Wednesday, September 29

எந்திரன் இத்தனை திரை அரங்கமா? பெரம்பலூர் அல்லது என்திரனுர்

 
 
      எந்திரன் படத்திற்கு இதனை திரை அரங்கமா என்று நினைக்க வில்லை இன்று திருச்சி பகுதி செய்தி தாள் எந்திரன் விளம்பரம் பார்க்கும் போது
ஒரு நிமிடம்  அசந்து போனேன்
பாரசூட் தியரி மூலம் நூறு நாள் படம் ஓடி லாபம் பார்பதை விட பத்து நாளில் அதிக திரை அரங்கில் படம் வெளியுட்டு விரைவில் லாபம் பார்ப்பதுதான் பாரசூட் தியரி
 
ஆனால் எந்திரன் படத்திற்கு இவ்வளவு பெரிய பாரசூட்டையா சன் பிக்சர்ஸ் விரிசுருக்கு அப்படின்னு யோசிக்க தோன்றியது
திருச்சி பகுதி நான்கு திரை அரங்கு  அரங்கு ஓகே
ஆனால் பெரம்பலூரில் இருப்பதே நான்கு திரை அரங்கு மட்டுமே அதில் ராம் திரை அரங்கம் தவிர மற்ற எல்லா தியேட்டர்களிலும்  எந்திரன் வருது அவைகள் (ராஜ ,சுவாமி ,கிருஷ்ணா )
என்ன ஒரு வியாபார புத்தி
எப்படியோ பெரம்பலூர் பக்கம் இருக்கும் அரும்பாவூர் மக்களுக்கு ஒரு பக்கம் ஆத்தூர் மறு பக்கம் பெரம்பலூர் ஒரே எந்திரன் படம் மட்டுமே
 
பெரம்பலூர் முழுவதும் எந்திரம் படம் மட்டும் அப்படின்னு சொல்ல தோணுது
 

Tuesday, September 28

தமிழ் திரைப்பட தலைப்புக்கு கேளிக்கை வரி விலக்கு! இப்போ என்ன சொல்ல வராங்க?


தமிழில் பெயரிடப்படுகின்ற திரைப்படங்களுக்கு மட்டுமே கேளிக்கை வரி முழுமையாக விலக்களிக்கப்படும் என்று ஏற்கனவே முதல்வர்,  திரைப்படத் துறையினரோடு கலந்தாலோசித்து அறிவித்ததற்கு இணங்க  அந்த அறிவிப்பையும், தமிழ் மொழி வளர்ச்சியையும் கவனமாகக் கருத்தில் கொண்டு தமிழ்ப் படங்கள் தயாரித்தவர்கள் கேளிக்கை வரி விலக்கை பெற்றுப் பயனடைந்துள்ளனர்.



தங்கள் விருப்பத்துக்கு திரைப்படங்களுக்கு பெயர் வைத்துக் கொண்டு, வரி விலக்கு கோரி பரிந்துரை செய்வது வழக்கமாகி வருவது வருத்தமளிக்கிறது' என்று, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

  நாட்டில் உள்ள எத்தனயோ ஏழை மக்களுக்கு பயன்பட வேண்டிய பணத்தை தமிழில் பெயர் வைத்தால் போதும் கேளிக்கை வரி முழுமையாக விளக்கு அளிக்கப்படும் என்று சொல்லி ,இருப்பது எந்த வகையில் நியாயம் என்று  நினைக்கும் முன்
தமிழ் மொழியில் பட தலைப்பை வைத்த ஒரு காரணத்தால் ஏழை மக்களின் பணம் வீணாக போகுதே என்று நினைக்கும் முன்
இப்போது வந்து உள்ள தமிழக அரசின்
 "தங்கள் விருப்பத்துக்கு திரைப்படங்களுக்கு பெயர் வைத்துக் கொண்டு, வரி விலக்கு கோரி பரிந்துரை செய்வது வழக்கமாகி வருவது வருத்தமளிக்கிறது' என்று, தமிழக அரசு தெரிவித்துள்ளது."  என்ற இந்த அறிக்கை என்ன சொல்ல வருகிறது என்று எனக்கு தெரிய வில்லை
       



இடையில் ஒரு சிலர் தங்கள் விருப்பத்துக்குப் பெயர்களை வைத்துக் கொண்டு, அதுவும் தமிழ்தான் என்று வாதாடுவதும் வரிவிலக்கு கோரிப் பரிந்துரை செய்வதும்.
 தற்போது வழக்கமாகி வருகிறது.
 எனவே தொடக்கத்தில் அரசு விதித்துள்ள நிபந்தனைப்படி, எந்த ஒரு திரைப்படமும் தமிழில் பெயரிடப்படாமல் வெளிவருமேயானால்
 அந்தத் திரைப்படத்திற்கு கேளிக்கை வரிவிலக்கு கண்டிப்பாக வழங்கப்பட மாட்டாது

    ஆகா தமிழகத்தில் தமிழ் வளர்ந்ததிற்கு முக்கிய காரணம் தமிழில் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர்  வைத்தது தான் காரணம்! என்று சொன்னாலும் சொல்வார்கள்

 

        இப்போது தமிழில் பெயர் உள்ளதா இல்லையா என்று அறிக்கை விடும் அரசு  அந்த படங்கள் எப்படிப்பட்ட கதை உள்ளது என்று ஒரு முறையாவது யோசித்ததா ?
மக்கள் எப்படி போனால் என்ன தங்களுக்கு பெயர் மட்டும் தான் வேண்டும் என்று நினைப்பது போல உள்ளது இந்த அறிக்கை

           அதுவும் இத்தனை நாட்கள் சென்று திடீர் என இந்த ஞானயோதம் வர என்ன காரணம் எப்படியும் இதற்க்கு காரணம் என்ன என்று விரைவில் தெரியும் (உங்களுக்கு ஏன் என்று தெரியுமா ? )




         தமிழக மக்களுக்கு பயன்பட வேண்டிய இந்த பணம்  வெறும் தமிழில் படத்திற்கு பெயர் வைத்து ,கதை மற்றும் திரைக்கதைகளில் தமிழ் மக்களுக்கு ஒரு பைசாவுக்கு பயன்படாத கருத்துக்களை பரப்பி கோடிக்கணக்கில் திரை உலகம் லாபம் பார்த்ததுதான் மிச்சம்  

Monday, September 27

சிறந்த இலவச BURNNING SOFTWARE- 2

     நாம் எல்லோருக்கும் பர்னிங் சாப்ட்வேர் என்றால் நினைவுக்கு வருவது நீரோ மட்டுமே ஆனால் நீரோ பர்னிங் சாப்ட்வர் நம் கணினியில் வேகமாக செயல்பட நம் கணினியும் அதிக அளவு நினைவாக இடவசதி மற்றும் வேகமாக செயல்பட வேண்டும் மற்றும் நீரோ செயல்பட நம் கணினியில் அதிக அளவில் இட வசதி வேண்டும்
      "குறைந்த நினைவாக இட வசதியில் செயல்படும்  இரண்டு பர்னிங் சாப்டேவர் பற்றி பார்ப்போம்
முதலில் நாம் பார்க்க போவது
1 .BurnAware Free 3.0.6


                   வெறும் 6 .10  MB  மட்டுமே உள்ள அதே நேரத்தில் நீரோவை விட வேகமா செயல்பட கூடிய சாப்ட்வேர் இது மற்றும் இதை கணினியில் நிறுவ குறைவான இட வசதி போதும் 
CD / DVD மற்றும் BLUERAY  போன்றவைகள் பர்னிங் செய்ய காப்பி பண்ண மற்றும் BOOT ISO  சிடிக்கள் உருவாக்க சிறந்தது  MP3  DATA  CD DVD  போன்றவைகள் விரைவாக தயார் செய்ய சிறந்த பர்னிங் சாப்ட்வேர் இது 

BurnAware Free 3.0.6 சாப்ட்வேர் DOWNOAD செய்ய இங்கே செல்லவும்

2 Ashampoo Burning Studio Free 6.77 


        DOWNLOD .CNET   இணையத்தில்  நான்கு ஸ்டார் பெற்ற .சிறந்த பர்னிங் சாப்ட்வேர்   இது  Multi-disc file backup .data CDs/DVDs/Blu-ray டிஸ்க் போன்றவைகள் தயார் செய்ய சிறந்த சாப்ட்வேர் இது  மற்றும் ISO  பார்மட் CD/DVD/Blu-ray disc images   போன்றைவகள் வீடியோ பார்மட் ஆடியோ பார்மட போட்ன்ரைவகள் நீரோவை விட விரைவாக செயல்படும்
 வெறும் 8 .27MB  மட்டுமே உள்ள இது மற்றும் ஒரு சிறப்பான இலவச பர்னிங் சாப்ட்வேர்
Ashampoo Burning Studio Free 6.77 சாப்ட்வேர் DOWNOAD செய்ய இங்கே செல்லவும்

Sunday, September 26

இரண்டாம் ஆண்டில் ***ஹாய் அரும்பாவூர்***




      உங்கள் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி

 இன்றுடன் 365 நாட்கள் முடிந்து இரண்டாம்  ஆண்டில் ஹாய் அரும்பாவூர் அடி எடுத்து வைக்கிறது .
இதற்க்கு முழு காரணம் நீங்கள் கொடுத்த ஆதரவு   மட்டுமே
ஆரம்பத்தில் ஒரே வாக்கெடுப்பு மட்டுமே நடத்தி வந்த நான் பிறகு ஏதோ கொஞ்சம் அரைகுறையா சில பதிவுகள்
அதற்க்கு நீங்கள் கொடுத்த தொடர் ஆதரவு
அதிகம் இல்லை 116     பாலோவர்ஸ்  பேஸ்புக்கில்  98 ஆதரவு தரும் நண்பர்கள்  இ மெயில் மூலம் பதிவு பெரும் 130 என் எழுத்தை நம்பி வாக்களிக்கும் நண்பர்கள்  அனைவருக்கும் நன்றி


எப்போவும் சொல்ற மாதிரி என் பதிவுகள் ஜஸ்ட் டைம் பாஸ் மட்டுமே இலக்கிய தரமோ புரட்சி கருத்துக்களோ இருக்காது
ஆனா அதே அளவிற்கு மோசமா இருக்காது
நீங்க வோட்டு போட்டாலும் போடாவிட்டாலும் நான் எழுதி கொண்டே இருப்பேன் ஒரு வாசகர் படிப்பார் என்றாலும் அவருக்காக எழுதுவேன்

என் எழுத்தை பாரட்டியர்களுக்கும் என் பதிவுகளில் குறை கண்டுபிடித்து கூறியவர்களுக்கும் நன்றி
அதிலும் ஆரம்பம் முதல் இன்று வரை எனக்கு தொடர் ஆதரவு தரும் அனைவருக்கும் நன்றி

 அதிலும் என் ஒவ்வொரு எழுத்தையும் வாசிக்கும் வாக்களிக்கும் நண்பர்கள் ஆரம்பம் முதல் எனக்கு வாக்களித்த அதிலும் என் முதல் பதிவு அதற்க்கு ஆதரவளித்த கீழே உள்ள நண்பர்களுக்கும் நன்றி 

    "வலைபதிவு திரட்டி அதிலும் மிக முக்கியமான ஒன்று தமிளிஷ் (இன்டிலி ) மற்றும் தமிழ் 10  திரட்டி மற்றும் அணைத்து திரட்டிகளுக்கும் நன்றி
இன்டிலி தொடரும் 104 நண்பர்களுக்கும்  நன்றி !!!உங்களின் அதே ஆதரவு வரும் ஆண்டிலும் தொடர உங்கள் வேண்டும் உங்கள் நண்பன்
ஹாய் அரும்பாவூர்
முபாரக் கான்

இது பேஸ் புக் ஹாய் அரும்பாவூர் வலைபதிவு குழு நீங்கள் விரும்பினால் சேருங்கள் உங்கள் நண்பர்களுக்கு  கூறுங்கள்


                      !!! உங்களின் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி !!!

                                     ***எல்லா புகழும் இறைவனுக்கே***




Saturday, September 25

AR ரஹ்மானின் காமவெல்த் வீடியோ தீம் பாட்டு & சில மொக்கைகள்


 
            
    ரஹ்மான் சொன்னார் காமன்வெல்த் பற்றி நல்ல விசயமா செய்தி வெளியுடுங்க அப்படின்னு
அப்படி நல்ல விதமா செய்தி போட்டு இருந்தா அதில் இருந்த இத்தனை குளறுபடி வெளியே வந்து இருக்குமா ?
இதில் நல்ல செய்திகள் வருவதை விட அதில் இருக்கும் குறைபாடு பற்றிய செய்திகள் வருதால் அதில் இருக்கும் குளறுபடிகள் சரி செய்வதுடன் உலக அளவில் இந்தியாவின் பெயர் காப்பற்றபடும் ரஹ்மான்

நீங்கள் நல்ல இசை கொடுத்து சிறப்பான பாடல் அமைத்து இருந்திர்கள் ஒரே நாள் கேட்டு பாட்டு சரி இல்லை என்று சொன்னவர்கள் அரசியல்வாதிகள்
அது அவர்களின் வேலை தங்களுக்கு ஏதும் ஆபத்து வரும்போது மக்களை மிகவும் அழாகாக திசை திருப்பி விடுவார்கள் ?
  ரஹ்மான் இசை அமைத்த காமன்வெல்த் பாட்டு வீடியோ கேட்டு உங்கள் எண்ணங்களை கூறுங்கள்





பத்து ருபாய் விஷயம் என்றாலும் அது செல்லும் நபரின் கையை பொறுத்து அதன் மதிப்பு மாறும்
அப்படிதான் எந்திரன் படம் பற்றிய செய்திகள் அதன் சாதனைகள் அமைந்து உள்ளது ரஜினி அவர்களின் சிவாஜி சந்ரமுஹி எட்டாத உயரம வியாபாரம் படம் பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்து உள்ளது
சன் பிக்சர்ஸ் வழங்கிய வேட்டைக்காரன் ,அயன் படம் அடையாத உயரத்தை எந்திரன் படம் பெற்று உள்ளது
அதற்க்கு காரணம் சன் டிவி +ரஜினி என்ற சம அளவிலான இரு இமயங்கள இணைத்தது மட்டுமே காரணம்


எப்படியே இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங் 
வந்தாச்சு
 இன்னைக்கு அது வெற்றி பெறுமா தெரியும்
IPL பார்த்த எனக்கு இந்த சீரிஸ் பார்க்கும் போது IPL  சங்கர் அவர்களின்  படம் போலவும்
இந்த சீரிஸ் ராம நாராயண் படம் போல இருக்கு
IPL  நல்ல விளையாட்டு இருக்கு இல்லையோ நல்ல பிரமாண்டம் இருக்கு
முடிஞ்சா சென்னைக்கு ஒரு விசில் போடுங்க

இன்னும் ஐந்து நாள் இருக்கு எல்லோரும் காதுல ஒரு பஞ்சை எடுத்து வைத்து கொள்ளுங்கள்
எந்திரன் படம் பற்றிய விளம்பரங்கள் இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையா தொடங்கி தினமும் நூறுக்கு மேற்பட்ட முறை உங்களை தாக்க கூடும்


VALAICHARAM
வாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...
நம்மை பற்றி ஜெய்லானி அவர்கள் சொன்ன ஒரு சின்ன விஷயம் ரொம்ப நன்றி ஜெய்லானி

 எந்த சின்ன மேட்டர் கிடைத்தாலும்  அதை ஆராய்ந்து  பதிவு தேத்துவதில செம கில்லாடியான ஆள்

Monday, September 20

தமிழ் சினிமா மூன்று மூர்த்திகள் PART.2

நான் எழுதும் பதிவுகள் நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு பெரும் கருத்து உள்ளதாக இருக்காது ஆனா படிக்க  டைம் பாஸ் ஆகா இருக்கும் நான் எப்படி நல்ல டைம் பாஸ் படத்தை மட்டும் பார்ப்பேனோ அதை போல என் எழுதும் இருக்கும் .ஜஸ்ட் டைம் பாஸ் மச்சி என்று நினைப்பவரர்கள் மட்டு மேற்கொண்டு படிக்கவும் இல்லை நாங்க எல்லாம் அறிவு ஜீவி என்று நினைப்பவர்கள் மன்னிக்கவும்
ஹை அரும்பாவூர் ஜஸ்ட் டைம் பாஸ் மச்சி 




 கலைஞர் டிவி வருகை அதை தொடர்ந்து எல்லா படங்களையும் கலைஞர் டிவி வாங்கியது இந்த இக்கட்டான நேரத்தில் சன் பிக்சர்ஸ் வந்தது .தயாரிப்பில் இருந்த படங்கள் விரைவில் வர இருக்கும் படங்கள் என சன் டிவி வரித்து கொண்டு வாங்கியது
இது கலைஞர் டிவிக்கு  பெரும் தலைவலியாக இருந்த்தது இந்த நேரத்தில்
தமிழ் சினிமா யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் கருணாநிதி குடும்பத்தில் இருந்து வந்த அடுத்த கட்ட ஆயுதம் உதயநிதி
இவரின் முதல் படம் குருவி விஜய் வெற்றி பட இயக்குனர் தரணி என ஆபட்டாமாக ஆரம்பித்தாலும் படத்தின் வெற்றி இவருக்கு சொல்லும்படி இல்லை .
  இவரின் ஆரம்பம் சொல்லும் படி இல்லை என்றாலும் இவர் குடும்பத்தின் ஆதரவு சரியான பக்கபலம் என அவருக்கு அமைந்த சூழ்நிலைகள் இவரின் இரண்டாவது படம் ஆதவன் தோல்வி படம் இல்லை .சரியாக அமைந்த நகைச்சுவை கலந்த ஆக்சன் படம் அவர் தயாரிப்பில் சொல்லுபடி வெற்றி  பெற்றது .



       "தன்னுடைய தயாரிப்பில் வந்த படங்களை மட்டும் வெளியுட்டு வந்த ரெட் ஜெயன்ட் சன் டிவி பின் பற்றிய அதே பாணியை பின்பற்றியது வேறு நிறுவனங்கள் தயாரித்த படங்களை  மொத்தமாக வாங்கி தன் பேனரில் வெளியிட ஆரம்பித்தது
இந்த முறையில் ரெட் ஜெயன்ட்டுக்கு எதிர்பார்த்ததை விட  பெரும் வெற்றி கிடைத்தது .

அவரின் முதல் விநியோக படம் விண்ணை தாண்டி வருவாயா பெரும் இசை கலந்த வெற்றி படமாக அமைந்தது ..
தமிழின் இந்த ஆண்டின் வெற்றி படங்களில் விண்ணை தாண்டி வருவாயா அமைந்தது .
அதை தொடர்ந்து வந்த மதாரசபட்டினம் அவரின் வெற்றி படங்களில் அமைந்தது
இப்போது வந்து வெற்றி (சிரிப்பு ) நடை போடும் பாஸ் என்னும் பாஸ்கரன் ரெட் ஜெயன்ட் சரியான தேர்வுக்கு எடுத்து  காட்டு
ரெட் ஜெயன்ட்  வருகை சன் டிவிக்கு ஒரு தலைவலியாக இருந்தாலும் .ரெட் ஜெயன்ட் படங்களின் விளம்பரம் சன்  குழும தொலைக்கட்சிகளில் வருவது உதயநிதி அவர்களின் ஒத்து போகும் வியாபார அறிவை கட்டுகிறது .
(நீர் அடித்து  நீர் விலாகது )
தான் ஒரு பெரும் தயாரிப்பு நிறுவனம் என்பதை நிருபிக்க வைக்கும் படங்கள் அவரின் எதிர் வரும் படங்களின் வெற்றியை பொருத்து அமையும் 
அந்த படங்களில் முதல் படம்
கமல் ஹாசன் கே எஸ் ரவிகுமார் இணையும் மன்மதன் அம்பு  நிச்சயம் இந்த அம்பு நகைச்சுவை கலந்த வெற்றி படமாக அமையும்
அடுத்த அவரின் மிக பெரும் வெற்றி படமாக அமைய எல்லா வாய்ப்பும் உள்ள ஏழாம் அறிவு  கஜினி ஹிந்தி வெற்றி படத்தை கொடுத்த  முருகதாஸ் மீண்டும் தமிழில் இயக்கம் படம் கமல் அவர்களின் மகள் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களின் இசை சூர்யா அவர்களின் நடிப்பு என வெற்றி படத்திற்கு  உரிய எல்லா வாய்ப்பும் உள்ள ஏழாம் அறிவு
என அவரின் வரும் இரண்டு படங்களின் வெற்றி அவர் வெற்றி பட தயாரிப்பாளரா ? என்பதை தீர்மானிக்கும்
எப்படி இருந்தாலும்
ஸ்டாலின் அவர்களின் என்ற நிழலை விட்டு வெளியே வந்து தனியே சாதிக்க நினைத்தாலும் அவரின் வெற்றிக்கு அப்பா அவர்களின் உதவி இருப்பது என்னவோ உண்மை ?

ரெட் ஜெயன்டுக்கு  உள்ள  பெரும் பலம் கலைஞர் டிவி சன் டிவி இரண்டு பக்கமும் உள்ள விளம்பர  உதவி
சரியான அளவில்  செய்யும் முதலிடு என தமிழ் திரை உலகின் வெற்றி பட தயாரிப்பு நிறுவனம் ஆகா ரெட் ஜெயன்ட் மாற வாய்ப்பு உள்ளது

அடுத்த மூர்த்தி யாரு என்பது உங்களுக்கு கொஞ்சம் தெரியும்  மதுரை பக்கம் கொஞ்சம் போகலாம் லேட்டா ?

 

Sunday, September 19

எந்திரன் கவுன்டவுன் ஸ்டார்ட்

சன் பிக்சர்ஸ் தயாரித்த எந்திரன் படம் மாபெரும் வெற்றியடைய வேண்டி சோளிங்கரில் நேற்று காலை ரசிகர்கள் பால்குடத்துடன் ஊர்வலம் சென்றனர். பின்னர் 1,305 படிக்கட்டுகள் உள்ள மலைக்கோயிலுக்கு ரசிகர்கள் முட்டிப்போட்டு படியேறினர்.

ரசிகர்களின் ஆரவாரம் பார்க்கும் போது ரஜினி இன்னும் மாஸ்தான்  என்று சொல்ல தோன்றுகிறது
ரஜினி மாஸ் இப்படி இருக்க அவரின் இத்தனை ஆண்டு உழைப்பு கூட ஒரு காரணம் இதை எல்லாம் தெரியாத நேற்று வந்த அரை குறை நடிகர்கள் எல்லாம் தான்தான் தானன் சூப்பர் ஸ்டார் அப்படின்னு சொன்ன எப்படி சார்
கலாநிதி மாறன் சொன்ன மாதிரி சூப்பர் ஸ்டார்  அப்படின்னா அது ரஜினி மட்டும்தான்



இப்போவே கண்ணை கட்டுதே  படம் வந்த இன்னும் இன்னும் என்ன என்ன செய்வார்களோ  எது எப்படியோ நான் படத்தை முதல் நாள் பார்க்கலாம் என்று இருக்கிறேன்
அப்படி இல்லை என்றால் சான்ஸ்  கிடைக்கும் போது பார்ப்பேன் .
இது ரஹ்மான் ரஜினி ஷங்கர் காம்பினேசனுக்கு

திருச்சி பகுதியி எந்த திரை அரங்கில் படம் வருது என்று தெரிய வில்லை .
பெரம்பலூர் பகுதி பொறுத்த வரை ராம் அல்லது 
ராஜா  திரை அரங்கு என்று நினைக்கிறேன்


நான் படம் பார்ப்பேன் என்று சொல்லும் முன் அதிக அளவில் டிக்கெட் விலை இருந்தால் நிச்சயம் முதலில் பார்க்க மாட்டேன் லேட் ஆனாலும் பராவில்லை பொறுமையா பார்ப்பேன் .வாய்ப்பு கிடைத்த நிச்சயம் பார்ப்பேன்
அனேகமா துபாய் கலேரியா  திரை அரங்கு ஒரு வாரத்திற்கு களைகட்டும் தேரா துபாயில் இருப்பவங்க பக்கமா இருப்பதால உடனே பார்க்க வாய்ப்பு இருக்கு
அட்வான்ஸ் புக்கிங் எப்போ ஆரம்பம் அப்படின்னு தெரிய வில்லை

   படம் பார்க்க வேணாம்  என்று என்று சொல்ல மாட்டேன் ஆணால் தகுதிக்கு மீறி அதிக செலவு செய்து உடனே படம் பார்க்க வேண்டும் என்ற நினைப்பை மட்டும் ஓரமா வைங்க

பொறுமையா பார்ப்போம் ஆனா நிச்சயம் படம் பார்ப்போம்
ரனினிக்கு இந்த படம் பெரும் வெற்றி படமாக இருக்கும்

  எந்திரன் படம் வரும் அதிகாரபூர்வ விளம்பரம் 


            

            


         

Thursday, September 16

இளையராஜா சார் இது சரியா ? இதுவா உங்கள் தரம் ?

உங்களை வாழ்த்தி ஒரு நாள் ஆகா வில்லை அதற்குள் இப்படி ஒரு பதிவு போடா வேண்டியி நிலைக்கு உங்களில் விருது பற்றிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டி உள்ளது

உங்கள் கருத்து 1
மேற்கத்திய இசைக் கருவிகள்தான் இப்போது இசை உலகை ஆளுகிறது





  இது மாடர்ன் உலகம் சார் இப்போ மேற்கத்திய இசை கருவிகள் தான் உலகை ஆளுகிறது என்பது உங்கள் கருத்தாக  இருக்கலாம் .இப்போது இருக்கும் இந்த தகவல் தொழில் நுட்ப உலகில் மேற்கத்திய இசை இந்தியா இசை என்பதை விட இசை எப்படி பயன்படுத்த படுகிறது என்பதை பாருங்கள் சுப்ரமணிய புறம் ,பூ ,களவாணி பட பாடல்கள் ஆகட்டும் மற்றும் இப்போது உங்களின் மகனின் இசையில் தமிழகத்தை கலக்கிய பைய பட பாடல்கள் ஆகட்டும் எந்த விதத்தில் குறை உள்ளது .இசை என்பது காலத்திற்கு காலம் மாற கூடியது 1977 முந்தைய எம் எஸ் வி  ராமமூர்த்தி அவர்களின் பாடல்கள் ஆகட்டும் அதற்க்கு பிந்திய உங்கள் பாடல்கள் ஆகட்டும் ஒரே மாதிரியாகவா இருந்ததது 1990 பிந்திய உங்கள் இசை எடுத்து கொள்ளுங்கள் தளபதி சிங்காரவேலன் இன்னும் பல படங்கள் சொல்லலாம் சார்
அதில் நீங்கள் எந்த விட மேற்கத்திய இசை கருவி பயன்படுத்தவில்லை என சொன்னால் இந்த கருத்தை சொல்ல உங்களுக்கு உரிமை உள்ளது முதலில் கிராமாபோனில் பாட்டு கேட்டவன் பிறகு டேப் ரெகார்டரில் பாட்டு கேட்டான் பிறகு வாக் மென்  சிடி எம்பி 3   ஐ  போட் மாறி விட்டன இப்போது உலகம் முழுவதும் ஐ போட் இருக்கிறது இது சரி இல்லை என்று சொன்னால் எப்படி. சின்ன புள்ள  தனமாக இருக்கோ அதை போல இப்போ மேற்கத்திய இசை கருவிகள் உலகை ஆளுகிறது என்று நீங்கள் சொல்வது இருக்கு 



உங்கள் கருத்து 2
ஆனால், இப்போது இசையின் நிலை அப்படி இல்லை. இசைக்கு மொட்டை அடித்து புருவத்தையும் எடுத்து விட்டார்கள். இசை மொட்டையாக இருக்கிறது. இன்று இருந்த நிலை, இசைக்கு அன்று இருந்திருந்தால், நான் இந்தத் துறைக்கே வந்திருக்க மாட்டேன்.
(அப்புறம் ஏன் இன்னும் இசை அமைப்பில் இன்னும் இருக்கிர்கள் )

  இது எப்படி இருக்கு என்றால் கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு இப்போ இந்த வீடு சரி இல்லை என்று கல்லை எறிவது போல இருக்கு .நீங்கள் இந்த வீட்டில் இருந்து கொண்டு அதிலே பிழைத்த கொண்டு இன்று உங்களின் தேவைகள் எல்லாம் நிறைவேறிய பின்பு நீங்கள் மட்டும் ஜீவனுள்ள இசைகள் கொடுத்தது போலவும் இப்போது இருக்கும் இசை அமைப்பாளர்கள் எல்லாம் ஜீவன் இல்லாத மொட்டை இசை கொடுப்பது போல சொல்வது
உங்கள் தரத்தை ஏன் நீங்களே குறைத்து கொள்கிறிர்கள் மற்ற இசை அமைப்பாளர்கள் இசை உலகம் முழுவதும் போனபோது நீங்கள் யார் எங்கே சென்றால் என்ன நான் இங்கே என் மக்களுக்கு இசை அமைப்பேன் என்று சொன்னிர்கள் உங்களை யார் போக வேணாம் என்று சொன்னது உங்களாலும் உலக தரத்திற்கு இசை கொடுக்க முடியும் என்றால் போங்கள் அதை விட்டு விட்டு உங்களின் இது போன்ற தரம் குறைந்த கருத்துக்களை சொல்லி இப்போ இருக்கும் இசை அமைப்பாளர்களை மட்டும் தட்டுவதுடன் இசை ரசிகர்களையும் கேவலப்படுத்த வேணாம்

இசைக்கு அன்று இருந்திருந்தால், நான் இந்தத் துறைக்கே வந்திருக்க மாட்டேன்.  இது சொல்வது எப்போ இருந்து சார் பழசி ராஜா படத்திற்கு பின்பா அல்லது உங்களின் அடுத்த படத்திற்கு பின்பா ?
ஏன் என்றால் நீங்கள் இன்னும் இசை அமைத்து கொண்டு இருக்கிறிர்கள் இல்லை இப்போ இசை சரி இல்லை மொட்டை அடித்து மோசமாக இருக்கு நான் முடி வளர்ந்த உடன் இசை அமைக்கிறேன் என்று நீங்கள் வெளியே ஏன் இன்னும் செல்லவில்லை சார் ?

அதாவது உங்களுக்கு மட்டும்தான் இசை பற்றி முழுமையாக தெரியும் என்ற நினைப்ப அப்படி என்றால் ஏன் சார் உங்கள் வாரிசுகளை இசை அமைக்க விடுகிறிர்கள் .உங்கள் பேச்சை உங்கள் மகன்கள் கேட்க்க மாட்டார்களா ?

உங்களின் நல்ல இசைவிட உங்களின் இது போன்ற மோசமான வார்த்தைகள் ஒரு நொடியில் உங்கள் இசை மீது உள்ள மதிப்பை கெடுத்து விடுகிறது
நல்ல இசை கலைஞனுக்கு தேவை கர்வம் இல்லாத உண்மையான மரியாதை மட்டும் சார்


உங்கள் கருத்து 3
நான் யாரையும் நம்பி இசைத் துறைக்கு வரவில்லை. பெரிய இசை மகான்கள் வாழ்ந்த மண் இது. எல்லோரும் போய் சேர்ந்து விட்டார்கள். அவர்கள் முன் நிற்பதற்கே பயமாக இருக்கும். பெரிய ஜாம்பவான்கள் முன் நாம் என்ன செய்து விட போகிறோம் என எண்ணத் தோன்றும். அவர்கள் எல்லாம் உன்னதமான இசையைத்தான் தந்து சென்றார்கள்.


இது உண்மை சார் இசை மேதைகள் என்பவர்கள் யார் வரும் காலத்தில் உங்களையும்  சிறந்த இசை மேதை என்று உலகம் சொல்லும் அதற்க்கு பின்பு உங்கள் மகனையும் சிறந்த இசை மேதை என்று சொல்லும் அது காலத்தில் கையில் உள்ளது இசை மேதைகள் காலம் முடிந்து போனது போல உள்ளது உங்கள் வாக்குமுலம்

இது போன்ற கருத்துக்களை சொல்லி ஒரு நொடியில் உங்கள் இசை தரத்தை குறைத்து கொள்ள வேண்டாம்


இந்த் பதிவு உங்களுக்கு பிடித்து மறக்காமல் பின்னுட்டம் மூலம் பாராட்டவும் /திட்டவும்

மறக்காமல் ஓட்டை போடவும்






 

Wednesday, September 15

வாழ்த்துக்கள் இளையராஜா சார்



       காலம் மாறி போய்டுச்சு புதுசு புதுசா ஆட்கள் வந்துட்டாங்க திரை இசை மாறி விட்டது ஆனால் இன்னும் உங்கள் பாடல்கள் கேட்க்க கேட்க்க என்னை அறியாமல் உடம்பில் ஒரு மாற்றம் ஏற்படும் (நான் இப்போ எ ஆர் ரஹ்மான் ரசிகனாக இருந்தாலும் )


உங்கள் உழைப்பு என்ன சாதாரண உழைப்பா 1976 முதல் இதுவரை முப்பது  ஆண்டுகள் தாண்டியும் இன்னும் நீங்கள் அளிக்கும் இசை இளைமையாக இருப்பது உங்கள் மனம் இன்னும் இளமையாக இருப்பது கூட காரணமாக இருக்கலாம்
மற்ற இசை அமைப்பாளர்கள் போல உங்கள் படங்களில் இந்த பாடல் பிடிக்கும் அந்த  பாடல் பிடிக்கும் என சொல்ல முடியாது ஏன் எனில் நீங்கள் இசை  அமைத்த பாடல்கள் எல்லாம் சிறப்பானவைதான்

பின்னணி இசை என்றால் எப்போதும் அது நீங்கள் தான் உங்கள் இசை மொழி எல்லாவற்றியும் தாண்டி வெற்றி பெரும் என்பதற்கு பல படங்களை சொல்லலாம் ஆனால் இத்தனை ஆண்டுகள் சென்றும்  இப்போதும் உங்கள் இசை தேசிய விருது பெறுவது  பெரும் சாதனை சார்
உங்கள் சாதனைகள் சொல்லும்போதே மலைப்பை ஏற்படுத்தும்
 800 மேற்பட்ட படங்கள்
ஆயிரக்கணக்கான  பாடல்கள்
மனதை அறுக்கும் சோக பாடல்கள்
மனதை இளமையாக்கும்  காதல்  பாடல்கள்
உங்கள் குரலும் சரி உங்கள் இசையும் சரி என்றும் இளமையானது
உங்களுக்கு பா ஹிந்தி படத்திற்கு விருது கிடைக்கும் என எதிர்பார்த்தேன்
இருந்த போதும் பழசி ராஜ படத்திற்கு கிடைத்தது
பண்ணைபுரம் ராசையா உங்கள் இசைக்கு உங்களுக்கு (இப்போ ரஹ்மானின் ரசிகனின் ) மனம் நிறைந்த   வாழ்த்துக்கள் 





உங்கள் இசை திறமைக்கு சான்று இந்த வீடியோ

யு ட்யுப் வீடியோ நன்றி 
நண்பர் :mr2k70
 








மறக்காமா உங்கள் வாக்கையும் போடுங்க !
பதிவு பிடித்து இருந்தால் மட்டுமே !!





    thanks

Monday, September 13

என்னோட பதிவு வேறு இணையத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது (விஜய்யை காப்பற்ற போகும் ரீமேக் படங்கள் )

அதாவது இந்த விஷயம் எனக்கு தெரியாமல் போய் இருக்கும் நண்பர்  சுதர் சொல்லாமல் போய் இருந்தால்  













ஆனால் சுதர் நான் அதை காப்பி அடித்தது போல பின்னுட்டம் போட்டு இருந்தார் எங்கே காப்பி அடித்திர்கள்    என்று போடவும் என்று அதனால் தான் இந்த பதிவு



நான் இதுவரை உருப்படியான பதிவு போட்டதில்லை இருந்தாலும் மோசமான பதிவுகள் எதுவம் இல்லை
அதிலும் அடுத்தவரின் உழைப்பை திருடும் அந்த மோசமான புத்தி எனக்கு இல்லை
என் பதிவுகள் அப்படி ஒன்றும் பெரிய இலக்கிய நடையும்  இல்லை
விஜய்யை காப்பற்ற போகும் ரீமேக் படங்கள் என்று பதிவை நான் போடலாம் என்று அன்று 11.9.2010 அன்றே மதியமே முடிவு செய்து (நாட்டுக்க் ரொம்ப முக்கியம் என நீங்கள் கேட்பது எனக்கு தெரிகிறது 
இரவு பத்து மணிக்குள் நான் இதை ப்ளாக்கரில் ஏற்றி விட்டேன் நான் இப்போ இருப்பது துபாயில் ஆனாலும் சில நேரங்களில் என் ப்ளாக்கில் நான் என் பதிவை ஏற்றிய நேரம் துபாய் நேரம் என்றாலும் பதிவில் இந்திய நேரத்தை அதாவது சரியாக ஒன்னரை மணி நேரம் அதிகம் காட்டும் 
அது மட்டும் இல்லாமல் என் பதிவை தொடர்ந்து படிப்பவர்களுக்கு தெரியும் நான் எழுதும் சில வார்த்தைகள் 
எடுத்து காட்டு :
 சிரிக்க மறந்த திரை உலகம்,சிரிக்க தொடங்குமா (ரீமேக் ) திரை உலகம் ? போன்றவைகள் படித்தவர்களுக்கு தெரியும் சிரிப்பு என்னும் வெற்றி மந்திரம்   ,வெற்றி மந்திரம் என்பதை நான் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகள் ஒரு சில மணிநேரங்களில் அப்படியே காப்பி செய்து போட்ட விடுப்பு இணையம் என் பெயரை போட்டு இருந்தால் சந்தோஷம்
இந்த பதிவு எழுதி எனக்கு ஒரு லாபமும் இல்லை முன்னே எல்லாம் பொழுது போக படம் பார்ப்பேன் இப்போ அதே நேரத்தில் பதிவை போடுகிறேன்
இதை பற்றி விடுப்பு இணையத்திற்கு மெயில் செய்து உள்ளேன் பாப்போம்
மீண்டும் சொல்கிறேன் நான் நான் அடுத்தவரின் உழைப்பை ஏமாற்றும் அளவிற்கு மோசமானவன் இல்லை
ஒரு பதிவு போட எவ்வளவு வேலைகள் செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும்
பதிவு உலகத்திற்கு வந்து ஒரு வருடம் ஆகா போகிறது
இதுவரை அடுத்தவரின் பதிவை எழுத்தை ஏமாற்றும் புத்தி வர வில்லை இன்மேலும் வர போவதில்லை என்று மட்டு சொல்ல விரும்புகிறேன் 
என் பதிவு வந்த விடுப்பு இணையம் படிக்க

      உங்கள் வாக்கு மிக முக்கியம்

             " DONT MISS MY VOTE "

             "THANK YOU FOR READING "

Sunday, September 12

எனக்கு பிடித்த பாடல்கள் பாகம் 1

  எனக்கு பிடித்த பாடல்கள் சில உங்களுக்கும் பிடிக்கும்
கேளுங்கள்


பாடல் சிட்டு குருவி
பாடல் என் கண்மணி கலக்கல் பாட்டு சார்





ரஜினி கலக்கல் டூயட் கண்மணியே காதல் என்பது






மேகம் கருக்குது ஏனோ இந்த பாடலை கேட்டல் என்னை அறியாமல் ஏதோ ஒரு மயக்கம் ஏற்படும் மனதை மயக்கும் பாடல்



செந்தாழம் பூவில் கேட்டு பாருங்க


என்ன உங்களுக்கு எல்லா பாட்டும் பிடித்து இருக்க அப்போ மறக்காமல் உங்கள

Saturday, September 11

விஜய்யை காப்பற்ற போகும் ரீமேக் படங்கள்



       விஜய் நடித்த கடைசி சூப்பர் டூப்பர் ஹிட் போக்கிரி தெலுங்கு மொழியில் சுப்பர்  ஹிட் ஆனா படத்தை டைரக்டர் கம்  நடிகர் பிரபு 
  தேவா இயக்கத்தில் தமிழ் மொழியில் ரீமேக் செய்யப்பட்டது.
அதன் பின் வந்த விஜய் நடித்த படங்கள் சொல்லும்படியான முறையில் இல்லை 

விஜய் படம் என்றால் சரியான அளவில் காமெடி அதே அளவில் ஆக்சன் இருக்கும் என்ற பார்முலாவை பின்பற்றாமல் போனது  கூட  அவரின் சூப்பர் ஹிட் படம் என்ற எல்லையை கடைசியாக வந்த படங்கள் தொடவில்லை
  அதிகப்படியான் ஹீரோயிசம் கூட அவரின் வெற்றி படம் என்ற எல்லை தொடாமல் போனதற்கு காரணம்
அதிகப்படியான ரசிகர்கள் சிறப்பான ஆக்சன் காட்சிகள் இயற்கையாக அவரிடம் இருக்கும் நகைச்சுவை போன்றவை ரஜினி படத்திற்கு ஈடாக அவரின் படங்களும் பேசப்பட்டது ஆனால்
     ஆனால் அவர் படங்களில் அதிகப்படியான் பஞ்ச வசனங்களும் ஹீரோயசம் பற்றி அதிகம் பேசியதால் அவரின் ரசிகர் தவிர மற்றவர்களால் அவரின் படங்களை ரசிக்க முடியவில்லை

   மீண்டும் அவர் அவரின் வெற்றி மந்திரம் என்னும் ரீமேக் படங்களுக்கு திரும்பியுள்ளது இப்போது வர இருக்கும் அவரின் படங்கள் காவலன் .வேலாயுதம் ,மற்றும் த்ரீ இடியட்  போன்றவைகளில் கடைசியாக வந்த படங்களில் செய்த அவரின் ஓவர் ஸ்மார்ட் ஹீரோயசம் மற்றும் பன்ச் டயலாக்  இல்லாமல் படத்தை ஒட்டி நடித்தால் மீண்டும்
அவர் ரசிகர்களை மட்டும் இல்லாமல் எல்லா தரப்பு மக்களையும் கவர  முடியும்

  மீண்டும் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை தருவார் என நினைக்கலாம்
அவரின் எதிர் வரும் ரீமேக் படங்கள் பற்றி ஒரு பார்வை


காவலன்
உண்மையான மொழி  :மலையாளம்
இயக்குனர் :சித்திக்
படத்தின் பெயர் :பாடி கார்ட்
மலையாளாத்தில் ஹிட் படம்  திலிப் நயன்தார நடித்தது  இந்த படத்தில் விஜய்யை காப்பற்ற போவது மலாயளிகள் 




வேலாயுதம்
உண்மையான மொழி : தெலுங்கு
இயக்குனர் :தமிழி எம் .ராஜா தெலுங்கு மொழியில் :திருப்பதி சாமி
படத்தின் பெயர் : ஆசாத்
 தெலுங்கு ஹிட் படமான இதில் நாகர்ஜுனா சௌந்தர்யா நடித்து இருந்தனர் இந்த படத்தில் விஜய்யை காப்பற்ற போவது  தெலுங்கு மாட்லாடுகள் 





 த்ரீ இடியட்ஸ் (தமிழ் மொழியில் இன்னும் பெயர் வைக்கவில்லை
உண்மையான மொழி :ஹிந்தி
இயக்குனர் :தமிழில் ஷங்கர் ஹிந்தி மொழியில் ராஜ்குமார் ஹிரானி
படத்தின் பெயர் :3  இடியட்ஸ்
           ஹிந்தி மொழியில் வசூல் சாதனை செய்த படம் இந்த படத்தில் விஜய்யை காப்பற்ற போவது ஹிந்தி வாலாக்கள்

Thursday, September 9

அனைவருக்கும் இனிய ரம்ஜான் நல் வாழ்த்துக்கள்



   இந்த மாதம் முழுவதும் பகல் பொழுதுகளில் நோன்பிருந்து  உண்ணாமல் பருகாமல் இருப்பதுடன் மட்டும் இல்லாமல் மனதை தீய எண்ணங்களுக்கு அலைபாய விடாமல் இறைவனுக்காக  இந்த நோன்பு  இருக்க
நேர் வழி வாழ பாதை காட்டும் இந்த புனித  மாதத்தின் முடிவில் ரம்ஜான் கொண்டாடும்  அனைவருக்கும் இனிய ரமலான் தின வாழ்த்துக்கள் 



ரம்ஜான் மாதத்தின் முக்கிய கடமையான ஜகாத் பற்றி சில துளிகள்:


 இஃப்தார் எனும் உணவு  உட்கொள்ளல் மற்றும் நோன்பு முடிப்பு ஆகிய சொற்களிலிருந்து பிறந்ததே இந்த ஃபித்ரா என்பதும் ஜகாத்துல் .பித்ர் என்பதுமாகும். இந்த தர்மம் புனித ரமளான் முடிவில் ஈகைத் திருநாள் தொழுகைக்கு முன்பாக வரை வழங்கப்படுவதாகும். இந்த விரும்பத்தக்க தர்மம் முஸ்லிமான அனைவரின் மீது  கடமையானது . பின்வரும் நபிமொழிகள் இந்த தர்மத்தின் தலையாய முக்கியத்துவத்தைப் பறைசாற்றுகின்றன. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அடிமையான-சுதந்தரமான சிறிய-பெரிய ஆண்-பெண் முஸ்லிம்கள் மீது ஒரு ஸ’அ  அளவு  பேரீத்தம்பழம் அல்லது பார்லி வழங்குவதைக் கட்டாயமாக்கப்பட்டது

எவர்கள் தங்கத்தையும் வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு கடுமையான வேதனையுண்டு' (அல் குர்ஆன் 9:34)

உங்கள் செல்வத்திலிருந்து நீங்கள் அவர்களுக்கு செலவு செய்யுங்கள்' (அல் குர்ஆன் 24:33)
புண்ணியம் என்பது உங்கள் முகத்தை கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக் கொள்வதில் இல்லை. மாறாக புண்ணியம் என்பது அல்லாஹ்வை நம்பி...... ..இறைவன் மீதுள்ள நேசத்தின் காரணமாக சொந்தங்களுக்கும், அனாதைகளுக்கும், (வாய்திறந்து கேட்காத) ஏழைகளுக்கும், யாசிப்பவர்களுக்கும் செலவு செய்வதாகும். மேலும் தொழுகையை கடைப்பிடித்து ஜகாத் கொடுத்து வருவதுமாகும்.... (அல் குர்அன் 2:177)

(நபியே) அவர்களுடைய பொருட்களிலிருந்து தர்மத்தை எடுத்துக் கொண்டு அவர்களை உள்ளும் - புறமும் தூய்மைப் படுத்துவீராக' (அல் குர்ஆன் - 9:103)





Monday, September 6

அதிகம் வசூல் செய்த டாப்.10 தமிழ் படங்கள்



  ஒவ்வொருவரும் திரை அதிகம் வசூல் செய்த படங்கள் என்று ஒவ்வொன்று சொல்ல எதோச்சையாக விக்கிபீடியா பார்க்கும் போது அதில் வசூல் செய்த படங்கள் என்று இந்த பத்து படங்களை போட்டு இருந்தனர் அவைகள்
1.தசவாதாரம்  (கமல் ஹாசன் )
2.சிவாஜி  (ரஜினி )
3. பில்லா  (அஜித் )
4.சந்திரமுகி (ரஜினி )
5.வரலாறு (அஜித் )
6.அந்நியன் (விகரம் )
7.வேட்டையாடு விளையாடு (கமல் ஹாசன் )
8.படையப்பா ( ரஜினி )
9.திருட்டு பயலே (ஜீவன் )
10.பருத்திவீரன் (கார்த்திக் ) 
 இது நான் சொல்ல வில்லை விக்கிபீடியா பார்த்தது .


அடுத்து ஆண்டு வாரியாக அதிக வசூல் செய்த படங்கள் என்று இருப்பதில்
2003 .சாமி  (விக்ரம்)
2004 .வசூல் ராஜ (கமல் )
2005 .சந்திரமுகி (ரஜினி )
2006 .வரலாறு (அஜித்)
2007 .சிவாஜி (ரஜினி )
2008 .தசவாதாரம் (கமல் )
2009 .அயன் (சூர்யா)
2010 . சிங்கம் (சூர்யா )
  இதுவரை எந்திரன் வந்தால்  கதையே வேற


ரஜினி இப்படியும் அறிக்கை விடுவார்


  செய்தி 1
                          தன் மகளின் திருமணதிற்கு ரசிகர்கள் வந்தால் போக்குவரத்து பிரச்சினை மக்களுக்கு பிரச்சினை ஏற்படும்  என்று  பொதுநலன் & மற்றும் ரசிகர் நலன் கருதி அன்பு வேன்
டுகோள் விட்ட ரஜினி 


   தான் ஒரு நல்ல மனிதர் என்று நிருப்பிக்கும் வகையில் ரசிகர்களுக்கு இது போன்று மேலும் ஒரு அறிக்கை விடுவார் என எதிர்பார்க்கலாம் அந்த அறிக்கை கீழே

 " என் உயிரின் மேலான ரசிகர்களே நீங்கள் எந்திரன்  படத்தை   முதல் நாள் பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருப்பது எனக்கு தெரிகிறது அதே  போல் நானும் ஆவலாக இருக்கேன் .நீங்கள் முதல் நாள் திரை அரங்கு சென்றால் திரை அரங்கு முழுவதும் பத்தாது மற்றும் உங்களால் அந்த பகுதி முழுவதும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் . உங்கள் அனைவரின்  டிக்கெட் பணத்தை என்ன திரை அரங்க உரிமையாளர்கள் அவஸ்தை படுவார்கள் எனவே நீங்கள் முதல் நாள் அன்று படம் பார்க்க செல்ல வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்

   படத்தை பொறுமையாக பார்க்குமாறு உங்கள் அனைவரயும் வேண்டி கேட்டு கொள்கிறேன் அன்புடன் உங்கள்
  தலைவன் (படம் வரும்போது மட்டும் )


இப்படி அறிக்கை விட்டால் நல்லது
ரஜினி நல்ல மனிதர் அவர் எப்போதும் ரசிகனை மதிப்பார் ஆனால்
அவர் மகளின் திருமண விசயத்தில்  இந்த கருத்தால் அவரின் உண்மையான ரசிகனின் மனம் எவ்வளவு வேதனை படும் என்ற எண்ணத்தில்
இந்த அறிக்கை விடாமல் இருந்து இருந்தால் அவரின் ரசிகன் அவரை மதிக்கும் நிலை வேறு

Sunday, September 5

ராக்கிங் சைத்தான்களும் & ஏழை மாணவியின் பரிதாபமும்


செய்தி 1
  ராசிபுரம் மாணவி ஜோதி தற்கொலை செய்து கொண்டதற்கு ராக்கிங் கொடுமையே காரணம் என மாணவியின்  பெற்றோர் புகார்

செய்தி 2
 

அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வந்த பொறியியல் மாணவி ஜோதி தற்கொலை செய்து
கொண்டதற்கு, அவரது வகுப்பில் படித்து வரும் ஆங்கில மீடிய மாணவர்கள் செய்த
கேலி, கிண்டல்தான் காரணம் என்று தெரிய வந்துள்ளது.
செய்தி 3
ராக்கிங் கொடுமையை நடக்காமல் தடுக்க வேண்டும் பிரதிபா பாட்டில்

இந்த விசயத்தில் எது நடந்ததோ ஆனால் ஒரு அப்பாவி மாணவியின் உயிர் போனது போனதுதான் 


இந்த விசயத்தில் மாணவியின் உயிர்  போக காரணம் அந்த மாணவிக்கு தன்னம்பிக்கை குறைவாக கூட இருக்கலாம் .
இந்த விசயத்தில் அரசு பள்ளியில் படித்த அதிலும் கிராமப்புற மாணவர்களின் நிலை மிகவும் மோசம்
அரசு பள்ளியில் அவர்கள் எவ்வளவுதான் கஷ்டப்பட்டு படித்தாலும் நல்ல மதிப்பெண் பெற்று இருந்த போதும் புதிதாக செல்லும் பொது அவர்கள் சந்திக்கும் மிக பெரும் பிரச்சினை ஆங்கிலம்
ஆங்கில கல்வியும் நம் மாணவர்களும் என்று நான் எழுதிய பதிவை படிக்க இதை அழுத்தவும்

இந்த விசயத்தில் அந்த மாணவியின் பெற்றோர் மனம் எப்படி கஷ்டப்படும் என்பதை நினைது பாருங்கள்
என்னை பொறுத்தவரை ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்த எந்த மாணவனும் இது போன்ற கீழ்த்தரமான இது போன்ற ரேகிங் கொடுமையில்  ஈடுபடமாட்டான்
  இந்த ரேக்கிங் கொடுமை இனிமேல் நடக்காமல் இருக்க மாணவர்கள் அவர்களாய்  திருந்தினால் மட்டுமே முடியும்

ஒவ்வொரு மாணவனின் /மாணவியின் பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு  கல்லூரி செல்லும்  முன்  ரேக்கிங்  கொடுமை நடக்காமல் இருக்க  அவர்களின் குழந்தைகளுக்கு நல்ல அறிவுரை வழங்க வேண்டும்
ஒவ்வொரு மாணவ / மாணவிகளுக்கு கல்வி பற்றி விழிப்புணர்வு வழங்குவதுடன் நல்ல  மனோதைரியத்தை வழங்க வேண்டும் .தன்னம்பிக்கை இல்லாத கல்வி அஸ்திவாரம் இல்லாத மாளிகை போன்றது
இதை நினைவில் வைத்து மாணவ மாணவிகளுக்கு நல்ல தைரியம் கொடுத்து கல்லூரி அனுப்ப முயற்சி செய்ய வேண்டும்


  இந்த மாணவியின்  மரணம் ரேக்கிங் கொடுமைக்கு கடைசி உயிராக இருக்க வேண்டும் இனிமேல் இது போன்ற கொடுமை நடக்காமல்  இருக்க  நமக்கு தெரிந்த மாணவ மாணவிகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும்

   ஆங்கில கல்வி முக்கியமா இல்லையா? என்பதையும் தெரிவிக்கவும்

     "தற்கொலை செய்து கொண்ட  ராசிபுரம் மாணவி ஜோதி ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போம்"






Saturday, September 4

ஆசிரியர் தின வாழ்த்துக்கள் தெரிவிப்போம்



  உலகத்தில் எல்லாவற்றிக்கும் ஒரு நாள் இருப்பது போல் ஆசிரியர் தினமும் சாதாரண தினம்  இல்லை.


 ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் உண்மையான மாற்றத்தை தருவது அவன் கற்ற கல்வி மட்டுமே .
அப்படிப்பட்ட மிக உயர்ந்த கல்வியை தருவது ஆசிரியர்   பணி மட்டுமே .ஆசிரியர் என்பவன் ஏணி போன்றவர்  எல்லோரயும் ஏற்றிவிட்டு அந்த ஆசிரியர் ஏணி  மட்டும் அந்த இடத்தில இருக்கும்
அப்படிப்பட்ட ஆசிரியர் தினம் இன்று "முன்னாள் குடியரசுத் தலைவருமான மறைந்த டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் பிறந்த நாளில் 


அவர்களின் நினைவாக கொண்டாடப்படும் ஆசிரியர் தினம் அன்று நமக்கு பிடித்த அந்த
ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவிப்போம்
அல்லது உங்களுக்கு பிடித்த  ஆசிரியர் பற்றி எளிய முறையில்  பதிவுகளை போடவும் 


ஒவ்வொருவரின் வாழ்க்கையில் மாற்றத்தை உண்டாக்கிய ஆசிரியர் பற்றி இரத்தின சுருக்கமாக பின்னுட்டம் இடவும்

  "ஒரு சமுதாயத்தில்    நல்ல  மாற்றத்தை  தருவது
   சிறந்த கல்வி மட்டுமே அப்படிப்பட்ட நல்ல கல்வி தரும் ஆசிரியர்களுக்கு  ஒரு சல்யுட் "

Friday, September 3

தமிழ் சினிமா மூன்று மூர்த்திகள் PART 1



இப்படியும் சொல்லலாம் தமிழ் சினிமா இப்போ இந்த மூன்று பேரின் கைகளில் உள்ளது .அல்லது இவர்களின் கையில் ஆட்டுவிக்கபடுகிறது . இப்போது இருக்கும் ஆட்சி என்னும் அஷ்திரத்தை  வைத்து  இவர்களின் சொல்படி தான் தமிழ் திரை உலகம் இருக்கோ என்றோ சொல்லும் படியான இவர்களின் பட வெளியிடும் அதற்க்கு தமிழ் நாட்டில் கிடைக்கும் மறைமுக ஆதரவும் ஒரு காரணம்

           ஒரு காலத்தில் தமிழ் படம் என்பது ஒவ்வொரு தமிழ் மக்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறி இருந்தது ஒரு புது பத்மா வந்தால் திருவிழா கோலம் கொண்டாடிய தமிழ் திரை உலகம் சேட்டலைட் தொலைக்காட்சி ,விரைவாக வளர்ந்து வரும் இணையம் இவை எல்லாவற்றிர்க்கும் மேலாக திருட்டு  விசிடி போன்ற பெரும் சுனாமிகளின் மோதி சின்னாபின்னமானது  என்னவோ  உண்மை

 தொடர் திரை அரங்குகளின் மூடு விழ ,பழமை வாய்ந்த திரை நிறுவங்கள் படம் தயாரிப்பு என்ற விஷயத்தை அடக்கி வாசித்தது .நடிகர்களின் சம்பளம் ,கார்பரேட் நிறுவனகளின் திரை உலகின் வளர்ச் அதே வேகத்தில் அவைகளின் தோல்வி என பல விசயங்களில் தமிழ் படம் சிக்கி சீரழிந்த போது இந்த மூன்று பேரின் வருகை அளவான வளர்ச்சி மிகைபடுத்தப்பட்ட விளம்பரம் அளவிற்கு அதிகமான அளவில் செய்யப்படும் முதலிடு
அது எப்படி இவர்களின் படங்கள் மட்டும் வெற்றி பெறுகிறது அல்லது இவர்களால் எப்படி தாக்குபிடிக்க முடிகிறது 


சன் பிக்சர்ஸ் :
             இதில் சன் பிக்சர்ஸ் இவர்களின் வருகை மற்றும் வளர்ச்சி இன்று நேற்று உருவானதல்ல சன்  டிவி அதன் ஒரு அங்கமாக சன் பிக்சர்ஸ் வெகு காலமாக இருந்து வந்தது .சன் பிக்சர்ஸ் மற்றும் ராடான் பிக்சர்ஸ் இனைந்து திரை அரங்கு வராத தொலைக்கட்சிக்கு மட்டும் படங்கள் தயாரித்து அதன் மூலம் ஒரு லாபம் பார்த்து
சன் டிவி தொடர்ந்து பார்பவர்களுக்கு இது தெரியும்

  அது மட்டும் இல்லாமல் சன் டிவி  வந்த பின்பு தான் தமிழ் திரை படங்களின் சேட்டலைட் விநியோக உரிமைக்கு என ஒரு நல்ல விலை கிடைக்க ஆரம்பித்து
அது மட்டும் இல்லாமல் ஆரம்ப காலங்களின் பல படங்களின் வெற்றிக்கு சன்  டிவி விளம்பரம் ஒரு பக்க பலமாக இருந்தது
திரை துறை சார்ந்த நிகழ்சிகளுக்கு அதிக விலை கொடுத்து அது போன்ற நிகழ்ச்சி நடத்தி ஒரு லாபம் பார்க்க சன் டிவி வழி வகை  செய்ததது
(விஜய் டிவி போல திரை கலைஞர்களை மட்டும் பயன்படுத்திக்கொண்டு திரை உலகுக்கென ஒன்றும் செய்யாமல்  இல்லை   விஜய் டிவி தொடர்ந்து பார்பவர்களுக்கு அந்த விஷயம் தெரியும் ஹிந்தியில் இருக்கும் அவர்களின் ஸ்டார் பிளஸ் ஹிந்தி படத்தை அதிக விலை கொடுத்து வாங்கும்போது ஏன் தமில் மட்டும் இவர்களால் வாங்க முடியாதா ?அனால் அதை விட்டு விட்டு திரை கலைஞர்களுக்கு விழா திரைப்படம் சார்ந்த நிகழ்ச்சி மட்டும் வழங்க வில்லை )


 சன் டிவி  வந்த  பின்புதான் தமிழ் திரை உலகம் மோசமான நிலை அடைந்ததது என்பதை ஒத்து கொள்ள முடியாது


மாறி வரும் தொழில் நுட்பம் காரணாமாக சன் டிவி இல்லை என்றால் ஒரு மூன் டிவி அல்லது ஏதோ ஒரு டிவி அந்த வேலை செய்யும்
அப்படியே இருந்தாலும் சன் டிவி க்கு பின்தான் தமிழ் திரை உலகம் மோசமான நிலைக்கு  வந்தது என்றாளது உடனே நடந்து இருக்கும் இத்தனை ஆண்டு சென்று இந்த நிலை அடைய மிக முக்கிய் காரணம்
# திரை அருங்குகளின் அதிகப்படியான  டிக்கெட் விலை
#விலைக்கு  ஏற்ற சரியான  வசதி இல்லாமை
#நடிகர்களின் அதிகப்படியான் சம்பளம்
#நல்ல கதை உள்ள படங்களின் வருகை குறைவு
#இவை எல்லாவற்றக்கும் மேலாக திருட்டு விசிடி

சரி சன் பிக்சர் வருவோம்
    இப்போது இருக்கும் சூழ்நிலையில் அரசியல் சூழ்நிலை மாறினாலும் மாறாவிட்டாலும் சன்  டிவி வளர்ச்சி அரசியல் பயன்படுத்தி வர வேண்டும் என்ற நிலை தாண்டி வெளியே வந்து விட்டது
ஆரம்ப காலங்களின் சன் டிவி அரசியல் பயன்படுத்தி முன்னேறி இருந்தாலும் ? இப்போது இருக்கும் அதன்  சரியான வளர்ச்சி விகிதம் மற்றும் திரை  உலகில் சன் டிவி செய்யும் முதலிடு சன் டிவி பண  பலம் மற்றும் மார்க்கெட்டிங் திறமை  ஆகியவற்றின் காரணமாக  தமிழ் திரை உலகின் வெற்றி உண்மையான வெற்றி என சொல்லலாம்

இந்தியாவில் சிறந்த மீடியா நிறுவனத்தின் சன் பிக்சர்ஸ் தமிழ் தயாரிப்பு நிறுவங்களில் முதல் இடம் பெறுமா?
அதன் வரும் பெரிய முதலிட்டு படமான எந்திரன் வெற்றியில் அதன் மார்க்கெட்டிங் திறமை தெரியும்

சன் டிவி மீது உள்ள குற்றச்சாட்டு :
  1.சன் டிவி தான் வாங்கும் படத்தை மட்டும் சிறந்த படமாக  போடுகிறது
2.சன் டிவி டாப் டென் நிகழ்ச்சயில் அதன் படம் எவ்வளவு மோசமாக இருந்தாலும் முதல் இடத்தில இருக்கிறது
3.அதே நேரத்தில் மற்ற நல்ல படங்களை பற்றி அதன் தொலைக்கட்ச்யில் போடுவதில்லை
4.தொடர்ச்சியாக போடப்படும் திரைப்பட விளம்பரம் சன் டிவி படம்
மீது வெறுப்பு வருகிறது


  next பெரிய தலை பற்றி அடுத்த பதிவில்

Thursday, September 2

பேஸ் புக்கின் இந்தியாவில் இந்த வளர்ச்சிக்கு காரணம் என்ன ?

        பேஸ் புக் அப்படின்னு சொன்ன இப்போ உலகம் முழுவது தெரியாதவர்கள் யாரும் இல்லை .மற்ற சோசியல் நெட்வொர்க்கை ஒப்பிடும்போது பேஸ் புக்கின் வளர்ச்சி ஹிமாலய மலை போன்றது

 உலகம் முழுவதும் சக்கை போடு போட்டாலும் பேஸ் புக்கின் இந்தியாவின் வளர்ச்சி எதிர்பாத்த அளவில் இல்லை உண்மை சொல்ல வேண்டும் என்றால் இரண்டு  ஆண்டுகளுக்கு  முன் நான் பேஸ்புக் கணக்கை ஆரம்பித்த பொது நம்ம ஊரை சேர்ந்த நண்பர்கள் யாரும் வருவார்களா அல்லது தமிழ் மக்கள் வருவார்களா என்று வழி மீது விழி வைத்து காத்து இருந்தேன் தினமும் பிலிப்பைன் கலர்களும் மற்ற நாட்டை சேர்ந்தவர்கள் அதிகம் இருந்தார்களே தவிர
நம்ம மக்கள் ஊஹும் வருவனே என்று சொன்னார்கள்

  யப்பா பேஸ்புக் அப்படின்னு ஒன்னு இருக்கு அப்படின்னு சொன்ன அதை விட சுப்பர் ஆர்குட் அப்படின்னு சொன்னவர்கள் அதிகம் உலகம் முழுவதும் சக்கை போடு போட்டாலும் பேஸ்புக் இந்தியாவில் ஆர்குட்டின் ஆக்கிரமிப்பை மிஞ்ச முடிய வில்லை

  சென்ற ஆண்டு நான் ஊருக்கு போகும் போதும் இதே கதைதான் .ஜி பூம்பா பூதம் போல இரண்டே மாதத்தில் நம் மக்கள் செய்த ஒரு பெரிய விசயம் ஆர்குட்டை அம்போன்னு விட்டு விட்டு இந்தியாவில் எல்லோரும் பேஸ்புக் பேஸ்புக் அப்படின்னு சொல்ல என்ன காரணம் ?


       இதற்க்கு முக்கிய் காரணம் இப்போது இருக்கும் மொபைல் நெட்வொர்க்கும் புதிதாக வரும் மொபைல் போன்களும்தான் .இப்போ உலகம் முழுவதும் புகழ் பெற்ற சோனி எரிக்க்சன் ,நோக்கியா போன்ற மொபைல் போன்களில் ஏற்கனவே பேஸ்புக் அப்ளிகேசன்  உள்ளது அதே போன்று
இந்தியாவில் இருக்கும் மைக்ரோ மக்ஸ் ,கார்பன் ,லாவா இன்னும் சொல்லி கொண்டு போகலாம் எல்லா மொபைல்களிலும்  இருக்கும் பேஸ்புக் அப்ளிகேசன் முக்கிய காரணம்

ஏர்டெல் ,ஏர்செல் ,ரிலையன்ஸ் ,டோகோமோ ,இன்னும் இருக்கும் எல்லா மொபைல் நெட்வொர்க்கும் பத்து ரூபாயில் ஒரு மாதத்திற்கு அளிக்கும் பேஸ்புக் சேவை மிக முக்கிய காரணம்

இடையில் இரண்டு மாதத்திற்கு இலவசமாக ஏர்டெல் பேஸ்புக் சேவையை வழங்கியது

இது வரை ஆர்குட்டை விட்டு வாராத மக்கள் பேஸ்புக் சேவை பயன்படுத்தி பார்த்த போது ஆர்குட்டை விட பேஸ்புக் சிறப்பானது என்று இப்போ ஆர்குட்டை அம்போன்னு  விட்டு விட்டு பேஸ்புக் பேஸ்புக் அப்படின்னு சொல்றாங்க

இறுதியாக இந்தியாவில் பேஸ்புக் இந்த அளவிற்கு விரைவாக வளர  மைக்ரோ மக்ஸ் ,கார்பன் ,லாவா போன்ற சோசியல் நெட்வொர்க் அப்ப்ளிகேசன் உள்ள மொபைல் மிக முக்கிய காரணம் என சொல்லலாம்

பதிவை படித்து அப்படியே பேஸ்புக் பகிர்வு செய்யுங்க .ஹாய் அரும்பாவூர் பேஸ்புக் குழுவில் சேருங்கள் உங்கள் ஆதரவை தொடர்ந்து தாருங்கள்

பேஸ்புக் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை  600 மில்லியன்
பேஸ்புக் வருமானம்  $ 1,100மில்லியன்
அலெக்சியா ரேங்க் 2
என் பேஸ்புக் கணக்கில் முன்னே அதிகம் பிலிப்பைன் நாட்டவர்கள் மற்றும் அரப்  இருந்தார்கள்
இப்போ அதிகம் நம்ம தமிழ் மக்கள் தான் வாழ்க  தமிழ்