Monday, June 27

மிஷன் இம்பாசிபிள் 4 இணையத்தில் வெளியான முன்னோட்ட வீடியோ     இப்போ  இந்த இனிய உலகில் எதற்கு எல்லாம் திருட்டு பிரதி வருது என்பதற்கு வரை முறை இல்லாமல் போய் விட்டது
சரோஜா படத்தில் "சொல்வது போல ஹய் மருதநாயகம் சிடி என்று சொல்வார் அதுபோல "
    

இந்த ஆண்டு இறுதியில் வரபோகும் மிஷன் இம்பாசிபிள் 4  படத்தின் ட்ரைலர் இன்று youtube  வெளிவந்துள்ளது பிரெஞ்சு மொழி ட்ரைலர் என்றாலும் ஆங்கில ஆக்சன் படங்களுக்கு மொழியா ஒரு பிரச்சினை
  படத்தின் மிக முக்கிய எதிர்பார்ப்பு உலகத்தில் மிக பெரும் கட்டிடத்தில் இருந்து (துபாய் புர்ஜ் கலிபா) டாம்  க்ருஸ்  நடித்த காட்சி இந்த திரை முன்னோட்டத்தில் இருப்பது இன்னும் ஒரு + ப்ளஸ்

  

நம்ம ஊர் நடிகர்கள் நோகாம டூப் போடும் நடிகர்களை வைத்து ரசிகர்களை ஏமாற்றி ஆக்சன் ஹீரோ போல பந்தா காட்டுபவர்கள் இந்த காட்சியில் நடிக்க டாம் குருஸ் எடுத்த சிரத்தை ஒரு முறை பார்க்க வேணும்

  சும்மா இந்த கட்டிடத்தை எட்டி பார்த்தாலே தலை சுற்றும் இதன் மேல் டாம் குருஸ் அனாயசியாமாக நடித்து இருப்பது வாவ் (எவ்வளவு பாதுகாப்பு இருந்தாலும் நின்று பார்த்தால்தான் அதன் அருமை புரியும் )mission impossible 4 leaked trailer 

"Mission Impossible 4 l..."
This video is no longer available due to a copyright claim by Paramount Pictures Corporation.
Sorry about that.


படத்தின் படபிடிப்பின் போது எடுக்கப்பட வீடியோ 

Saturday, June 25

எப்படி தயாரிக்கிறார்கள் "BEER" FM(15)
எப்படி தயாரிக்கிறார்கள் வரிசையில் இன்று நாம் பார்க்க போவது வயது வந்தவர்களுக்கு மட்டுமே (+18 )  
இன்று நம் அரசு வருமானத்திற்கு அதிகம் நம்பி இருப்பதும் இந்த விஷயத்தை தான் 
 மது குடிப்பது வீட்டுக்கும் நாட்டிற்கும் கேடு என்பதை மட்டும் மனதில் கொண்டு இந்த பாருங்கள் 

ஒரு மிகபெரும் தொழிற்சாலையில் பீர் மது பானம் எப்படி தயாரிக்கிறார்கள் என்று பாருங்கள் 
   
கோதுமை எப்படி ஒவ்வொரு படியிலும் வெவ்வேறு நேரங்களில் ஸ்டார்ச் ஈஸ்ட் மற்றும் ஆல்கஹோல் சேர்க்கப்பட்டு எப்படி ஒரு குறிப்பிட்ட காலங்களில் பீர் எப்படி தயாராகிறது என்று பாருங்கள் 

+ மது குடிப்பது வீட்டிற்கும் நாட்டுக்கும் கேடு (குடிக்கிற எல்லோருக்கும்தான் +Tuesday, June 21

ஜாலியா ஒரு ஆல் ரவுண்டு அரட்டை 21/06/2011        இப்போ நாம் முதலில் நாம் பார்க்க போவது   அரசியலில் ஸ்பெக்ட்ரம் விசயத்தில் எத்தனயோ பேர்கள் ஈடுபட்டு இருந்தாலும் ஹிந்தி செய்தி சேனல்களும் சரி ஆங்கில செய்தி டிவி களும் சரி ஒரேடியாக கனிமொழி ராஜாவை மட்டும் அதிக அளவில் அவர்கள் செய்தியில் முன்னுரிமை தருவதும்
அடுத்த இலக்கு தயாநிதி என்று விரைவில் வர இருக்கும் புது பட்ஜெட் படம் போல அவர்கள் செய்யும் ஆர்பாட்டம் பார்க்கும்போது 
இவர்கள் தமிழர்கள் என்ற ஒரு காரணமோ என்று நினைக்க தோன்றுகிறது

 

ஆறு மாதத்தில் இதுவரை சூப்பர் ஹிட் படம் என்ற பெயரை கோ படம் மட்டுமே பெற்றுள்ளது இதை பார்க்கும்போது அதிக அளவில் சம்பளம் வாங்கும் படத்தை விட அதிக புகழ் இல்லாத இந்த ஹீரோ ஜீவா படம் இந்த சூப்பர் ஹிட் நிலை அடைய ஒரே காரணம் சரியான அளவில் அமைத்த கூட்டணி மட்டுமே.
 இனிமேல் தேவை இல்லாமல் நடிகர்களுக்கு அதிக அளவில்  சம்பளம் தருவதை விட நல்ல கதை உள்ள படங்களை தயாரிக்க முயற்சி செய்யுங்கள் என்று சொல்ல தோன்றுகிறது

 

நம்ம எதிரி  நாடு பாகிஸ்தானை போல ஸ்ரீ லங்கா ராணுவமும் நம் தமிழ் மீனவர்களை கொள்வதும் கைது செய்வதும் தொடர்கிறது இதை இந்திய அரசு இதை தட்டி கேட்காமல் இருப்பதை பார்க்கும்போது தமிழர்கள்  உயிர் என்றால் கிள்ளு கீரை போல மாறிவிட்டது

  

எமிரேட்ஸ் மற்றும் ஏர் இந்தியா 
  ஒரு குட்டி நாட்டில் இருக்கும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் உலக அளவில் விமான சேவையில் முதல் இடத்தில இருக்கு வல்லரசு ஆகா போகும் நாடு என்று சொல்லும் நம் நாட்டில் இருக்கும் இந்த ஏர் இந்தியா நிறுவனத்தில் தனது 55 ஆயிரம் ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாமல் திணறி வருகிறது ஏர் இந்தியா நிறுவனம். இதனால் ஊழியர்கள் ஸ்ட்ரைக்கில் ஈடுபடப் போவதாக மிரட்டியுள்ளனர்.
இதற்க்கு யார் காரணம் என்று சொல்வது உலத்தில் முதல் விமான நிருவமாக மாற வேண்டிய நம் ஏர் இந்தியா நிறுவனம் இப்படி மோசமாக போக அரசியல் தவிர வேறு எதை சொல்ல

   மாவீரன்
 

தமிழ் மொழியில்  வரும் படங்களே ஓட முக்கு முக்கி ஓடும் இந்த நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்பு  தெலுங்கு மொழியில் வந்த இந்த் படம் தமிழ் மொழியிலும் வெற்றி நடை போட நிச்சயம் ஒரே காரணம் திரைகதை மற்றும் அதை ஒட்டி வந்த பிரமாண்டம் மட்டுமே
 ஆகவே இனிமேல் இந்த் நடிகர்களுக்கு கோடி கணக்கில் பணம் கொடுத்து படம் தோல்வி என்று புலம்ப வேணாம்

 அடக்கி  வாசிக்கும் சன் டிவி
  

ஒரு பக்கம் ஸ்பெக்ட்ரம் விவகாரம் மறு பக்கம் மாப்பிள்ளை எங்கேயும் காதல் என்று தோல்வி படங்கள் என்ற காரணத்தால்  சன் டிவி வாங்குவதாக இருந்த அவன் இவன் படத்தை வாங்க வில்லை இப்போ வேங்கை படமும் சன் டிவி வெளியிடுவது சந்தேகம்  என்று செய்திகள் வருகிறது


Monday, June 20

எப்படி தயாரிக்கிறார்கள் "zippo lighters" FM(14)


எப்படி தயாரிக்கிறார்கள் வரிசையில் ரொம்ப நாளைக்கு பிறகு
இன்று நாம் எப்படி தயாரிக்கிறார்கள் வரிசையில் பார்க்கபோவது லைட்டர் சும்மா லைட்டர் என்று சொல்வதை விட ஸ்டைல்   நிறைந்த  லைட்டர் இது

  

திரைப்படங்களில் ஹீரோ சும்மா ஸ்டைல்லா ஒரு ஓரமா கிளிக் பண்ணும்போது எரியும் வகையில் அமைந்த இந்த லைட்டர் பற்றி பார்ப்போம்
தொழிற்சாலையில் இருந்து வரும் இந்த லைட்டர் ஒவ்வொரு நிலையிலும் தானியாங்கி இயந்திரங்கள் மூலம் வரும் காட்சிகள் சூப்பர்

DON'T MISS VOTE

Sunday, June 19

தந்தையர் தினம் ஒரு அழகிய வீடியோ by சரவணா குமார்       தந்தையர்  தினம் என்று வெறும் வாழ்த்து மட்டும் சொல்லாமல்.மிகவும் சிறப்பான முறையில் ஒரு வீடியோ தீம் உண்டாக்கி இருக்கிறார் சரவணா குமார் 

பாராட்ட வேண்டிய அந்த முயற்சி மற்றும் வீடியோ கீழே

    வீடியோ மட்டும் பார்க்காமல் மறக்காமல் வாழ்த்துங்கள்Saturday, June 18

ரசிகர்களுக்கு ரஜினி எழுதிய கடிதம் (கடிதம் இணைக்கப்பட்டுள்ளது )  சிங்கப்பூரில் மருத்துவமனையில் இருந்து ரஜினி உடல் நலம் தேறி  வெளியே  வந்த உடன் ரசிகர்களுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார் அதன்
நகல் இதோ Friday, June 17

ஆட்சியை மாற்றிய விஜய் ? சீமான் பேச்சை பற்றி சீமான் சீரியசாக பேசுவார் சில நேரங்களில் இப்படி சிரிக்கும்படியும் பேசுவார் என்று அவர் சொன்ன கருத்தை சிலர் சொன்னாலும்
எனக்கு அந்த அளவிற்கு விஜய் பிடிக்காது என்ற போதிலும் ஆட்சி மாறிய விசயத்தில் விஜய் கூட ஒரு காரணம் என்று அவர் சொல்லி இருக்கலாம்
 

அது உண்மை கூட,காலம் போன காலத்தில் தாத்தா எடுத்த இளைஞன் படம் கூட அவருக்கு ஆப்பு வைத்து  என்றால் மிகை இல்லை
  சும்மா காலம் போன காலத்தில் கதை எழுதுறேன் படம் எடுக்குறேன் என்று அவர் செய்த சேட்டைகள் அவர் மீது மட்டும் இல்லை அவரின் குடும்பம்  மீதும் ஒரு எதிர்ப்பு வர முக்கிய காரணம்
விஜய் அவர்களின் காவலன் படம் கூட ஒரு காரணம்
 சும்மா தாத்தா இந்த இளைஞன் படம் எடுக்காமல் இருந்து இருந்தால் காவலன் படம் திரை அரங்கு அது பாட்டுக்கு போய் இருக்கும் 
  காவலன் பட விவகாரத்தில் இறங்கி அந்த படத்தையும் வெற்றி ஆக்கி தனக்கும் ஆப்பு வைத்துகொண்டார் என்பது உண்மை

  இந்த தேர்தலில் அதிக அளவிலான புது வாக்காளர்கள் வாக்களித்தது கூட ஒரு காரணம்
புது வாக்களர் பட்டியலில் நூறு பேரில் நிச்சயம் பத்து பேர்   விஜய் ரசிகனாக கூட இருக்கலாம்

ஆகா மொத்தத்தில் சீமான் சொன்னது ஒரேடியாக உண்மை இல்லை என்று ஒதுக்க முடியாது ஓரளவிற்கு
உண்மை 
      

Tuesday, June 14

திரும்பி பார்த்த அது காதல் -TAMIL SHORT FILM


எழுத்து இயக்கம் :திவ்யன் ராஜ் குமார்
நடிப்பு :திவ்யன் ராஜ்குமார் ,ரேகா கிருபாகரன் ,குமார் ,ரமணன்
இசை : நந்தா இருக்கிறது எட்டு நிமிடம் இதில் ஒரு காதல் கதை சொல்ல வேணும் அதே நேரத்தில் அந்த காதலால் நடக்கும் சண்டை சொல்ல வேணும் பழிவாங்கல் ஆக்சன் எல்லாம் இருக்கணும் அப்படின்னா கொஞ்சம் கஷ்டம்
திவ்யன் இதில் ஓரளவிற்கு பாஸ்மார்க் வாங்கி விடுகிறார்

  ஒரு பெரும் பில்ட் அப்புடன் தொடங்கும் காட்சிகள் இடையில் ஏற்படும் காதல் இடபிரசினை எல்லாம் மிகவும் குறைவான காலநேரத்தில் சொல்ல முனைவதால் நமக்கு ஒரு தேக்கம் ஏற்படுகிறது என்னவோ உண்மை

இருந்த போதிலும் இவர்களின் இந்த முயற்சி பாராட்டு பெரும் அளவிற்கு உள்ளது

   எடிட்டிங் சொல்லும்படி உள்ளது 


Sunday, June 12

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கலக்கல் upcoming movies


      

ஹாரிஸ் ஜெயராஜ் காட்டில் இந்த ஆண்டு மழை என்று சொல்வதை விட அடை மழை  என்று சொல்வதே சிறந்த்தது   ஆண்டின் ஆரம்பமே ஹாரிஸ் ஜெயராஜுக்கு அமோகமாக இருந்தது எங்கேயும் காதல் ஆடியோ மார்கெட்டில் அமைதியாக தூள்கிளப்ப
  அதை தொடர்ந்து வந்த கோ படமும் சரி பாடல்களும் சரி சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது இந்த படத்தின் பாடல் உரிமைகளை வாங்கிய சோனி  அவரின் இசை தகடுகளின் விற்பனையை பார்த்து உடனடியாக அதிக விலை கொடுத்து அவரின் எதிர்வரும் 7 ஆம் அறிவு படத்தின் ஆடியோ உரிமையை அதிக விலை கொடுத்து வாங்கியது அவரின் இசை எதிர்பார்ப்பை உண்டாக்கி  உள்ளது 

 இப்போ எதிர்வரும் அவரின் இசையில் வரும் படங்கள் பற்றி :
  7 ஆம் அறிவு
   

ஹிந்தி மொழியில் கஜினி மெகா ஹிட் படத்திற்கு பின்பு  எ ஆர் முருகதாஸ் ஹாரிஸ் உடன் இணையும் முதல் படம் . இது ஒரு அறிவியல் கலந்த த்ரில்லர் படம் என்பதால் இதில் ஹாரிஸ் அவர்களின் வித்தியாச இசையை எதிர்பார்க்கலாம் .இந்த படத்தின் மற்றும் ஒரு சிறப்பு விஷயம் இதில் வரும் சைனிஸ் மொழி பாடல் ஒன்று
மற்றும் எல்லா பாடல்களையும் மதன் கார்கி எழுதி உள்ளார்

  ஹாரிஸ் அவர்களின் அடுத்த மியுசிகல் ஹிட்   7 ஆம் அறிவு

நண்பன் (++++விஜய் ++++ ஷங்கர் )


     விஜய் படம் என்றாலே பாடல்கள் சிறப்பாக இருக்கும் அதிலும் ஷங்கர் விஜய் ஹாரிஸ் என்று சொல்லும்போது சொல்லவா வேணும் இந்த ஆண்டின் சூப்பர் டூப்பர் இசை   நண்பன் ஒன்றாக மட்டுமே இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை
  ஏற்கனவே ஹிந்தி மொழியில் ஹிட் ஆன  படம்  என்பதால் அதை விட சிறப்பான இசை தர வேண்டும் என்பதில் ஹாரிஸ் அவர்கள் இன்னும் சிறப்பாக இசை இருக்கும் என நினைக்கலாம்


 ஒரு கல் ஒரு கண்ணாடி (ஓகே ஓகே )
யுவன் ஷங்கர் ராஜ கூட்டணியை விட்டு எம் ராஜேஷ் ஹாரிஸ் உடன் இணையும் படம் இது மற்றும்  உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடிக்கும் படம் ஹாரிஸ்  அவர்களின் படங்களில் சொல்லும்படியான படமாக் இருக்கும்

மாற்றான் (இந்த ஆண்டில் தொடங்கி அடுத்த ஆண்டு வரும் படம் )
 அயன், கோ படங்களின் சூப்பர் ஹிட் வெற்றிக்கு பின்பு ஆனந்த் ஹாரிஸ் அவர்களின் கூட்டணி வரும் படம்
படத்தின்
படத்தின் பாடல்களை பற்றி சொல்லி தெரியவேண்டியதில்லை

 FORCE (ஹிந்தி காக்க காக்க )


  தமிழ் மொழியில் வந்த இந்த படத்தின் ரீமேக் ஹிந்தி மொழியில் ஹாரிஸ் மீண்டும் தன் திறமையை நிருபிக்கும் வாய்ப்பு வந்துள்ளது .  ஜான் அப்ராஹம் ஹீரோ வாக நடிக்கும் படத்தின் மூலம்
தன்னுடைய இசை மூலம் கலக்குவார் என எதிர்பார்க்கலாம்

மொத்தத்தில் இந்த ஆண்டு ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களுக்கு சிறந்த வாய்ப்புகள் அமைந்துள்ளது

Friday, June 10

ஹாய் அரும்பாவூர் சினிமா துளிகள் (CINE NEWS 11.06)
 விக்ரம் நம்பும் ராஜபாட்டை
       


ரொம்ப நாலா ஒரு சுறு சுறு விறு படம் தராமல் சோர்ந்து போய் இருக்கும்  விக்ரம் இப்போ ரொம்ப நம்பி இருப்பது ராஜபாட்டை படத்தை . விக்ரம்  படத்தை பற்றி என்ன சொல்றார் அப்படின்னா தூள், சாமி போன்ற படங்களை அடுத்து ஒரு முழு நீள கமர்ஷியல் படம் 'ராஜபாட்டை'.  இப்படத்தின் கதை, கதையில் வரும் நகைச்சுவை ஆகியவை என்னை கவர்ந்ததால் இந்த படத்தில் நடிக்கிறேன் .
அப்படின்னு சொல்லி இருக்கிறார் சரி அவர் ஆசை படி இந்த படம் வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கலாம்


 சுசிந்திரன் இயக்க யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார்
" படத்தில் கதை இருக்கோ இல்லையோ போரடிக்காம பார்க்கிற திரைக்கதை  இருக்கான்னு பாருங்க விக்ரம் "


ஆகஸ்டில் மோத போறாங்க தல தளபதி (சந்தானம் ஸ்டைலில் )
                      

இப்போ ஆட்சி மாறி இருக்கும் இந்த நேரத்தல் உடனே பல படங்கள் திரை அரங்கில் வெளி வரும் என்று எதிர்பார்த்தால் ஒரே சுணக்கமாக இருக்கும் நேரத்தில் ரெடியாகி வெளியிட தயாரக இருக்கும் படங்கள் என்று பார்த்த வேலாயுதம் மங்காத்தா படங்கள் ஆகஸ்டில் வெளி வரும் என சொல்லபடுகிறது
   இரண்டு படங்களும் ஒரே நாளில் வராது என்று எதிர்பார்க்கலாம் இல்லை என்றால் அதை வைத்து ஒரு ரசிகர் பிரச்சினை  நடக்கும்

  படம் வருவது இருக்கட்டும் சீக்கிரம்  பாடல்களை வெளியிடுங்கள்

கோடை விடுமுறை ரஹ்மான் இசை அமைப்பார ?
  

ரஹ்மான் கதிர் கூட்டணி என்றால் வெற்றி கூட்டணி என்று கூட சொல்லலாம் மீண்டும் ரஹ்மான் கதிர் இணைவார்கள் என்று சொல்லப்படும் " கோடை விடுமறை " படத்தில் ரஹ்மான் இசை அமைப்பார் என்று சொல்லபட்டாலும் ரஹ்மான்
இசை அமைப்பார் என்பது சந்தேகமே   ரஹ்மான் ஹிந்தி மொழியில் இசை அமைக்கும் ராக் ஸ்டார் படத்திற்கு அவர் முழு மும்முரத்துடன்  இருக்கிறார் என்பது மட்டும் நிச்சயம் 
  தமிழ் மொழியில் அவர் கையில் இருக்கும் படம் சுல்தான் தீ வாரியார் மட்டும் ராணா மட்டுமே

ஆறு மாதத்தில் கலக்கிய ஒரே படம் "கோ"


   படம் வந்து ஆறு வாரங்கள் ஆகியும் இன்னும் பாக்ஸ் ஆபீஸ் கலக்கல் ஹீரோ கோ படம் மட்டுமே இந்த ஆறு வாரத்தில் மட்டும் இல்லை " ஆறு மாதத்தில் பாக்ஸ் ஆபீஸ் கலக்கிய படம் கோ மட்டுமே
ஒரு பக்கத்தல் ஆடியோ மார்கெட்டில்  கோ பாடல்கள் இன்னும் முதல் இடம் படத்திலும் முதல் இடம்

       ஆறு மாதத்தில் ரியல் ஹீரோ கோ இயக்குனர்  கே வி ஆனந்த் மற்று ஹாரிஸ் ஜெயராஜ்  மட்டுமேTuesday, June 7

இசையை தேட @ கேட்க்க சிறந்த 2 இணைய தளங்கள்        நாம் தேடும் தவல்கள் தர எத்தனையோ இணைய தளங்கள் இருந்தாலும் நமக்கு பிடித்தமான இசையை தேடி தர சிறந்த இரண்டு தளங்கள் பற்றி இன்று.  ஆங்கில  பாடல்களுக்கு  என்று தளங்கள் பல இருந்தாலும் தமிழ் பாடல்கள் தேட சிறந்த் தளம் இது

  ஒன்று SAAVN  மற்றது சர்ச் என்ஜின்களின் ராஜ கூகிள் GOOGLE  MUSIC  SEARCH   இன்று இந்த இரண்டை பற்றி பார்க்கலாம்

  SAAVN :     


இந்த இணையதளம் தமிழ் மற்றும் ஹிந்தி மொழி பாடல்களை தேடி பார்த்து கேட்க்க தரும் சிறந்த தளங்களில் ஒன்று
  நாம் தேடும் பாடல்கள் கேட்க்க இந்த இணையதளத்தில் பிளேயர்  உள்ளது SAAVN .COM செல்ல இதை அழுத்தவும் 

 
GOOGLE  MUSIC  SEARCH  
                 

  இந்த இணைய தளம் பற்றி அதிகம் சொல்ல தேவை இல்லை  இதில் நாம் விரும்பும் பாடல்கள் கேட்க்க IN .COM  பிளேர் உள்ளது 

GOOGLE MUSIC SEARCH செல்ல இதை அழுத்தவும்
  

Monday, June 6

பெங்களூர் குறும்பட விமர்சனம்


நடிப்பு :

சரவணா குமார் , தினேசு ,தங்கராஜு செயசங்கர் அரிகரன் கார்த்திக் சரவண ராம் குமார்  மற்றும் நம்ம நண்பர் "பலராமன்"

பாடல் எழுதி இசை அமைத்து பாடியவர் :சாய் சுதர்சன் 


ஒலி ஒளிபதிவு நிகழ்பட நெறியமைப்பு
சரவண ராம் குமார்
கதை கதையாடல் உரையாடல் :பலராமன்
  தயாரிப்பு கலை பொறியாளர்கள்

   

எதிர்பார்ப்பை உண்டாகிய குறும்படம் இப்போ நம் கணினித்திரையில் எதிர்பார்ப்பை உண்டாகிய அளவிற்கு அதை நிவர்த்தி செய்த படம் பெங்களூர் 

     பத்து நிமிட படத்தில் என்ன செய்ய முடியும் என்ற கேள்விக்கு அசத்தலாக ஒரு நல்ல நகைச்சுவை கலந்த படம் கொடுக்க முடியும் என்று நிருபித்துள்ளார் பலரமான் 


 ஒரு கிராமத்து இளைஞன் நகரத்திற்கு வரும்போது  சந்திக்கும் பிரச்சினைகள் அவைகள் அவன் எப்படி சந்திக்கிறான் என்பதை நகைச்சுவையாக் சொல்லும் படம் இது 
:)

படத்தின் ஆரம்பதி வரும் ட்விஸ்ட் நிறைந்த நகைச்சுவையாக பேருந்து நிலையத்தில் படத்தின் ஹீரோ அவர்களும் இயக்குனர் "பல
ராமன்" அவர்களும் தொடரும் முதல் காட்சி சூப்பர்

 படத்தில் ஹீரோ அவர்களை ரூம் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யும் அந்த இரண்டு நிமிட காட்சியில் பேச்சுலர் வாழ்க்கையில் நம்ம  இளம் தலைமுறை விடும் அலப்பறை  காட்டும்  காட்சிகள் சூப்பர்

  அதிலும் குளிக்கும் முறை பற்றி நண்பர் விளக்கும் காட்சி  இப்படியும் நடக்குமா என்று யோசிக்க வைக்கிறது

 நம்ம கிராமத்து ஹீரோ 
மெக்டொனால்ட் சென்று செய்யும் அலப்பறைகள் சிறப்பு சிரிப்புகள்

 

 இந்த படத்தின் மற்றும் ஒரு சொல்லும்படியான விஷயம் சாய் அவர்களின் பின்னணி இசை மற்றும் பெங்களூர் டைட்டில் பாடல் இதை அவரே இசை அமைத்து பாடல் எழுதி பாடியும் இருக்கிறார் 

 

வாழ்த்துக்கள் சாய் உங்களின் இசை  கேட்கும்படியான ஒரு முயற்சி ஒவ்வொரு நேரத்திற்கு தேவையான பாடல் சேர்ப்பு இன்னும் சிறப்பு,
செம்மொழி இசை எந்திரன் பாடல் நாயகன் பாடல் என சிறப்பாக சிறப்பான் காட்சியில் சேர்த்து மற்றும் உங்கள் பின்னணி இசை சூப்பர் உங்களுக்கு நிச்சயம் ஒரு நல்ல இசை காலம்
உள்ளது (எதிர்காலத்தின் பதம் )

   பலராமன் உழைப்பு நிச்சயம் பாரட்ட வேண்டியது ஆரம்ப காட்சியல் அவர் நடிப்பு சூப்பர் அவரின் உடை கூட சூப்பர்

 


அதிலும் ஹீரோ அவர்கள்  கடைசிக் காட்சிக்கு குறுந்தாடி தேவைப்பட்டது என்பதற்காக 3 வாரங்களாக சரியாக வளராத தாடியை வைத்தே அலுவலகத்தில் திரிந்தது தனி காமெடி.

 

மொத்தத்தில் சூப்பர் படம்

Saturday, June 4

இப்போ எதுக்குப்பா இந்த உண்ணாவிரத மெகா பட்ஜெட் படம்
  அண்ணா ஹாசரே  உண்ணாவிரதம் இருந்தார்
இவர்  உண்மையில் மக்களுக்கு நன்மை செய்வார் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு பதிவர் தொடங்கு சராசரி ஆட்கள் வரை அண்ணா அவர்களின் உன்னவிரத்திர்க்கும் அவர் தொடங்கிய இயக்கத்திற்கும் அமோக ஆதரவு தந்த அனைவரும் இப்போ யோசிக்க ஆரம்பித்துள்ளனர்

      

பூனைக்குட்டி இப்போ மெதுவாக வெளியே வர ஆரம்பிதுள்ள்ளது
இப்போ இவர்கள் உண்மையில் கருப்பு பணத்திற்குதான் உண்ணாவிரதம் இருக்கிறார்களா இல்லை காங்கிரஸ் சொல்வது போல கறுப்புப் பணத்துக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் யோகா குரு ராம்தேவின் பின்னணியில் ஆர்எஸ்எஸ் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் ஆகியவை இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது
உண்மையா ?

இந்த உண்ணாவிரதத்துக்கு ஆர்எஸ்எஸ், பாஜக ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளதோடு, தனது தொண்டர்களை பெருமளவில் இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்பர் என்றும் ஆர்எஸ்எஸ் கூறியுள்ளது.

 இந்தியாவின் உண்மையான முன்னேற்றத்திற்கு
தடையாக ஊழல் ஒரு காரணமோ அதை போல மத வெறி கலந்த செயல்களும் ஒரு காரணம்

     ஒரு ஹிந்துவாக இரு முஸ்லிமாக இரு கிறிஸ்துவனாக இரு நாம் முதலில் இருக்க வேண்டியது இந்தியனாக மட்டுமே
  மதம் என்பது நம்மை வளர்க்க மட்டுமே நாம் வளர்க்க இல்லை

 இப்போது ராம்தேவ் இருக்கும் இந்த உண்ணாவிரத்திற்கு அண்ணா ஹசாரே அவர்கள் கலந்து கொண்ட அளவிற்கு ஆதரவு இல்லாமல் போனது அனைவருக்கும் இருக்கும் இந்த சந்தேகம் மட்டுமே!
 உண்மையில் இவர்கள் கருப்பு பணத்திற்கு எதிராக உண்மையில்  போராடுகிறார்களா இல்லை என்றால் காங்கிரஸ் சொல்வது போல
இது  5 ஸ்டார் உண்ணாவிரதம் என்பது  உண்மையா?

 

இவர்களின் இந்த செயலில் உடன்பாடு இல்லாத காரத்தால் கூட அண்ணா ஹசாரே இதுவரை இதில் கலந்து கொள்ள வில்லை "இந் நிலையில் ராம்தேவின் உண்ணாவிரதத்தில் பங்கேற்கப் போவதாக அறிவித்திருந்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, அது குறித்து நாளை டெல்லிக்கு வந்த பின்னரே முடிவு செய்யவுள்ளதாகக் கூறியுள்ளார். இதனால் அவர் உண்ணாவிரதத்தில் பங்கேற்பாரா என்பது சந்தேகமாகியுள்ளது."

 

எளிமையாக மக்கள் பிரச்சினைகளுக்கு மட்டுமே போராட்டம் மட்டுமே மேதா பட்கர் சொல்வது போல
இந் நிலையில் மக்கள் பிரச்சனைகளுக்கு அயராது உண்ணாவிரதப் போராட்டங்கள் பல நடத்திய சமூக சேவகி மேதா பட்கர் கூறுகையில், பாபா ராம்தேவின் போராட்டம் அதிக செலவிலான ஒன்று. இதுபோன்று செலவு பிடிக்கும் போராட்டங்கள், போராட்டத்தின் மற்றொரு முகத்தை காட்டுகிறது. நாம் ஊழலை எதிர்க்கிறோம். ஆனால் பல கோடிகளை செலவழித்து, இதுபோன்ற அதிக செலவாகும் போராட்டம் நடத்தப்படுகிறது.


 ஆகா மொத்தத்தில் ராம்தேவ் நடத்தும் இந்த உண்ணாவிரத
போராட்டம் மக்கள் ஆதரவு திரட்டபடுகிறதே தவிர கொடுக்கப்படவில்லை