Friday, April 29

இந்த வார சினிமா தோரணங்கள் "ராணா ,அஜித் குமார் ,ஐபிஎல்"



இந்த வார ஹாட் செய்தி ரஜினி அவர்களின் ராணா ரஜினி மீண்டும் தான் ஒரு பாக்ஸ் ஆபீஸ் ரியல் ஹீரோ என நிருபிக்கும் படமாக இது இருக்கும் என்று சொல்லும் வகையில் இந்த படத்தை பற்றிய செய்திகளும் அதில் இடம்பெற்ற கலைஞர்களின் பெயரை பார்க்கும் போது உண்மை என நிருபிக்கும் 
 

வெற்றிப்பட இயக்குனர் ரவிகுமார்
இசைபுயல் ரஹ்மான்
ஒளிபதிவாளர் ரத்தினவேலு என ஒரு வெற்றிப்பட கூட்டணி என கூட சொல்லலாம்

அஜித்குமார் நற்பணி இயக்கம் கலைப்பு அஜித் குமார் 
 

தன் படம் பார்க்கும் ரசிகர்களை பயன்படுத்தி சின்ன சின்ன விசயத்திற்கு எல்லாம் அரசியல் ஆக்கி லாபம் பார்க்க துடிக்கும் நடிகர்கள் முன்னிலையில் தன் ரசிகர்கள் வீணாக இது போன்ற செயல்களில் ஈடுபட்டு அவர்கள் வாழ்க்கை வீணாக கூடாது என்ற ஒரே காரணத்தால் தன் ரசிகர் மன்றத்தை கலைகிறார் அஜித்
தன் மனநிலையை தன் ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள் என்று அவர் சொன்னது மூலம் அவர் எந்த அளவிற்கு தன் ரசிகர்களை மதிக்கிறார் என்று நிருபித்து உள்ளார் 

 

இது பற்றி அவர் சொன்ன கருத்துகள் இது :
பொதுமக்கள், எல்லோரையும் உன்னிப்பாக கவனிக்கிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு திரைப்படத்திற்கு அப்பாற்பட்டு ‌பொதுமக்களின் கண்ணோட்டத்தில் கண்ணியமாக தென்பட்டால் மட்டுமே ஒரு நடிகனுக்கும், அவருடைய ரசிகர்களுக்கும் ஒரு கவுரவம் கிட்டும் என்பதே என் நம்பிக்கை.



கைகொடுக்குமா மே  "சினிமா IPL "
 
மே மாதம் விடுமுறை கொண்ட்டட்ட்ம் புது படங்கள் அதிகம் வரும் என்று பார்த்தல் இந்த ஐபிஎல் வந்து பெரும் ஆப்பு வைத்துள்ளது
தொலைக்காட்சி ரேட்டிங் பார்க்கும்போது ஐபிஎல் போட்டிகள் உலக கோப்பை விளையாட்டை விட அதிக அளவில் ரேட்டிங் பெற்று சாதனை படைக்கிறது எனவே பிரைம் டைம் எனப்படும் ஏழு முதல் பத்து வரை மக்கள் அதிகம் தொலைக்காட்சிகளில் ஐபிஎல் விளையாட்டை அதிகம் பேர் பார்பதால் இந்த் முறையும் திரை உலகிற்கு சொல்லும்படியாக இருக்காது



:ஐபிஎல் விளையாட்டை மீறி கோ திரைப்படம் வெற்றி பெற சாத்திய கூறுகள அதிகம் உள்ளது :

No comments:

Post a Comment

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை