Saturday, November 28

தப்பித்து கொண்ட சன் டிவி

அமீரின் யோகி படத்தை சன் டிவி வாங்கிவிட்டது என்றவுடன் சரி இந்த படம் ஏதோ விசயம் உள்ளது என்ற எதிர்பார்ப்பு உண்டாக்கிவிட்டது.

அமீர் இந்த படத்தை சன் டிவிக்கு விற்று விட்டார் என்றார் என்ற செய்தி மட்டும் இல்லாமல், சன் டிவி விலைக்கு கேட்ட படம் என்ற செய்தி கூட இப்படத்திற்கு ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்கிவிட்டதுஆனால் படத்தை சன் டிவி க்கு விற்காமல் சொந்தமாக அமீர் வெளியுட்டது .அது மட்டும் இல்லாமல் பருத்தி வீரன் படம் அமீர் மீது ஒரு மதிப்பை உண்டாக்கி இருந்தது .இவை எல்லாம் சேர்த்து யோகி படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பை உண்டாக்கி இருந்தது

இப்படம் வந்த உடன் மொத்தமாக எல்லா எதிர்பார்ப்புக்கும் ஆப்பு வைத்தது .TSOTSI என்ற ஆங்கில படத்தின் அப்பட்ட காப்பிக்கு எதற்க்கு இத்தனை எதிர்பார்ப்பை உண்டாக்கி ரசிகர்களை முட்டாள் ஆக்கும் இவர்கள் போன்றவர்களால் தான் நல்ல படம் எது என்று ரசிகன் சொல்லும் முன் இவர்கள் உண்டாக்கும் வீண் விளம்பரம் மற்றும் தேவையற்ற பொய்யான செய்திகளை பரப்பி ரசிகனை முட்டாள் ஆக்க வேண்டாம் .
மற்றும் ஒரு மாபெரும் ஏமாற்று வேலை என்னவென்றால் இந்த படம் துபையில் நடைபெறும் திரைப்பட விழாவிற்கு இப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது என்ற விஷயம்


இவர்கள் என்ன நினைத்தார்கள் உலக திரை பட விழாவிற்கு தமிழ் பட உலகை சேர்ந்தவர்கள் மட்டும் வருவார்கள் என்ற நினைப்பா ?

அவர்கள் இந்த படத்தின் ஒரிஜினல் படத்தை பார்த்து இருக்க மாட்டார்கள் என்ற நினைப்ப?இந்த படத்தை உலக திரைப்பட விழாவில் வெளிவிட்டால் வெளிநாட்டவர்கள் நம் திரையுலகை பற்றி என்ன நினப்பார்கள் ?

அமீர் மீண்டும் உங்களிடம் இருந்து வர வேண்டியது பருத்தி வீரன் போன்ற ஒரு உண்மையான உலக தர படம் மட்டுமே
தருவிர்கள் என்ற நம்பிகையில்

எது எப்படியோ இந்த விவகாரத்தில் சன் டிவி தப்பிவிட்டது

*************************************************************************
இயற்க்கை காப்போம் மரம் வளர்ப்போம் !!!!
*************************************************************************
முடியா விட்டால் செடியாவது வளர்ப்போம் !!!
*************************************************************************
ஊருகோர் மரம் வளர்ப்போர் சங்கம் வைப்போம் !!!
**************************************************************************

Friday, November 27

இளையராஜா மற்றும் சிம்பொனி (எப்போ வரும்? )

இளைய ராஜா நிச்சயம் தமிழ் இசை உலகில் ஒரு ராஜா
30 வருட திரை உலக உழைப்பு 800 மேற்பட்ட படங்கள் இன்னும் திரை உலகில் தாக்குப்பிடிக்கும் திறமை என பல சொல்லலாம் ஆனால் இவை எல்லாம் விட நீங்கள் லண்டன் சென்று சிம்பொனி இசை அமைத்த சிம்பொனி இசை இன்னும் சராசரி ரசிகனை சென்று அடையவில்லை என்பதுதான்இத்தனை வருடம் உங்களை மேஸ்ட்ரோ என்று அழைத்து அதை பெரும் பெருமையாக எல்லோரிடமும் பெருமை பேசிய ரசிகர்களுக்கு அந்த இசை அடைய என்ன செய்தீர்கள் ராஜா அவர்களே

        திரும்பவும் சொல்கிறேன் இது நிச்சயம் உங்களை நம்பி உள்ள ரசிகர்களுக்கு நீங்கள் தரும்     சிம்பொனி இசை எப்போது !?


ஆனால் இன்னும் உங்கள் சிம்பொனி இசை வெளிவிட நீங்கள் ஏன் இன்னும் முயற்சி செய்யவில்லை .நீங்கள் நினைதால் சிம்பொனி போன்ற ஒரு இசை தொகுப்பை கூட தரலாம்

உங்கள் சாதனைகள் சொல்லி மாளாது 800 படம் சாதாரண விசயம் இல்லை ..ஆனால் உங்கள் பேருக்கு பின் மேஸ்ட்ரோ பட்டம் உள்ளதிர்க்கு ஒரு சிம்பொனி இசை தொகுப்பை வெளிவர முயற்சி செய்விர்களா ?
 அல்லது அதை போன்று ஒரு இசை தொகுப்பை பிரத்யோகமாக வெளி
வர முயற்சி செய்வீர்கள் என்றுநான் முழு ராஜா ரசிகன் இல்லை ஆனால் 77 முதல் 85 வரை உங்கள் இசையில் எல்லா திரை பாடல்களும் எனக்கு மிகவும் பிடித்தவை என்ற காரணத்தால்                                        உங்களின் விரைவில் வர இருக்கும் அழகர்சாமியின் குதிரை இசைக்கு காத்திருக்கும்

Wednesday, November 25

வெளிநாடு வாழ் தமிழரும் மின்னிதல்களும்

இப்போ நான் சொல்ல போற விஷயம் என்னன்னா நாம நம்ம ஊர்ல இருக்கும் போது புத்தகம் படிப்பது அவ்வளவு ஆர்வம் காட்ட மாட்டோம் ஆனால் .நமக்கு தேவையான விஷயங்கள் பலவிதத்தில் கிடைத்து விடும்
வெளிநாடு வந்த பின் ஒரு ஒரு பழைய புத்தகம் பார்த்தாலும் நம்மை அறியாமல் அந்த புத்தகத்தை நம் கை புரட்ட ஆரம்பித்து விடும்
இது எல்லோர்க்கும் உள்ள இயல்பு . நான் சொல்ல வரும் விஷயம் அது இல்லை நம் ஊரில் இருக்கும் போது விகடன் 15 ருபாய் மட்டுமே அசால்டாக வங்கி விடுவோம்
ஆனால் வெளிநாட்டில் ஒரு விகடன் விலை குறைந்தபச்சம் 80 ரூபாய்க்கு மேல் வரும் நாம் எல்லா நேரத்திலும் புத்தகம் வாங்கும் சாத்தியம் வெளிநாட்டில் கிடைக்காது

இங்கு பத்து புத்தகம் வாங்கினால் நம் ஊர் பணம் 800 ரூபாய்க்கு மேல் வரும்நான் சொல்ல வரும் விஷயம் என்ன என்றால் .இப்போது வெளிநாட்டில் இணையம் என்பது எல்லோர்க்கும் கிடைக்கும் விசயமாக உள்ளது

இணைய சந்தா ஒரு ஆண்டிற்கு 1000 ருபாய் மட்டுமே வரும் அதனுடன் பழைய இதழ்களை நம் விரும்பும் நேரத்தில் படிக்கலாம்

இந்த நேரத்தில் நம் படிக்க நினைக்கும் புத்கத்தை இனைய சந்த மூலம் படிப்பதால் செலவு மிக பெரும் அளவில் மிச்சப்படும் அதனுடன் நம் படிக்க நினைக்கும் புத்கத்தை புத்தகம் எந்த நேரத்திலும் படிக்கலாம்

அதனுடன் புத்கம் வந்த அன்றே படிக்க முடியும் .பேப்பர் மிச்சப்படும் இதனால் இயற்க்கைக்கு நல்லது

இந்த விஷயம் வெளி நாடு வாசகர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

இதே போல் தினசரி பத்திரிக்கை இ -பத்திரிக்கை என்னும் வடிவில் படிப்பதால் நம் மாவட்ட செய்தி தாளை நம் ஊருக்கு வரும் முன் நம் படிக்கலாம்எல்லா தினசரி இதழ்களும் இ பத்திரிக்கை வடிவில் கிடைக்கிறது
இ பத்திரிக்கை படிக்க இன்டர்நெட் எக்ஸ்ப்ளோர் சிறந்ததுSOME FAMOUSE TAMIL BOOKS LINK USE E MAGAZINE TRY TODAY


VIKATAN
விகடன்


KUMUDAM


குமுதம்

daily thandi e-paperதின தந்தி இ- பேப்பர்


dinakaran
தினகரன் இ- பேப்பர்
dinamalarதினமலர் இ- பேப்பர்

Tuesday, November 24

அழகிய மொபைல் ஸாப்ட்வேர் உங்களுக்கு

best music director vote remaining only 7 days hurry ur vote


அழகிய மொபைல் தீம் எல்லோருக்கும். அனைவரும் அவர் அவரின் மொபைல் போன் பார்க்கும் போது தினமும் வித விதமான வால் பேப்பர்
தீம் மொபைல் சாஃப்ட்வேர் என வித்தியாசமா இருக்க என நினப்பது இயல்பு ஆனால் அதற்க்கு தேவையான தீம் எங்கே எடுப்பது என்பதில்தான் அனைவர்க்கும் ஒரு குழப்பம் இருக்கும் அதற்க்கு என பல வளை தளம் இருந்தாலும் சிறப்பான வளை தளங்கள் சில மட்டுமே அதை பற்றிZEDGE (specially sony ericsson) இந்த வளை தளம் சோனி எரிக்சன் மொபைல் சம்பந்தப்பட்ட மொபைல் ஸாஃப்ட்‌வ்ர் எல்லாம் உள்ளடக்கி உள்ளது
தமிழ் பாடல்கள் வீடியோ சாங்ஸ் தமிழ் நகைச்சுவை பாட காட்சி என சோனி மொபைல்க்கு ஏற்ற எல்லா வித ஸாஃப்ட்‌வ்ர் கேம் எல்லாம் கிடைக்கும்
இந்த வளை தளத்தில் முதலில் நீங்கள் உறுப்பினராகி அதன் பின் உங்கள் மொபைல் க்கு ஏற்ற எல்லா வித மொபைல் பயன்களும் இலவசமாக பெறலாம்

LINK THIS SITE
ZEDGE


mobango (specially for nokia)THIS SITE SPECIALLY FOR NOKIA MOBAIL SOFTWARE . GAME ,MOBAIL APPLICATIIONS,THEME ,WALL PAPER AND MORE
FIRST YOU CREAT ONE FREE ACCOUNTE TO THE mobango SITE AFTER U GOT TO MANY USE THE SITE

இந்த வளை தளம் நோக்கிய மொபைல் பயன் படுத்துவர்க்கு ஏற்றது


LINK THIS SITE
mobango


YOU HAVE ANY SUGGESTION PLZ SENT MY MAIL
arumbavur@gmail.com

dont forget to vote the site

thank u

Monday, November 23

2010 எதிர்பார்ப்பு உள்ள படம் எது ?

உங்கள் ஆதரவுடன் நம் அரும்பாவூர் ப்ளாக் நடத்திய சிறந்த தொலைக்காட்சி மற்றும்

பத்திரிக்கை குழுமம் எது என்ற வாக்கெடுப்பிற்கு உங்கள் ஆதரவு தந்தது போல் .இப்போது நடைபெறும் 2010 எதிர்பார்ப்பு உள்ள படம் எது மற்றும் சிறந்த இசை அமைப்பாளர் யார் என்ற வாக்கெடுப்பிற்கு உங்கள் ஆதரவு தேவை


இந்த வாக்கெடுப்பில் இந்த ஆண்டில் தொடங்கி அடுத்த ஆண்டு வர இருக்கும் ரஜ்னி காந்த் நடிக்கும் எந்திரன் சுல்தான் தி வாரியார் விஜய் நடிக்கும் சுறா அஜித் அசல் மற்றும் விக்ரம் ராவணா போன்ற எதிர்பார்ப்பு உள்ள படங்கள் மற்றும்சிறந்த இசை அமைப்பாளர் வாக்கெடுப்பிற்கு இன்னும் எட்டு நாட்களே உள்ளன இந்த வாக்கெடுப்பில் ஏ ஆர் ரஹ்மான் முன்னிலை உள்ளார் அவரை தொடர்ந்து ஹாரிஸ் மற்றும் இளைய ராஜா உள்ளனர்


உங்களுக்கு பிடித்த இசை அமைப்பாளருக்கு உங்கள் வாக்கை இட்டு முன்னிலை அடைய செய்யுங்கள் .


என ப்ளாக் படிக்க எப்படி உள்ளது குப்பையா ?ஓகே சுமார் ரகமா அல்லது ஓஹோ வா உங்கள் மனதில் உள்ளதை மறக்காமல் கீழே
உங்கள் கருத்தை எழுதுங்கள்
அன்புடன் உங்கள் ஆதரவை வேண்டி
சிறந்த பத்திரிக்கை குழுமம் வாக்கெடுப்பில் விகடன் முதல் இடத்திலும் அதை தொடர்ந்து தினமணி ,தின தந்தி பத்திரிக்கை குழுமம் உள்ளது
உங்கள் ஆதரவுக்கு நன்றி

Sunday, November 22

வேட்டைக்காரன் டிசம்பர் 18 அதிகாரபூர்வ அறிவிப்பு
விஜய்க்கு இது போதாதா காலம் என்றால் அது உண்மை தொடர் வெற்றி .அதிகமான ரசிகர் பலம் ,ரஜினி படத்திற்கு இணையான பப்ளிசிட்டி என கொடி கட்டி பறந்த விஜய் .
யார் கண் பட்டதோ தொடங்கியது அவரின் தொடர் தோல்வி அழகிய தமிழ் மகன் ,குருவி ,வில்லு என தொடர் தோல்விக்கு பின் விஜய் மட்டும் இல்லாமல் விஜய் ரசிகர்கள் கூட ஆவலுடம் எதிர்பார்த்த படம் வேட்டைக்காரன்


சோர்ந்து போய் இருந்த விஜய் ரசிகர்கள் வேட்டைக்காரன் படத்தை சன் டிவி வாங்கி விட்டது என்றவுடன் .இது நிச்சயம் வெற்றி அடையும் என்று மிகவும் ஆவலுடன் இருந்த நேரத்தில் தான்

தீபாவளிக்கு வர வேண்டிய வேட்டைக்காரன் வராமல் போனது விஜய் ரசிகர்களுக்கு மிக பெரும் ஏமாற்றமாக
போனது .இந்த நேரத்தில் இந்த படத்தை பற்றி பல வதந்திகள் வர ஆரம்பித்தது
இதில் அரசியல் காட்சிகள் இருப்பதால் அதை நீக்க வேண்டும் என சன் டிவி கட்டாய படுத்தியது எனவும் ,ஆதவன் படம் வருவதால் அதன் வெற்றிக்காக இந்த படம் நிறுத்தப்பட்டது எனவும் பல வதந்திகள் ரெக்கை கட்டி பறந்தன

இந்த நேரத்தில் டிசம்பர் 18
இந்த படம் வரும் சன் பிக்சர் அதன் இணைய தளத்தில் அறிவித்துள்ளது

எது எப்படியோ சன் டிவி நிச்சயம் இந்த படம் குப்பையாக இருந்தாலும் .அதன் விளம்பர யுக்தியை பயன்படுத்தி
ஒரு வெற்றி படமாக மாற்றும்

அனால் இது விஜய் படத்தின் வெற்றியாக இருக்க வேண்டும் எனில் நல்ல கதையுடன் ,யாரை குறை கூறாமல் கில்லி ,போக்கிரி போல் ஒரு உண்மையான ஆக்சன் ,கதை இருந்தால் மட்டுமே அது விஜய் படத்தின் வெற்றியாக இருக்கும்

அயன் படத்தை போல் வேட்டைக்காரன் படம் நல்ல படமாக இருக்கும் என்ற நம்பிகையில்


மறக்காமல் உங்கள் வாக்கை எனக்கு இடவும்

Tuesday, November 17

என் பார்வையில் A.R.ரஹ்மான் TOP.10 படம்

எ ஆர் ரஹ்மான் இசையில் எனக்கு எல்லா பட பாடல்களும் படங்களும் எனக்கு பிடித்தவைதான் அதிலும் சில பட பாடல்களும் படங்களும் எனக்கு மிகவும் பிடித்தவை அதை பற்றி இவை தமிழ் பட பாடல்கள் மட்டுமே ஹிந்தி கணக்கில் சேர்க்க வில்லை

10 கிழக்கு சீமையிலே
எ ஆர் ரஹ்மான் முதல் முதலாக கிராமத்து இசையில் தன் முழு வீச்சை காட்டிய படம் ஆனால் அதன் பின் அவர் கிராமத்து இசையில் தன் முழு பரினாமத்தை காட்ட விட்டாலும் கிழக்கு சீமையிலே எனக்கு பிடித்த ரஹ்மான் படங்களில் ஒன்று ஆத்தங்கரை மரமே மானுத்து சோலையிலே என எல்லா பாடல்களும் சரி பின்னணி இசையும் சரி எனக்கு மிகவும் பிடித்த டாப் 10 இல் ஒன்று

9 முத்து
முதலில் இது எப்படிடா ரஜினி படத்திற்கு பொருந்தும் என்று நினைத்த பாடல்கள் இன்று ரஜினி பாடல்கள் என்றால் முதலில் வரும் அளவிற்கு மிகவும் புகழ் பெற்ற ஒருவன் ஒருவன் முதலாளி
ரஜினி படத்திற்கு ஏற்ற பின்னணி இசை என எல்லா தரப்பு ரசிகரும் ஏற்று கொள்ளும் பாடல்கள் தில்லான தில்லான
விடுகதையா பாடல்கள் எனக்கு பிடித்த ரஹ்மான் டாப் 10 முத்து 9 இடம்

8 ஜென்டில் மேன்
ரஹ்மான் ஷங்கர் கூட்டணி முதல் அடித்தளம் அமைத்த படம் ஜென்டில் மேன் சிக்கு புக்கு ரயிலே உசிலம் பட்டி பெண்குட்டி என்வீட்டு தோட்டத்தில் என ஒரு ஜனரஞ்சக ஜுகல் பந்தி பாடல்கள் எல்லா தரப்பு ரசிகர் கவர்ந்த பாடல்கள் என எ ஆர் ரஹ்மான் டாப் டென் லிஸ்ட் இது 8 இடம்

7 காதலன்
ரஹ்மான் ஷங்கர் பிரபுதேவா என ஒரு இசை மாநாடு நடத்தின படம் கல்லுரி மாணவர் முதல் பல் போன தாத்தா வரை ஆடி படிய பாடல்கள் இதன் பாடல்கள் முக்கியமாக ஊர்வசி ஊர்வசி , முககளா முக்கபுல என எல்லா பாடல்களும் இந்திய முழுவதும் ஆடி பாடிய பாடல்கள் என்றால் மிகை இல்லை

6 இந்தியன்
ரஹ்மான் ஷங்கர் கமல் ஹாசன் என இந்திய முழுவதும் படமும் சரி பாடல்களும் சரி ஹிமாலய வெற்றி பெற்றது அதிலும் அக்கடான்னு நாங்க ,கப்பலேறி போயாச்சு ,பச்சை கிளிகள் ,என பாடல்களும் சரி பிரமாண்டமான பின்னணி இசையும் சரி சரியான தேர்வாக அமைந்த பாடல்


5 காதலர் தினம்
எ ஆர் ரஹ்மான் இசையால் மட்டுமே ஓடிய படம் என்றால் அது மிக பெரும் உண்மை .ஒ மரியா ,காதலென்னும் தேர்வெழுதி ,நினைச்சபடி ,தாண்டிய ஆட்டம் என ரஹ்மான் இசை எல்லா தரப்பு ரசிகர்களும் கேட்ட பாடல்கள் .
அதிலும் மரியா பாடல் திரை அரங்கில் ஒரு டான்ஸ் அடிய ரசிகர்கள் இன்னும் மறந்திருக்க மாட்டார்கள் ரஹ்மான் ரசிகர்ளுக்கு பிடித்த படம் என்றால் அது உண்மை

4 மின்சார கனவு
ரஹ்மானின் ஊ ல ல என்றால் மின்சார கனவு என பெயரும் சரி ரஹ்மானுக்கு தேசிய விருது மற்றும் எ வி எம் நிறுவனத்தில் ரஹ்மானுக்கு முதல் படம் அவர் நண்பர் ராஜீவ் மேனன் இயக்கிய படம்
பூ பூக்கும் ஓசை ,வெண்ணிலவே ,ஸ்ட்ராபெர்ரி கண்ணே .தங்க தாமரை பெண்ணே ,அன்பென்ற மழை
ரஹ்மான் வித விதமான் இசை ஜாலம் காட்டிய படம்

3 பம்பாய்
ரஹ்மான் மணிரத்னம் கூட்டணி என்றால் ஒரு எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருக்கும் அதை சரி செய்த படம் . படம் சொல்ல வந்த கருத்து சிலருக்கு பிடிக்காமல் போனாலும் ரஹ்மான் ரசிகர்களுக்கு தீபாவளி படம் என்றால் இதுவும் ஒன்று அந்த அரபி கடலோரம் ,கண்ணாலனே, பூவுக்கென பூட்டு , என பாடல்களும் சரி படத்திற்கு ஏற்ற பின்னணி இசை இந்த படத்தின் தீம் மியுசிக் ஆங்கில படங்களில் சேர்க்க பட்டது இதன் இசை மீது உலக மக்கள் கொண்டுள்ள ஆர்வத்தை காட்டுகிறது


2 அலை பாயுதே
ரஹ்மான் மணிரத்னம் கூட்டணி இளமை கொண்டாட்டம் கட்டிய படம் பச்சை நிறமே, சிநேகிதனே .,யாரோ யாரோடி ,செப்டம்பர் மாதம்,ரஹ்மான் புது முறை இசையில் காட்டிய மாங்கல்யம் தந்துனானே வித்தியாசமான ரி மிக்ஸ் சிறப்பாக இருந்தது
ரஹ்மான் படங்களில் அலை பாயுதே சிறப்பான படம் என்றால் அது மாற்ற முடியாத உண்மை


1 ரோஜா
ரஹ்மான் படங்களில் முதல் படமும் சரி முதன்மையான படமும் என்றால் சரி இந்திய முழுவதும் ஒரு மிக பெரும் தாக்கம் உண்டாக்கிய சின்ன சின்ன ஆசை ,தமிழா தமிழா ,புது வெள்ளை மழை ,காதல் ரோஜாவே ,முதல் படத்தில் சிக்ஸர் அடித்த ரஹ்மான் இந்த படத்திற்கு இந்திய திரைப்பட தேசிய விருது என எல்லா விருதுகளும் பெற்ற படம்

இது என் பார்வை மட்டுமே ரஹ்மான் இசை அமைத்த பாடல்கள் எல்லாமே டாப் 1.

சில படங்கள் தவிர பரசுராம் ,அல்லி அர்ஜுன தவிர, ஏனோ இந்த படம் ரஹ்மான் இசை என்றால் என்னால் நம்பமுடிய வில்லை

Sunday, November 15

IIFA பத்து ஆண்டுகள் 12 விருதுகள் A R ரஹ்மான்இந்திய அளவில் தரப்படும் பிரமாண்டமான விருதுகளில் ஒன்று இன்டர்நேஷனல் இந்தியன் பிலிம் அகாடமி விருதுகள் (IIFA)

இந்த விருதுகள் உலகம் முழுவதும் மிக பெரிய நகரங்களில் நடத்தப்படுகிறது
இந்த விருதுகள் 2000 ஆண்டு முதல் வழங்கப்படுகின்றது.முதல் விருது விழா லண்டன் மாநகரில் தொடங்கப்பட்டது .
2001 ஆண்டு விருது ஆப்ரிக்கா சன் சிட்டி நகரில்
2002 ஆண்டு விருது மலேசியா
2002 ஆண்டு விருது ஆப்ரிக்கா ஜோகன்ஸ் பேர்
2003 ஆண்டு விருது சிங்கப்பூர்
2005 ஆண்டு விருது நெதர்லாந்து அம்ஸ்டேர்டம்
2006 ஆண்டு விருது துபாய்
2007 ஆண்டு விருது இங்கிலாந்து யார்க் ஷிர்
2008 ஆண்டு விருது தாய்லாந்து பாங்காக்
2009 ஆண்டு விருது மக்காவு (சீனா )
இந்த விருதுகள் கடந்த பத்து ஆண்டுகளாக வழங்கப்படுகிறது இந்த விருதில் சிறந்த இசை அமைப்பு பிரிவில் சிறந்த இசை அமைப்பாளர் மற்றும் சிறந்த பின்னணி இசைப் சேர்ப்பு,இந்திய இசைஐ உலக அளவில் கொண்டு சென்றதற்கு என AR ரஹ்மான் பத்து ஆண்டு விருது வரலாற்றில் 12 விருதுகள் பெற்று சாதனை பெற்று உள்ளார் அவை
2000 தாளம் சிறந்த இசை அமைப்பாளர்

2002 லகான் சிறந்த இசை அமைப்பாளர்

2003 சாதியா (அலை பாயுதே ) சிறந்த இசை அமைப்பாளர்

2007 ரங் தே பசந்தி சிறந்த இசை அமைப்பாளர்

ரங் தே பசந்தி சிறந்த பின்னணி இசை

ரங் தே பசந்தி சிறந்த பாடல பின்னணி இசை

2008 குரு (ஹிந்தி ) சிறந்த இசை அமைப்பாளர்

குரு சிறந்த பின்னணி இசை

2008 Outstanding contribution by an Indian in International Cinema

2009 ஜோதா அக்பர் சிறந்த இசை அமைப்பாளர்

ஜோதா அக்பர் சிறந்த பின்னணி இசை

2009 IIFA Music Director of the Decade


இந்த ஆண்டு IIFA விருதுகள் எ ஆர் ரஹ்மான் பெற வாழ்த்துக்கள்


சிறந்த பத்திரிக்கை குழுமம் எது வாக்கு முடிய இன்னும் 6 நாட்களே உள்ளன

சிறந்த இசைப் அமைப்பாளர் வாக்கு முடிய இன்னும் 14 நாட்களே உள்ளன

உங்கள் வாக்கை மறக்காமல் இடவும்

Friday, November 13

எ ஆர் ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லியனர் மற்றும் விருதுகள்எ ஆர் ரஹ்மானுக்கு விருதுகள் ஒன்றும் புதியது இல்லை ஆனால் ரஹ்மான் இசை அமைத்த இந்திய ஆங்கில படமான ஸ்லம்டாக் மில்லியனர் உலகம் முழுவதும் இசை ரசிகர்களை கவர்ந்தது மட்டும் இல்லாமல் எ ஆர் ரஹ்மானுக்கு உலக அளவிலான பல விருதுகள் பெற்று தந்தது மட்டும் இல்லாமல் ரஹ்மானின் பெயரை உலக அளவில் கொண்டது செல்ல ஸ்லம்டாக் மில்லியனர் படம் உதவியது என்றால் அது மற்ற முடியாத கருத்து


இந்த படத்திற்கு எ ஆர் ரஹ்மான் உலக அளவில் பல விருதுகள் பெற்றது மட்டும் இல்லாமல் அவருக்கு இன்னும் பல ஆங்கில படங்கள் வர உதவியது .
இந்த படத்திற்கு எ ஆர் ரஹ்மான் பெற்ற உலக அளவில விருதுகள் பற்றி


இந்த படத்திற்கு ரஹ்மான் பெற்ற முதல் புகழ் பெற்ற விருது என்றால் அது உலக அளவில் சினிமா ரசிகர்கள் போற்றும் கோல்டன் க்ளோப் விருது
சிறந்த இசை அமைப்புக்கு கோல்டன் க்ளோப் விருது

BROADCAST FILM CRITICS ASSOCIATION AWARDS AMERICA
Critics' Choice Award for Best Composer


BAFTA British Academy Film Awards
Anthony Asquith Award for Best Film Music

BLACK REEL AWARDS
Best Original Soundtrack

LOS ANGELES Film Critics Association Awards AMERICA
Best Music Score

Phoenix Film Critics Society Awards
Best Original Score

San Diego Film Critics Society Awards AMERICA
Best Score

Satellite Awards AMERICA
Satellite Award for Best Original Score

New York Film Critics Online Awards AMERICA
NYFCO Best Score Award


OSCAR Academy Awards AMERICA

Best Original Music Score
Jai Ho Best Original Song Jai Ho


World Soundtrack Awards: Best Original Song Written for a Film (Winner)

இது மட்டும் இல்லாமல் ரஹ்மானின் பிற ஆங்கில படங்கள்
Tian di ying xiong (2003) (Warriors of Heaven and Earth)

Elizabeth: The Golden Age (2007)


Slumdog Millionaire Slumdog Millionaire (2008)

Couples Retreat Couples Retreat (2009)

Couples Retreat படம் இது வரை அமெரிக்க திரை அரங்க வசூல் மட்டும் $95,680,555
budget only $70 million

மறக்காமல் சிறந்த பத்திரிக்கை குழுமம் மற்றும் சிறந்த இசை அமைப்பாளர் யார் என்பதற்கு உங்கள் வாக்கை இடவும்

எனக்கும் தமிலீஷ் வாக்கை இடவும்

VISIT READ THE ARITCLE


>ஆங்கில கல்வியும் நம் மாணவர்களும்!

Tuesday, November 10

இந்த ஆண்டின் சிறந்த தொலைக்காட்சி விருது அறிவிப்பு

அரும்பாவூர் ப்ளாக் இந்த ஆண்டின் சிறந்த தொலைக்காட்சி விருது அறிவிப்பு


நம் அரும்பாவூர் ப்ளாக் சார்பாக நடத்தப்பட்ட இந்த ஆண்டின் சிறந்த தொலைக்காட்சி வாக்கெடுப்பில் மொத்தம் 216 வாக்குகள் அளிக்கப்பட்டதுஇதில் 147 வாக்குகள் (68) சதம் பெற்று விஜய் டிவி முதல் இடம் பெற்றது
விஜய் டிவி இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் பலதரப்பு மக்கள் கவரும் வண்ணம் கேம் ஷோ ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஆகியவை இந்த இடத்தை அடைய உதவியது


53 வாக்குகள் பெற்று சன் டிவி இரண்டாம் இடத்தில உள்ளது தமிழ் தொலைக்காட்சி என்றால் அது சன் டிவி தான் என்றால் உண்மை ஆனால் சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு முன்னுரிமை தராமல் அறிவு சார்ந்த பொழுது போக்கு நிகழ்ச்சிகளை எதிர்பார்க்கிறோம்
9 7 வாக்குகள் பெற்று கலைஞர் ஜெயா டிவி உள்ளது


தமிழ் மொழிக்கு முன்னுரிமை தமிழ் சார்ந்த நிகழ்ச்சி என்றால் அது மக்கள் டிவி தான் சிறப்பு தமிழ் தொலைக்காட்சி விருது மக்கள் டிவி


அரும்பாவூர் ப்ளாக் வாக்கு பதிவிற்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி

அடுத்த வாக்கு பதிவு சிறந்த பத்திரிக்கை குழுமம் எது நாளை

உங்கள் ஆதரவு மற்றும் உங்கள் வோட்டு எனக்கும் தேவை ஆதரவு தாரீர்

எ ஆர் ரஹ்மானும் பிலிம் பேர் விருதுகளும்

எ ஆர் ரஹ்மானும் பிலிம் பேர் விருதுகளும்

இந்திய அளவில் தரப்படும் மிக முக்கிய விருதுகளில் மிக முக்கிய விருது என்றால் பிலிம் பேர் விருது ஒன்று


1954 ஆண்டு முதல் இன்று வரை தொடரும் மிக பழமையான விருதுகளில் பிலிம் பேர் விருது ஒன்று

அந்த பிலிம் பேர் விருது அதிக அளவில் பெற்றவர் என்ற ஒரு சிறப்பு ரஹ்மானுக்கு உண்டு அதை பற்றி ஒரு ஆய்வு

எ ஆர் ரஹ்மானின் பிலிம் பேர் விருது வேட்டை தொடங்கியது அவரின் முதல் படத்தில் இருந்தே

1992 ரோஜா சிறந்த இசை அமைப்பாளர் விருது

1993 ஜென்டில் மேன் சிறந்த இசை அமைப்பாளர் விருது

1994 காதலன் சிறந்த இசை அமைப்பாளர் விருது

1995 பாம்பே சிறந்த இசை அமைப்பாளர் விருது இசைப்

1995 இதே ஆண்டு ஹிந்தி ஆர் டி பர்மன் விருது

1996 காதல் தேசம் சிறந்த இசை அமைப்பாளர் விருது

ரங்கிலா (ஹிந்தி ) சிறந்த இசை அமைப்பாளர் விருது

1997 மின்சார கனவு சிறந்த இசை அமைப்பாளர் விருது

1998 ஜீன்ஸ் சிறந்த இசை அமைப்பாளர் விருது

1999 முதல்வன் சிறந்த இசை அமைப்பாளர் விருது

தில் சே (ஹிந்தி) சிறந்த இசை அமைப்பாளர் விருது

2000 அலை பாயுதே சிறந்த இசை அமைப்பாளர் விருது

தால் (ஹிந்தி) சிறந்த இசை அமைப்பாளர் விருது

2002 கன்னதில் முத்தமிட்டால் சிறந்த இசை அமைப்பாளர் விருது

லகான் (ஹிந்தி) சிறந்த இசை அமைப்பாளர் விருது

2003 இந்த ஆண்டு முதல் பின்னணி இசைக்கு தனியாக விருது தரப்பட்டது


தி லெஜன்ட் பகவத் சிங் சிறந்த பின்னணி இசை

2005 ஸ்வதேஸ் சிறந்த பின்னணி இசை

2006 சில்லுனு ஒரு காதல் சிறந்த இசை அமைப்பாளர் விருது

2007 ரங் தே பசந்தி சிறந்த இசை அமைப்பாளர் விருது

2007 சிவாஜி சிறந்த இசை அமைப்பாளர் விருது

2008 குரு (ஹிந்தி) சிறந்த இசை அமைப்பாளர் விருது

குரு (ஹிந்தி ) சிறந்த பின்னணி இசை


2009 ஜானே து யா ஜானே சிறந்த இசை அமைப்பாளர் விருது

ஜோதாஅக்பர் சிறந்த பின்னணி இசை

இதுவரை எ ஆர் ரஹ்மான் ஹிந்தி படத்திற்கு 13 விருதுகள் தென்னிந்திய திரைப்படம் 11 விருதுகள் என்று மொத்தம் 24 விருதுகள் பெற்று பிலிம் பேர் விருது நாயகனாக உள்ளார் கமல் ஹாசன் 19விருதுகள் பெற்று இரண்டாம் இடத்தில உள்ளார்

மிக குறுகிய காலத்தில் அதிக பிலிம் பேர் விருது பெற்றவர் எ ஆர் ரஹ்மான் என்றால் மிகை இல்லை


இதே பிலிம் பேர் இதழ் ஆண்டு தோறும் மிகவும் சிறந்த் புகழ் பெற்ற ஹிந்தி திரை உலகை சேர்ந்த பிரபலங்களை தேர்ந்தெடுக்கும்
இதில் இசை அமைப்பாளர் பிரிவில் இந்த கருத்து கணிப்பு தொடங்கிய ஆண்டு முதல் எ ஆர் ரஹ்மான் இன்று வரை முதல் இடத்தில உள்ளது இன்னொரு சிறப்பு
எல்லா பிரிவுகளும் சேர்ந்து பிலிம் பேர் பவர் லிஸ்ட் பிரிவில் இசை அமைப்பாளர் எ ஆர் ரஹ்மான் மட்டுமே இடம் பெற்று உள்ளார்

அரும்பாவூர் ப்ளாக் இந்த ஆண்டின் சிறந்த தொலைக்காட்சி விருது
LINK THE SITE Visit சிறந்த தொலைக்காட்சி விருது அறிவிப்பு !


>தமிழின் சிறந்த பத்திரிக்கை குழுமம் எது!

Monday, November 9

தரமான திரைப்படங்களுக்கு அரசே நிதி உதவி அளிக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார்தரமான திரைப்படங்களுக்கு அரசே நிதி உதவி அளிக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார்

தரமான படங்களுக்கு அரசு நிதி உதவி அளிக்க வேண்டும் என்ன கொடுமை சார் இது .மக்கள் பணம் எப்படி எல்லாம் வீணாக போக வேண்டும் ஒவ்வொருவரும் கங்கணம் கட்டிக்கொண்டு நடகின்றனரோ என தோன்றுகிறது


தமிழ் பெயர் வைத்தால் போதும் வரி இல்லை என்ற ஒரு சலுகைகள் அளித்து மக்களின் சேவைக்கு பயன் படும் பணம் வீணாக போகிறது

இதனால் தமிழ் மக்கள் என்ன பயன் அடைந்தனர் என்று யாருக்கும் தெரியாத இந்த நேரத்தில் தரமான படம் தரமற்ற படம் என்ன சார் ?உள்ளது மக்களுக்கு நல்ல உணவு கிடைக்கிறதா நல்ல சுகதரமான இட வசதி உள்ளத என்பதை விட்டு விட்டு சினிமாகாரக்கு
வரி விலக்கு மக்களுக்கு இலவச கலர் டிவி இது தேவையா

ஏன் மக்கள் வரி பணத்தில் ஊருக்கு ஒரு பூங்கா அமைக்கலாம் ,தூர்த்து போய் உள்ள குளம் குட்டை ஏரி ஆழபடுதலாம்

மழை காலம் வந்தால் வெள்ளம் போன்றவை ஏற்பட காரணம் தண்ணிர் செல்ல வசதி இல்லாமல் பாலங்களின் கீழ் பழைய குப்பைகள் மற்றும் ஆறு ஓரங்களில் உள்ள தடுப்புகளை மழை வரும் முன் சரி செய்யும் அமைப்பை ஏற்படுத்தலாம்
மழை வந்து முடிந்த பின் விரைவில் தண்ணிர் பஞ்சம் வர காரணம் மழை நீர் சேகரிப்பு போன்ற வசதிகளை அரசு செய்யாததும் ஒரு காரணம்

இப்படி மக்களுக்கு பயன்படும் எத்தனயோ திட்டத்திற்கு குரல் கொடுப்பதை விட்டு விட்டு நல்ல சினிமா கெட்ட சினிமா என்ன பாகுபாடு உள்ளது

சினிமாவை எதிர்க்கும் எதிர்க்கும் ராமதாஸ் இதற்கு குரல் கொடுப்பது வேதனையாக உள்ளது

எந்த சினிமாகாரனும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று சினிமா எடுப்பதில்லை இது அவரின் வியாபாரம் இதில் அவர் லாபம் அடைந்தால் மக்களுக்கு என்று வருடம் வருடம் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஒரு பங்கு தருகிறேன் என்று சொன்னாரா ?
படம் ஓட வில்லை என்றால் அதற்க்கு நூறு காரணம் உள்ளதுஇப்போது தியேட்டர் செல்ல மக்கள் யோசிக்க காரணம் என்ன நல்ல ஒலி ஒளி அமைப்பு எத்தனை திரை அரங்கில் உள்ளது சொல்லுங்கள். நல்ல தரமான ஒலி ஒளி குளிர்சாதன வசதி இருக்கை வசதி எத்தனயோ காரணம் உள்ளதுமக்கள் திரை அரங்கிற்கு வரவழைக்க மக்கள் பணம் வீணாக்க வேண்டாம்


அது எப்படி பட்ட படமாக இருந்தாலும்இந்த கருத்து ஏதும் தவறு இருந்தால் எழுதவும்
நன்றாக இருந்தாலும் பாராட்டவும்


கீழே என் மற்றொரு கருத்தின் லிங்க்
Visit மரம் ஒரு வரம் !

Sunday, November 8

தமிழில் எ ஆர் ரஹ்மானின் எதிர்பார்ப்பு உள்ள படங்கள்

எ ஆர் ரஹ்மானின் தமிழ் பட எண்ணிக்கை குறைந்து வந்து ஆண்டிற்கு இரண்டு ஒன்று என்று மாறி விட்டது அதிலும் ரஹ்மான் ஹிந்தி படத்திற்கு காட்டும் ஆர்வம் தமிழ் படத்திற்கு காட்டவில்லையோ என்று தோன்றுகிறது
தமிழில் அவர் இசை அமைப்பில் வரவிருக்கும் படங்களில் சொல்லும்படியான படங்கள் சில உங்கள் பார்வைக்கு


1) விண்ணை தாண்டி வருவாயா
கௌதம் ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணி பிரிவுக்கு பின் ரஹ்மான் கௌதம் கூட்டணி மீது இப்போதே எதிர்பார்பை உண்டாக்கி உள்ள படம் என்றால் மிகை இல்லை
ரஹ்மான் ஆஸ்கர் விருதுக்கு பின் தமிழில் வரும் ரஹ்மான் இசை அமைப்பில் வரும் முதல் படம் என்பது இன்னொரு சிறப்பு
இணையதளங்களில் இந்த படத்தின் பாடல் என்று பல பாடல்கள் வர ஆரம்பித்து இந்த கூட்டணி பாடல்களுக்கு இப்போதே ஒரு எதிர்பார்ப்பு உள்ளது


2) எந்திரன்
ஷங்கர் ஏ ஆர் ரஹ்மான் கூட்டணி என்றாலே ஒரு தீபாவளி பண்டிகைதான்
ரசிகர்களுக்கு .அதிலும் இந்திய அளவில் அதிக செலவு செய்து எடுக்கப்படும் படம் என்பது மற்றும் சன் டிவி நிறுவனத்தின் முதல் நேரடி படம் என்பது இதன் இன்னொரு சிறப்பு
ஏற்கனவே எந்திரன் பாடல் என்று ஒரு பாடல் இணைய ரசிகர்களை ஏமாற்றியது நினைவிருக்கலாம்
அடுத்த ஆண்டு வரும் என்று எதிர்பார்க்க படும் ரஹ்மான் ரஜனி ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக எதிர்பார்க்க படும் படம் எந்திரன்

3) ராவணா
மணிரத்னம் மெட்ராஸ் டாகிஸ் நிறுவனத்தின் தயாரிப்பு தமிழ் ஹிந்தி என்று ஒரே நேரத்தில் இரு மொழிகளில் வரும் படம் தமிழில் விக்ரம் ஐஸ்வர்யா நடிக்கும் படம் மணிரத்னம் ரஹ்மான் கூட்டணி என்றால் இந்திய அளவில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும் இந்த படம் அதே வகை சேர்ந்தது
மணிரத்னம் ரஹ்மான் கூட்டணி எப்போதும் போல் வெல்லும் என்பது உறுதி4) சுல்தான் தி வாரியார்
இது ரஜனி கதாநாயகனாக வைத்து அனிமேசன் மூலம் தயாரிக்கும் படம் என்பது ஒரு சிறப்பு அதிலும் ரஜனி மகள் சௌந்தர்யா தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வரும் படம்
இதில் ரஹ்மானின் இசை ஒரு முக்கிய பங்காற்றும் என்பது உறுதி


இதே போல் ரஹ்மானின் இசை அமைப்பில் வரும் படங்கள் என்று சில படங்கள் உள்ளன அது பற்றி இந்த படங்கள் பற்றி அதிகாரபூர்வ தகவல்கள் இல்லத்தால் மேற்கொண்டு எழுத வில்லை
அவை சென்னைல் ஒரு மழை காலம்
கௌதம் இயக்கம்

மாணவர் தினம்
கதிர் இயக்கம்


சிறந்த தொலைக்காட்சி வாக்கு முடிய இன்னும் ஒரு நாளே உள்ளது உங்கள் வாக்கை மறக்காமல் இடுங்கள்
எனக்கும் வோட்டு போட்டு முன்னிலை அடைய செய்யுங்க ஸாரேஏஏஏஏஎ

தமிழில் எ ஆர் ரஹ்மானின் எதிர்பார்ப்பு உள்ள படங்கள்