Friday, December 31

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2011

         

   ஆண்டொன்று சென்றது என்ற நினைப்பைவிட 
                சென்ற ஆண்டில் என்ன கிழித்தோம் என்று நினைப்போம் காலண்டர் தவிர 




                வழமையாக வரும் புத்தாண்டு போல இனிவரும் ஆண்டு இல்லாமல் இருக்க சபதம் எடுப்போம்
               
               ஊழலை  ஒழிப்போம் என்று சொல்லும் ஊழல்வாதிகளை ஒழிப்போம் 
               
               மதம் என்பதை மனதிற்குள் வைப்போம் மனிதத்தை வெளியே வைப்போம்


               தமிழீழம் பேசும் பொய்யான சினிமாகாரர்களை  ஒழிப்போம்
              
               இந்த ஆண்டு முதல் குறைவான பதிவுகள் இட சபதம் எடுப்பேன்
               உங்கள் வாக்கு கிடைத்தாலும் சரி கிடைக்காவிட்டாலும் சரி
                 
               உங்கள் அனைவருக்கும் பசுமை பொங்க வைக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 

Sunday, December 26

எவண்டி உன்னை பெத்தான் ? மற்றும் யாத்தே யாத்தே



           வானம் படத்தில் வரும் பாடலின் வரிகள் வரிகளை மிஞ்சும் சிம்புவின் ஹை பிட்ச் குரல் சிம்புவின் குரலை மிஞ்சும் யுவனின் இசை
         படத்தின் ஒரு பாடலே படத்தில் எல்லா பாடல்களும் சிம்பு மற்றும் யுவனின் சூப்பர் ஹிட் பாடல் ஆல்பமாக இருக்கும் என்பதற்கு எடுத்துகாட்டு
 
           பாடலின் கருத்துக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தால் சரி
நிச்சயம் படத்தில் இந்த பாடல் சூப்பர் ஹிட் 







           பாடல்களில் சூப்பர் ஹிட் ஆனா ஒரு
ஆல்பம் ஆடுகளம் ஜி வி பிரகாஷ் இசையில் எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் பொங்கலுக்கு வரும் படங்களில் எதிர்பார்ப்பு அதிகம் உள்ள  படம் 
                வெற்றி மாறன் தனுஷ் கூட்டணி இந்த இரண்டு கூட்டணியை இன்னும் அதிகம் வெற்றி கூட்டணியாக மாற்றும் சன் டிவி என பொங்கல் படங்களில் அதிகம் எதிர்பார்ப்பு உள்ள படம் இது

               சூப்பர் ஹிட் பாடல்கள் + தனுஷ் +வெற்றி மாறன் +சன் டிவி இவை எல்லாம் விட பெரிய பிளஸ் பாயிண்ட் தேவை அது ரசிகர்கள்
+ பார்க்கலாம் பொங்கலில் ஆடுகளம் எந்த அளவிற்கு ஆடும் என்று

   ஆடுகளம் படத்தில் எனக்கு மற்றும் எலோருக்கும் அதிகம் பிடித்த பாடல் யாத்தே யாத்தே
கிரமாத்து கலக்கல் காதல் பாடல் வெள்ளாவியில்  வைத்து உன்னை சூப்பர் பாடல் வரிகள் அழிய குரல் கலக்கல் இசை கேளுங்கள் ஒரு முறை

        








                            ஹாய் அரும்பாவூர் அவார்ட்ஸ் 2010 பார்க்க clik 

Saturday, December 25

ஹாய் அரும்பாவூர் அவார்ட்ஸ் 2010

               
   சென்ற ஆண்டு போலவே இந்த ஆண்டும் ஹாய் அரும்பாவூர் விருதுகள் உங்கள் ஆதரவுடன்
எப்போவும் போல நம் தமிழ் கலாச்சாரம் போல இருக்கும் தமிழ் சினிமா விருதுடன் தொடங்கும்
இந்த ஆண்டின் ஹாய் அரும்பாவூர் விருதுகள்




               முதலில் சினிமா விருதுகள்

சிறந்த படம் :

                களவானி (சற்குணம் )
                அங்காடி தெரு (வசந்த பாலன் )
BEST DIRECTOR   
                            
                களவானி (சற்குணம் )
                பிரபு சாலமன் (மைனா )
                   
சிறந்த நடிகர் :

                              சிம்பு (விண்ணை தாண்டி வருவாய )
                        சூர்யா  சிங்கம்

சிறந்த நடிகை :

                அஞ்சலி (அங்காடி தெரு )
                அமலா  (மைனா )
சிறந்த பாடல் :   
             இறகை போல பறக்கிறேன் (நான் மகான்அல்ல )
             மைனா மைனா  (மைனா )

சிறந்த பாடகர் :  
                யுவன் ஷங்கர் ராஜா (இறகை போல)
                ஷான்  (மைனா மைனா )
சிறந்த பாடகி :
             ஸ்ரேயா கோசல் (கள்வரே )
              சாதனா சர்கம் (கைய புடி ) மைனா

சிறந்த பாடலாசிரியர் :
                  யுக பாரதி (இறகை போல )

BEST MUSIC DIRECTOR:     

                                              D.IMAN (MAYNA)
                                               YUVAN S RAJA (MANY MORE FILME)

சிறந்த பாடல் ஆல்பம் :
  
                                   
                                           எந்திரன் (A.R.ரஹ்மான் )
                                            மைனா (D.இமான் )

சிறந்த நகைச்சுவை :


                                            சந்தானம் (பாஸ் என்கிற பாஸ்கரன் )
                                           வடிவேல் (நகரம் )
சிறந்த வில்லன் : 
                                                 
                                    ரஜினி காந்த்(எந்திரன் ) சிட்டி

சிறந்த தயாரிப்பு நிறுவனம் :    
                                        
                                       ஐங்கரன் (அங்காடி தெரு ,நந்தலாலா )

   2010 HERO OF THE YEAR   :    
                             
                      ரஜினி காந்த்

 திரை அரங்க உரிமையாளர்களுக்கு சந்தோஷம் கொடுத்த படங்கள் :  
      
                                            எந்திரன் (சன் பிக்சர்ஸ் )
                                              சிங்கம் (சன் பிக்சர்ஸ் )
                                            களவானி     (செராலி பிக்சர்ஸ் )

 மறைந்தும்   நினைவில் வாழ்பவர்கள் :              

                                                        வி எம் சிஹனிபா
                                                        சுவர்ணலதா
                                                        முரளி
                                                         சந்திரபோஸ்
                                                         எஸ் எஸ் சந்திரன் 

Thursday, December 23

இப்படி ஒரு வேட்பாளர் வேண்டும் பகுதி1


          இந்தியாவில் விரைவில் கோடிஸ்வரர் ஆகா வேண்டுமா ? ஒரே வழி அரசியல் தவிர வேறு  ஒன்றும் இல்லை
இப்படி ஒரு மோசனான நிலை வர  யார்  என்ன காரணம் என்று சொல்வதை விட, நாங்கள் வந்தால் இப்படி செய்வோம் என்று சொல்லும் அரசியல்வாதியை விட இதை எல்லாம் நாங்கள் செய்ய மாட்டோம் என்று சொல்லும் அரசியல்வாதி வேண்டும்



           அரசியல்வாதிகள் அரசியல் கட்சிகள் ஆண்டும் தோறும் வெளி இடும் அரசியல் வாக்குறுதிகள் விட வலிமை வாய்ந்தது நாம் அவர்களுக்கு தரும் இது போன்ற வாக்குறுதிகள் 

     நாங்கள் அரசியலுக்கு வந்தால் இதை எல்லாம் செய்வோம் என்று அரசியல் மேடையில் பேசுவதை விட அவர்கள் இடம் நாம் தரும் அரசியலுக்கு வந்தால் இதை எல்லாம் நாங்கள் செய்ய மாட்டோம் என்ற உறுதிமொழி சிறந்த்தது

            இதை பற்றி நான் எழுதும் இந்த பதிவு ஒரு ஆரம்பம் ஆகா மட்டுமே இருக்க வேண்டும் இன்னும் பொதுதேர்தல் வர சில நாட்கள் இருக்கும் நிலையில், இனி மேலும் அரசியல்வாதியின் இது எல்லாம் செய்வோம் என்ற வாக்குறுதியை  விட வலிமை வாய்ந்தத்தது இதை எல்லாம் நாங்கள் செய்ய மாட்டோம் என்ற வாக்குறுதியே

                  " இந்தியா ஏழை நாடு என்பதை விட ஏழை ஆக்கப்படும் நாடு என்று சொல்வதே சிறந்தது "?

 ஒரு ருபாய் அரிசி கொண்டு ஒரு ஏழை குடும்பம் தன் வாழ்கை வண்டி ஓட்டும் போது ,மாதம் ரூ.3000 க்கும் குறைவான வருமானத்தில் ஒரு குடும்பம் ஓடும்போது

        கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்கும் அரசியல்வாதி அந்த கோடிக்கணக்கான பணத்தையும் சாப்பிடுவதில்லை

இந்திய மக்களுக்கு பயன்படும் நம் பணம் எங்கோ கண் காணாத தேசத்தில் கருப்பு பணமாக  அவன் நாட்டு மக்கள் சந்தோசமாக இருக்க நம் ஏழை மக்களின் பணம் இருக்க முதல் காரணம் ஊழல் மட்டுமே
     
           "இப்படியே ஒரு நிலை நீடித்தால் இந்தியா நிஜத்தில் ஒளிருவதை விட அரசியல்வாதிகள் விளம்பரத்தில் மட்டுமே ஏழை மக்கள் சிரிப்பார்கள் "

         என்னத்தான் ஆயரக்கனக்கில் லட்சகணக்கில் நாம் வெளிநாட்டில் சம்பாதித்தாலும் நமக்கு கிடைக்கும் உண்மையான ஆத்ம சந்தோஷம் நம் நாட்டில் சம்பாதிக்கும்போது மட்டுமே கிடைக்கும்
             அடுத்த நாட்டுக்காரனுக்கு வேலை செய்வதை விட நம் நாட்டில் வேலை செய்ய வாய்ப்புகள் குறைய யார் காரணம் ?
 நூற்றுக்கு நூறு சதம் ஊழல் நிறைந்த இந்த அரசியல் வாதிகள் தவிர வேறு யாரும் இல்லை

           அரசியலுக்கு வந்து ஐந்து வருடத்தில் நானோ என் குடும்பமோ ஒரு ருபாய் கூட மக்களை ஏமாற்றி சம்பாதிக்கவில்லை    அரசியலுக்கு வரும்போது  எவ்வளவு சொத்து இருந்ததோ அதே அளவு சொத்துதான் எனக்கு இப்போதோம் இருக்கு என்று சொல்லும் அரசியல்வாதிகள் எத்தனை பேர்            இந்த தேர்தலில் நாம் வெற்றி பெற்று அரசியலுக்கு வந்தால் இதை எல்லாம் செய்வோம் என்று மேடையில் சொல்வதை விட
 அதே அரசியல் மேடையில் இதை எல்லாம் செய்ய மாட்டோம் என்று சொல்லும் வகையில் நாமே சில வாக்குறுதிகள் கொடுக்க வேண்டும்

           அந்த வகையான வாக்குறுதிகள் பற்றி வரும் பதிவுகளில். உங்களுக்கு ஏதும் கருத்து தோன்றினால் மறக்காமல் கூறவும்

                       வரும் தேர்தலில் நம் உண்மையான வளமான எதிர்காலத்திற்கு வாக்களிப்போம் 
                                                                                                        

           இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்

      
 நண்பர்களுக்கு கூற என்ற பட்டனை அழுத்தி பேஸ்புக் மூலம் நண்பர்களுக்கு சொல்லவும்

Wednesday, December 22

பேஸ்புக் TOP10 பாலோவர்ஸ் அப்ளிகேசன்


          உலகத்தில் எதற்கு எதற்கோ TOP10 போடும்போது நாம் தினமும் பயன்படுத்தும் பேஸ்புக் நம் பேஸ்புக்  அதிகம் யார் பார்த்தார்கள் என்று கணக்கிட்டு அதன் அடிப்படையில் பேஸ்புக் TOP10   பார்க்க ஒரு அப்ளிகேசன் உள்ளது


TOP10  என்பதை மட்டும் அழுத்தவும்


 


அதன் அடிப்படயில் நாம் நம்முடைய பேஸ்புக் TOP10 போடலாம்
நம்முடைய TOP10 பாலோவர்ஸ் பெயர்களை TAGS   செய்யலாம் இதன் மூலம் நம் TOP10 பாலவர்ஸ் அனைவருக்கும் தானாக மெசஜ்  செய்யலாம்




TAGS  என்ற இடத்தை அழுத்தி அனைவருக்கும் தகவல் அனுப்பலாம் 



இதற்க்கு நாம் முதலில் இந்த லிங்க் செல்ல வேண்டும்


பிறகு இதன் கீழே இருக்கும் TOP10  பாலோவர்ஸ் என்பதை கிளிக் செய்ய வேண்டும் போல்ல்வார்ஸ் TAGS , POST  போன்றவைகள் பயன்பத்துதல் கணக்கில் TOP10 பாலோவர்ஸ் கணக்கிடப்படும்



 இதில் மற்றும் ஒரு விசேடம் TOP BOYS ,TOP GIRLS  போன்றவைகள் கணக்கிடலாம்


              இது பேஸ்புக்கில் உள்ள ஒரு அப்ளிகேசன் நீங்கள் விரும்பினால் நம்பினால் மட்டுமே பயன்படுத்தவும்



             பேஸ்புக் TOP10 MY-TOP-FOLLOWERS செல்ல இதை அழுத்தவும்


                              
                                          "DONT FORGET MY VOTE"

Saturday, December 18

ஹாய் அரும்பாவூர் TOP 5 பதிவுகள் 2010



           ஆண்டு இறுதியில் எல்லா பதிவுகளும் போல சினிமா டாப் டென் பாடல் டாப் டென் நடிகர்கள் என போடுவது போல் ஏன் நாமும் வருடம் முழுவதும் எழுதிய பதிவுகளில் சிறந்த ஐந்து பதிவுகள் பற்றி போடா கூடாது என்ற எண்ணத்தின் வெளிப்பாடு இது

         இதே போன்று உங்கள் பதிவுகளில் நீங்கள் நினைக்கும் சிறந்த் ஐந்து பதிவல் பற்றி பதிவு போடலாம் வாக்குகளின் எண்ணிக்கையில் தரத்தின் அளவில் என உங்கள் எண்ணத்தில் தோன்றும் உங்கள் வலைப்பக்கத்தில் இருந்து உங்களுக்கு பிடித்த சிறந்த ஐந்து பதிவுகள் போடலாம்



ஆண்டின் இறுதியில் தொடர் பதிவாக இருக்க ஒரு சிலரை மட்டும் அழைக்காமல் வலைப்பதிவு வைத்து இருக்கும் அனைவரும் தொடர கேட்டு கொள்கிறேன்      என் வலைப்பதிவில் எனக்கு பிடித்த சிறந்த ஐந்து பதிவுகள் பற்றி



1. ராக்கிங் சைத்தான்களும் & ஏழை மாணவியின் பரிதாபமும்

அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வந்த பொறியியல் மாணவி ஜோதி தற்கொலை செய்து கொண்டது பற்றி மனதில் ஏற்பட்ட வருத்தத்தில் எழுதிய பரிதாபம் மிருக வடிவில் இன்னும் மனித இனம் இருப்பதை பார்த்து என்ன சொல்வது என்று அறியாமல் எண்ணத்தின் வெளிப்பாடு இந்த பதிவு

2.பதிவர் உலகமும் தரமான சினிமா விமர்சனமும் 

   முதலில் ஒன்றை நான் சொல்லிக்கொள்ள  விரும்புகிறேன் பதிவர் உலகம் படத்தை பிடிக்க வில்லை என்றால் மிகவும் தாறுமாறாக விமர்சனம் செய்கிறார் என்ற கூறும் ஒரு சார்பானவர்களின் கருத்தை தூக்கி குப்பையில் போடுங்கள்
  யோசித்து மிகவும் அழகாகவும் சிறப்பான விமர்சனம் என்றால் அது வலை பதிவர் விமர்சனம் என்பேன்
 
 என்று நான் எழுதிய இந்த பதிவு

3.ஆங்கில கல்வியும் நம் மாணவர்களும்   
     என்னத்தான் தமிழ் வழி கல்வி பற்றி  நாம் பேசினாலும் ஆங்கில் வழி கல்வி கற்கும் மாணவன் தமிழ் வழி கற்கும் மாணவனை விட சிறப்பான வாய்ப்புகள் அவனுக்கு ஆரம்ப கல்வியில் கிடைப்பதன் நிதர்சன உண்மை பற்றி எழுதிய பதிவு  இது

4.ரஜினி ஷங்கர் ரஹ்மான் நாட்டுக்கு உழைக்கக் வந்தோம் என்று சொல்ல வில்லை?
எந்திரன் படம் வந்த நேரத்தில் எந்திரன் படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று சில அறிவு ஜீவிகள் சொன்ன கருத்தை எதிர்த்து எழுதிய பதிவு இது


5.கருணாநிதி அவர்களின் சுதந்திர தின திட்டங்களும் எண்ணமும் 

          ஒவ்வொரு சிறப்பான நாட்களிலும் அரசியல்வாதிகள் என்பவர்களில்ன் கற்பனை திட்டம் அறிவிக்கப்படும் அதன் வெற்றி என்பதோ குறைவு .வெறும் பேச்சளவில் இருக்கும் அந்த திட்டங்கள் செயல்படும் பொது  மக்கள் அடையும் பயன் என்பதோ குறைவு என்று எண்ணத்தின் வெளிப்பாடு இந்த பதிவு


       இந்த ஆண்டு முழுவதும் நான் எழுதிய பதிவுகளில் சிறந்த ஐந்து பதிவுகள் போட்டுள்ளேன்

இதே போல மற்ற பதிவர்களும் தொடர அழைக்கிறேன்                                    தொடர்ந்து உங்கள் ஆதரவை வேண்டி
 

               விரைவில்  ஹாய் அரும்பாவூர் AWARDS

                                      COMING SOON


Friday, December 17

2010 சிறந்த 12 படங்கள்





இந்த ஆண்டில் கணக்கற்ற படங்கள் வந்தாலும் வெற்றி பெற்று மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்ற படங்கள் சில மட்டுமே அவைகள்  பற்றி



1.தமிழ்ப்படம் :

இயக்கம் :si.எஸ்.அமுதன்
                  தமிழின் முதல் ஸ்கூப் மூவி  ரஜினி ,கமல் ,விஜய் .என ஒரு நடிகரை விடாமல் நக்கலடித்து ஹிட் ஆனா நகைச்சுவை படம் ஆண்டின் முதல் ஹிட் படம் இது
                     இந்த படத்தை துரை தயாநிதி தவிர வேறு யார் வெளியுட்டு இருந்தாலும் தியேட்டர் கிழிந்து இருக்கும் தயாநிதி அவர்களின் வெளியிடு என்பதால் அமைதியாக இருந்தனர்

2.விண்ணை தாண்டி வருவாயா :
            இயக்கம் :கௌதம் மேனன்
            கௌதம்  மேனன் இயக்கத்தில் சிம்பு கை வித்தை காட்டாமல் நடித்த படம் இது .த்ரிஷா அவர்களின் நடிப்பும் பின்னணி இசையும் சரி கேமரா என பல பிளஸ் இருந்து வெற்றி பெற்ற படம் இது


3.அங்காடி தெரு : 
                     இயக்கம் :வசந்த பாலன்
                      வெயில் படத்திற்கு பின் வசந்த பாலன் இயக்கிய சிறந்த படம் சாதாரண தொழிலாளிகளின் நிலை பற்றி
 வந்த  படங்களில்  சிறந்த  படம் இது .
   இந்த படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு சிறப்பாக இருந்தது 



4.பையா :

            இயக்கம் :லிங்குசாமி
            ஒரு அழகான காதல் கதையை சாலையோர ரேசிங் என எல்லாம் கலந்து அழகாக வந்த படம் இது .இந்த படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் யுவன் இசை கூட ஒரு காரணம்


5.இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் :

     இயக்கம் :சிம்பு தேவன்
      23 ம புலிகேசி வெற்றிக்கு பின் மாறுபட்ட கதை சூழ்நிலையில் தமிழ் திரை உலகின் நீண்ட நாட்களுக்கு பின் கௌபாய் படம் இது.
 லாரன்ஸ் அவர்களின் நடிப்பு    படத்திற்கு போடப்பட்ட செட்டிங் என வித்தியாசமான படம் இது


  6.சிங்கம் :
         இயக்கம் :ஹரி
          வெற்றி பட இயக்குனர் ஹரி அவர்களின் பழைய கதை ரசிக்கும் விதமான திரை கதை மூலம் எதிர்ப்பாராத வெற்றி பெற்ற படம் படத்தின் வெற்றிக்கு சன் பிக்சர்ஸ் கூட ஒரு காரணம்
சூர்யா அவர்களின் நடிப்பு இப்படத்திற்கு ஒரு பிளஸ்



7.களவானி                                இயக்கம் :சற்குணம்
            படத்தை எத்தனை முறை பார்த்தாலும்  மீண்டும் பார்க்க தோன்றும் திரை கதை கிரமாத்து பாணியில் ஒரு அழகிய காதல் கதை படம் ஆரம்பம் முதல் கடைசி வரை ஒரு இதத்தில் கூட அலுப்பு தட்டத திரை கதை
கஞ்சா கருப்பு நகைச்சுவை ஓவியா என இப்படத்தில் பல பிளஸ் இருந்த படம் இது


8.மதராசா பட்டினம் :

            இயக்கம் :விஜய்
             லகான்  கொஞ்சம் டைட்டானிக் ரொம்ப என கலந்து வந்த படம் ஆர்யா அவர்களின் நடிப்பு மற்றும் சுதந்திரத்திற்கு முன் சென்னை என செட்டிங் எல்ல்லாம் கலந்த வெற்றி பெற்ற படங்களில் இதுவும் ஒன்று


9.நான் மகான் அல்ல :


              இயக்கம் :சுசிந்திரன்
           வெண்ணிலா கபடி குழு படத்திற்கு பின் சுசிந்திரன் இயக்கிய நகரம் சார்ந்த த்ரில்லர் சார்ந்த காதல் படம்
கார்த்திக் இந்த ஆண்டில் கொடுத்த இரண்டாவது வெற்றி படம் இது  படத்தின் பெரிய பக்கபலம் யுவனின் இசை 



10.பாஸ் என்கிற பாஸ்கரன் :

              இயக்கம் :எம் .ராஜேஷ்
                எஸ் எம் எஸ் படத்தின் வெற்றிக்கு பின் ராஜேஷ் இயக்கிய படம்  ஆர்யா நயன்தாரா நடிப்பில் வந்த    நகைச்சுவை படம். சந்தானம் ஆர்யா கூட்டணயில் திரை அரங்கை கலக்கிய படம் இது 


11.மைனா : 
இயக்கம் :பிரபு சாலமன்
                    படம் வருவதற்கு முன்பே எதிர்பார்ப்பை ஏற்படுத்திய  படம் அந்த எதிபார்ப்பை உண்மையாக்கி வெற்றி பெற்ற படம்


12.எந்திரன் : 

              இயக்கம் :ஷங்கர்
        இந்த படத்தை ஒரு வார்த்தையில் சொல்வது என்றால் சூப்பர் ஹிட் மூவி தமிழ் சினிமா சரித்தரம்



  சிறந்த ஜனரஞ்சக படம்   : களவானி
  சிறந்த் இயக்குனர்              :பிரபு சாலமன் (maynaa)
  சிறந்த பட நிறுவனம்       : ரெட் ஜெயண்ட்


                   2010   ஹாய் அரும்பாவூர் AWARDS     
  

                

    
                       
         
COMING  SOON                              
      
                  

Thursday, December 16

2010 சிறந்த 10 பாடல் தொகுப்புகள்


                       ஒரு பாடல் ஹிட் என்பதை விட அந்த படத்தில் வரும் எல்லா பாடல்களையும் ரசிக்கும் முறையில் தருவது என்பது சிறந்த சாதனை அந்த வகையில் இந்த ஆண்டில் ரசிகர்கள் ரசிக்கும் விதமாக  வந்த சில சிறந்த ஆல்பங்கள் உங்கள் பார்வைக்கு
       


                       இந்த ஆண்டில் அதிகம் ஹிட் கொடுத்த இசை அமைப்பாளர் என்றால் கண்டிப்பாகா அது யுவன் ஷங்கர் ராஜா அவர்கள் மட்டுமே நான் மகான் அல்ல ,கோவா ,பையா ,பாஸ் என்கிற பாஸ்கரன் என கண்டிப்பாகா சொல்லலாம்

  இப்போது அந்த ஆல்பங்கள் :

       1.விண்ணை தாண்டி வருவாயா :                                                        ரஹ்மான் கௌதம் கூட்டணி மீது இருந்த எதிர்பார்ப்பை கொஞ்சம் கூட வீணாக்காமல் ஹிட் கொடுத்த ஆல்பம் இது
              படத்தின் பாடல்களும் சரி பின்னணி இசையும் சரி கலக்கிய படம்

      2.பையா :               

இந்த படத்தின் வெற்றிக்கு மிக மிக்கிய காரணம் யுவனின் பாடல்களும்சரி பின்னணி இசை மட்டுமே இவை இரண்டும் இல்லாமல் இந்த படத்தை பார்த்தல் பூஜ்யம் மட்டும் மின்னும் 
  அடடா மழை இந்த ஆண்டில் சிறந்த பாடல் என கூட சொல்லலாம்

      3.சிங்கம் :    

                         
தேவி ஸ்ரீ பிரசாத் ஹரி கூட்டணியில் படத்தின் வெற்றிக்கு இந்த படத்தின் பாடல்கள் கூட உதவியது என சொல்லலாம்
                                              
      4. நான் மகான் அல்ல  :

                             
   வா வா நிலவை , இறகை போல பறக்கிறேன் யூத் அனைவரின் இதயம் கவர்ந்த பாடல் சுசிந்திரன் அவர்களின் இந்த படத்திற்கு யுவன் அவர்களின் பாடலும் சரி பின்னணி இசையும் சரி சரியான தேர்வு

    5.பாஸ் என்கிற பாஸ்கரன் : 



                                                      இந்த நகைச்சுவை கலந்த காதல் படத்திற்கு யுவனின் இசை ஒரு பக்க பலம் 
"யார் இந்த பெண்தான் என்று பார்த்தேன் "  இந்த ஆண்டின் சிறந்த் பாடல்களில் இதுவம் ஒன்று

     6.கோவா :  

                      
        1980 களில் இளையராஜா அவர்கள் கொடுத்த கிரமாத்து இசை மீண்டும் கேட்க்க வைத்த  ஆல்பம் இது ஏழேழு தலைமுறை ,அடிடா நையாண்டி மேளம் என பாடல்களில் பழமையும் புதுமையும் கலந்து கொடுத்த ஆல்பம் இது

        7.  மைனா :

                                
     மைனா மைனா, நீயும் நானும் ,இந்த படத்தில் இமான் புது பரிணாமத்தில்  கலக்கிய படம் இது பின்னணி இசையும் சரி பாடல்களும் சரி சூப்பர் ஆல்பம் இது
            
        8. ராவணா :                         

      படம் எப்படியோ ஆனால் பாடல்கள்  ரஹ்மானின் பெயரை காப்பாற்றிய  படம் இது உசுரே போகுதே ,கெடா கரி , கள்வரே ,நானே வருவேன் பாடல்கள் சூப்பர்

         9.அங்காடி தெரு           

           சூப்பர் ஹிட் ஆல்பம் 


               எந்திரன்     

                இந்த படத்தை பற்றி ரொம்ப சொல்ல தேவை இல்லை  இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படம் இது 


மேலும் சிறந்த ஆல்பம் சில 


                     களவானி , மதாரசா பட்டினம் 

சிறந்த் பின்னணி இசை :

                          
இளையராஜா _  நந்தலாலா


   சிறந்த இசை அமைப்பாளர் : 


              யுவன் ஷங்கர் ராஜா 

 சிறந்த பாடல் 2010  :   


                                                    அடடா மழைடா  _ பையா
 
                          

Monday, December 13

நோபல் விருது மேடையில் ஒரு தமிழன் இசை நிகழ்ச்சி (விடியோவுடன் )

                  உலகை வெல்ல இசைக்கு மொழி தேவை இல்லை இசை என்பது மொழி தெரியாத ஒருவனையும் கவரும் என்பதற்கு, ரஹ்மானின் இந்த உலக அளவிலான புகழை கூட சொல்லலாம்.
 ஐநா சபை முதல் நோபல் விருது வழங்கும் விருது வரை ரஹ்மானின் இசைக்கு உலக அளவில் தரப்படும் முக்கியத்துவம் வேறு எந்த இந்திய கலைஞனுக்கும் கிடைக்குமா ? என்பது கொஞ்சம் சந்தேகமே
          
                                நோபல் விருது விழாவில் மொழி இந்திய மொழி தெரியாத உலக முழுவதும் இருந்து வந்த மக்கள் காட்டும் ஆரவார ஆதரவு
    ரஹ்மானுக்கு  ஒரு ஜே சொல்லுகிறது



                              இந்தியாவில் சிறந்த இசை அமைப்பாளர் ஆன AR ரஹ்மான் இப்போ உலக அளவில் பெரும் சாதனைகள் செய்ய அவரின் தலைகனம் இல்லாத உண்மையான உழைப்பு மட்டுமே

          AR ரஹ்மானின் புது படமான 127 hours  உலக அளவிலான திரைப்பட விருதுகளில் இப்போதே பரிந்துரைக்கப்படுகிறது
               
15th Satellite Awards :
                
Houston Film Critics Society Awards              
சிறந்த பாடல் மற்றும் பின்னணி இசைக்கு இப்படத்தின் இசை பரிந்துரைக்கப்படுகிறது

   வரும் காலங்களில் கோல்டன் க்ளோப் மற்றும் ஆஸ்கர் விருதுக்கும் 
பரிந்துரைக்கப்படும்
                  நோபல் கலக்கல் இசை நிகழ்ச்சி பார்க்க  







மறக்காமல் உங்கள் வாக்கை  அளிக்கவும்
    
          உங்கள் பேஸ்புக் மூலம் நண்பர்களுக்கு கூற கீழே உள்ள பேஸ்புக் பட்டனை அழுத்தவும் 

Sunday, December 12

2010 ரசிகர்களை ஏமாற்றிய படங்கள்

  வெற்றி படங்கள் பற்றி எழுதும் முன் ரசிகர்கள் எதிர்பார்ப்பு உண்டாக்கி அந்த எதிர்பார்ப்புக்கு ஈடு கொடுக்காமல் போன படங்கள் எல்லா வருடமும் வரும்

இந்த பதிவில் எதிர்பார்ப்பு உண்டாக்கி ரசிகர்களை ஏமாற்றிய படம் மட்டுமே

 அதிலும் யாரும் எதிர்பார்க்காமல் வெற்றி பெரும் படங்கள் ஒரு வகை 

 ரொம்ப முக்கியம் வாய்ந்தவை இந்த வகை ரசிகர்களை ஏமாற்றிய படங்கள்  பெரும் நிறுவனம் .புகழ் வாய்ந்த நடிகர் என பல பல வெற்றி பெற கூடிய வாய்ப்பு இருந்தும்  நல்ல கதை, திரை கதை இல்லாமல்  ரசிகர்கள் மனதில் இடம் பெறமால்  போன படங்களில் சில இவைகள்  கீழ் வரும் இந்த படங்கள் அந்த வகையில் முதலில் வரும் படம் 



  1 .கோவா  
                      இந்த படம் ரஜினி மகளின் முதல் தயாரிப்பு  வெங்கட் பிரபு இயக்கம் யுவன் இசை என எதிர்பார்ப்பு அதிகம் உள்ள படமாக வந்தது  இதற்க்கு முந்தைய வெங்கட் அவர்களின் சென்னை 600028  சரோஜா போல வெற்றி பெரும் என எதிர்பார்த்து தோல்வி அடைந்த பெரிய படங்களில் கோவா முதல் இடம்



 
               


2. அசல்      
       
  தல  படம் என ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படம் சரண் இயக்கம் ஒரு பக்கம் சரண் பரத்வாஜ் இசை மற்றும் பஞ்ச வசனம் அல்டிமேட் ஸ்டார் போன்ற ஓவர் பில்ட் அப் இல்லாமல் வரும் படம் என பல பிளஸ் இருந்தும் படம் பெரும் மைனஸ் ஆனதிற்கு காரணம் ரசிகன் என்பவனுக்கு புரியாத திரை கதை படம் முழுவதும் பில்லா  பாகம் இரண்டோ என நினைக்க வைக்கும் கோட் ,கண்ணாடி என படம் முழுவதும் கேட் வாக் செய்தார் அஜித் என கூட சொல்லலாம்

 3.தீராத விளையாட்டு பிள்ளை 

                                விஷால் மிகவும் எதிர்பார்த்த படம் இது  நகைச்சுவை பாணியில் விசாலின் படம் இது சந்தானம் .மயில்சாமி  என நகைச்சுவை நடிகர்கள் ஒரு பக்கம் ,யுவனின் இசை ஒரு பக்கம் சன் பிக்சர்ஸ் என பல பிளஸ் இருந்தும் இந்த படம் ஏனோ ரசிகர்களை அந்த அளவிற்கு கவரவில்லை
                             



4. சுறா    

     
சன் பிக்சர்ஸ் படம் மற்றும் விஜய் படங்கள் என்றால் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும் அந்த எதிர்பார்ப்பு எல்லாவற்றிக்கும் பெரும் ஆப்பு வாய்த்த படம் விஜய் அவர்களில் தொடர் தோல்வியில் இணைந்த மற்றும் ஒரு படம் என கூட சொல்லலாம்
      அதிலும் இந்த படத்தில் வடிவேலு நகைச்சுவை கூட சொல்லும் படி அமையவில்லை .சன் பிக்சர்ஸ் படங்களில் சொல்லும்படியான படம் கூட இது இல்லை



5.ராவணன் 
            
         மணிரத்னம் படம் என்ற எதிர்பார்ப்பு விக்ரம் நீண்ட நாட்களுக்கு பின் நடித்தபடம்  மற்றும் ஐஸ்வர்யா ராய் ரஹ்மான் இசை அம்பானி நிறுவனத்தின் தயாரிப்பு சந்தோஷ் சிவன் கேமரா நீண்ட நாட்கள் படப்பிடிப்பு என ஒரு பெரும் எதிர்பார்ப்பை இந்திய முழுவதும் ஏற்படுத்திய படம்

 ராமான் காப்பியத்தில் இந்த முறை கதை சுட்டு படம் பண்ணி இருந்தார் மணி ரத்னம் என்ன செய்ய படம் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை மணிரத்னம் படங்களில் சொல்லும் படியான படம் இல்லை இது  



 6. வா (வா குவாட்டர் கட்டிங் )      


   முதலில் வ குவாட்டர் கட்டிங் என விளம்பரம் செய்து பின் வரி வாங்க  வா என பெயர் மாறிய படம்
வரி விலக்கு வேண்டும் ஆனால் கிடைத்து இருக்கலாம்
 தமிழ் படம் கொடுத்த நிறுவனத்திற்கு  வெற்றி படம் இல்லை இது 



    பெரும் காப்பி(ய) படங்கள் 

     
        ஜக்குபாய் (வசாபி )
        நந்தலாலா (சிகிஜிரோ
)


          சென்ற வருடம் எழுதிய பதிவை படிக்க 


           2009 ரசிகர்களை ஏமாற்றிய படங்கள்



     

             
             

Thursday, December 9

பாட்டு கேட்க்க ஒரு நல்ல இணையதளம்


                  பாட்டு கேட்க்க ஒரு நல்ல இணைய தளம் என்று சொல்வதை விட  சிறந்த பழைய பாடல்கள் கேட்க்க சிறந்த தளம் இது


அதிலும் பி பி ஸ்ரீநிவாஸ்  எ எம் ராஜா ஜிக்கி போன்றவர்களின் ஓஹோ எந்தன் பேபி முதல் ஆடாத மனமும் ஆடுமே  போன்ற பாடல்கள் பாடல்கள் வந்த ஆண்டு வாரியாக பாடகர்கள் வாரியாகா ,படங்கள் வாரியாக என நமக்கு தேவையான வகையில் நல்ல பாடல்கள் கேட்கலாம்

 அதிலும் இளையராஜா அவர்களின் பாடல்கள் ஒவ்வொரு ஆண்டு வாரியாக கேட்க்கும் போது இசை மேதையின் இசை உழைப்பை நினைத்தால் பிரமிப்பாக இருக்கு  அதிலும் எனக்கு ரொம்ப நாள்களாக தேடிய கரையெல்லாம் செண்பகபூ ,நண்டு ,கன்னித்தீவு ,கரும்பு வில் போன்ற  இளையராஜா அவர்களின் பாடல்கள் ஆண்டு வாரியாக கேட்க்க சூப்பர்


 மற்றும் நமக்கு பிடித்த பாடல்களை ப்ளே லிஸ்டில் வரிசைபடுத்தி நமக்கு பிடித்த பாடல்கள் மட்டும் எடுத்து நமக்கு தேவையான நேரத்தில் கேட்கலாம்
   
    அதிலும்  இந்த இணையத்தில் 1939 தொடங்கி இன்று வரை எல்லா பாடல்களும் கேட்டும் வசதி உள்ளது 

                      இணையதளத்தில் நமக்கு பிடித்த  பாடல்கள் எல்லாம் கேட்க சிறந்த தளம் இது

                திரைப்பாடல்.காம் செல்ல இதை அழுத்தவும்

Tuesday, December 7

தமிழன் என்று அடிமை இனம் & ஆர்யா பேசிய வீடியோ


  ஆர்யா சொல்லி இருக்கிறார் நான் தமிழ் சினிமா பற்றி தப்பாக பேச வில்லை யாரோ இதை பற்றி தப்பாக சொல்லி இருக்கிறார்கள் என்று
 

உடனே ஆர்யா அவர்களுக்கு ஆதரவாக சரத்குமார் தமிழ் வளர்த்த கட்சி என்று சொல்லும் திமுகவை சேர்ந்த வாகை சந்திர சேகர்  ராதா ரவி என பலரும் ஆர்யா அவர்களுக்கு ஆதரவு என்ன கொடுமை சார் இது

  ஆர்யா இந்த பேச்சை பேசிய மறுநாள் என் மலையாள நண்பன் சொன்னார் என்னடா உங்க தமிழ் படங்களில் நடிக்க ஒரு திறமையும் தேவை இல்லையாமே
நான் அவரிடம் யார் சொன்னார் என்று கேட்டேன் அதற்க்கு ஆர்யா எங்க ஆளு உங்க ஊரில் இப்போ பெரிய ஹீரோ
என்று 
ஆர்யா பேசிய வீடியோ  உடனே அதை பற்றி பதிவு போடலாம் எனேறு இருந்தேன் சரியான விவரம் தெரியாமல் போடகூடாது அல்லவா அதனால் காத்திருந்தேன் இன்று youtube  இன்று அவர் பேசிய வீடியோ கிடைத்து என்ன அழாகா தமிழ் சினிமா பற்றி கேவலாமாக பேசி உள்ளார் வீடியோ கீழே 


தமிழ் சினிமாவில் நடித்து அதன் மூலம் பலகோடி லாபம் பார்த்து தன்னுடைய அந்த மலையாள ஈன புத்தியை அவர் காட்டி விட்டார்
  தொழிநுட்பம்  முன்னேறிய இந்த காலத்தில் தான் பேசிய பேச்சை இல்லை என்று அவர் சொல்கிறார் அவருக்கு உடனே ஆதரவு தருவது தமிழ் திரை உலகை காக்கும் இவர்கள்

தமிழ் திரையுலகைப்பற்றி தவறாக விமர்சிப்பேனா? கனவிலும் நான் எண்ணத் துணியாததை நான் பேசியதாக எழுந்துள்ள விமர்சனங்கள் என்னை மிகவும் பாதித்துள்ளன என்பது தான் உண்மை. நான் அப்படிப்பட்ட எந்த விமர்சனத்தையும் வெளியிடவில்லை  என்ன கேவலாமான பொய்      இது

    ஆர்யா பேசிய பேச்சு இதோ :

  என்னுடன் நடிக்கும் தமிழ் நடிகர்கள் மலையாள படம் என்றால் பயம் காரணம் தமிழ் படம் என்றால் கொஞ்சம் டான்ஸ்  கொஞ்சம் சண்டை போதும் நடிக்க தேவை இல்லை 
மலையாள படங்கள் என்றால் (அபிநயக்க )நடிக்க வேண்டும்  மலையாள படங்கள் நடிப்பு நிறைந்தது


  இப்படி தமிழ் உலகை கேவலபடுத்தி பேசி இருக்கும் இவருக்கு ஆதரவு தரும் சரத் குமார் அவரை என்ன சொல்வது அப்படி என்றால் ஆர்யா நடித்த நான் கடவுள் ,மதராச பட்டினம் படங்கள் எல்லாம் ஒரே வார்த்தையில் குப்பை என்று சொல்லாமல் சொல்லி விட்டார் ஒரே வார்த்தையில் தமிழ் திரை உலகை குப்பை என்று சொல்லி விட்டார்


           உடனே ஆர்யா அவர்களின் படங்களை புறகணிக்க வேண்டும் என்று சொல்ல வில்லை அந்த விஷயத்தில் எனக்கு உடன்பாடு இல்லை

 இந்தியா ஒரு ஒருமைப்பாடு உள்ள ஒரு நாடு இங்கே காஸ்மீர் நகரை சேர்ந்தவன் கன்னியகுமாரியில் பிழைக்கலாம்
ஆனால் மலையாளி என்னதான் தோல் மீது கைபோட்டு நாம் பேசினாலும் நம்  முதுகில் நமேக்கே தெரியாமல் கத்தியில் குத்தும் ஜாதி   
அனுபவத்தில் பார்த்தவன் இப்படிப்பட்ட மலையாளிக்கும் நமக்கும் இருக்கும் ஒரே விஷயம் ஒரு மலையாளி மற்ற மலையாளிக்கு உதவுவதில் நூறுசதம் உதவி  செய்வான்நம் தமிழ் இனம் அப்படியா ஒரு முறை நீங்களே சொல்லுங்கள் கொஞ்சம் தன்னுடைய நிலை மாறினால் உடனே தான் தமிழன் என்ற நினைப்பை உதறுவதில் தான் முன்னணியில் இருப்பான் 

இனிமேலாவது ஒற்றுமையாக இருப்போம் :

             "
ஆர்யா படங்களை புறகணிப்போம் அசின் படங்களை புறக்கணிப்போம் என்ற கேவலாமான  முறையில் கூறுவதை விட  இனிமேல் தமிழன் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம்      மலையாளிகள் இடம் இருக்கும் கேவலமான ஒற்றுமையை  விட தமிழ் நாம் அனைவரும் உண்மையான ஒற்றுமையாக இருக்க முயற்சி செய்வோம்  இல்லை என்றால் இது போன்ற ஆர்யா போன்ற கேவலாமான பிறவிகள் தமிழன் என்று ஒரு கேவலமான இனம் இருக்கு அவர்களுக்குள் ஒற்றுமை இருக்காது அவனுங்க ஒற்றுமை இல்லாது கூட்டம் என்று சொல்வான்

   ஜெயராம் சொன்னது போய் இப்போ ஆர்யா இன்னும் பல இனங்கள் கேவலமாக பேச அவர்கள் காரணம் இல்லை நமக்குள் ஒற்றுமை இல்லாது ஒரே காரணம் மட்டுமே           பணம் வந்தால் தமிழன் என்று நினைப்பை மறக்கும் நம்மை விட இது போன்ற ஆர்யா & ஜெயராம்  என்ற கேவலமான மலையாளிகள் உயர்ந்தவர்களே                     ஒற்றுமையாக வாழவிட்டலும் பரவாயில்லை  இது போன்ற மலையாளி கும்பலை வளர்க்கும் செயலை இனிமேல் செய்ய வேண்டாம்
இனிமேலாவது தமிழன் ஆகிய நாம் ஒற்றுமையாக இருக்க முயற்சி செய்வோம் நாம் பெற்ற நல்ல வாழ்கையை நம் தமிழ் மக்கள் அடைய  மட்டும் முயற்சி செய்வோம்    இதோ கீழே ஆர்யா தமிழ் சினிமா பற்றி  பற்றி கேவலமாக பேசிய பேச்சு கீழே 





மறக்காமல் இந்த பதிவை பேஸ்புக் மூலம் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும் நண்பர்களுக்கு சொல்லவும்
  

Sunday, December 5

காவலன் கடந்து வந்த பாதை & விஜய் பற்றி சில எண்ணங்கள்

காவல்காரன் காவல்கீதம் காவலன்   
     
  " விஜய் படங்களில் இந்த அளவிற்கு சிக்கல் சந்தித்த படம் இது ஒன்று மட்டுமே

தன்னுடைய தொடர் தோல்வியை போக்க தனக்கு உடனடி வெற்றி தேவை என்ற காரணத்தால் விஜய் தேர்ந்தெடுத்த பாதை எப்போதும் போல ஈசியான மற்றும் வெற்றி வாய்ப்பு நூறு சதம் உள்ளா ரீமேக்  படங்களை தான் குருவி அழகிய தமிழ் மகன் தொடங்கி வேட்டைக்காரன் சுறா வரை சொல்லும்படி விஜய் மாஸ் உள்ள உண்மையான வெற்றி இல்லாத காரணத்தால் அவர் நம்பியது மீண்டும் ரீமகே படங்களை தான்
   முதலில் அவர் தேர்ந்தெடுத்த சாய்ஸ் காமடி கலந்த பாடிகார்ட் ,அதற்க்கு முற்றிலும் மாறுபட்ட ஆசாத் இரண்டுமே பெரிய வெற்றி பெற்ற படங்கள்

அதே வெற்றி தமிழில் கூட அடையும் அதே கதை களத்துடன்  அந்த படங்களில் இருந்த கதை கருவுடன் இருந்தால்

காவலன் பிரச்சினை துளிகள்

 இந்த காவலன் படத்திற்குதான் எத்தனை பிரச்சிணைகள் காவல்காரன் என தொடங்கி காவல்கீதம் என்று நின்று இறுதியில் காவலனாக வருகிறது

   அசின் தமிழ் ஆர்வலர்களின் எதிர்ப்பை மீறி இலங்கை சென்று அதில் ஒரு பிரச்சினை ஒன்று உருவாகி இப்போது பிரச்சினை சற்று அமுங்கி உள்ளது

  கடைசியாக வந்த படங்கள் மூலம் நஷ்டம் அடைந்த திரை அரங்க உரிமையாளர்கள் காவலன் படம் தங்களுக்கு இதற்க்கு முன் வந்த விஜய் படம் மூலம் ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்ய விட்டால் காவலன் படத்தை வெளி இட மாட்டோம் என போர்க்கொடி ஒரு பக்கம்


சிங்கப்பூர் மலேசியா உரிமை வாங்கிய தந்திரா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ஆறு வார இடைக்கால தடை சில நாட்களில் அது விலக்கப்பட்டது

மொத்தத்தில் இந்த காவலன் படம் மற்றவர்களை காப்பறுவதை விட  காவலனை காப்பற்றி திரை அரங்கில் வெளி இடுவதே பெரும் பாடாக இருக்கும் போல உள்ளது


வெற்றியை காப்பதே பெரும் வெற்றி 

நிச்சயம் வெற்றி என்னும் உச்சியை அடைவதை விட அந்த கோட்டையில்  நிலைத்து இருப்பதே  உண்மையான  திறமை

    இந்த விசயத்தில் தமிழில் எந்த இளம் தலைமுறை நடிகனுக்கும் கிடைக்காத பெரும் வாய்ப்பு விஜய் ஒருவருக்க்தான் கிடைத்துள்ளது  அதிகமான ரசிகர் கூட்டம் எல்லோரயும் கவரும் அவரின் ஜனரஞ்சக நடிப்பு எவ்வளவுதான் அவரை பற்றி குறை சொன்னாலும் அவரின் இடைப்பட்ட காலங்களில் வந்த சிவகாசி கில்லி பிரியமானவளே காதலுக்கு மரியாதை பிரண்ட்ஸ் என பல படங்களில் அவரின் கதையுடன் கலந்த அவரின் நடிப்பையும் விஜய் என்ற நடிகனை  அனைவரயும் கவர்ந்த காரணத்தால் மட்டுமே இந்த அளவிற்கு அவரால் முன்னேற முடிந்ததது




யானை தன தலையில் மண் அள்ளி போட்ட கதை 

  ஆனால் கடைசியாக வந்த படங்கள் அவர் கஷ்டப்பட்டு வளர்த்த கோட்டையை அவரே உடைப்பது போல உள்ளது
அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று எந்த ரசிகனும் விரும்பவில்லை
          சும்மா நார்மலாகாவே அவர் நல்ல கதையில்  நடித்தாலே  படம் வெற்றி பெரும் என்ற நிலையில்  யார் பேச்சை கேட்டாரோ கடைசி படங்களில் அவர் காட்டிய ஓவர் ஹீரோயசம் அவருக்கு அவரே ஆப்பு வைத்து கொண்ட கதையாக போனது


கண்ணுக்கு தெரியாமல் செய்யும் உதவி கடவுள் செய்யும் உதவி போன்றது 

             இந்தியாவில் ஏழை மக்களுக்கு உதவி செய்ய அரசியல் மட்டும் வழி இல்லை  .இந்தியாவில் ஏழைகளுக்கு உதவ அரசியலில் நுழைந்து கோடிஸ்வரர்கள் ஆனவர்களின் எண்ணிக்கை போதும்

             எப்படியோ காவலன் படம் வெற்றி படமாக மாற வாழ்த்துக்கள்

இந்த மனிதர் அடைந்த வெற்றி உண்மையான உழைப்புக்கும் சுயநலம் இல்லாத உழைப்புக்கு கிடைத்த வெற்றி                                                MGR REAL HERO 



    
காவலன் பிரச்சினை துளிகள்  

Friday, December 3

AR ரஹ்மானின் TOYOTA & AIRTEL கலக்கல் வீடியோ படங்கள்



     ரஹ்மான் அவர்கள்  டொயோடா புது மாடல்  எடிஒஸ்  மாடலின் பிராண்ட் அம்பாசிடர் ஆகா  உள்ளார்
அதற்க்கான விளம்பர படங்களில் அவர் நடித்து உள்ளார் கலக்கலான அந்த விளம்பரம் கீழே


ஏர்டெல் 3 ஜி அலைவரிசையின் புது விளம்பர ட்யூன் அதற்கானா கலக்கல் விளம்பரம் கீழே



மற்றும் ஒரு பழைய விளம்பரம் வேர்ல்ட் ஸ்பேஸ் ரேடியோ விளம்பரம் இது  


Wednesday, December 1

நந்தலாலா பற்றி மிஸ்கின் சொன்னது ஆனந்த விகடன் இதழில்

''முதல் இரண்டு படங்களும் ஆக்ஷன். இப்போ சடார்னு வேறு இடத்துக்குப் போவது ரிஸ்க் இல்லையா?''

''இல்லைங்க! 'சித்திரம் பேசுதடி'க்குப் பிறகு படமே கிடைக்காமல் அநியாயத்துக்குக் காத்திருந்தேன். அந்தக் கோபத்தின் வெளிப்பாடுதான் 'அஞ்சாதே'. படம் முழுக்கவே எரிச்சலும், ரத்தமும், துப்பாக்கிச் சத்தமுமா இருக்கும். ஏன்னா, 'நந்தலாலா' ஸ்க்ரிப்ட்டுடன் நிறைய ஹீரோக்களிடம் போனேன். 'வருத்திக்கிற மாதிரி இருக்கே'ன்னு வேண்டாம்னு சொல்லிட்டாங்க. அதான் நானே நடிச்சுட்டேன். ஆனா, படம் பார்த்துட்டு அவங்க வருத்தப்படலாம்!''

 
(நிச்சயம் வருத்தப்படலாம் )




 


'இவ்வளவு கடினமான கதைத்தளத்தில் ரசிகர்கள் ஆழமாகப் போக முடியும்னு நம்புறீங்களா?''

'' 'நந்தலாலா' நிச்சயம் அறிவுரை சொல்ற படம் இல்லை. இதுவரை சரியான படத்தைப் பாராட்டுவதில் பார்வையாளர்கள் தப்பு செஞ்சதே இல்லை. தியேட்டரில் டிக்கெட் வாங்கும்போது, குத்துப் பாட்டு, அஞ்சு ஃபைட், ஹீரோயின் தொப்புள்னு நினைச்சு யாரும் வாங்கறது கிடையாது. புதுசா ஒரு உலகத்துக்குப் போக முடியுமான்னுதான் பார்க்கிறான். பிடிச்சா, தலை மேலே தூக்கிவெச்சுக் கொண்டாடுவாங்க. படங்கள் தப்பு செய்தால், அது நம்ம தப்பாகத்தான் இருக்கும்!''

 (நிச்சயம் உங்கள் கருத்தை காப்பற்றி விட்டார்கள் ரசிகர்கள் )

 நன்றி :

அனந்த விகடன் 31 .12 . 2008 

 


    நிச்சயம் மிஸ்கின் அவர்களின் இந்த நம்பிக்கையை எந்த ரசிகனும் பொய் ஆக்க வில்லை  அவர் அந்த கதை கரு மேல் வைத்த நம்பிக்கைக்கு வாழ்த்துக்கள் 


அதே போல கிகுஜிரோ படத்தை பற்றி கொஞ்சம் சொன்னால் தேவலை


    ஒரு நல்ல படத்தை வெற்றி படம் ஆக்கிய ரசிகர்கள் நிச்சயம் பாராட்ட பட வேண்டியவர்கள்


நாங்கள் எந்திரன் படமும் சரி நந்தலாலா படமும் சரி எங்களுக்கு பிடித்து இருந்தால் வெற்றி பெற வைப்போம்
எங்களுக்கு தேவை திரையில் மட்டும் நடிக்க தெரிந்த நடிகர்களின் பொழுதுபோக்கு படம் மட்டுமே


நிஜத்தில் நடித்து ரசிகனை ஏமாற்றும்  நடிகர்களின் படம் இல்லை