Thursday, September 2

பேஸ் புக்கின் இந்தியாவில் இந்த வளர்ச்சிக்கு காரணம் என்ன ?

        பேஸ் புக் அப்படின்னு சொன்ன இப்போ உலகம் முழுவது தெரியாதவர்கள் யாரும் இல்லை .மற்ற சோசியல் நெட்வொர்க்கை ஒப்பிடும்போது பேஸ் புக்கின் வளர்ச்சி ஹிமாலய மலை போன்றது

 உலகம் முழுவதும் சக்கை போடு போட்டாலும் பேஸ் புக்கின் இந்தியாவின் வளர்ச்சி எதிர்பாத்த அளவில் இல்லை உண்மை சொல்ல வேண்டும் என்றால் இரண்டு  ஆண்டுகளுக்கு  முன் நான் பேஸ்புக் கணக்கை ஆரம்பித்த பொது நம்ம ஊரை சேர்ந்த நண்பர்கள் யாரும் வருவார்களா அல்லது தமிழ் மக்கள் வருவார்களா என்று வழி மீது விழி வைத்து காத்து இருந்தேன் தினமும் பிலிப்பைன் கலர்களும் மற்ற நாட்டை சேர்ந்தவர்கள் அதிகம் இருந்தார்களே தவிர
நம்ம மக்கள் ஊஹும் வருவனே என்று சொன்னார்கள்

  யப்பா பேஸ்புக் அப்படின்னு ஒன்னு இருக்கு அப்படின்னு சொன்ன அதை விட சுப்பர் ஆர்குட் அப்படின்னு சொன்னவர்கள் அதிகம் உலகம் முழுவதும் சக்கை போடு போட்டாலும் பேஸ்புக் இந்தியாவில் ஆர்குட்டின் ஆக்கிரமிப்பை மிஞ்ச முடிய வில்லை

  சென்ற ஆண்டு நான் ஊருக்கு போகும் போதும் இதே கதைதான் .ஜி பூம்பா பூதம் போல இரண்டே மாதத்தில் நம் மக்கள் செய்த ஒரு பெரிய விசயம் ஆர்குட்டை அம்போன்னு விட்டு விட்டு இந்தியாவில் எல்லோரும் பேஸ்புக் பேஸ்புக் அப்படின்னு சொல்ல என்ன காரணம் ?


       இதற்க்கு முக்கிய் காரணம் இப்போது இருக்கும் மொபைல் நெட்வொர்க்கும் புதிதாக வரும் மொபைல் போன்களும்தான் .இப்போ உலகம் முழுவதும் புகழ் பெற்ற சோனி எரிக்க்சன் ,நோக்கியா போன்ற மொபைல் போன்களில் ஏற்கனவே பேஸ்புக் அப்ளிகேசன்  உள்ளது அதே போன்று
இந்தியாவில் இருக்கும் மைக்ரோ மக்ஸ் ,கார்பன் ,லாவா இன்னும் சொல்லி கொண்டு போகலாம் எல்லா மொபைல்களிலும்  இருக்கும் பேஸ்புக் அப்ளிகேசன் முக்கிய காரணம்

ஏர்டெல் ,ஏர்செல் ,ரிலையன்ஸ் ,டோகோமோ ,இன்னும் இருக்கும் எல்லா மொபைல் நெட்வொர்க்கும் பத்து ரூபாயில் ஒரு மாதத்திற்கு அளிக்கும் பேஸ்புக் சேவை மிக முக்கிய காரணம்

இடையில் இரண்டு மாதத்திற்கு இலவசமாக ஏர்டெல் பேஸ்புக் சேவையை வழங்கியது

இது வரை ஆர்குட்டை விட்டு வாராத மக்கள் பேஸ்புக் சேவை பயன்படுத்தி பார்த்த போது ஆர்குட்டை விட பேஸ்புக் சிறப்பானது என்று இப்போ ஆர்குட்டை அம்போன்னு  விட்டு விட்டு பேஸ்புக் பேஸ்புக் அப்படின்னு சொல்றாங்க

இறுதியாக இந்தியாவில் பேஸ்புக் இந்த அளவிற்கு விரைவாக வளர  மைக்ரோ மக்ஸ் ,கார்பன் ,லாவா போன்ற சோசியல் நெட்வொர்க் அப்ப்ளிகேசன் உள்ள மொபைல் மிக முக்கிய காரணம் என சொல்லலாம்

பதிவை படித்து அப்படியே பேஸ்புக் பகிர்வு செய்யுங்க .ஹாய் அரும்பாவூர் பேஸ்புக் குழுவில் சேருங்கள் உங்கள் ஆதரவை தொடர்ந்து தாருங்கள்

பேஸ்புக் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை  600 மில்லியன்
பேஸ்புக் வருமானம்  $ 1,100மில்லியன்
அலெக்சியா ரேங்க் 2
என் பேஸ்புக் கணக்கில் முன்னே அதிகம் பிலிப்பைன் நாட்டவர்கள் மற்றும் அரப்  இருந்தார்கள்
இப்போ அதிகம் நம்ம தமிழ் மக்கள் தான் வாழ்க  தமிழ்

3 comments:

  1. முழுமையான அனைத்து தகவலும் புதியவர்களுக்கும் தெரியவைத்து விட்டீர்கள் தல ...

    ReplyDelete
  2. /// இதற்க்கு முக்கிய் காரணம் இப்போது இருக்கும் மொபைல் நெட்வொர்க்கும் புதிதாக வரும் மொபைல் போன்களும்தான் .///

    இதுதான் என் கருத்தும்...

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை