Thursday, April 7

அன்னா ஹசாரே -இந்தியாவே ஆதரவு கொடுஇந்தியர்கள் என்றால் சினிமாவுக்கும் கிரிக்கெட்டுக்கு மட்டும் ஆதரவு தருவார்கள் பொது சேவை என்றால் மற்றும் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்றால் நமக்கு ஏன் இந்த வேலை என்று போவார்கள் என்ற என்னத்தை தவிடு பொடி ஆக்கியது .அன்னா ஹாசரே அவர்கள் ஆரம்பித்து வைத்த ஊழலுக்கு எதிரான இந்த உண்ணாவிரதம்

ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை நிறைவேற்றக்கோரி, சமூக சேவகர், காந்தியவாதி அன்னா ஹசாரே 05.04.2011 அன்று டெல்லி உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். அவரது உண்ணாவிரதம் மக்களின் ஆதரவுடன் தோடர்கிறது 
 

வயதான காந்தியவாதி அன்னா ஹாசரே இப்போது ஏற்றி இருக்கு ஊழலுக்கு எதிரான இந்த ஆர்பாட்டம் வட இந்தியா முழுவதும் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது 
 

ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை நிறைவேற்றக்கோரி . அன்னா ஹாசரே அவர்களின் இந்த உண்ணாவிரதத்திற்கு இன்றைய இளைய தலைமுறை இளைஞர்களின் ஆதரவு யாரும் எதிர்பாரதது .
இந்தியாவின் உண்மையான வளர்ச்சியை கெடுப்பது மதவாதமும் இந்த ஊழலும் மட்டுமே. மதத்தை நம் மனதிற்குள்ளும் வீட்டிற்குள்ளும் வைத்து கொள்ளலாம் 
 
ஆனால் இந்த ஊழல் இந்தியாவில் கோடானு கோடி ஏழை மக்கள்  ஏழையாக வைக்க காரணம் , இந்தியாவில் கொள்ளையடிக்கப்படும் பணம் இந்திய மக்களுக்கு பயன்படாமல் கொள்ளை அடித்து அவைகளை எங்கோ கண்காணாமல் அந்நிய நாடுகளில் பதுக்கி வைப்பதால் 
நம் பணத்தை நாம் பயன்படுத்தாமல் வேறு நாட்டுக்காரன் அனுபவிக்க நம் மக்கள் அவனிடம் வேலை செய்து அவன் கொடுக்கும் அந்த பணத்தை வேர்வை சிந்தி அவனிடம் அடிமை போல வேலை செய்து நம் வாழ்க்கை வீணாக்க இந்த ஊழல் நாய்கள் செய்யும் ஊழலே காரணம் 


அன்னா ஹாசரே பற்றி முழுமையாக தெரியாது அவரின் வாழ்க்கை வரலாறு தெரியாது ஆனால் இந்தியாவில் இருக்கும் அதிகபடியான வறுமைக்கும் ஏழைகளின் இன்னல்களுக்கு காரணம் ஒரே காரணம் இந்த ஊழல் மட்டுமே அதை எதிர்க்க யாரும் முன்வராத நேரத்தில்
அன்னா ஹாசரே அவர்களின் இந்த முயற்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைக்க காரணமாக இருந்த சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சிக்கும்

தனக்கு ஒரு பிரச்சினை வரும்போது மட்டும் மக்கள் நலன் பேசும் நம் திரையில் நடிக்க தெரியாவிட்டாலும் உண்மை வாழ்கையில் நடித்து மக்களை ஏமாற்றும் இந்த தமிழ் நடிகர்கள் முன்னிலையில் எப்போதும் போல பொது வாழ்கையில்  உறுதுணையாக இருக்கும் அமீர்கானின் ஆதரவுக்கும்

நாங்கள் எல்லாம் மாடர்ன் காலம் கை நிறைய சம்பளம் வாங்குகிறோம் எங்களுக்கு இது தேவை இல்லை என்று நினைக்கும் இன்றைய இளைஞர்களின் முன்னிலையில்.
அவருடன் சேர்ந்து உண்ணாவிரதம் இருக்கும் நாகரிக கால இளைஞர்களுக்கும்

அன்னா ஹசாரே ஏற்றி வைத்த இந்த எழுச்சி கொஞ்சம் கொஞ்சமாக இந்தியா முழுவதும் பரவ நம்மிடம் இருக்கும் ஆதரவுக்கு ஒரு ஜே !!!

அன்னா ஹசரே அவர்களின் இந்த போராட்டத்தின் முதல் வெற்றி
ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை நிறைவேற்றக்கோரி "மகாராஷ்டிரத்தில் அதிக அளவில் நிலம் வைத்துள்ள சரத் பவார், லோக்பால் மசோதாவை உருவாக்கும் குழுவுக்கு தலைவராக இருக்கிறார்' என்று கூறியிருந்தார். ஹசாரேயின் இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஊழலுக்கு எதிரான அமைச்சர் குழுவில் இருந்து விலகுவதாக சரத்பவார் அறிவித்திருக்கிறார்.

இதற்கு ஹசாரே, அமைச்சர் குழுவில் இருந்து விலகினால் மட்டும் போதாது, அமைச்சர் பதவியிலிருந்தும் விலக வேண்டும் என்று கூறியிருக்கிறார்.


அன்னா ஹாசரே அவர்களின் இந்த முயற்சி வெற்றிப் பெற்று இந்தியா ஏழைகள் இல்லாத ஊழல் இல்லாத நாடாக மாற நாம் நம்மால் முடிந்த அளவிற்கு ஆதரவு தருவோம் நண்பர்களிடமும் நமக்கு தெரிந்தவர்களிடமும் இதை பற்றி தெரிவிப்போம் 


  அதே போல இந்த பதிவு இன்னும் பலரை சென்றடைய உங்கள் பேஸ்புக் மூலம் நண்பர்கள் அனைவருக்கும் சொல்லவும் 


 


4 comments:

 1. ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை நிறைவேற்றக்கோரி . அன்னா ஹாசரே அவர்களின் இந்த உண்ணாவிரதத்திற்கு இன்றைய இளைய தலைமுறை இளைஞர்களின் ஆதரவு யாரும் எதிர்பாரதது .


  ...Hurray!

  ReplyDelete
 2. அன்னா ஹசாரேவின் போராட்டம் வெல்லட்டும் நானும் எனது பதிவில் எழுதி இருக்கிறேன்

  ReplyDelete
 3. http://www.avaaz.org/en/stand_with_anna_hazare/?g-bpi-s- இங்கு அன்னா ஹசாரேவிற்கு ஆதரவாக கையெழுத்து திரட்டப்படுகிறது.

  ReplyDelete
 4. இந்தியாவையே சுரண்டிக்கொண்டுஇருக்கும் கார்ப்பரேட் கம்பனிகளை எதிர்த்தோ,அதை ஆதரிக்கும் இந்தியாவை கூறுப்போட்டு விற்றுகொண்டு இருக்கும் அரசியல் கட்சிகளை எதிர்த்தோ இவர் போராடவில்லை.இதனால் ஏற்பட்ட விளைவான ஊழலை எதிர்த்துபோராடுகிறார்.நல்ல காமெடி.

  ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை