிகர் ,இம்தியாஸ் அலி ,ராகேஷ் ஓம் பிரகாஷ் ,அப்பாஸ் தைரிவால, சுபாஷ் கை போன்ற ஹிந்தி இயக்குனர்களுடன் பணியாற்றுவது கூட அவரின் தொடர் வெற்றிக்கு காரணமாக இருக்கலாம்

இப்போ அந்த வரிசையில் பழம்பெரும் இயக்குனர் யாஸ்ராஜ் சோப்ர உடன் இணைகிறார் ரஹ்மான்


Sunday, May 15

வேலாயுதம் ஜெயா டிவி திரை முன்னோட்ட வீடியோ 2



கொஞ்ச நாள் ப்ளாகர் செய்யும் இடர்பாடுகள் காரணமாக பதிவு போடவில்லை இதனால் ஒன்றும் ஆகபோவதில்லை என்று நீங்கள் சொல்வது தெரிகிறது

கலைஞர் டிவியில் ஆரம்பித்த வேலாயுதம் இப்போ ஜெயா டிவி பக்கம் மாறி உள்ளது

அந்த இரண்டு video கீழே 
 


VIDEO 1




VIDEO 2





DON'T MISS VOTE

Wednesday, May 11

எப்படி தயாரிக்கிறார்கள் மங்காத்தா கார்ட் (Playing Cards) FM(12)



எப்படி தயாரிக்கிறார்கள் வரிசையில் இன்று நீங்கள் பார்க்க போவது ரம்மி மங்காத்தா என்று செல்லமாக அழைக்கப்படும் .திருமண வீடுகளில் பொழுதுபோக்க அதிகம் பயன்படுவது
என பல முகங்கள் இருக்கும் Playing Cards எப்படி தயாரிக்கிறார்கள் என்று பார்க்க போறோம் 
 

இந்த மங்காத்த வீடியோக்கும் அஜித் மங்காத்தாக்கும் சம்பந்தம் இல்லை 
  






ஒரு கொசுறு தத்துவம் :

தோற்று போவோமோ என நினைத்து ஜெயிப்பவனை விட
ஜெயிப்போம் என நினைத்தும் தோற்று போகிறவன் உயர்ந்தவன் 
 
இப்போ அந்த வீடியோ



DON'T MISS VOTE

Tuesday, May 10

எதிர்பார்ப்பு உள்ள படங்கள் இரண்டு (அ.குதிரை ,எத்தன் ) ONE WORLD MOVIE


இந்த மாதம் வந்த படங்களில் பாக்ஸ் ஆபிசில் கலக்கும் படம் கோ இதில் யாருக்கும் எந்த மாற்றம் இல்லை

உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வெளியிட்டில் வந்த படம் இது
 அழகர்சாமியின் குதிரை


எதிர்பார்ப்புடன் படங்களுக்கு முன்னிலையில் எதிர்பார்ப்பே இல்லாமல் வந்து சூப்பர் ஹிட் ஆனா படங்கள் அதிகம்
அந்த வகையில் சுசீந்திரன் இயக்கத்தில் இசைஞானி அவர்களின் இசையியல் ஒரு பாஸ்கர் சக்தி எழுதிய கதையை மையமாக வைத்து அப்பு குட்டி ஹீரோவாக நடிக்கும் இந்த படம் ஒரு பெரும் எதிர்பார்ப்ப உண்டாகி உள்ளது என்பது நிச்சயம்

இந்த படத்தை தயாநிதி அழகிரி க்ளவுட் நைண் மூலம் வருவது படத்திற்கு இன்னும் அதிக அளவில் விளம்பரம் கிடைக்கும் என்பதில் மாற்றம் இல்லை




எத்தனையோ நல்ல படங்கள் சரியான முறையில் விளம்பரம் செய்யாமல் எதிர்பார்த்த வெற்றி பெறாமல் போனது அனைவருக்கும் தெரியும்
அந்த வகையில் இந்த அழகர் சாமியின் குதிரை நிச்சயம் இந்த போட்டியில் வெற்றி பெற எல்லா சாத்திய கூறுகளும் உள்ளது
இந்த படம் உலக அளவில் நடக்க இருக்கும் திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ள இருப்பது மற்றும் ஒரு சிறப்பு

ஆகா மொத்தத்தில் மே12 முதல் வரும் அழகர் சாமியின் குதிரை இந்த போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்


எத்தன்


அடுத்த எதிர்பார்ப்பு உள்ள படம் ஷேராளி பிலிம்ஸ் இதற்க்கு முன்பு தயாரித்த களவாணி படம் சக்கை போடு போட்டது அனைவரும் அறிந்த உண்மை
(இத்தனைக்கும் இந்த படத்திற்கு சரியான அளவில் விளம்பரம் கிடைக்க விடாமல் செய்த்தது ஒரு நிறுவனம்)
நல்ல படங்களை நம் ரசிகர்கள் நிச்சயம் ஜெயிக்க வைப்பார்கள் என்பதை நிருபித்த படம் இது

இப்போது அதே நிறுவனம் மூலம் வரும் படம் எத்தன் சுரேஷ் இயக்கத்தில் வரும் இந்த படம் இது களவாணி படம் போல பெரும் வெற்றி பெரும் என எதிர்பார்க்கலாம்

விமல் சனுஜா நடிப்பில் வரும் இப்படம் எப்படி என்பது இன்னும் கொஞ்ச நாளில் தெரிய போவுது
( மீண்டும் இந்த படத்திற்கு இருக்கும் பிரச்சினை சரியான அளவில் விளம்பரம் கிடைக்குமா )


இப்போ நீங்கள் பார்க்க போகும் படத்திற்கு போட்டியாக இந்திய அளவில் போட்டியிட படம் இல்லாததால்

ஹாலிவுட் ஹிட் ஜுராசிக் பார்க் படதிற்கும் அவதார் படத்திற்கும் போட்டியாக வர இருக்கும் ஒரே படம் இதுதான்




Sunday, May 8

பலராமனின் தமிழ் தோட்டம் "எறுழ்வலி "(இணைய தள விமர்சனம் )




சும்மா வந்தோம் ஏதோ எழுதினோம் வலைபதிவு திரட்டிகளில் ஏற்றினோம் என்று இருக்கும் என பதிவை பற்றி நானே சில நேரங்களில் நினைக்கும் போது.
என் மற்றும் ஒரு முகபுத்தக(FACEBOOK) நண்பர் பொறியாளர் . இன்று படிப்பை முடித்து சிறந்த வேலையில் இருக்கும் இவர் சராசரி இளைஞர்கள் போல இல்லாமல் தன்னுடைய தமிழ் மீது உள்ள பற்று காரணமாக தமிழ் பதிவுகள் மூலம் தன்னுடைய தமிழ் ஆர்வத்தை தனித்து கொள்கிறார்

தன்னை பற்றி இவர் அழகாக தன் எறுழ்வலி இணையத்தில் கூறி இருப்பது பாருங்கள்

எனது சொந்த ஊர் பாரதி பிறந்த எட்டயபுரம். நான் பிறந்தது தூத்துக்குடியில். வளர்ந்தது மதுரையில் இருக்கும் சோழவந்தானில். பள்ளிப்பருவம் சோழவந்தானில். கல்லூரி காலம் மதுரையில். தற்போதைக்கு அலுவலக அலுவல்கள் பெங்களூரில். இந்த வலைப்பதிவு மூலம் சமுதாயத்திற்கு/குடியினருக்கு என்னால் முடிந்த கருத்துக்களை கூற விரும்புகிறேன்.
என்ன அழகான வரிகள் 
 



இந்த வலைதளத்தில் கவிதை சிறுகதைகள் அழகிய தமிழ் கட்டுரைகள் என ஒரு சிறப்பான படைப்புகள் வழங்கி உள்ளார் தமிழ் ஆர்வம் உள்ளவர்கள் யாரும் விரும்பும் பக்கம் இது 


 
பலராமன் பேஸ்புக்கில் தமிழ் வளர்ச்சிகாக தனி பக்கம் ஒன்று கூட தொடங்கி உள்ளார் 
விக்கிபேடியா உடன் இனைந்து தமிழ் வளர்ச்சிக்கான தமிழ் பக்கத்திற்கு தன்னால் முடிந்த உதவிகள் செய்கிறார்
இவரின் மற்றும் ஒரு சிறப்பான செயல் 


  'கலைப்பொறியாளர்கள்'-இலும் கதையாசிரியராக இருந்து குறும்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார் 

 



ஆகா மொத்தத்தில் ஒரு கலைபொறியாளரின் இந்த தமிழ் வளர்ச்சிக்கு செய்யும் செயலை பாராட்ட வார்த்தைகள் இல்லை
இவரின் வலைத்தளத்தில் இருந்து இவரின் ஒரு அழகிய கவிதை இது
முன்குறிப்பு:
கீழே உள்ள கவிதையில் ஒவ்வொரு வரியும் சிதைவுற்றது போல் தோன்றக்கூடும். என் புதிய முயற்சிக்காக அதை சகித்துக் கொள்ளவும்!
***இலவசமாக பெற்றேன் இன்பம் தரும் காட்சிகள் திரையில்…
***பெறவில்லை ஒளி தரும் மின்சாரம் ஆனால்…
***உயிர்போகும் தனித்தீவில் தேடோடி ‘வலையில்-விழா-மீன்களால்’…
***வீணாகப்போகும் நிறைவேறாமல் உண்ணாநிலைகள் நாடகமாய்…
***உன்னிடத்தில் ‘மூன்றாம்-தலைமுறை-அலைக்கற்றை’ பெறவிரும்பினேன்…
***கற்பனைச்சிறையில் மாட்டியது கனிமொழி போராட்டங்களால்…
***ஏமாற்றம் தந்துவிடுமோ ‘கூட்டணி-தாவல்கள்’ அஞ்சுகிறேன் நான்…
***விரல் மையிட்ட நாளில் முடிவான வாக்கு…
***உறக்கம் கெட்டது அன்றிலிருந்து உராய்வால்…
இப்பொழுது நீங்கள் ஒரு அரசியல் கவிதை படித்திருக்கக்கூடும். அதே கவிதையை மீண்டும் ஒருமுறை படிக்கவும். ஆனால், ஒவ்வொரு வரியையும் ‘திருப்பி’ப் படிக்கவும். அதாவது வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கம்(‘…’-யில் தொடங்கி ‘***’ வரை)!
ஒரு காதல் கவிதை படிக்கலாம்…..!



என்ன ஒரு சிறப்பான கவிதை இது






"தமிழ் மொழி பேசுவதே கேவலம் என நினைக்கும் இந்த காலத்தில் நுனி நாக்கு ஆங்கிலம் பேசினால் தான் நம்மை மதிப்பார்கள் என்று தமிழர்களிடமே ஆங்கிலத்தில் பேசும் சில தமிலாங்கிலவதிகளுக்கு முன் தமிழ் தன் பணிகளுக்கு இடையே
தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடும்
பாலராமனுக்கு
ஒரு தமிழ் ஓ!

 
தமிழ் வளர்ச்சிக்கு இவரின் பேஸ்புக்(Tamil (Language))


 
இந்த பதிவிற்கு உங்கள் தொடர் ஆதரவு வேண்டும் 

DON'T MISS VOTE 

Saturday, May 7

நரேந்திர மோடியும் "முதல்வன் ரகுவரனும் "




என்னதான் குஜராத் முன்னேற்றம் அடைகிறது என்று அனைவரும் சொன்னாலும்
நரேந்திர மோடி சொன்னாலும் அவரை பற்றி அந்த மாநில உயர் காவல் அதிகாரிகள் சொல்லும் வாக்குமுலங்கள் பார்க்கும்போது
அவருக்கு எதிராக சஞ்சீவ் பகத் அளித்துள்ள தகவல் மூலம் நரேந்திர மோடி இன்னொரு முகம் வெளிவந்துள்ள இந்த நிலையில் முதல்வன் படத்தில் ரகுவரன் கலவரம் நடக்கும்போது போலீஸ் இடம் அவர் சொல்வார் நடக்கும் கலவரத்தை கண்டுகொள்ளாமல் இரு அதில் இருப்பது என்னோட ஜாதிக்காரன் என்று சொல்வார்

இப்போது உயர் காவல் அதிகாரி சஞ்சீவ் பகத் அளித்துள்ள தகவல் மூலம் பார்த்தல் சினிமா காட்டப்படும் சில விசயங்கள உண்மையில் நடப்பது என்னவென சொல்வது 
 

சஞ்சீவ் பகத் அளித்த வாக்குமூலம்
கடந்த   2002-ம் ஆண்டு, குஜராத் கலவரம் நடந்த போது அங்கு மூத்த ஐ.பி.எஸ். காவல் துறை அதிகாரியாக இருந்த சஞ்சீவ் பகத் தற்போது உளவுத்துறையில் பணியாற்றுகிறார். அவர் உச்சநீதி மன்றத்தில் குஜராத் கலவரம்  தாக்கல் செய்த 

மனுவில் கூறி இருப்பதாவது:-
குஜராத் கலவரத்துக்கும், முதலமைச்சர் நரேந்திர மோடிக்கும் தொடர்பு உண்டு. அவர் அப்போது கலவரக் கும்பலுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று முதலமைச்சர் நரேந்திர மோடி  காவல்துறைக்கு உத்தரவிட்டதாக உச்ச நீதிமன்றத்தில் ஐபிஎஸ் அதிகாரி  சஞ்சீவ் பகத்  மனு தாக்கல் செய்துள்ளார்.
கலவரம் நடந்த போது நான் அங்கு பணியாற்றினேன். உச்சநீதி மன்றம் அமைத்துள்ள புலனாய்வு குழுவினரிடம் நான் இதை தெரிவித்தேன். ஆனால் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. எனவே நான் தனியாக  உச்சநீதி மன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்கிறேன்.
நன்றி :இந்நேரம் .காம் 
 


 



DON'T MISS VOTE

Friday, May 6

மூன்று படங்கள் ஒரே குடும்பம் (எ,காதல் ,கோ ,வானம்) வெற்றி யாருக்கு?


தமிழ் சினிமா இப்போ இந்த மூன்று பேருடைய கையில் என்று சொன்னால் கொஞ்சம் கூட மிகை இல்லை இப்போ இவர்களின் ஆர்பாட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு யாருக்கு தெரியும் 
 

எங்கயும் காதல்:
இந்த விசயத்தில் சன் டிவிக்கு மாப்பிள்ளை கை வாரிய நிலையில் எங்கயும் காதல் சொல்லும்படியான விமர்சங்கள் வராத நிலையில் ஆட்டத்ல் ஆரம்பத்திலே வெளியேறி உள்ளது
(வில்லு உடைந்த நிலையில் ,காதல் தோல்விக்கு பின்பு பிரபு தேவா நீங்கள் எடுக்கும் அடுத்த படமாவது வெற்றி பெற வாழ்த்துக்கள் )
இந்த படத்திற்கு behindwoods ரேட்டிங் 1.5 / 5 மட்டுமே

சன் டிவி பெஸ்ட் ஆப் லக் அடுத்த முறை


வானம் :
இந்த படம் வெளியிடு மதுரை தயாநிதி அழகிரி (மதுரை)
கொஞ்சம் சுவாரசியம் குறைவு என்று மசாலா ரசிகர்கள் சொன்னாலும் விண்ணை தாண்டி வருவாயாவுக்கு பின்பு சிம்பு தன்னால் நடிக்க கூட முடியும் என்று நிருபித்த படம் இது
ஆகா இந்த படம் போட்ட முதலுக்கு மோசம் ஆகாத படம்
விமர்சனங்களில் முதல் இடத்தில இருக்கும் படம் இது
இந்த படத்திற்கு behindwoods 3.5/5 ரேட்டிங்


கோ :
ரெட் ஜெயன்ட் உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின் இப்போ தொட்டது எல்லாம் ஹிட் அதுதான் உண்மை
விமர்சன அளவிலும் சரி வசூல் அளவிலும் சரி சூப்பர் ஹிட படம் இது
இந்த படத்திற்கு behindwoods 3/5 ரேட்டிங்







ஆகா மொத்ததில் இந்த குடும்ப திரைப்பட போட்டியில் சூப்பர் ஹிட வெற்றி பெறுபவர்
ஸ்டாலின் (கோ) முதல் இடம்
இரண்டாம் இடம் மதுரை வானம் தயாநிதி

சன் டிவி இந்த போட்டியில் இருந்த வெளியே போவது தான் சரி 

DON'T MISS VOTE 

Thursday, May 5

எப்படி தயாரிக்கிறார்கள் "GLASS BOTTLE " FM(13)


எப்படி தயாரிக்கிறார்கள் வரிசையில் இன்று நாம் பார்க்க போவது கண்ணாடி பாட்டில் ஒரு நொடியில் கை தவறி விழுந்தால் சுக்கு நூறாக போகும் இந்த கண்ணாடி பாட்டில் தயாரிக்க இவர்கள் செய்யும் உழைப்பை பார்க்கும்போது 
 

அடுத்த முறை பாட்டில்கள் பார்க்கும்போது இவர்களின் இந்த உழைப்பு கண்முன்னே வரும்

முழுவதும் தானியாங்கி முறையில் இயங்கும் தயாரிப்பில் கண்ணாடி பாட்டில்கள் ஒரு போர்வீரர்கள் அணிவகுப்பை போல செல்லும் அழகு தனி

கண்ணாடி பாட்டில் அடுத்த முறை உடைந்து நொறுங்கும் முன் இவர்களின் உழைப்பை சிந்தித்து பாருங்கள் 
 




DON'T MISS VOTE

Wednesday, May 4

இந்த வார சினி மினி (கோடம்பாக்கம் )may first week



1. சிறுத்தை படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்பு கார்த்திக்கின் அடுத்த அதிரடி "சகுனி " தலைப்பே வித்தியாசமா இருக்கு படத்தில் அரசியல் கெட்டப்பில் ஒரு விளம்பர படம் இருக்கு ஆகவே இது அரசியல் சகுனி ஆட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்லாம்


  2.விஷால்  பிரபுதேவா இயக்கத்தில்  நடிக்கும் படத்தின் பெயர் பிரபாகரன் என்று சொல்லபடுகிறது எது எப்படியோ தொடர் தோல்விக்கு பின்பு விஷால் நடிப்பில் பால இயக்கத்தில் "அவன் இவன்" பிரபுதேவா இயக்கத்தில் "பிரபாகரன் " பூபதி பாண்டியன் இயக்கத்தில் "பட்டது யானை "
என ஒரு தொடர் வெற்றி வேண்டி இருப்பது மட்டும் உண்மை

3. மாப்பிள்ளை படத்திற்கு சரியான வரவேற்பு இல்லாமல் போனதால் தனுஷ் அதிகம் நம்பி இருப்பது ஹரி இயக்கத்தில் வரும் "வேங்கை " படத்தை தமனாவிற்கு இந்த படம் விட்டால் வேறு படம் இல்லை

4. விஜய் நடிக்கிறார் விக்ரம் நடிகிறார் என்ற பல செய்திகள் வந்த பொன்னியின் செல்வன் படம் இப்போதைக்கு வர போவதில்லை என்பது மட்டும் நிச்சயம் மிக பெரும் பட்ஜெட் என்பது ரஜினி தவிர வேறு யாரையும் நம்பி போட யாரும் முன்வரவில்லை இதுதான் நிச்சயம்

5.அவன் இவன் படம் எல்லா வேலைகளும் முடிந்து வெளியிட தயாராகிவிட்டது அநேகமாக ஜுன் இறுதியல் இந்த் படம் வரும் என்று எதிர்பார்க்கலாம்


6.ஷங்கர் படம் என்றால் புகைப்படம் அவர் தரும் முன் எப்படியாவது அவர் தரும் முன் பத்திரிக்கையில் போடுவது எல்லோருக்கும் விருப்பம் ஆனால் நண்பன் படம் பற்றி யாருக்கும் அந்த அளவிற்கு ஆர்வம இல்லை என்பது என்பதே உண்மை காரணம் அது ரீமேக் படம் என்பது காரமாக இருக்கலாம் 


7.இந்த ஐந்து மாதத்தில் வந்த படத்தை விட வர வேண்டிய படங்களில் எண்ணிக்கை மூன்று மடங்காக இருக்கும் என்று தெரிகிறது குறுகிய காலத்தில் இத்தனை படங்கள் வருவதால் எத்தனை படங்கள் வெற்றி பெரும் என்பது ஒரு கேள்வி குறி

DON'T MISS VOTE

Monday, May 2

கொச்சி அணியும் அலப்பறை சேட்டன்மார்களும்


முதலில் ஒன்று சொல்லிக்கிறேன் இந்த ஐபிஎல்லில் இருக்கும் மற்ற ஒன்பது அணிகளையும் நல்ல அணிகள என்பேன்
கொச்சி அணியை ஒரு அணியாகவே மதிக்க மாட்டேன் காரணம் . நம் ஊரில் ஒரு பெருசுகள் எல்லாம் சொல்வார்கள் பணம் இருப்பவன் எல்லாம் பணக்காரன் இல்லை பணம் எப்படி சம்பாதித்து வந்தது அதை வைத்துதான் அவனை மதிப்பார்கள்

அது போல இந்த கொச்சி அணி வந்த கதையும் அதன் பின்னணியில் நடந்த கேவலமான செயல்களும் அதன் காரணமாக ஒரு மத்திய மந்திரி தன் பதவியை இழந்தது ஒரு தனி கதை

கடைக்கு யாருடா முதலாளி என்று கேட்டபின்பு இவர்தான் முதலாளி என்று சொல்ல தனியாக நேரம் கேட்ட அணி இது

கடைசி கட்டத்தில் ஐந்து ஆறு பேர்களை காட்டி இவர்தான் முதலாளி என்று சொன்ன சிறந்த அணி இது (அதில் எவ்வளவு உண்மை யார் அறிவார் )

அதிலும் கொடுமை தினமும் ஒரு ஒனர் வரும் ஒரே ஐபிஎல் அணி இது மட்டுமே 

இவர்கள் கிரிக்கெட் பார்க்கும் அழகே தனி அணி 
வெல்லும்போதுமட்டும் பார்பதும்.
அணி தோற்று போனால் கொஞ்சம் கூட யோசிக்காமல் சொல்லும் மற்றும் ஒரு விஷயம் ஸ்ரீ சாந்த் நல்ல விளையாடினார் முத்தைய வீண் ,பார்திவ் சரி இல்லை என்று ஒரு நொடியில் சொல்லும் ஸ்டையில் ஆகட்டும்

அணி வென்றவுடன் ஸ்ரீ சாந்த் மற்றும் பரமேஸ்வரன் இரண்டு மலையாளிகள் இல்லை என்றால் இந்த மேட்ச் தோற்று போய் இருக்கும் என்று சொல்வதாகட்டும் 
  

அதிலும் ஒன்றுக்கும் உருப்படாத அலப்பறை ஸ்ரீசாந்த் ஒரு பக்கம் இவன் ஆடும் ஆட்டத்தை மலையாளி ஒருவன் வேண்டும் என்றால் பார்க்கலாம் அதில் மற்றவர்களுக்கு இவன் ஒரு ஜீரோ மட்டுமே

(இவன் போடும் பந்தை பார்பதை விட டிஸ்கவரி சேனல் விலங்குகளை பார்க்கலாம்)

ஆகா மொத்தத்தில் இவர்கள் எப்படி வந்தார்கள் என்று பார்பதே ஒரு வீணான ஒரு விஷயம்
இதில் இவர்கள் வென்றார்கள் என்று சொல்வது இன்னும் வேஸ்ட்




DON'T MISS VOTE