Sunday, January 30

பிப்ரவரி மாத படங்களும் @ கலக்கல் சினி செய்திகளும்யுத்தம் செய்
  பிப்ரவரி மாத படங்களில் மூன்று படங்கள் வருகிறது இதில் வெற்றி பட கம்பனி மற்றும் தமிழ் திரை உலகில் சொல்லும்படியான நிறுவனங்களில் ஒன்றான கல்பாத்தி எஸ் அகோரம் அவர்களின் தயாரிப்பில்
தமிழ் திரை உலகில் சொல்லும்படியான இயக்குனர்    மிஸ்கின் மற்றும் சேரன் முதலாமவர் இயக்கத்தில் இரண்டாமவர் நடிப்பில் ஒரு ஆக்சன் படமாக வருகிறது யுத்தம் செய் படத்தின் விளம்பரங்கள் பார்க்கும் போது இந்த படத்திற்கு ஒரு  எதிர்பார்ப்பு உள்ளது பார்க்கலாம் வெற்றி நிலவரம் எப்படி என்று
(
ரீமேக் படமாக மற்றும் சுட்ட கதையாக இல்லாமல் உண்மையான வெற்றி படமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் )
பிப்ரவரி 4 முதல்  திரை அரங்கில் யுத்தம்   செய்ய    வரும் படம்

 
தூங்கா  நகரம் 
 

  
மதுரை பீவர் தமிழ் சினிமா  பீல்டை இந்த அளவிற்கு பாடு படுத்துகிறது மீண்டும் ஒரு மதுரை சார்ந்த கதை மதுரை தயாரிப்பாளர் (அதான் தயாநிதி அழகிரி )
 
தமிழ் நாட்டில் 24  மணி நேரமும் சுறு சுறுப்பாக இருக்கும் நகரம் மதுரை அதை கதை கருவாக கொண்ட படமிது
களவாணி ஹிட் படத்திற்கு பின்பு விமல் நடிக்கும் படம் இந்த படமும் ஹிட் ஆனால் தமிழ் சினிமாவில் அதிக அளவில் சம்பளம் கேட்டும் நடிகர் தயார்

 
இந்த படம் வரும் தேதி பிப்ரவரி


கோ  
 

   
தமிழ் சினிமாவில் ப்ளாக் பஸ்டர் படம் அயன் கொடுத்த பின்பு வரும் படம் சிம்பு முதலில் நடிப்பதாக இருந்து பின்பு ஜீவா கையில் சென்ற படம்
  
பத்திரிக்கை  புகைப்பட கலைஞர் கதை நிச்சயம் இந்த படம் ஹிட் ஆகும் என வாழ்த்துவோம்
படத்தில் சிறப்பு விஷயம் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்கள் ஒரு காட்சியில்  வருகிறார்  (ஹாரிஸ் ரசிகர்களுக்கு சந்தோசமான செய்தி)
இந்த் படத்தின் பாடல்கள் ஏற்கனவே சூப்பர் ஹிட் ஆகி ஒவ்வொரு தமிழ்   ரசிகர்களை கவரும் பாடல்கள் ஹாரிஸ் மீண்டும் ராக் திஸ் ஆல்பம்  (கிங் ஆப் ஆல்பம் பாட்டு "ஏதோ எண்ணம் திரளது") 
பாடல்கள் பற்றி தனி பதிவு விரைவில்
 
ஒரு படத்தின் வெற்றிக்கு பாடல்கள் கூட மிக முக்கியம் அந்த வகையில்   இந்த படத்தின் பாடல்கள் நூறு சதம் இந்த் படத்தின் வெற்றிக்கு உதவும்
பிப்ரவரி மாதம்   வரும் என தெரிகிறது ஆனால் தேதி மாற கூட வாய்ப்பு உள்ளது

கலக்கல் சினி மினி :
       
ரஜினி அவர்களின் எந்திரன் இந்தியா மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் பட்டை கிளப்பியது தெரிந்த செய்தி இப்போ இந்த படம் ஆர்டிக் பிரதேசத்தில் திரம்சோ உலக பட விழாவில்  திரையிடப்படுகிறது
 
அதாவது முதல் இந்திய படம் இந்த எந்திரன் இந்த உலக பட விழாவில்

ரஜினியின் ராணா :
              
இந்திய அளவில் வசூல் சாதனை செய்ய அடுத்த ஆட்டம் ஆட தயாராகிவிட்டார் இந்தியாவின் ஓன் அண்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார் ரஜினி
      
இதில் எனக்கு சந்தோஷம் தரும் செய்தி ரஹ்மான் மீண்டும் இசை
(
ரஹ்மான் சார் இந்த் ஆண்டு முழுவதும் திரைப்படங்களுக்கு இசை அமைக்க மாட்டேன் குடும்பத்துடன் பொழுது  கழிக்க போகிறேன் என சொல்லி விட்டு இப்போ மும்பை மன்கீஸ் ,சென்னையில் ஒரு மழைகாலம் ,இப்போ ராணா அப்போ நீங்க சொன்ன அந்த விஷயம் பொய்யா?)
3 இடியட்ஸ் படத்தில்  சூர்யா இல்லை 
   மிகவும் நல்ல  செய்தி சூர்யா ரசிகர்களுக்கு  
                      சூர்யா உங்களிடம் புதுமையான கதைகள் மட்டுமே எதிர்பார்க்கிறோம் யாரோ ஒருவர் இயக்கி நிச்சயம் ஹிட் ஆகும் என்ற படத்தில் நடித்து மீண்டும் ஹிட் கொடுப்பதில் என்ன த்ரில் இருக்கு
தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்கள் எல்லாம் புது கதையில் நடிக்க பயந்து ஏற்கனவே அடுத்தவன் ஹிட் கொடுத்த படத்தில் நடித்து ஹிட் கொடுக்கும் காலத்தில் நீங்களும் இது போல செய்ய வேணாம் உங்களிடம் புதுமையான கதைகள் உள்ள படங்கள் எதிர்பார்க்கிறோம் ஏழாம் அறிவு மாற்றான் அயன்  போல தமிழ் சினிமாவில் திறமையுள்ள கலைஞர்களில் நீங்களும் ஒருவர் ரீமேக் படங்கள் நடித்து உங்கள் தரத்தை குறைத்து கொள்ள வேணாம் (தமிழ் திரை உலகின் தரமும் சேர்த்து )

AJITH BILLA 2
   இனிமேல் சினிமா மட்டும் என் குறிக்கோள் என சொல்லிய அஜித் மங்காத்தா படபிடிப்பு போகும் வேலையில் அடுத்த ஆட்டத்திற்கு தயாராகிவிட்டார்  பில்லா 2 இந்த படத்திற்கு இந்தியாவில் யாரும் பயன்படுத்தாத கேமெரா  பயன்படும் என தவகல் வருகிறது படம் எப்படி இருக்கும் என பார்க்கலாம்

   
இப்போ இருக்கும் நடிகர்கள் எல்லாம் ஆந்திராவில் மலையாளத்தில் என்த  படம் ஹிட் ஆகிறது என்று பார்பதே முக்கிய வேலையாக உள்ளது (ரிஸ்க் எடுக்க இப்போ யாரும் விரும்பவதில்லை அவர்களுக்கு தேவை எப்படியும் வெற்றி மட்டுமே )
  
இப்படியே போனா ரீமேக் படங்களின் விலையே பெரிய  அளவில் இருக்கும்


           
தமிழ் வளர்த்தோம் தமிழர்களை  அழித்து
 
என்ன கொடுமை சார் இது தமிழ் வளர்ப்பதை விட தமிழர்கள் வளர யோசியுங்கள்
கடல் கடந்து வாழும் தமிழர்கள் விரும்பவது தன் தாய் கூட்டில் வாழ தான்
(
அந்நிய நாட்டில்  தங்கத்திலே வீடு  கொடுத்தலும் கூட )
ரீமேக் படங்கள் பற்றி நான் முன்பு எழுதிய பதிவை படிக்க இதை அழுத்தவும்

    
இந்த் பதிவு உங்களுக்குக் பிடித்து இருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும் பேஸ்புக் மூலம் உங்கள் நண்பர்களுக்கு சொல்லவும்

                
மறக்காமல் வாக்களிக்கவும்
                             :
எல்லாம் தேர்தல் நேரம் வேற வழி:

  
 

30 comments:

 1. தன்னைத் தேடி வந்த வாய்ப்பு என்பதால் சூர்யா ரொம்பவே கிள்ளுக்கீரையாக நினைத்துவிட்டார் போலிருக்கிறது இயக்குநர் ஷங்கரை. ஏகத்துக்கும் கண்டிஷன்கள் போட ஆரம்பித்தார். தெலுங்கிலும் நானே ஹீரோவாக நடிப்பேன் என்று முதல் கண்டிஷன் போட்டார். சரி பரவாயில்லை என்று தயாரிப்பாளர் ஒப்புக் கொண்டதால், ஷங்கர் மவுனம் காத்தார்.
  அடுத்து, இந்தப் படத்துக்கு சம்பளமாக ரூ 8 கோடியும், தெலுங்கு விநியோக உரிமையில் 50 சதவீதமும் கேட்டாராம் சூர்யா. ஆடிப் போனார்கள் தயாரிப்பாளர்கள்.
  அடுத்து அவர் வைத்த ஒரு மெகா கண்டிஷன்… மூன்று மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். அதாவது சூர்யா ஏழாம் அறிவு, மாற்றான் படங்களை முடித்துவிட்டு வரும் வரை ஷங்கர் காத்திருக்க வேண்டுமாம்!
  அதற்கு மேல் பொறுமை போயே போச்… ‘

  இதனால தான் தூக்கினனாக....... சங்கர் போன்ற ஜாம்பவான்களை உதாசீனபடுத்தினா இவனை யார் மதிப்பா

  ReplyDelete
 2. இது என்னடான சிறுத்தை என்ற தெலுங்கு காரம் மசாலா ரீமேக் தந்துவிட்டு
  தனது சம்பளத்தினை 15 கோடியாக்கி யிருக்கிறார் தம்பி கார்த்தி

  தல அஜிதிட்க்கு 10 கோடிதான் சம்பளம்

  ReplyDelete
 3. நீங்க தோல்வி கொடுத்தாலும் விமர்சிப்பீங்க ரீமேக்கில் வெற்றி கொடுத்தாலும் விமர்சிகீர்களே நண்பா....... இப்ப சில பேர் ஆங்கில படத்தினை காப்பி செய்து தமது நேரடி படம் என்கிறார்கள் அதுக்கு என்ன செய்வீங்க எத்தினை படங்கள் அப்படி வந்துருக்கு தெரியுமா இப்ப கூட 7 ம் அறிவு கூட ஹாலி வூட் காப்பி தான் என்கிறார்கள் நல்ல காலம் எந்திரன் இதுவரைக்கும் அப்பிடி இல்லை

  ReplyDelete
 4. தல அஜித் : ரசிகர்களை மதிக்காதவன்
  விஜய் : இப்பதான் திருந்தி நல்ல படங்களில் நடிக்கிறார்

  சூர்யா: மூன்று நாலு படம் ஹிட்டனதும் தலைக்கணம் கூடி விட்டது......ஐஸ் வைப்பவர்

  ஒரு சாம்பிள் பிட்டு.....
  விஜய் டிவியின் "விஜய் அவார்ட்ஸ்" இல் சூர்யா தான் கமல் ரசிகன் என கூறி கமல் விட்டு கொடுத்த சிறந்த நடிகர் விருதை கமல் கையால் வாங்கினர் பின்னர் ஆடுகளம் இசை வெளியீட்டில் தான் தனுஷ் ரசிகர் என்று கூறினார்... இப்படி மேடையில் இருபவருக்கு ஐஸ் வைப்பதாக கூறி பற்சோந்தியாக மாறக்கூடாது

  தனுஷ்: ஏதோ பண்ணுறார்
  சிம்பு: இவனை ஒருத்தருக்கும் பிடிக்காது
  ரஜினி: சுயநலம்..... ரசிகர் எனும் கூட்டத்துக்காக படம் நடிப்பவர்
  கமல்: புதுசா செயிறார் பட் ஒன்னும் வேர்க் ஒவ்ட் ஆகல
  கார்த்தி: அண்ணன் வழி

  இதுல யார் சிறந்தவர் நீங்களே சொல்லுங்க

  ReplyDelete
 5. /////சூர்யா உங்களிடம் புதுமையான கதைகள் மட்டுமே எதிர்பார்க்கிறோம் யாரோ ஒருவர் இயக்கி நிச்சயம் ஹிட் ஆகும் என்ற படத்தில் நடித்து மீண்டும் ஹிட் கொடுப்பதில் என்ன த்ரில் இருக்கு/////

  அப்படினா உத்தமபுத்திரன் , வில்லு போன்ற சில ரீமேக் படங்கள் அவ்வளவாக ஓடவில்லையே

  ReplyDelete
 6. என்னை பொருத்தவரை ரீமேக் படங்கள் வெற்றி அடைவது 70% தான்

  ReplyDelete
 7. நண்பரே நீங்கள் போட்ட "பொங்கல் ஜல்லிக்கட்டு ஜெயிக்க போகும் காளை எது?" என்ற கேள்விக்கு என்ர பதில்
  1.காவலன்>2.ஆடுகளம் >3.சிறுத்தை

  ReplyDelete
 8. நீங்க எவ்வளவு வேணா சொல்லுங்க நாங்க அப்படித்தான் என்பது போல் ஐபா விவகாரத்தில் விவேக் ஓபராய்க்கு எதிராக போராட்டம் வெடித்த போது இலங்கை விவகாரம் ஒரு செத்து போன விஷயம் என்று தன்னுடைய “நிஜ” த்தை மக்களுக்கு சொன்னவர் நிஜ நடிகர் சூர்யா. இவரின் வார்த்தைகள் தமிழர்களையும் உணர்வாளர்களையும் எவ்வளவு காயப்படுத்தி இருக்கும் என்பதை இவர் அறிய மாட்டார், அது அவருக்கு தேவையும் இல்லை, இவருக்கு தேவையானதெல்லாம் தமிழர்களின் பாக்கெட்டில் இருக்கும் பணம் மட்டுமே. அதை அவரின் சமீபத்திய செயல்பாடுகள் நமக்கு பட்டவர்த்தமாகவே வெளிகாட்டி வருகிறது.

  தமிழ் சினிமாவில் சிவாஜிக்கு பிறகு பெரிய ஓபனிங் படம் கொடுத்தவர் கார்த்தி, ஆனால் இவருக்கு இவ்ளோ பெரிய ஓப்பனிங்க் கொடுத்த அமீரை இவர்கள் பணத்திற்காக கோர்ட்க்கு நடையாய் நடக்க வைப்பது இவர்களின் நன்றிக்கு ஒரு எடுத்துக்காட்டு.

  நிஜ வாழ்க்கையிலும் மீடியாக்களில் நல்ல நடிகராக நடித்த அவரின் முகமூடி கிழிந்துவிட்டது என்று ஊடகவியாளர் மத்தியில் கருத்து பலமாக அடிப்படுகிறது. தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கும் நடிகராக சூர்யா மாறிவிட்டார். அகரம் பவுண்டேசன் என்று ஆரம்பித்தார் அதன் செயல்பாடுகள் என்று பார்த்தால் பெரிதாக ஒன்றுமில்லை என்றும் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.  கம்யூட்டர் டேபிள் வாங்கியது, மவுஸ் வாங்கியது என்ற அளவிலேயே அகரம் செயல்பாடுகள் இருக்கிறதாகஅங்கு பணிபுரியும் வாலன்டரியர் ஒருவர் தெரிவித்த்தார். அதேவேளையில் நான்கு வருடங்களாக சூர்யா வருமானவரி கட்டாமல் டிமிக்கி கொடுத்தார் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும். உறுதியாக இது நன்றாக நடிகர் சிவகுமாருக்கும் தெரிந்து இருக்கும்.

  இந்நிலையில் தொடர்ந்து பணத்துக்காக ஈழ மக்களை காயப்படுத்திக்கொண்டு வரும் சிவகுமார குடும்பத்திலிருந்து வந்த கார்த்தி ஏர்டெல்லின் புதிய அம்பாசிடராக பொறுப்பேற்றுக் கொண்டது ஈழ ஆதரவாளர்கள் மத்தியில் மேலும்மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

  ReplyDelete
 9. எனக்கு பிடித்த நடிகர் தல அஜித் ஆனால் ரசிகர்களை மதிக்க தெரியாதவர்... இவருக்கு அரசியல் பிடிக்காது என்பதுதான் எனக்கு பிடித்திருக்கிறது

  விஜய் ஓரளவுக்கு பிடிக்கும் தற்போது கூட தனக்கு பாலபிஷேகம் செய்யாதீங்க இப்படி கட்அவுட் க்கு ஊதுற பாலை பால்பக்கெட் வாங்க கூட முடியாத மக்களுக்கு கொடுங்க அப்ப சந்தோஷ படுறேன் என்றார்" இதை நான் வரவேற்கிறேன் ஆனால் ஹீரோசிம் படத்தில் நடிக்காமல் விட்டால் அடுத்த ரஜினி இவர்தான்

  சூர்யா நல்ல படங்களை கொடுத்தாலும் (ரத்தசரித்திரம்???????) தலைக்கனம் கூடாது ஆணவதினை அடக்கினால் முன்னுக்கு வரலாம்

  இப்போதைக்கு இவர்கள் தான் முன்னணி

  ReplyDelete
 10. வில்லு ரீமேக் படம் இல்லை நேரிடை படம் வேண்டும் என்றால் சோல்ஜர் படத்தின் திருட்டு கதை என கூட சொல்லலாம்

  உத்தம் புத்திரன் தோல்வி படம் என்று யார் சொன்ன விநியோகஸ்தர் மற்றும் திரை அரங்க உரிமையாளருக்கு லாபம் கொடுத்த படம் தான்

  இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் தமிழ் திரை உலகம் நிச்சயம் யாரும் உதவவில்லை என்று சொல்லலாம்
  அப்படி என்றால் காவலன் படத்தில் அசின் தான் வேணும் என்று சொல்ல காரணம் என்ன ?
  இலங்கை தமிழர்கள் அழிவில் அதிகம் சந்தோஷம் அடைவது மலையாள நாயிகள் தான் நான் இங்கு கல்ப் நாடுகளில் பார்த்தவரை விடுதலை புலிகள் தோல்வி அடைய அடைய அதிகம் சந்தோஷம் அடைந்த்தது மலையாள கொலையாளிகள் தான்
  அவர்கள் தான் தமிழ் திரை உலகில் ஆதிக்கம் அதிகம் இதற்க்கு என்ன செய்ய முடியும்
  சினிமா என்பது நாம் ஜாலியாக பார்க்க மட்டுமே நிஜத்தில் அவர்களை எப்போதும் ஹீரோவாக பார்பதில்லை
  :ஒரு வகையில் ரஜினி எனக்கு ரொம்ப பிடிக்கும் தமிழ் திரை உலகிலே திரை அரங்க உரிமையாளருக்கு லாபம் கொடுத்தவர் ரஜினி மட்டுமே அவர் ஒரு படம் தோல்வி அடைந்த உடன் நஷ்ட ஈடு கொடுத்த செயல் நிச்சயம் அவர் ரியல் ஹீரோ கூட

  ReplyDelete
 11. ரஜினி அவர்களை எப்படி நீங்க சுயநலம் எனலாம்
  அவர் எப்போதும் ஒரே மாதிரி தான் இருக்கார்
  அதனால்தான் இந்தியாவை தாண்டி ரஜினி அவர்கள் இன்னும் முதல் இடத்தில் இருக்கார் இந்த வயதிலும் அவர் நடிக்கும் ஆர்வம நடிப்பிற்கு அவர் செய்யும் பயிற்சிகள் வாவ் !
  ரசிகர்களை அவர் எப்போதும் தன் சுய லாபத்திற்கு பயன்படுத்த வில்லை
  அவர் எப்போதும் அரசியலுக்கு வருவேன் என சொல்ல வில்லை
  ஒரு ருபாய் நோட்டு புக் கொடுத்தாலும் விளம்பரம் செய்து அதன் மூலம் ரசிகர்களை படம் பார்க்க வைக்க சிலர் செய்யும் சில்லறை தனங்களை ரஜினி என்றும் செய்ய வில்லை அவருடன் எந்த நடிகரையும் ஒப்பிட வேணாம் இமயமலை உடன் பரங்கி மலை ஒப்பிடுவது போல உள்ளது உங்கள் கருத்து
  ஒரே வார்த்தையில் சொன்னால் தன் படம் ஓட என்று அவர் ரசிகர்களை அவர் பயன்படுத்த வில்லை இது அவரின் உண்மையான் உழைப்பால் அவர் சேர்த்த சொத்து அவர்களை வைத்து என்றும் அவர் அரசியல் செய்ய வில்லை
  ரஜினி உடன் வேறு எந்த நடிகரையும் ஒப்பிட வேணாம்

  ReplyDelete
 12. அரசியலால் விஜயயை பிடிக்கவில்லை ஆனால் நடிப்பில் தல அஜிதிக்கு பின் விஜய்தான் பிடிக்கும் பின் சூர்யா

  ReplyDelete
 13. திரையுலகினர் பலர் இப்படித்தான் இருக்கிறார்கள். பேட்டி, பிரஸ் மீட், மேடைப் பேச்சு, கடிதம் இவைகளில் காசா...? பணமா...? என்று கண்டதையும் உளறி வைக்க வேண்டியது. இது ரஜினிக்கு மட்டுமல்ல, மிஷ்கின், ஆர்யா மற்றும் ஏடாகூடமாக எதையாவது பேசி மாட்டிக்கொள்ளும் இன்னபிற திரையுலகினருக்கும் பொருந்தும்.

  ReplyDelete
 14. மேடைப்பேச்சுக்களில் குறிப்பிட்ட ஒரு பிரிவினரை திருப்திபடுத்தும் நோக்கில் மற்ற பிரிவினரை தாழ்வாக பேசிவிடுகின்றனர். இதுவே பெரும்பாலான பிரச்சனைகளுக்கு மூலக்காரணம். உதாரணத்திற்கு, மலையாள சினிமாவை உயர்வாக பேச நினைத்த ஆர்யா தமிழ் சினிமாவை இழிவாக பேசியதை சொல்லலாம். இது இன்று நேற்றல்ல எம்.ஆர்.ராதா காலம் தொட்டே நடந்து வருகிறது. மலேசியா மற்றும் பிற மேலை நாடுகளை உயர்த்திப்பேசும் நோக்கில் எம்.ஆர்.ராதா இந்தியாவையும், தமிழகத்தையும் அவரது படங்களிலும் மேடைப்பேச்சுகளிலும் ஏகத்திற்கு மட்டம் தட்டி பேசுவார். இன்றளவும் விவேக் அவரது படங்களில் அதையே செய்து வருகிறார். இனியாவது திரையுலகினர் தங்களது படங்களிலும் மேடைப்பேச்சுக்களிலும் சொற்களை கவனமாக கையாண்டால் நல்லது.

  சூர்யாவுக்கும் தான்

  ReplyDelete
 15. தமிழ் சினிமாவில் எம்.ஜி.அர் தவிர எவனும் --------==முழுமையாக== நல்லவன் கிடையாது

  ReplyDelete
 16. இல்லை பிரபுதேவ இயக்கிய போக்கிரி,வில்லு இரண்டும் ரீமேக் தான்

  ReplyDelete
 17. வில்லு திருட்டு கதை என்றால் ஏன் கேஸ் போடல

  ReplyDelete
 18. @ ஹாய் அரும்பாவூர்


  //ரஜினி அவர்களை எப்படி நீங்க சுயநலம் எனலாம் அவர் எப்போதும் ஒரே மாதிரி தான் இருக்கார் அதனால்தான் இந்தியாவை தாண்டி ரஜினி அவர்கள் இன்னும் முதல் இடத்தில் இருக்கார் இந்த வயதிலும் அவர் நடிக்கும் ஆர்வம நடிப்பிற்கு அவர் செய்யும் பயிற்சிகள் வாவ் ! ரசிகர்களை அவர் எப்போதும் தன் சுய லாபத்திற்கு பயன்படுத்த வில்லை அவர் எப்போதும் அரசியலுக்கு வருவேன் என சொல்ல வில்லை ஒரு ருபாய் நோட்டு புக் கொடுத்தாலும் விளம்பரம் செய்து அதன் மூலம் ரசிகர்களை படம் பார்க்க வைக்க சிலர் செய்யும் சில்லறை தனங்களை ரஜினி என்றும் செய்ய வில்லை அவருடன் எந்த நடிகரையும் ஒப்பிட வேணாம் இமயமலை உடன் பரங்கி மலை ஒப்பிடுவது

  ReplyDelete
 19. அட இங்கேயுமா... நான் இந்த வெளாட்டுக்கு வரலை... கோ படம் என்னைக்கு ரிலீஸ்னு மட்டும் சொல்லுங்க... நான் கிளம்புறேன்...

  ReplyDelete
 20. ///கம்யூட்டர் டேபிள் வாங்கியது, மவுஸ் வாங்கியது என்ற அளவிலேயே அகரம் செயல்பாடுகள் இருக்கிறதாகஅங்கு பணிபுரியும் வாலன்டரியர் ஒருவர் தெரிவித்த்தார்///

  அகரம் அமைப்பை கொஞ்சம் ஆராய்ந்து பதிவிடுவது நல்லது. என் அண்ணனின் மகன் இந்த அகரம் ஃபவுண்டேசனின் கீழ் இன்சினியரிங் படித்து வருகிறார். அண்ணன் குடும்பத்திற்கு கல்லூரி செலவு இப்பொழுது வெகுவாக குறைந்துவிட்டது. அதாவது ரொம்பவும் குறைந்துவிட்டது. தமிழ்நாட்டில் ஒருமூலையில் இருக்கும் கிராமத்தில்.... இன்னும் எத்தனை பேர் அகரத்தில் படிக்கிறார்களோ தெரியாது........... அந்தவிஷயத்தில் நடிகர் சூர்யாவை பெரிதாக மதிக்கிறேன்.

  நல்ல விஷயங்களைப் பாராட்டாவிடினும் கேலி செய்யாதீர்கள்.

  ReplyDelete
 21. கரம் அமைப்பை கொஞ்சம் ஆராய்ந்து பதிவிடுவது நல்லது. என் அண்ணனின் மகன் இந்த அகரம் ஃபவுண்டேசனின் கீழ் இன்சினியரிங் படித்து வருகிறார். அண்ணன் குடும்பத்திற்கு கல்லூரி செலவு இப்பொழுது வெகுவாக குறைந்துவிட்டது. அதாவது ரொம்பவும் குறைந்துவிட்டது. தமிழ்நாட்டில் ஒருமூலையில் இருக்கும் கிராமத்தில்.... இன்னும் எத்தனை பேர் அகரத்தில் படிக்கிறார்களோ தெரியாது........... அந்தவிஷயத்தில் நடிகர் சூர்யாவை பெரிதாக மதிக்கிறேன்.
  மிக்க நன்றி ஆதவா :
  எனக்கு தெரியும் நடிகர் சூர்யா தன் தந்தையை போல திரை வாழ்க்கையிலும் சரி நிஜ வாழ்க்கையிலும் சரி
  சில ஏமாற்று நடிகர்களில் (திரையில் நடிக்காவிட்டாலும் நிஜத்தில் நடிக்கும் )நடிகர்களின் ரசிகர்களுக்கு வேண்டும் ஆனால் சூர்யா பிடிக்காமல் போகலாம்
  சூர்யா பற்றி வரும் செய்திகள் நிச்சயம் நூறு சதம் உண்மை இருக்காது என்பது என் கருத்து
  வெற்றிக்கு அவர் விரும்புவதை விட நல்ல கதை உள்ள படங்கள் என்றால் விரும்புவார் என்பது எல்லோருக்கும் தெரியும்
  அகரம் பவுண்டேசன் பற்றி விரிவான செய்திகள் முன்பே வெளியுட்டுள்ளேன் மீண்டும் விரைவில்
  நன்மைகள் செய்வதை வியாபாரம் ஆக்கும் நடிகர்கள் மத்தியில் சூர்யா ரியலி கிரேட்

  ReplyDelete
 22. மிக அருமையாக கூறினீர்கள் நாடோடி அவர்களே! இந்த பதிவின் சொந்தக்காரரின் கருத்துக்களை விட நீங்க கூறிய கருத்துக்களில் தான் உண்மை அதிகம் உள்ளது. எனினும் சூர்யா "நண்பன்" படத்தில் இருந்து வெளியேறிய காரணம் இங்கு இவ்வாறு தரப்பட்டுள்ளது! http://www.behindwoods.com/tamil-movie-news-1/jan-11-05/suriya-31-01-11.html

  ReplyDelete
 23. see this link immediately sir
  http://mycineworld.com/box-office/164-chennai-box-office-february-1st-week

  ReplyDelete
 24. http://www.behindwoods.com/tamil-movie-news-1/jan-11-05/suriya-31-01-11.html

  நான் சொன்ன படி சூர்யா ரீமேக் படங்களில் அதிகம் நடிக்க விரும்ப வில்லை மீண்டும் ஒரு ரீமேக் படத்தில் நடிக்க விரும்ப வில்லை அதனால் தான் அவர் இந்த படத்தில் நடிக்க விரும்பவில்லை என சொல்லி இருக்கிறார்
  "Sources say that he did not want this to repeat with the 3 Idiots remake and hence decided to move out"
  சூர்யா முடிந்த அளவிற்கு ரீமேக் படங்கள் அதிகம் நடிக்க வேண்டாம்

  ReplyDelete
 25. நண்பன் வினு அவர்களுக்கு
  ஒவ்வொரு ரசிகனுக்கும் அவன் விரும்பும் நடிகன் மீது அளவு கடந்து ஆர்வம இருக்கும் அதே நேரத்தில் ஒரேடியாக அவரை பற்றி எழுத வேணாம் எல்லாம் விரும்ப கற்று கொள்ளுங்கள்
  எனக்கு ரஹ்மான் பிடிக்கும் அதற்காக ரஹ்மான் இசை பற்றி மட்டும் எழ்துவேன் என்பது எப்படி
  இப்படி எழுதுவது நமக்கு டைம் பாஸ் மட்டுமே
  சினிமா கலைஞர்களின் பிழைப்புக்கு நாம் ஏன் மாறி மாறி எழுத வேணும்

  எனக்கு ரஹ்மான் பத்து ருபாய் தர போவதில்லை உங்களுக்கு விஜய் நூறு ருபாய் தர போவதில்லை
  விஜய் இதே போல அமைதியாக நடித்து நல்ல படங்களை கொடுத்தால் நிச்சயம் ஒரு சிறப்பான பதிவு போடுவேன் ஆனால் அரசியல் அது இது தலைவன் என் எந்த சினிமா கலைஞனியும் சொல்ல மாட்டேன்
  நடிகர்களை திரையில் ரசிப்பேன் நல்ல படங்கள் இருந்தால் ஹீரோ யார் என்பது எனக்கு தேவை இல்லை
  சமுகம் உங்கள் வலை பதிவிற்கு தினமும் ஆயிரக்கணக்கில் படிக்க வரும் போது சினிமா சார்ந்த விஷயம் மட்டும் இல்லாமல் சமுகம் சார்ந்த விசயமும் போடவும்

  ReplyDelete
 26. விஜய் இதே போல அமைதியாக நடித்து நல்ல படங்களை கொடுத்தால் நிச்சயம் ஒரு சிறப்பான பதிவு போடுவேன் ஆனால் அரசியல் அது இது தலைவன் என் எந்த சினிமா கலைஞனியும் சொல்ல மாட்டேன்

  விஜயின் சம்மீப படத்தில் காவலன் நல்ல படம் ஆன்ல நீங்கள் அதை முன்னைய பதிவில் தாழ்வாக எழுதினீர்கள் அது தவறு என்பதையே நிருபிக்க இவ்வாறு வலைத் தள முகவரிகளை அனுப்புகிறேன்

  எனக்கு விஜயை பிடிக்கும் ஆனால் அவரது அரசியலை பிடிக்காது...

  அவரது அப்பாவால் தான் விஜய் கெடுக்கிறார் சமீப படங்கள் (காவலன் அல்ல) தந்தையின் சிபாரிசால் தான் தேர்தெடுத்து நடித்தார்....... நீங்கள் நாங்கள் நம் அப்பாவின் பேச்சினை சரியோ தவறோ ஏற்றுக் கொள்கிறோம் அப்படித்தான் ...... விஜய்க்கு திறமையில்லை என கூற வில்லை வித்தியாசமாய் நடிப்பார்............ அவர் தந்தை கதை தெரிவில் தலை இடாமல் இருந்தால் அது சாத்தியம்......

  ReplyDelete
 27. "KO" padam febraury 4 vara madhiru endha thagavalum illaye ?

  ReplyDelete
 28. see this friend http://cinema.dinamalar.com/tamil-news/3374/cinema/Kollywood/velayutham-release-on-vijay-birthday.htm

  ReplyDelete
 29. விஜயும் ரீமேக் படங்களும் என்னும் தலைப்பில் ஒரு பதிவு எழுதியுள்ளேன் இதை எழுத தூண்டியது நடோடியும் நீங்களுன் தான் i want to your comment on this

  http://vijayfans-vinu.blogspot.com/2011/02/blog-post_8889.html

  ReplyDelete
 30. விஜயும் ரீமேக் படங்களும் என்னும் தலைப்பில் ஒரு பதிவு எழுதியுள்ளேன் இதை எழுத தூண்டியது நடோடியும் நீங்களுன் தான் i want to your comment on this

  http://vijayfans-vinu.blogspot.com/2011/02/blog-post_8889.html

  ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை