Wednesday, December 30

2009 அரும்பாவூர் ப்ளாக் விருதுகள்

2009 சிறந்தவைகள் என் பார்வையில்
இவைகள் எனக்கு பிடித்தவைகள் உங்கள் விருப்பம் கருத்து இருந்தால் எனக்கு பின்னுட்டம் இடவும்
சிறந்த படம் 

நாடோடிகள்

ரேணிகுண்டா

இயக்குனர் 
கே வி ஆனந்த்(அயன்)

பன்னிர்செல்வம்(ரேணிகுண்டா)


இசை அமைப்பாளர்

சுந்தர் சி பாபு(நாடோடிகள் )

ஹாரிஸ் ஜெயராஜ்(அயன் )


நடிகர் 
சூர்யா(அயன்)

சசிகுமார் (நாடோடிகள்)


நடிகை 
தமன்னா (அயன்)
சனுஜா (ரேணிகுண்டா )
 வில்லன் 
சொல்லும்படி இல்லை

காமடி நாயகன் 
வடிவேலு


பாடல் 
விழி மூடி (அயன் )

உலகில் இந்த காதல் (நாடோடிகள் )


பாடகர் 
ஹரிஹரன் (அயன் ,ரேணிகுண்டா )

பலதுறை சிறப்பு நாயகர்
  சசிகுமார் (நடிகர் ,இயக்குனர் ,தயாரிப்பாளர் )சாதனை நாயகன்

50 வருட திரையுலகில் இன்னும் வெற்றி கொடி நாட்டும் கமல் ஹாசன்உலக நாயகன் விருது

விருது இவர் வீட்டு கதவை தட்ட வைத்த சாதனையாளன் தமிழை உலக அரங்கில் கொண்டு சென்ற விருது நாயகன் உலக நாயகன் A R ரஹ்மான்சிறந்த தொலைக்காட்சி

மற்ற தொலைக்காட்சி சினிமா போட்டு ரேட்டிங் ஏற்ற சினிமா கலைஞர்களை கௌரவித்து சிறந்த நிகழ்சிகளை வழங்கியது ,சிறப்பான நிகழ்ச்சிகள் என விஜய் டிவி சிறந்த தொலைக்காட்சிவிருது


தமிழ் மொழியில் தமிழ் மொழி சார்ந்த நிகழ்ச்சிகள் வழங்கியதால் தமிழன் தொலைக்காட்சி சிறப்பு விருது


சிறந்த பத்திரிக்கை

அனந்த விகடன் இத்தனை ஆண்டு ஆகியும் இன்னும் காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றும் விகடன் குழுமம் இன்டர்நெட் ,தொலைக்காட்சி ,சினிமா என பலமுகம் காட்டியதால்

வியாபார பத்திரிக்கை
நாணயம் விகடன்


தமிழ் மக்கள் விடுதலை நாள்

வேற என்ன கோலங்கள் தொடர் முடிந்த நாள்


குழந்தைகள் ஹீரோ

சுட்டி டிவி அவர்களுக்கு என ஒரு ஏரியா தந்த சன் டிவி சாதனை ஹீரோ

மாற்றத்தின் நாயகர்கள்

தமிழ் மக்கள் தான் அடாவடி ஹீரோயிசம் உள்ள படங்களை ஓடாமல் செய்ததிற்குநம்ம ஏரியா ஹீரோ

வேற யாரு நான் எழுதுறதை நாலு பேருக்கு கொண்டு செல்ல உதவி புரியும் கூகிள் தான் அவர்


சொல்லி அடிச்சா கில்லி 
அவதார் 


சிறந்த பொழுது போக்கு இனிய தளம்

இலவசமாக சிறப்பாக நல்ல விஷயங்களை தரும் தினகரன் .காம்

ப்ளாக் எழுதுக்களை ரசிகர்கள் இடம் கொண்டு செல்ல உதவும் தமிளிஷ் ,தமிழ் 10 ,திரட்டி, ந்யூஸ் பானை ,மற்றும் பல
ஆங்கில கல்வியும் நம் மாணவர்களும் பதிவை படிக்க இந்த சுட்டியை அழுத்தவும்


ஆங்கில கல்வியும் நம் மாணவர்களும்

*************************************************************************
இயற்க்கை காப்போம் மரம் வளர்ப்போம் !!!!
*************************************************************************
முடியா விட்டால் செடியாவது வளர்ப்போம் !!!
*************************************************************************
ஊருகோர் மரம் வளர்ப்போர் சங்கம் வைப்போம் !!!
**************************************************************************

மறக்காமல் எனக்கு வோட்டு போடுங்க நல்லவர்களே

Monday, December 28

2009 ரசிகர்களை ஏமாற்றிய படங்கள்             ஆரம்பத்தில் ஒன்று சொல்லி கொள்ள விரும்புகிறேன் ரசிகர்களை ஏமாற்றிய படங்கள் வரிசயில் விஜய் படத்தை பற்றி ஒன்றும் சொல்ல போறதில்லை சொல்வதற்கு பயம் இல்லை .ஆனால் பின்னுட்டம் மூலம் கிடைக்கும் மரியாதைக்கு பயந்து விஜய் படங்களை பற்றி எழுத வில்லை முதன் முதலில் விஜய் ரசிகர் எழுதிய பின்னுட்டம் படித்த உடன் வோர்ட் settings -> comments--> word verification க்கு  எஸ் கொடுத்தேன்

    மற்றதை பற்றி பேசலாம்
     சர்வம் 

பில்லா படத்திற்கு பின் விஷ்ணுவர்தன் இயக்கிய படம் ஆர்யா த்ரிஷா யுவன் ஷங்கர் ராஜா இசை நிரவ் ஷா ஸ்ரீகர் பிரசாத் என படத்தில் பல பிளஸ் இருந்தும் ரசிகன் என்னும் முக்கிய பிளஸ் மனதில்  இந்த படம் பிடிக்காமல் தோல்வி படத்தில் சேர்ந்தது  ஆனால் யுவனின் இசை ஒரு பாடலில் இளையராஜா வின் மயக்கும் குரல் என பாடல்கள் பட்டை கிளப்பியது
தோரணை 


     ஆனால் ரசிகர்கள் ரோதனை என கூறிய படம் அதே உருப்படாத பார்முலா கதை சண்டை காமெடி பாட்டு என படம் முழுவதும் தமிழ் திரை உலகில் பார்த்து பார்த்து புழித்து போன பழிவாங்கல் அண்ணன் தன்ம்பி கதை என ரசிகர்களை கொடுமை படுத்திய படம்
        இதில் முக்கிய விஷயம் விஷால் ரசிகர்களின் மனம் புரிந்து உடனே தன் பார்முலாவை மாற்றி காமடி ரொமான்ஸ் காதல் என மாறி அவர் ரசிகர்களை மதித்து எடுக்கும் தீராத விளையாட்டு பிள்ளை படம் .இந்தபடம் வெற்றி பெற வாழ்த்துவோம்
 பொக்கிஷம் 


              பொக்கிஷமாக ரசிகர்கள் பார்ப்பார்கள் என்றால் கதை சொன்ன விதத்தில் பழைய பாத்திரம் ஆனா படம் .எங்களுக்கு நல்ல கதை மட்டுமே தேவை நடிக்கும் நடிகர்கள் முக்கியம் இல்லை என்று மாறிய ரசிகர்களின் ரசனைக்கு சற்றும் ஈடு கொடுக்க முடியாமல் ரசிகனைஏமாற்றிய படம்
இதற்க்கா சேரன் இத்தனை பில்ட் அப் கொடுத்தார் என சொல்ல வைத்தது .
     வலை பதிவுகளில் அன்றைய பன்றி காய்ச்சல் உடன் சேர்த்து  அடிக்கப்பட்ட கமென்ட்  யாரும் மறந்து இருக்க மாட்டர்கள்
யோகி 

         அமிரின் பருத்தி வீரன் படத்தின் மீது இருந்த மரியாதை காரணமாக படம் வரும் முன் இப்படத்திற்கு இருந்த எதிர்பார்ப்பு எல்லாம் படம் வந்த உடன் ஒரு பெரிய குழி தோண்டி புதைத்த படம்
       ஆங்கில படத்தை காட்சி மாறாமல் சுட்டு இதற்க்கா  இத்தனை  ஆர்பாட்டம்  என சொல்ல வைத்த படம்

இந்த ஆண்டு ஓடாத படங்கள் பற்றி எழுதினால் கை வலிக்கும் ஆனால் மேல சொன்ன படத்தின் கலைஞர்கள் சாதாரண கலைஞர்கள் இல்லை வெற்றி என்னும் கோட்டை அழுத்தமாக தொட்டவர்கள் அதனால் அவர்கள் மீது உள்ள எதிர்பார்ப்பில் சென்று ஏமாந்த ரசிகனின் கருத்துக்களே

  இவர்கள் நிச்சயம் அடுத்த படம் வெற்றி படமாக கொடுக்க இந்த படங்கள் ஒரு பாடமாக இருக்கும்

அடுத்த பதிவு 2009 சிறந்தவைகள் என் பார்வையில்
         தொலைக்காட்சி ,பத்திரிக்கை ,இசை ,மற்றும் பல

*************************************************************************
இயற்க்கை காப்போம் மரம் வளர்ப்போம் !!!!
*************************************************************************
முடியா விட்டால் செடியாவது வளர்ப்போம் !!!
*************************************************************************
ஊருகோர் மரம் வளர்ப்போர் சங்கம் வைப்போம் !!!
**************************************************************************


இதுவரை வோட்டு போட்டவர்களுக்கும்
இனி வோட்டு போடா போகும் உங்களுக்கும்
நன்றி நன்றி நன்றி நன்றி    மறக்காமல் எனக்கு வோட்டு போடுங்க நல்லவர்களே
Sunday, December 27

2009 ஆண்டு சிறந்த  படங்கள் என் பார்வையில்

ஒவ்வொரு ஆண்டும் முடிவின் போது அந்த ஆண்டின் சிறந்த நிகழ்வுகளை மற்றும் சிறந்த படம் மற்றும் சிறந்த பாடல் என்று போடுவது வழக்கம் அதே பாணியில் அரும்பாவூர் ப்ளாக் சிறந்த படம் நடிகர் பற்றி கருது கணிப்பை போட்டது அதன் அடிப்படியில்2009 சிறந்தவைகள்


இந்த ஆண்டின் சிறந்த மற்றம் நம் திரையுலகில் சொல்லலாம் இது நாள் வரை கடிவாளம் கட்டிய குதிரை போல ஒரே நடிகர் துதி பாடும் படங்கள் பின் சென்ற நம் திரையுலகம் நல்ல கதை மட்டுமே தேவை நடிகர்கள் இரண்டாம் பட்சம் என்று மாற்றிய, பசங்க ,நாடோடிகள் ,ஈரம் ,ரேணிகுண்டா படங்களை சொல்லலாம்


இதில் புது இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர் என்று பல துறைகளில் சாதனை புரிந்த சசி குமார் தமிழ் சினிமாவின் முக்கிய சாதனையாளர் எனலாம்ஈரம் படம் ஷங்கர் தயாரிப்பில் வந்து எதிர்பார்க்காத வெற்றி படம் எனலாம் பேய் படம் என்றல் பயமுறுதும் மேக் அப் மிரட்டும் என்ற தமிழ் சினிமாவின் மரபை உடைத்து படம் பார்க்கும் நம்மை அந்த கதைக்குள் கொண்டு செல்லும் நுணுக்கம்
ஆதி நந்தா சிந்து மேனன் என்று புதிய முகம் இருந்தாலும் கதைக்காக ஓடிய படம்மற்றும் ஒரு த்ரில்லர் படம் யாவரும் நலம் மாதவன் நடிப்பில் விக்ரம் கே குமார இயக்கத்தில் வந்த படம் சொல்லும் படியான படங்களில் ஒன்று
இப்படம் 13 B என்று ஹிந்தி மொழியில் வந்து பெரும் வெற்றி பெற்றதுநாடோடிகள் சசி குமார் தவிர மற்றபடி சொல்லும் படியான புகழ் பெற்ற நடிகர்கள் இல்லை ,ஆனால் இப்படம் தமிழ் நாட்டை தாண்டி ஒரு தாக்கத்தை உண்டாக்கிய படம் ,ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகி வருவது இதன் சிறந்த கதைக்கு கிடைத்த வெற்றி
சிறந்த இயக்கம் நல்ல கருத்து சிறப்பான இசை எல்லாம் சிறப்பாக அமைந்து பெரும் வெற்றி பெற்ற படம் நாடோடிகள்ரேணிகுண்டா இவர்கள் எல்லாம் நடிகர்களா என கேட்க வைக்கும் வயது ஆனால் படம் பார்த்து வரும் ஒவ்வொருவரின் மனத்திலும் ஒரு சோகம் நிரம்பி விடுவது உண்மை .படம் முழுவதும் வன்முறை குத்து வெட்டு ரத்தம் வன்முறை என்று இருந்தாலும் அதை எல்லாம் மறக்க வைக்கும் திரை கதை சிறந்த் இசை நல்ல ஒளிபதிவு என்று இந்த ஆண்டின் சொல்லும் படியான படங்களில் இதுவும் ஒன்று
பன்னிர் செல்வம் இயக்கம் அந்தோனி எடிட்டிங் சக்தி கேமரா என சிறப்பக அமைந்த படம்


உன்னை போல் ஒருவன் ஹிந்தி மொழியில் இருந்து வந்த படம் ஆனால் அது போல் வராமல் போன படம் நிச்சயம் ஹிந்தி மொழியில் இந்த படம் பார்த்தவர்களுக்கு அது தெரியும் அனுபம் கேர் நஸ்ருதின் ஷா போன்றவர்கள் இப்படத்தில் வாழ்ந்தார்கள் தமிழ் மொழியில் ஒரு நாடகத்தனம் வெளிப்பட்டது ஆனாலும் இது ஒரு வெற்றி படம்


சன் பிக்சர்ஸ் இந்த ஆண்டில் உண்மையான இரண்டு வெற்றி படங்களை கொடுத்தது ஒன்று வெற்றி மற்றும் ஒன்று மாபெரும் வெற்றி
படிக்காதவன் இந்த படம் ஏன் ஓடியது என்றால் யாருக்கும் தெரியாது ஆனால் இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் நகைச்சுவை கலந்த திரை கதை என்றால் அது பெரும் உண்மை


விவேக் இப்படத்தின் ஒரு கதாநாயகன் போல் படத்தின் வெற்றிக்கு உதவினர்அயன் இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் நிச்சயம் அது அயன் மட்டுமே இப்படத்தின் வெற்றிக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை கூட ஒரு காரணம் .தமிழ் சினிமா உலகின் அதே கடத்தல் கொள்ளை கதை ஆனால் அதை கொடுத்த விதம் சூர்யாவின் அலட்டல் இல்லாத நடிப்பு என்று ஒரு கமர்சியல் ஹிட் ஆகா மாறியதுவெண்ணிலா கபடி குழு கிராமிய காதலை கபடியுடன் விளையாடிய் படம் இதுவும் புது முகங்கள் நடித்து கதை என்ற சூப்பர் ஸ்டார் ஒருவருக்காக ஓடிய படம் சுசிந்திரன் இயக்கம் எ ஆர் ரஹ்மான் பட்டறையில் இருந்து வந்த வி செல்வகணேசன் இசை என சொல்லலாம்

கண்டேன் காதலை ஹிந்தி ஜப் வே மெட் ரீமேக் ஆனால் இதுவும் உன்னை போல் ஒருவன் போல் அசலை போல் வராத போலி

கந்த சாமி படத்தை பற்றி சொல்ல ஒன்றும் இல்லை சிறப்பான விஷயம் என்னவென்றால் இப்படத்திற்கு இரண்டு ஆண்டுகள் செய்த விளம்பரம் எதிர்பார்ப்பு ஆகியவற்றை சொல்லலாம் படம் வந்த பின் இதற்க இந்த பில்ட் அப் சொல்ல வைத்தது .
நான்கு வெற்றி படங்களை ஒரே படத்தில் பார்க்க வைத்ததை சொல்லலாம் மற்றபடி காசு கொடுத்த ரசிகனுக்கு ஒரு பெரிய நாமம்

எதிர்பார்ப்பை தந்து ரசிகர்களை ஏமாற்றிய படங்கள் கலைஞர்கள் அடுத்த பதிவில்


இப்படங்களை பத்து ருபாய் கொடுத்து பார்த்து அது குறை இது குறை என சொல்ல என்ன உரிமை இருக்கு என சொல்பர்களுக்கு சொல்லுங்கள் நாம் கொடுக்கும் பத்து ரூபாகுதான்இத்தனை  உழைப்பு என்று

*************************************************************************
இயற்க்கை காப்போம் மரம் வளர்ப்போம் !!!!
*************************************************************************
முடியா விட்டால் செடியாவது வளர்ப்போம் !!!
*************************************************************************
ஊருகோர் மரம் வளர்ப்போர் சங்கம் வைப்போம் !!!
**************************************************************************

மறக்காமல் எனக்கு வோட்டு போடுங்க நல்லவர்களே

Monday, December 21

சிரிக்க மறந்த திரை உலகம் இறுதி பகுதி

தமிழ் மக்களுக்கு ஒரு வந்தனம் இது நாள் வரை நீங்கள் அளித்து வந்த ஆதரவுக்கு மிக்க நன்றி
.

தமிழ் தமிழ் திரை உலகில் நகைச்சுவை படங்கள் வராமல் போனதற்கு முக்கிய காரணம் இன்றைய முக்கிய கதாநாயகர்கள் கூட காரணம்.

விஜய் அஜித் தனுஷ் சிம்பு என்று இவர்களுக்கு ஹீரோ மாஸ் உள்ள படம் தேவை அதற்க்கு இவர்கள் நம்புவது ரஜினி பார்முலா.

ரஜினி கூட எல்லா வித கதா பாத்திரங்கள் செய்த பின்தான் ஆக்சன் கதைக்கே மாறினார்

அவர் ஹிட் கொடுத்த படம் பாஷா கூட அவர்க்கு அமைந்த படம் .

இதை பார்த்து புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதையாக எல்லோரும் ரஜினி போல் ஆகா வேண்டும் என்று ஒரே ஆக்சன் கதையாக எடுத்து ரசிகர்களை முட்டாள் ஆக்கி விடுகின்றனர்

இன்றைய ஹிந்தி திரை உலகின் ஆக்சன் ஹீரோ அக்சய் குமார் கூட தான் பெரிதும் நம்புவது நகைச்சுவை கலந்த படங்களை தான் .

அவரின் வெற்றி படங்கள் கம்பட் இஷ்க் ,சிங் இஸ் கிங் ,என்று அவர் படங்கள் எல்லாம் நகைச்சுவை படங்களாக இருக்கும்
அங்கு புகழ் பெற்ற இயக்குனர்கள் மற்றும் பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் நகைச்சுவை படத்திற்கு முக்கியதுவம் தர காரணம்
முன்னணி நடிகர்கள் அவர்கள் எப்படி பட்ட படத்தில் நடிக்க ரெடி அவர்களுக்கு தேவை நல்ல கதை மட்டுமே.

ஆனால் நம் நாயகர்களோ இன்னும் ரசிகன் என்பவனை சிந்திக்க விடாமல் அவன் அறிவை இன்னும் பத்து வருடம் பின்னோக்கி தள்ளி அவனை பகடை காய் ஆக்குகின்றனர்

இந்த விசயத்தில் மற்றும் ஒரு பெரும் பஞ்சம் நல்ல நகைச்சுவை இயக்குனர்கள் இல்லை . சுந்தர் சி ,என்று ஒரு நல்ல இயக்குனர் இருந்தார் அவர் கூட நடிப்பு என்ற எல்லைக்கு சென்ற பின் இப்போது சொல்லும் படி நல்ல இயக்குனர் இல்லை

கடைசியாக் இதே நிலைய சென்றால் தமிழில் ஒரு காலத்தில் நகைச்சுவை படம் என்று வந்தது என்று சொல்லும் நிலைக்கு தள்ள படலாம்

கடைசியாக இந்த நகைச்சுவை படங்கள் வராமல் போனதற்கு முக்கிய காரணம்
இன்றைய முக்கிய கதாநாயகர்கள்
இயக்குனர்கள்
நகைச்சவை படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்


கடைசியாக இந்த உருப்படாத நாயகர்கள் பின் செல்லும் நாம் எல்லோரும்


ஒரே மாற்ற முடியாத கருத்து நாம் இப்போது வரும் இந்த உருப்படாத நடிகர்கள் நடிக்கும் படத்தை காசு கொடுத்து பார்க்காமல் இருப்பதே
 நகைச்சுவை படம் வருவதற்கு நாம் செய்யும் பெரும் உதவியாக இருக்கும்


 AR ரஹ்மான் இந்தியன் ஆஃப் தே இயர்

இனி ரஹ்மான் இப்படித்தான் சொல்லப்படவேண்டும்  .இனி உலகில்  ஏதும் விருது பாக்கி இருக்கு என்றாள் கொஞ்சம் குறைவுதான் .இவர் இசைக்கு வெல்லும் விருதுக்கு கணக்கே இல்லை

தேசிய விருது தொடங்கி உள்ளூர் முதல் உலக விருது ஆஸ்கர் ,கோல்ட ன் க்ளொப் விருது என்று அவரின் விருது பட்டியலில் மேலும் ஒரு மைல் கல்.


  2009சிஎன்என் .ஐபிஎன்(cnn.ibn)  இந்தியன் ஆஃப் தே இயர் (INDIAN OF THE YEAR) விருதை பொழுது போக்கு பிரிவில் ரஹ்மானுக்கு இந்த விருதை பிரதமர்  மன் மோகன்  சிங் வழங்கினார்

கிராமி விருதுக்கு ரஹ்மான் பெயர் பரிந்துரைக்கக பட்டிருக்கும் இந்த நேரத்தில்

சிஎன்என்.ஐபிஎன்(cnn.ibn) இந்தியன் ஆப் தி இயர் அவரின் உண்மையான உழைப்புக்கு கிடைத்த ஒரு கிரிடம் என்றால் மிகை இல்லை


 இந்த விருதை ரஹ்மான் பிரதமர் மன்மோகன் சிங் இடம் இந்த விருதை பெற்றார்


ஆதாரம் சுட்டி அழுத்தவும்
சி. என் .என் ,ஐ. பி .என்  இந்தியன் ஆப் தி இயர்
  கிராமி விருதுக்கு போட்டிக்கு ரஹ்மான் பெயர்   தேர்ந்தெடுக்க  பட்டிருக்கும்  இந்த நேரத்தில்   இந்த விருது அவரின் அமைதியான் உழைப்புக்கு கிடைக்கும் வைரக்கல்


ரஹ்மான் கிராமி விருது பெற வாழ்த்துக்கள் .
நீங்களும் பின்னுட்டம் மூலம் ரகுமான் கிராமி விருது பெற வாழ்த்து தகவல்கள் தெரிவிக்கவும்

*************************************************************************
இயற்க்கை காப்போம் மரம் வளர்ப்போம் !!!!
*************************************************************************
முடியா விட்டால் செடியாவது வளர்ப்போம் !!!
*************************************************************************
ஊருகோர் மரம் வளர்ப்போர் சங்கம் வைப்போம் !!!
**************************************************************************

மறக்காமல் எனக்கு வோட்டு போடுங்க நல்லவர்களே

Friday, December 18

வேட்டைக்காரன் இன்றைய தலைப்பு செய்தி

வேட்டைக்காரன் இன்றைய தலைப்பு செய்தி அதனால் படத்தை பற்றி
எல்லோரும்  துவைத்து  கிழிய கிழிய காயப்போட்டு விட்டனர்
படம்  பற் றி இனி பேச ஒன்றும் இல்லை

விஜய் ரசிகர்கள் கேட்கலாம் ஏன் விஜய் படத்தை மட்டும் இப்படி சொல்லலாம் என்று 3 கோடி 4 கோடி சம்பளம் வாங்கி நடிக்கும் அவருக்கு கதை தேவை இல்லாமல் இருக்கலாம்

ஆனால் ஒரு சராசரி ரசிகன் கொடுக்கும் 50 ரூபாய் அவனுக்கு பெரியது அவன் கொடுக்கும் பணத்திற்க்கு தான் இத்தனை உழைப்பு.

அந்த பணம் அவனுக்கு வீண் என்று அவன் நினைத்தாள் அது கூட பெரும் தோல்விதான்

விளம்பரம் செய்து ஏமாற்றி அவன பணத்தை வாங்கி படம் வெற்றி என்பது

உண்மையான வெற்றி  இல்லை ,உண்மையான வெற்றி கதைக்காக அவன் படத்தை தேடி வருவதுதான்

இதற்க்கு முன் வந்த வேட்டைக்காரன் பதிவு கீழே சுட்டி அழுத்தவும்
வேட்டைக்காரன் சில எதிர்பார்ப்புகள்

*************************************************************************
இயற்க்கை காப்போம் மரம் வளர்ப்போம் !!!!
*************************************************************************
முடியா விட்டால் செடியாவது வளர்ப்போம் !!!
*************************************************************************
ஊருகோர் மரம் வளர்ப்போர் சங்கம் வைப்போம் !!!
**************************************************************************

Tuesday, December 15

புது வடிவில் தினகரன் .காம்

இது வரை கொஞ்சம் சுமாரான வசதிகளுடன் வந்த தினகரன் .காம் இப்போது முற்றிலும் புது வடிவில் தமிழ் பான்ட் டவுன்லோட் செய்யாமல் விரைவில் படிக்கும் வசதியுடன் வந்து உள்ளது

மற்ற இதழ்கள் படிக்க சந்தா செலுத்த வேண்டும் ஆனால் தினகரன் .காம் இலவசமாக குங்குமம்  ,வண்ணதிரை ,முத்தாரம் ,குங்கும  சிமிழ் , இதழ்களை இலவசமாக அதுவும்  ஈ  புக் வடிவில் .  பிரிண்ட் புத்தகம்  படிக்கும்  உணர்வை தருகிறது 
சினிமா செய்திகளுக்கு வண்ணத்திரை ,பொது அறிவு அறிவியல் அரசியல் செய்திகளுக்கு முத்தாரம் ,பொது செய்திகளுக்கு குங்குமம் ,புதினம் படிக்க  குங்கும சிமிழ் என்று சிறப்பான வசதிகள் மட்டும் இல்லாமல்
ஈ பேப்பர் தினகரன் ,தமிழ் முரசு
மற்றும் விளையாட்டு ,சமையல் ,கார் வாங்க  விற்க ,அரட்டை ,மருத்துவம் என்று எல்லா வசதிகளும் இலவசமாக அதே நேரத்தில் சிறப்பான நேர்த்தியான வடிவில் உள்ளது ஒரு முறை படித்து பாருங்கள்
கீழே உள்ள தினகரன் சுட்டியை அழுத்தவும்


தினகரன்

*************************************************************************
இயற்க்கை காப்போம் மரம் வளர்ப்போம் !!!!
*************************************************************************
முடியா விட்டால் செடியாவது வளர்ப்போம் !!!
*************************************************************************
ஊருகோர் மரம் வளர்ப்போர் சங்கம் வைப்போம் !!!
**************************************************************************

Saturday, December 12

சிரிக்க மறந்த திரையுலகம் 4கலவர காலம் இதுதான் இப்போதைய தமிழ் திரைஉலகின் போக்காக இருக்கிறது


இது நிச்சயம் தமிழ் ரசிகர்களின் தவறு   இல்லை  தமிழ் ரசிகர்களை ஏமாற்றும் ஒரு கலை என்று சொல்லலாம்.


ஏன் ஒரு காலத்தில் சண்டை படங்கள் உடம்பை சூடேற்றும் வெட்டி பந்தா படங்கள் பார்த்த நம் ரசிகர்கள் அதற்க்கு முற்று புள்ளி வைத்ததிற்கு எடுத்துகாட்டு  குருவி ,தினா, தோரணை ,ஆஞ்சநேயா ,வில்லு ,என்று பல படங்களை சொல்லலாம்.

 இது போன்று படங்கள் ஒரே கருவை மட்டுமே கொண்டு இருக்கும் அது ரசிகனை  முட்டாள் ஆக்கு ,போட்டி நடிகரை திட்டு ,இதனால் இரு நண்பர்களுக்குள் சண்டை இருக்குமே தவிர வேறு ஒன்றும் இருக்காது .


இது போன்ற  கதைகளுக்கு இப்போது ஒரு நபரே போதும் அவர் கூட தன் படங்களில் போட்டி நடிகரை திட்டியதில்லை .அவர் படங்கள் அது அவருக்கே உரிய தனி தன்மை

அந்த சிறந்த மனிதர் ரஜினி காந்த மட்டுமே அவரை பார்த்து அவரை போன்று நடிப்பது
 புலியை பார்த்து பூனை சுடு போட்டுக்கொண்ட கதை தான்

நகைச்சுவை படம் வராமல் போனதிற்கு மற்றும் ஒரு காரணம் புது இயக்குனர்கள்.   ஏன் என்றால்  நகைச்சவை படம் எடுப்பது மிகவும் கஷ்டமான வேலை என்று அவர்கள் நினைத்து இருக்கலாம்.
ஆனால் அது கூட உண்மைதான் சோக படத்தை விட ,சண்டை படத்தை விட நகைச்சுவை படம் எடுத்து  அனைவரையும்   சிரிக்க வைப்பது மிகவும் கஷ்டமான  வேலைதான்
ஆனால் இது கூட காரணம் என்றால் இல்லை .தமிழ் ரசிகர்கள் நல்ல படத்தை ரசிப்பார்கள்.

இப்படியே  போனால் ஒரு காலத்தில் நகைச்சுவை படம் ஒன்று இருந்தது  என்று சொல்லும் நிலைக்கு தமிழ் திரை உலகம் ஆளாகி விடுமோ என்று பயமாக இருக்கிறது

ஏன் ஹிந்தி  திரை உலகில் இன்றும் நகைச்சவை படங்கள்  வருகிறது வெற்றி பெறுகிறது.


பிரியதர்சன் ,டேவிட் தவான் போன்ற இயக்குனர்களும் சரி ,அக்சய் குமார் ,ஷாருக் கான் .அமீர் கான் போன்ற நடிகர்களும் நகைச்சுவை படத்திற்கு தரும் முக்கியத்தும் ஏன்  நம் தமிழ் நடிகர்கள் தருவதில்லை அதற்க்கு காரணம் என்ன?

போட்டி நடிகரை திட்ட வாய்ப்பு கிடைக்காது அதனாலா ?

இந்த விசயத்தில் ரஜினி கமல்  சத்யராஜ் பற்றி பேச தேவை இல்லை அவர்கள் நகைச்சவை படத்திற்கு ஆற்றிய
பங்களிப்பு சிறப்பானது

வந்த ஒரு சில நகைச்சுவை  படங்களும் சரியாக ஓடவில்லை .அந்த படம் தந்த விதம் கூட காரணம் ஆகா இருக்கலாம் அவை , பொய் சொல்ல போறோம் ,திரு திரு துரு துரு போன்றவை

இப்போது இறுக்கும் இந்த வன்முறை பட கலாச்சாரம் மாற என்ன வழி ?இயற்க்கை காப்போம் மரம் வளர்ப்போம் !!!!

முடியா விட்டால் செடியாவது வளர்ப்போம் !!!

ஊருகோர் மரம் வளர்ப்போர் சங்கம் வைப்போம் !!!

Friday, December 11

துபாய்ல மழை

கொஞ்ச நாலா துபாய்ல அடிச்சா வெயில் குறைஞ்சு இப்போ தான்  குளிர் அடிக்க ஆரம்பித்ததுஇன்று காலை முதல் மழை வரும் போன்று இருந்தது இருந்ததுவேலைக்கு கிளம்பும்முன் மழை வரும் என்றும் நினைக்க வில்லை


வெள்ளி கிழமை ஜும்மா தொழுகை பின் ஆரம்பித்த மழை மாலை ஆறு மணி வரை நீடித்தது


மழை அதிகம் இல்லை சிறு சிறு தூவானம் தான் இருந்தாலும் இந்த குளிர் காலத்தின் முதல் மழை அல்லவா

இது நம்ம ஊர் மழை 
என்னதான் இருந்தாலும் நம் ஊரின் மழைக்கு ஈடு உண்டா ?

இணைய தள சிறந்த நடிகர் வாக்கெடுப்பில் விஜய் அஜித் சரிசம  அளவில்  தொடர்ந்து முன்னணி
உங்கள் வாக்கை மறக்காமல் இடுங்கள்

Tuesday, December 8

ஐம்பதாவது பதிவு உருப்படி எத்தனை?எனக்கும் ஒரு ப்ளாக் எழுத வேண்டும் என்று ரொம்ப நாளா ஆசை.சரி ஆசை பட்டா போதுமா ?

நாம் எழுதுவாதை யார் படிப்பார் என்று எனக்குள் ஓர் எண்ணம் ?

மேலும் எந்த பெயரில் ஆரம்பிப்பது என்ற எண்ணத்தில் இருக்கும் போது ஏன் நம் ஊர் பெயரில் எழுத கூடாது ?என்ற எண்ணத்தில் ஏன் ஊர் பெயரில் அரும்பாவூர் ப்ளாக் ஆரம்பித்து .
ஒன்றும் எழுதாமல் நம் எழுதவதை யார் படிப்பார் என்ற எண்ணத்தில்
ப்ளாக் தொடங்கி ஒரு வருடம் மேல் ஒன்றும் எழுதாமல்

அதை அப்படியே போட்டு வைத்தேன்


ஒரு நாள் ஏதோ எண்ணத்தில் எழுத ஆரம்பித்தேன் எனக்கு பிடித்த எ ஆர் ரஹ்மான் இசை அமைத்த couples retreat படத்தில் எ ஆர் ரஹ்மான் இசை பற்றி செப்டம்பர் 27 எழுதினேன்  !?


இன்று ஐம்பதாவது பதிவு எழுத உட்காரும் போது எனக்கே ஆச்சர்யமாக இருக்கு இவை எல்லாம் நானா எழுதினேன் என்று

எனக்கு தமிளிஷ் தமிழ் 10 ஆகியவற்றில் எனக்கு வோட்டு போட்டு என்னை முன்னணி ஆக்கிய கண்ணுக்கு தெரியாத அறிமுகம் இல்லாத நண்பர்களுக்கு என் முதல் நன்றி !!!


உங்கள் ஆதரவு வாக்கு இல்லை என்றால் என் பதிவுகளை நானே படிக்க வேண்டியதான்
எனக்கு ஆதரவு அளித்த நெஞ்சின் அடியில் வெற்றி ,ரீகஸ் ,கார்த்திக் என் ,வெண்ணிற இரவுகள் ,தினேஷ் ,
அனைவருக்கும் நன்றி

என் எழுதில் உள்ள குறைகளை சொன்னன் மிஸ்டர்  சி , ஜர்னி of  லைப் ஆனந்த் க்கு நன்றி

அரும்பாவூர் ப்ளாக் சார்பாக நடைபெற்ற வாக்கெடுப்புக்கு ஆதரவு அளித்ததிற்கு மிக்க நன்றி !!!!!


முக்கள் வாசி வாக்கெடுப்பு தானே என்று நீங்கள் கேட்பது எனக்கு தெரிகிறது ?
இனி வாக்கெடுப்பு இருக்காது அதற்க்கு நான் பத்து சதம் உத்ரவாதம் !


மீண்டும் ஒரு முறை ஆதரவு அளித்த உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்லி இனி வரும் காலங்களில் நிச்சயம் இன்னும் நல்ல எழுதுவேன் என்ற நம்பிக்கையில்

உங்கள் அரும்பாவூர் ப்ளாக் ஸ்பாட்

வீடிற்கு ஒரு மரம் வளர்ப்போம்
இல்லை என்றல் ஒரு செடியாவது வளர்ப்போம்
இயற்க்கை காப்போம்

மிகவும் அழகிய முறையில் தன வீட்டில் தோட்டம் அமைத்து அதை சிறப்பாக அனைவருக்கும் காட்டிய
நைஜீரியா ராகவனுக்கு ஒரு  சொட்டு !!!!அவரை போல் நாமும் நம் வீட்டில் மரம் வேண்ட ஒரு செடி கொடியாவது வைத்து இயற்கைக்கு சின்ன உதவி செய்யலாமே