Thursday, March 31

இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடி சில சுவாரசியங்கள்

  @ இந்திய மக்கள் தொகை 121 கோடியை தாண்டியிருப்பது கணக்கெடுப்பில் மூலம் தெரிய வந்துள்ளது 
 

  @ கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் மக்கள் தொகை 18 கோடி பேர் அதிகரித்துள்ளனர்.

  @ இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கபடுகிறது
   @ 2001 ஆண்டுக்கு பிறகு இந்த ஆண்டு  எடுக்கப்ட்டுள்ளது

  @மக்கள் தொகை வளர்ச்சி அரசின் விழிப்புணர்வு மற்றும் மக்களின் விழிப்புணர்வு மூலம் தற்போது 17% குறைந்துள்ளது
 


    @மக்கள் தொகையில் மற்றும் ஒரு சுவாரசியம் இந்திய ஆண்களின் எண்ணிக்கை 62.3 கோடி பெண்களின் எண்ணிக்கை 58.6 கோடியாகவும் உள்ளது

   @இந்தியாவின் மக்கள் தொகை ஐந்து நாட்டு மக்கள் தொகையுடன் கூட்டினால் கூட அவர்கள் நம்மை நெருங்க முடியாது (என்ன ஒரு சாதனை ) இந்தோனேசியா,அமெரிக்கா, பிரேசில், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளின் ‌மக்கள்தொகையை கூட்டினால் வரும் எண்ணிக்கையை விட அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  @இரண்டு மாநில மக்கள் தொகையுடன் கூட்டினால் கூட அமெரிக்க மக்கள் தொகை ஈடாகாது அந்த இரண்டு மாநிலங்கள் உத்திரபிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா

 @அதே அளவில் படிப்பதிலும் இந்திய மக்கள் முன்னேற்றம் அடைந்து உள்ளனர் கற்றவர்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 9.21 உயர்ந்துள்ளது

  @இந்த விசயத்தில் ஆண்களை காட்டிலும் பெண்களே அதிகம் படிப்பறிவு பெற்றுள்ளனர்


  @ இந்திய மக்கள் தொகையில் 74 % விழுக்காட்டினர் படிப்பறிவு பெற்றவர்கள். 26 % படிப்பறிவு பெறாதவர்கள் ஆவர்.

   @ இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த செலவிட்ட தொகை எவ்வளவு தெரியுமா ? ரூ.2,200 கோடி

 @ அதிகம் மக்கள் தொகை உள்ள மாநிலம் எது தெரியுமா உத்தரபிரதேசம். அங்கு மக்கள் தொகை 19.9 கோடி.

   @ குறைவான மக்கள் தொகை உள்ள மாநிலம் சண்டிகர்

  @உலக அளவிலான மக்கள் தொகைக்கு நம்மால் முடிந்த உதவி எவ்வளவு தெரியுமா ? 17 %


   @@:(அப்போ அடுத்த வருடம் வர போற ஒலிம்பிக் போட்டிகளில் எத்தனை தங்கம் வாங்க போறோம் ?:(

Tuesday, March 29

எப்படி தயாரிக்கிறார்கள் TOOTHBRUSH (FM) 6எப்படி தயாரிக்கிறார்கள் வரிசையில் இன்று நாம் பார்க்க போவது ரொம்ப முக்கியமான விஷயம் .

ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி அப்படின்னு சொல்வாங்க அது பழைய மொழி இப்போ இருக்குற புது மொழி பேஸ்டும் பிரஸும் பல்லுக்கு உறுதி இது புது மொழி 
 
இப்போ இருக்குற காலத்தில கையால பல்லு சுத்தம் செய்பவனை பார்த்தல் ஒரு மாதிரியா பார்ப்பாங்க (எல்லாம் கால மாற்றம் ) கிராமத்தில இருக்குற பாட்டி கூட இப்போ கையால பல்லு சுத்தம் செய்வது இல்லை ORAL -B பிரஸ் கேட்குற காலம் இது
சின்ன டூத் பிரஷ் அப்படின்னு நினைக்கும் நாம் அந்த பிரஷ் செய்ய அவர்கள் மேற்கொள்ளும் அந்த இயந்திரங்கள் அவைகள் ஒவ்வொரு பிரஷையும் தயாரிக்கும் விதம் பார்த்தல் என்ன அற்புதம் நீங்கள் பாருங்கள் ஒரு முறை பிறகு சொல்லுங்கள்

HOW ITS MADE -TOOTHBRUSHSunday, March 27

இலவச தேர்தல் 2011 சிந்திக்க & சிரிக்க வைக்கும் குறும்படம்
இந்த குறும்பட ஆரம்பத்திலே நகைச்சுவையான ஆரம்பம் மக்கள் நிதி பேங்க் ,முனியாண்டி விலாஸ் பிரியனி கடை ,பாஸ்மார்க் நண்பர்கள் குழு ,அகில இந்திய ### நற்பணி மன்றம்
என்று தொடங்கும் டைட்டில் முதல்

படத்தின் ஆரம்பத்திலே உசிலம்பட்டி கிராமத்தில் தொடங்கும் தொலைகாட்சி நிருபர் காட்சி அமர்க்களம் அவர் ஒவ்வொரு வாக்காளர் இடம் தேர்தல் பற்றி கேட்பதும் அவர்கள் இந்த தேர்தலில் அதிகம் இடம்பெற்ற இலவசத்துடன் நகைச்சுவையாக சம்பந்தபடுத்தி காட்சிகளை அமைத்து சிறப்பு
இந்த குறும்படம் பற்றி நான் சொல்வதை விட நீங்கள் பார்த்தாலே தெரியும்

தேர்தல் நேரம் என்றாலே அது படிக்காத மக்களுக்கு மட்டுமே
படித்தவர்கள் தேர்தல் பற்றி நினைக்க மாட்டார்கள் என்பதை பொய்யாக்கிய படம்
இந்தியாவின் உண்மையான முன்னேற்றம் தேவை என்பதை அழாகாக அதே நேரத்தில் சிந்திக்கும் முறையில் கொடுத்துள்ளனர் இந்த இளைஞர்கள்

பேஸ்புக் மற்றும் இன்டர்நெட் சினிமா மட்டும் இல்லை எங்களுக்கும் இந்தியாவில் நடக்கும் அரசியல் அவலங்களை பார்த்து நொந்து போய் இருக்கோம் என்று சிரிக்க வைத்து சிந்திக்கவும் வைத்துள்ளனர்

இந்த குறும்படம் பார்க்கும் போது நிச்சயம் வாய் விட்டு சிரிப்பிர்கள் சிந்திக்கவும் செய்வார்கள் .இசை இல்லை மிகப்பெரும் நடிகர்கள் இல்லை ஆனால் படம் பார்க்கும் போது ஒவ்வொரு இந்தியனின் ஆதங்கம் உள்ளது

இந்த படத்தில் நடித்துள்ள "பாலகுரு ,ஜானு கார்த்தி ,சுந்தர் ,மோகன் ,சாமுவேல் பிரசன்னா ,ராமராஜ் ,பாரதி ,சேவு இவர்களின் மிகை இல்லா நடிப்பு பாராட்ட வேண்டிய விஷயம்

ஆறு நிமிட படத்தில் சரியான படதொகுப்பு ரவி சிரவஞ்சன் ,அஸ்வத்

கதை ஒளிபதிவு இயக்கம் இவரே 
கார்த்திகேயன் NG இந்த ஐடி இளைஞரின் கனவு நனவாக வாழ்த்துவோம்
 

இந்த குறும்படம் பார்த்த நீங்கள் மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கு தெரிவிக்கவும்

இதோ இந்த குறும்படம் பார்க்கவும் நண்பர்களுக்கு சொல்லவும்

மறக்காமல் வாக்களிக்கவும் 

இந்த குறும்படம் பலரை சென்றடைய மறக்காமல் உங்கள் ஆதரவை தரவும்

குவைத்தை தாக்கிய புழுதி புயல் (வீடியோ இணைக்கப்பட்டுள்ளது)இயற்க்கை எப்போது எந்த ரூபத்தில் விளையாடும் என்பதற்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளது .

இப்போது குவைத்தை சூழ்ந்த இந்த புழுதி புயல் வீடியோவை ஒரு முறை பாருங்கள் 

 


VIDEO 1
VIDEO 2VIDEO 3              

எப்படி தயாரிக்கிறார்கள் ROLLS ROYCE CAR (FM)5
உலகத்தில் கோடிகணக்கான மக்கள் பிறந்தாலும் ஒரு சிலரே உலக புகழ் பெறுவது போல . சாலைகளில் கோடிகணக்கில் கார்கள் சென்றாலும் கார்களின் ராஜாவை போன்றது ரோல்ஸ் ராயிஸ் கார்கள்.

ரோல்ஸ் ராயிஸ் கார்களை வைத்து இருப்பது ஒரு தனி மரியாதை என்பதற்காக உலகில் உள்ள கோடிஸ்வரர்கள் அதிகம் விரும்பும் கார் கார் ரோல்ஸ் ராயிஸ் கார்கள்.

அந்த புகழ் வாய்ந்த கார்கள் இந்த அளவிற்கு விலை போகவும் தரமானதாக இருக்க காரணம் அதன் தயாரிப்பு ரகசியம் கூட

இன்றைய தொழில்நுட்ப காலத்தில் ஒரே நாளில் நூற்றுகணக்கான கார்கள் தயாரிக்கும் வசதி இருந்தும் இந்த ரோல்ஸ் ராயிஸ் கார்கள் ஒரு பிரமாண்ட அரண்மனை கட்டும் பாங்குடன் ஒவ்வொரு தயாரிப்பு செயலிலும் மிகுந்த கண்காணிப்பு வேலைபாடுகளுடன் தயாரிக்கும் அழகை பார்த்தல் வாவ்! நீங்களே பாருங்கள் இந்த வீடியோ மீண்டும் நீங்கள் சொல்விர்கள் ரோல்ஸ் ராயிஸ் உண்மையில் ராஜ கம்பிர கார் என்று 
 

ROLLS ROYCE CAR VIDEO


Friday, March 25

"அழகர்சாமியின் குதிரை" ராஜ சவாரி (இசை விமர்சனம் )
கௌதம் மேனன் அவர்களின் தயாரிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் வரும் படம் இது .
இளையராஜா அவர்களின் இசை இந்த படத்தில் ஒரு உத்வேகத்தில் உள்ளது 
 
நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் இளையராஜா அவர்களின் அதே பரிமாண இசை
படத்தில் மூன்றே பாடல்கள் என்ற போதும் பாடல்களை விட அவரின் பின்னணி இசை படத்தின் முக்கிய ஜீவனாக இருக்க போகுது என்பதை இப்போதே உணர முடிகிறது

1.குதிக்கிற குதிக்கிற குதிரை -

இந்த பாடலை இளையராஜா அவர்களே பாடி உள்ளார் . பாடலை அவர் பாடி இருக்கும் விதம் நிச்சயம் படத்தில் இந்த பாடலை பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது .இந்த வயதிலும் இளையராஜா அவர்களின் நிச்சயம் யாராலும் குறை சொல்ல முடியாது ராஜ நீங்கள் இசையில் ராஜா தான்

2.அடியே இவளே -
நாட்டுப்புற இசைக்கு ஒரு புது பரிமாணம் இந்த பாடல் தஞ்சை செல்வி அவர்கள் மற்றும் பலருடைய குரலில் கிராம திருவிழா பற்றி அழகாக இசையுடன் சொல்லி இருக்குது இந்த பாடல் .பாடலின் இடை இடையே வரும் உறுமி இசை மேளதாள இசை இளையராஜா தவிர வேறு யாராலும் இது போல பாடல்களை போடா முடியாது
3. பூவகேளு -
கார்த்திக் ஸ்ரேயா கோஷல் இசையில் சிறப்பான நல்ல மெலடி பாடல் நிச்சயம் பண்பலை அலைவரிசைகளில் ரசிகர்களின் விருப்பமாக இருக்கும் .ஸ்ரேயா கோஷல் கொஞ்சும் குரல் பாடலை இன்னும் அழாக மாற்றி உள்ளது


மொத்தத்தில் மூன்றே பாடல் என்றாலும் முத்துக்கள் போல தந்து உள்ளார் ராஜா அவர்கள்மொத்ததில் பாடல் ரேட்டிங் 9/10

Wednesday, March 23

டாப் 10 சினிமா செய்திகள் & RAONE TRAILER
1.இந்த ஆண்டில் தமிழ் மொழியில் ரஹ்மான் பொன்னியின் செல்வன் மற்றும் ராணா இரண்டு படங்களுக்கு மட்டுமே இசை அமைக்கிறார்

2.இந்த மாதம் வரிசை கட்டி பாடல்கள் வெளியுட்டு விழாக்கள் நடந்ததது (அழகர்சாமி குதிரை ,குள்ளநரி குட்டம் ,எத்தன ,சபாஷ் சரியான போட்டி ,மாப்பிள்ளை இன்னும் இருக்கு )
 

3 ரஜினி அவர்களின் ராணா படத்தில் அமிதாப் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் 
 
4. A.R முருகதாஸ் தன்னுடைய அடுத்த படம் ஹிந்தி மொழியில் இயக்க உள்ளார் தினா படத்தை அவர் ஹிந்தி மொழியில் எடுக்க இருக்கிறார் இசை ஹாரிஸ் ஜெயராஜ் 
 

5. ரஹ்மானை தொடர்ந்து யுவன் அவர்களும் ஹாலிவுட் படத்திற்கு இசை அமைக்க இருக்கிறார்

6. ஷங்கர் தன்னுடைய அடுத்த படம் ரோபோ எந்திரன் பாகம் இரண்டாக அமைய வேண்டும் என்று நினைகிறார் 
 

7. சண்டை கோழி பாகம் இரண்டு மீண்டும் அதே கூட்டணி தயாரிக்க உள்ளது விஷால் ,யுவன் ,லிங்குசாமி மீண்டும் இணைகின்றனர் 
 
8. இந்த முறை சிம்பு மற்றும் தனுஷ் படங்கள் மோதுகின்றன சன் டிவி வழங்கும் மாப்பிள்ளை ,மற்றும் வானம் இரண்டு படங்கள் அவை 
 
9. மே ஒன்று அஜித் ரசிகர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த மங்காத்தா படம் வராது .ஆறுதலான விஷயம் அன்று மங்காத்தா பாடல்கள் வெளி வரும் 
 

10. ஹிந்தி மொழியில் அதிக அளவிலான பொருள் செலவில் ஷாருக் கான் எடுத்த ரா ஒன் படம் விரைவில் வருகிறது 
எந்திரன் பாணியில் ஹிந்தி மொழியில் ஷாருக் கான் படம் முன்னோட்டம் மிக பிரமாண்டமாக உள்ளது
WATCH RA ONE TRAILER

Monday, March 21

ஒரு காமெடியன் (தேர்தல்) ஹீரோ ஆகிறார்இப்போ திரை உலகில் இருந்து ஹீரோவாக கொடிகட்டி பரந்த பின்பு அரசியலில் அவரை எதிர்ப்போம் இவரை எதிர்ப்போம் என்று நேற்று வரை தன்னுடைய தொண்டனை ஏமாற்றி  யாரை எதிர்தார்களோ அவருடன் கூட்டணி வைக்கும் இந்த ஹீரோ நடிகர்களுக்கு முன்பு

முன்பே தான் சொன்ன ஒரு விசயத்திற்காக இன்று அரசியல் வானில் நுழையும் அரசியல் புலி (சிங்கம்) எங்கள் உண்மையான தன்மான தமிழன் அரசியல் வானில் வரும் புயல் திரையில் மட்டுமே காமெடி நடிகர் உண்மையில் நிஜ வாழ்க்கையில் ஹீரோ என நிருபித்து விஜயகாந்த் அவர்களை எதிர்க்கக் வேண்டும் என்ற காரணத்திற்காக அரசியலில் நுழையும் வடிவேலு அவர்கள்


அரசியல் வானில் வெற்றி பெறுவார் என எதிபார்போம்


அரசியலில் யாரும் வரலாம் யாரும் முதலமைச்சர் ஆகா ஆசைப்படலாம் எப்படின்னா இது குடியரசு நாடு 
 
வடிவேலுவுக்கும், விஜயகாந்த்துக்கும் இடையிலான மோதல் நடந்த போது விஜயகாந்த் எங்கு நின்றாலும் அவரை எதிர்த்துப் போட்டியிட்டு தோற்கடிப்பேன் என்று வீராவேசமாக கூறியிருந்தார் வடிவேலு. இருப்பினும் இந்தத் தேர்தலில் அவர் போட்டியிடவில்லை.
ஆனால் தற்போது விஜயகாந்த் இடம் பெற்றுள்ள - அதிமுக கூட்டணிக்கு எதிராக, திமுக வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்யப் போவதாக வடிவேலு அறிவித்துள்ளார்.


விஜயகாந்தை எதிர்த்து போட்டி இடுவிர்களா என்ற கேள்விக்கு முதலில் அவர் எங்கே நிற்கிறார் என்று தெரியட்டும் பிறகு பார்க்கலாம் என்று சொல்லி இருக்கிறார்

அரசியலில் இது எல்லாம் சகஜமப்பா

தேர்தல் டிஸ்கி :
ஒரு காலத்தில் அதிகம் கல்வி கற்றவர்கள் அதிகம் பட்டதாரிகள் என்று கேரளா இருந்தது கடந்த ஆறு ஆண்டுகளில் தமிழ் நாட்டில் பட்டதாரிகள் எண்ணிக்கை அதிகமாக் இருப்பது கலைஞர் ஆட்சியில் சாதனை என்று கூறலாம்
இப்போ கேரளா சேட்டன்களை விட நம் மாணவர்கள் கல்வியில் அதிக அளவில் போட்டி இடுகின்றனர்

Friday, March 18

ஒரு கல் ஒரு ஒரு கண்ணாடி(OK OK) கலக்கல் கூட்டணிதமிழ் திரை உலகிற்கு ஒரு புது நடிகர் தயார் முதல் படத்திலே கலக்கல் கூட்டணியுடன் வருகிறார் உதயநிதி ஸ்டாலின் சிவா மனசுல சக்தி ,பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற வெற்றி பட இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் வரும் இந்த படத்தில் மேலும் ஒரு கலக்கல் விஷயம் இசை அவரின் அபிமான யுவன் ஷங்கர் இந்த படத்தில் இல்லை அவருக்கு பதில் ஹாரிஸ் இசை அமைக்கிறார்


ராஜேஷ் அவரின் படங்களில் எல்லாம் வெற்றிக்கு முக்கிய காரணமான சந்தானம் இந்த முறை ஸ்டாலின் உடன் கலக்க போகிறார்
ஆகா மொத்ததில் இந்த படம் மட்டும் சூப்பர் ஹிட் ஆனால்

தமிழ் திரை உலகிற்கு ஒரு கலக்கல் ஹீரோ கிடைப்பார்
அவரை தலைவா என்று சொல்ல ஒரு ரசிகர் கூட்டம் கிடைக்கும்
இதன் மூலம் அரசியல் நடிப்பு மீண்டும் பலமுடன் அரசியலில் இறங்க ஒரு வாய்ப்பு கிடைக்கும்
எப்படியோ நடிகர் பின்னே செல்லும் சில உருப்படாத கூட்டம் இருக்கும் வரை சினிமாவையும் அரசியலையும் பிரிக்க முடியாது

ஜோடியாக ஹன்சிகா மோத்வானி

Tuesday, March 15

கலைப்பொறியாளர்கள் வழங்கும் " பெங்களூர் " ஒரு முன்னோட்டம்


ஆக்கம்(இயக்குனர்)                                      சரவண ராம் குமார்
கதை கதையாடல் உரையாடல்         பலராமன் ((http://balaraman.wordpress.com/)
ஏழில்   music                                           சாய் சுதர்சன்

இப்போ பெரிய திரையில் திறமையை நிருபிக்கும் முன் அனைவரும் திறமையை நிருபிக்கும் இடம் குறும்படம் 
 

அங்க வகையில் விரைவில் வர இருக்கும் குறும்படம் பெங்களூர்
இந்தியாவின் சாப்ட்வேர் நகரங்களில் ஒவ்வொரு சாப்ட்வேர் துறையை சார்ந்தவர்கள்  அதிகம் விரும்பும் இடம் பெங்களூர்  

இந்த படத்தின் கதை களம் பெங்களூர் , அதை விட முக்கியம் இந்த கதை களத்தில் வரும் ஒரு கிராமத்து சாப்ட்வேர் இளைஞன் கிராமத்தில் இருந்து வரும் ஒவ்வொரு இளைஞன் புதிதாக நகரத்திற்கு வரும் போது அவன் சந்திக்கும் விசயங்களை நகைச்சுவை உடன் சுவாரசியாமாக சொல்லும் என்பதை நிருபித்து இருக்கிறது குறும்பட முன்னோட்ட வீடியோ 
 
மற்றும் ஒரு சிறப்பு தூய தமிழில் இசைக்கு ஏழில் மற்றும் திரைகதைக்கு கதையாடல் வசனம் உரையாடல் வரவேற்க வேண்டிய விஷயம் 
 

இந்த குறும்பட இசை சாய் அவர்கள் இவரை பற்றி ஏற்கனவே இரண்டு பதிவுகள் வந்துள்ளது

என்ஜினியர்களின்   குறும்பட   முயற்சி நிச்சயம் பெரும் வெற்றி பெரும் வாழ்த்துவோம் 
 

ஆரம்பத்தில் இந்த படத்திற்கு முன்னோட்ட வீடியோ வழங்கிய முதல் குறும்படம் என சொல்லலாம் 
 

இந்த படத்திற்கு இவர்கள் வழங்கி இருக்கும் முன்னோட்ட (டீசர்) வீடியோ இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது ஒரு முறை பாருங்கள் இந்த வீடியோ உதடுகள் உங்களை அறியாமல் சிரிக்கும்

இந்த படம் பற்றிய மேலும் விஷயங்கள் விரைவில்

இந்த முன்னோட்ட வீடியோ பார்த்து உங்கள் கருத்துக்க்களை மறக்காமல் கூறவும்மறக்காமல் உங்கள் வாக்குகளை அளிக்கவும்

Monday, March 14

.:.பாஸ்ட் குக்கிங் பாம்பு மற்றும் மீன் (தைரியமாக பார்க்கவும் )சைனா மக்கள் சாப்பாட்டு விசயத்தில் எப்படி எல்லாம் யோசிக்கிறார்கள்
பாம்பு மற்றும் மீன் இரண்டையும் அவைகள் இறக்கும் முன் விரைவில் சமைக்கும் போட்டியில் என்ன விரைவாக சமைக்கிறார்கள் பாருங்கள்

எதற்கும் இந்த வீடியோ பார்க்க கொஞ்சம் தைரியம் வேணும் நீங்கள் இதை தைரியமாக பார்த்தால்?
விரைவில் பாம்பு அவியல் மற்றும் தேள் ஸ்பெஷல் வீடியோ வரும்


எதற்கும் கொஞ்சம் தைரியமா பாருங்கள் 


 
Thursday, March 10

அரசியல் ஆசை பற்றி சூர்யா பதில்
இந்த வார விகடன் இதழில் சூர்யா இடம் கேட்கப்பட்ட அரசியல் சம்பந்தமான கேள்விக்கு சூர்யா அவர்களின் பதில் சிறப்பானதாக உள்ளது


ஒவ்வொருவரும் அரசியலுக்கு வந்துதான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என மக்களை ஏமாற்ற நினைக்கும் இந்த காலத்தில் மன நிம்மதி மற்றும் உண்மையான சந்தோஷம் ஒன்றுக்காக மக்களுக்கு உதவ வேணும் என நினைக்கும் சூர்யா போன்றோர்கள் அதிகம் நினைத்தால் எப்படி இருக்கும்

அவரின் பதில் இதோ நன்றி : விகடன்

'கோயம்புத்தூர்ல 'ஏழாம் அறிவு’ ஷூட் டிங். டைரக்டர், கேமராமேன் எல்லாம் சாப்பிட ஒரு ஹோட்டலுக்குப் போனோம். டேபிள் துடைக்கிறவர் என்கிட்டே வந்து, 'சார், உங்க அகரம் ஃபவுண்டேஷன் மூலமா, என் பையன் படிக்கிறதுக்கு உதவி செஞ்சீங்க. இப்போ நல்லாப் படிக்கிறான். ரொம்ப நன்றி சார்’னு கண் கலங்கி சொன்னப்போ, உள்ளுக்குள் உணர்ந்த சந்தோஷத்துக்கு முன், அரசியல் எல்லாம் ரொம்ப சாதாரணம்!

விகடன்ல ஆண்டனி, லதானு பார்வையற்ற தம்பதிபற்றி ஸ்டோரி வந்துச்சு. 'ஆண்டனிக்கு பி.எட்., சீட் கிடைச்சுடுச்சு. 10 ஆயிரம் ரூபா பணம் வேணும்’னு அகரம் ஃபவுண்டேஷனுக்கு எழுதி இருந்தாங்க. இது நடந்து மூணு வருஷம் ஆச்சு.
கடந்த வாரம், ஆண்டனி போன் பண்ணார். 'அரசுப் பள்ளியில் ஆசிரியரா வேலை கிடைச்சிருக்கு. முதல் போன் உங்களுக்குத்தான் சார்’னு அவர் சொன்னபோது கிடைச்ச பரவசத்தை வார்த்தையில் சொல்லத் தெரியலை. நீங்க உணரணும்னா, தேவை இருக்கிறவங்களுக்கு உதவி செஞ்சு பாருங்க. இந்தக் கேள்வி சாதாரணமானதுன்னு அப்போ உங்களுக்கே புரியும்!'

 


 என்ன உண்மையான வரிகள் இதோ போன்று மக்களுக்கு உண்மையில் உதவ வேணும் என வரும் தேர்தலில் வேட்பாளர்கள் அனைவரும் நினைத்தால்  உண்மையில் வளமான தமிழகம் நிஜத்தில் மாறும் 

IF YOU LIKE THE ARTICLE SHARE YOUR FRIENDS IN FACE BOOK

Sunday, March 6

IPL 2011 SCHEDULE ஐபில் விளையாட்டு அட்டவணை *

                              

  

 • Apr 8 8PM . சென்னை  சூப்பர்  கிங்க்ஸ் vs Kolkata Knight Riders சென்னை  
 • Apr 9 4PM . Deccan Chargers vs Rajasthan Royals ஹைதராபாத்
 • Apr 9 8PM . Kochi v Royal Challengers Bangalore கொச்சி 
 • Apr 10 4PM . Delhi Daredevils vs Mumbai Indians டெல்லி 
 • Apr 10 8PM . Pune Warriors vs Kings XI Punjab  மும்பை 
 • Apr 11 8PM . Kolkata Knight Riders vs Deccan Chargers கொல்கத்தா 
 • Apr 12 4PM . Rajasthan Royals vs Delhi Daredevils ஜெய்பூர் 
 • Apr 12 8PM . Royal Challengers Bangalore vs Mumbai Indians பெங்களூர் 
 • Apr 13 4PM . Pune Warriors vs Kochi Navi மும்பை
 • Apr 13 8PM . Kings XI Punjab vs சென்னை  சூப்பர்  கிங்க்ஸ் முஹலி 
 • Apr 14 8PM . Deccan Chargers vs Royal Challengers Bangalore ஹைதராபாத்
 • Apr 15 4PM . Mumbai Indians v Kochi மும்பை
 • Apr 15 8PM . Delhi Daredevils v Kolkata Knight Riders டெல்லி
 • Apr 16 4PM . சென்னை  சூப்பர்  கிங்க்ஸ் v Royal Challengers Bangalore சென்னை
 • Apr 16 8PM . Deccan Chargers v Kings XI Punjab ஹைதராபாத்
 • Apr 17 4PM . Rajasthan v Kolkata Knight Riders ஜெய்பூர்
 • Apr 17 8PM . Pune Warriors v Delhi Daredevils மும்பை
 • Apr 18 8PM . Kochi v சென்னை  சூப்பர்  கிங்க்ஸ் கொச்சி
 • Apr 19 4PM . Delhi Daredevils vs Deccan Chargers டெல்லி
 • Apr 19 8PM . Royal Challengers Bangalore v Rajasthan Royals பெங்களூர்
 • Apr 20 4PM . Mumbai Indians v Pune Warriors மும்பை
 • Apr 20 8PM . Kolkata Knight Riders v Kochi கொல்கத்தா
 • Apr 21 8PM . Kings XI Punjab v Rajasthan Royals முஹலி
 • Apr 22 8PM . Mumbai Indians v சென்னை  சூப்பர்  கிங்க்ஸ்மும்பை
 • Apr 23 4PM . Kolkata Knight Riders v Royal Challengers Bangalore கொல்கத்தா
 • Apr 23 8PM . Delhi Daredevils v Kings XI Punjab டெல்லி
 • Apr 24 4PM . Deccan Chargers v Mumbai Indians ஹைதராபாத்
 • Apr 24 8PM . Rajasthan Royals v Kochi ஜெய்பூர்
 • Apr 25 8PM . சென்னை  சூப்பர்  கிங்க்ஸ் v Pune Warriors சென்னை
 • Apr 26 8PM . Delhi Daredevils v Royal Challengers Bangalore டெல்லி
 • Apr 27 4PM . Pune Warriors v Chennai Super Kings  மும்பை
 • Apr 27 8PM . Kochi v Deccan Chargers கொச்சி
 • Apr 28 4PM . Kolkata Knight Riders v Kings XI Punjab கொல்கத்தா
 • Apr 28 8PM . Rajasthan Royals v Mumbai Indians ஜெய்பூர்
 • Apr 29 8PM . Royal Challengers Bangalore v Pune பெங்களூர்
 • Apr 30 4PM . Kochi v Delhi Daredevils கொச்சி
 • Apr 30 8PM . Mumbai Indians v Kings XI Punjab மும்பை
 • May 1 4PM . Rajasthan Royals v Pune Warriors
 • May 1 8PM . சென்னை  சூப்பர்  கிங்க்ஸ் v Deccan Chargers சென்னை
 • May 2 8PM . Delhi Daredevils v Kochi டெல்லி
 • May 3 8PM . Deccan Chargers v Kolkata Knight Riders ஹைதராபாத்
 • May 4 4PM . சென்னை  சூப்பர்  கிங்க்ஸ் v Rajasthan Royals சென்னை
 • May 4 8PM . Pune Warriors v Mumbai Indians  மும்பை
 • May 5 4PM . Kochi v Kolkata Knight Riders கொச்சி
 • May 5 8PM . Deccan Chargers v Delhi Daredevils ஹைதராபாத்
 • May 6 8PM . Royal Challengers Bangalore v Kings XI Punjab பெங்களூர்
 • May 7 4PM . Kolkata Knight Riders v சென்னை  சூப்பர்  கிங்க்ஸ் கொல்கத்தா
 • May 7 8PM . Mumbai Indians v Delhi Daredevils மும்பை
 • May 8 4PM . Royal Challengers Bangalore v Kochi பெங்களூர்
 • May 8 8PM . Kings XI Punjab v Pune Warriors மொஹாலி
 • May 9 8PM . Rajasthan Royals v சென்னை  சூப்பர்  கிங்க்ஸ்ஜெய்பூர்
 • May 10 4PM . Kings XI Punjab v Mumbai Indians மொஹாலி
 • May 10 8PM . Deccan Chargers v Pune Warriors ஹைதராபாத்
 • May 11 8PM . Rajasthan Royals v Royal Challengers Bangalore ஜெய்பூர்
 • May 12 8PM . சென்னை  சூப்பர்  கிங்க்ஸ் v Delhi Daredevils சென்னை
 • May 13 8PM . Kochi v Kings XI Punjab இந்தூர் 
 • May 14 4PM . Mumbai Indians v Deccan Chargers மும்பை 
 • May 14 8PM . Royal Challengers Bangalore v Kolkata Knight Riders பெங்களூர்
 • May 15 4PM . Kings XI Punjab v Delhi Daredevils தரம்சாலா 
 • May 15 8PM . Kochi v Rajasthan Royals இந்தூர்
 • May 16 8PM . Kolkata Knight Riders v Mumbai Indians கொல்கத்தா
 • May 17 8PM . Pune Warriors v Deccan Chargers புனே 
 • May 18 4PM . Kings XI Punjab v Royal Challengers Bangalore தரம்சாலா
 • May 18 8PM . சென்னை  சூப்பர்  கிங்க்ஸ் v Kochi சென்னை
 • May 19 8PM . Pune Warriors v Kolkata Knight Riders புனே
 • May 20 8PM . Mumbai Indians v Rajasthan Royals மும்பை
 • May 21 4PM . Kings XI Punjab v Deccan Chargers தரம்சாலா
 • May 21 8PM . Delhi Daredevils v Pune Warriors டெல்லி
 • May 22 4PM . Royal Challengers Bangalore v சென்னை  சூப்பர்  கிங்க்ஸ் பெங்களூர்
 • May 22 8PM . Kolkata Knight Riders v Rajasthan Royals கொல்கத்தா
 • May 24 8PM . Qualifier 1 மும்பை
 • May 25 8PM . Eliminator மும்பை
 • May 27 8PM . Qualifier 2 சென்னை
 • May 28 8PM . Final சென்னை   
    *அட்டவணையில்  உள்ள தேதிகள்   ஐபில் நிறுவனம் வெளியுட்டுள்ள அட்டவணையின் அடிப்படையில் போடப்பட்டுள்ளது
     

  Friday, March 4

  திரை உலக சோதனை காலம் " ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 8" முதல்      உலக கோப்பை கிரிகெட் வந்து ஏதோ சுமாரா ஓடுற படங்களுக்கு கூட திரை அரங்கில் ரசிகர்கள் வரத்து குறைந்து காணப்படும் இந்த நிலையில் .


  உலக கோப்பை கிரிக்கெட் வந்த நிலையால் உலக கோப்பை முடிந்து படங்களை எல்லாம் வெளியிடலாம் என நினைத்து இருந்த திரை உலகிற்கு அடுத்த கவலைதரும் செய்து உலக கோப்பை முடிந்த ஒரு வாரத்தில் தொடங்கும் ஐபில் ஆட்டங்கள்
  சென்ற முறை நடந்த ஐபில் போட்டியவை விட இந்த் முறை ஐபில் போட்டிகள் இன்னும் விறுவிறுப்பாக இருக்கும் இந்த முறை கர்நாடகா ,தமிழ் நாடு ஆந்திரா உடன் புது சேட்டன்மார்கள் அணி கேரளா அணி வருவதால் போட்டியை பார்க்கும் ரசிகர்கள் நான்கு மாநிலங்களிலும் இன்னும் சூடு பறக்கும்

    இப்போ நாடுகள் வாரியாக மோதும் இந்த விளையாட்டை விட மாநில வாரியாக மோதும்  ஐபில் போட்டிக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் காரணம் புட்பால் போல விறுவிறுப்பாக விரைவில் முடியும் என்பதால்
     திரை உலகை சேர்ந்தவர்களுக்கு கொஞ்சம் கவலை தரும் விஷயம் தான் இது
  அடுத்த மாதம் தேர்தல் சூடு ஒரு பக்கம் மறுபக்கம் ஐபில் போட்டிகள் இப்படி ரியல் போட்டிகள் இருக்கும் போது யார் சார் சினிமா எல்லாம் காசு கொடுத்து பார்க்க போறோம் வீட்டிலே ஒரு கலக்கல் போட்டிகள் இன்னும் 35 DAYS  இருக்கும் நிலையில் தொடங்கும் போது

  ஏப்ரல் 8 அன்று தொடங்கும் ஐபில் போட்டிகள் மே 28 வரை நடைப்பெறுவதால்  ஒரு மாதத்திற்கு  மேல் ஒரு கலக்கல் போட்டிகள் இருக்கு

  Apr 8 8PM . Chennai Super Kings vs Kolkata Knight Riders Chennai

   தேர்தல்  துணுக்குகள்
                         இப்போ இருக்கும் ஆட்சி சரி இல்லை என நாம் யாரை தேர்ந்தெடுக்கபோறோம் அதற்க்கு முன்பு தவறு செய்தவர்கள் என நாம் ஆட்சியை மாற்றியவர்களை ,ஆகா எப்படியும் இவரை விட்டால் அவர் அவரை விட்டால் இவர் என நாம் மாறி மாறி தேர்ந்தெடுக்கபோறோம் என இவர்களுக்கு நன்றாக தெரியும் .
     இவர்கள் இருவரையும் விட மாற்று என தமிழ் நாட்டில் யாரும் இல்லாமல் போனது பெரும் துரதிஷ்டம்

  ஆகா மொத்தத்தில் மக்களுக்கு நன்மை செய்வோம் என்பதை விட ஆட்சியை பிடிப்பதே ஒரு பக்கம்  ஒரு கூட்டத்தின் லட்சியம்
    நான் ஆட்சிக்கு வராவிட்டாலும் அவர் ஆட்சிக்கு வர கூடாது மக்கள் எப்படி போன என்ன என்று மற்றும் ஒரு கூட்டத்தின் லட்சியம்

  " மொத்தத்தில் வாக்களிப்பது நம் கடமை சிந்தித்து வாக்களிப்போம் ஒரு விசயத்தை மற்றும் பார்க்காமல் எல்லா விசயங்களையும் ஆராய்ந்து வாக்களிப்போம் "