Sunday, March 28

விஜய் இடம் பிடித்ததும் பிடிக்காததும்



  எப்படியும் இன்னும் கொஞ்ச நாள்ல விஜய் சுறா படம் வந்துடும் அதுக்கப்புறம் .விஜய் பற்றி பதிவுலகம் ஒரே விஜய் பதிவாத்தான் இருக்கும் அதனால நான் கொஞ்சம் முன்னே முந்திக்கிறேன்

 அப்போவும் சரி இப்போவும் சரி எனக்கு பிடித்த படங்கள் என்றால் திரை அரங்கு சென்றால் படம் பார்க்கும் இரண்டு மணி நேரமும் நிம்மதியா ஜாலிய இருக்கணும்

இப்போ படம் பார்த்து அதில் வர்ற கருத்துக்களை கற்று நான் ஒன்றும் மகான் ஆவ போவதும் இல்லை .அந்த படத்தில் வர்ற மாதிரி ஒரே நாள்ல கோடிஸ்வரன் ஆவ போறதும் இல்லை 


அப்படி இருக்கும் போது படத்திற்கு போவது சும்மா ஒரு ஜாலிக்கு தான்
இப்போ விஜய் பற்றி சொல்ல வரும் போது இந்த விஷயம் எதுக்கு என்று நீங்கள் கேட்பது புரிகிறது 




இதில் உள்ள சில விஷயங்கள் விஜய் படம் பற்றி பேசும்போது வரும்
பொதுவா விஜய் மீது கூறும் குற்றசாட்டு அவர் அப்பா இல்லை என்றால் இந்த் அளவிற்கு வர முடியாது 


சரி அப்படியே வைத்து கொள்வோம் அப்படி என்றால் அப்பாவின் துணையுடன் வந்த எத்தனை நடிகர்கள் இந்த அளவிற்கு வளர்ந்து உள்ளார்கள் "அருண் குமார் " சத்யன் "இன்னும் எத்தனையோ நடிகர்களை சொல்லலாம் .அப்பாவின் நிழலையும் மீறி தங்கள் திறமை மூலம் வளர்ந்தவர்கள் விஜய் ,சிம்பு
இந்த பதிவில் விஜய் இடம் பிடித்தவை மட்டும் 


     விஜய் படங்கள் என்றால் பாடல்கள் நன்றாக இருக்கும் இன்று வரை அதை காப்பற்றி வருவது அவர் கதை கேட்பது மற்றும் நடிப்பதுடன் தன வேலை முடிந்ததது என்று இல்லாமல் பாடல்கள் உருவாக்கத்தில் அவரின் ரசனை இருப்பதும் என சொல்லலாம்
காதலுக்கு மரியாதை ,துள்ளத மனமும் துள்ளும் ,கில்லி ,சிவகாசி ,பிரியமானவளே குஷி என அவர் பாடல்கள் தொகுப்பை சொல்லி கொண்டே  செல்லலாம் .


நகைச்சுவை
           இதில் அவர் ரஜினி பயன்படுத்திய அதே யுக்தியை தன் படங்களில் பயன்படுத்தியது சொல்லலாம்
நகைச்சுவையுடன் கூடிய அவரின் வெற்றி படம் சிவகாசி ,சொல்லலாம்
அவரின் படங்களில் நடிக்கும் நகைச்சுவை நடிகரின் பகுதியும் சிறப்பாக இருக்கும் போக்கிரி படத்தில் வரும் வடிவேலு ,சச்சின் படத்தில் கூட  வடிவேலு நகைச்சுவை பகுதி சிறப்பாக இருக்கும்
மின்சார கண்ணா ,மற்றும் கோயம்புத்தூர் மாப்பிள்ளை இரண்டு படங்களும் சொல்லும் படியான வெற்றி இல்லை என்றாலும் நல்ல நகைச்சுவை உள்ள படங்கள் என சொல்லலாம் பிரெண்ட்ஸ் படத்தில் வரும் வடிவேலு மற்றும் சார்லி நகைச்சுவை இப்போது நினைத்தாலும் வயிறு வலிக்கும் .வசீகர படத்தில் அவரின் நகைச்சுவை உடன்கூடிய நடிப்பு
தன் படங்களில் தான் சம்பந்தப்பட்ட காட்சிகள் மூலமோ இல்லை மற்ற நடிகர்கள் மூலம் நகைச்சுவை காட்சிகள் அதிகம் இருக்கும் படி கதைகளில் தேர்ந்த்தெடுத்து நடித்து அவரின் முக்கிய வெற்றி என சொல்லலாம்
 


 ஆக்சன் படங்கள்
                     தெலுங்கு மொழியில் வெற்றி பெற்ற நல்ல ஆக்சன் படங்களை வாங்கி நடித்தது கூட சிறந்த வழி என சொல்லலாம் ஏன் எனில் தன்னை நம்பி பல கோடி பணம் போடும் தயாரிப்பளருக்கு லாபம் தருவதுடன் தன் திரை உலக வாழ்க்கையும் சிறப்பாக அமைய இந்த வழி அமைந்தது எனலாம்
அவரின் சிறந்த ஆக்சன் படங்களில் முக்கியமான படம் என்றால் பத்ரி ,கில்லி, போக்கிரி படங்களை சொல்லலாம் .நேரிடை படங்கள் திருமலை ,மதுரே ,சிவகாசி சொல்லல்லாம் .(திருப்பாச்சி படத்தை ஒரு படமாக கூட சேர்க்க மாட்டேன் )

நாங்க யூத் இல்ல
                   ஒரு கால கட்டத்தில் அவரின் படங்களில் சிறப்பான படங்கள் என்று சொல்லும் படியான படங்கள் காதலுக்கு மரியாதை ,குஷி, யூத்,ஷாஜஹான் ,படங்கள் என்று இவரின் இளமையான கல்லூரி சார்ந்த படங்கள் பாடல்களும் சரி ,அவரின் இளமையான நடிப்பு எல்லாம் அவரின் வெற்றி பாதையில்நல்ல படங்களாக அமைந்தன

விஜய் அவர் ஆரம்பகாலங்களில் தேர்ந்தெடுத்த படங்கள் அல்லது அவரின் அப்பாவின் படங்கள் அவரின் திரை வாழ்க்கையில் மோசமான படங்கள் என்று சொல்லலாம்
நாளைய தீர்ப்பு ரசிகன் தேவாஎன்று இவரின் ஆரம்ப கால் படங்கள் சொல்லலாம் 



எந்த ஒரு கல்லும் நல்ல சிற்பியின் கையில் கிடைக்கும் போதுதான் நல்ல சிலையாக மாறும்.

அதுபோல விஜய் நல்ல இயக்குனர்களின் இயக்கத்தில் நல்ல கதை தேர்ந்தெடுத்து நடித்து அவரை வைத்து படம் எடுக்க அணைத்து தயாரிப்பாளர்களும் ஆசைப்பட்டது காரணம். 

புது இயக்குனருக்கு
வாய்ப்பு தருகிறேன் என்று தன்னை நம்பி வரும் தயாரிப்பளருக்கும் சரி திரை அரங்கு உரிமையாளருக்கும் நஷ்டத்தை ஏறபடுதாமல் வெற்றி கதையில் நடித்தது கூட அவரின் வெற்றி எனலாம்
விக்ரமன் .பாசில் ,சித்திக் ,சூர்யா ,என நல்ல இயக்குனர் நல்ல கதை என தேர்ந்த்தெடுத்து நடித்து அவருக்கு என ரசிகர் கூட்டத்தை ஏற்படுத்தினார்

 கடைசியாக எனக்கு விஜய் இடம் பிடித்தவை
           *தந்தையின் உதவியுடன் திரை உலகுக்கு வந்து தனக்கென ஒரு தனியான இடத்தை தன் திறமை மூலம் பிடித்தது
*தன்னை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பளருக்கு லாபம் வரும் படியானா படங்களில் நடித்தது
*தன் படங்களின் நகைச்சுவைக்கு முக்கியதுவம் கொடுத்ததுது
*விஜய் படம் என்றால் பாடல்கள் நன்றாக இருக்கும் என்ற பெயரை இதுவரை காப்பற்றியது
*நகைச்சுவையுடன் கூடிய ஆக்சன் படங்களை தந்தது

இந்த பதிவில் விஜய் இடம் எனக்கு பிடித்த விஷயங்கள் சொல்லி உள்ளேன் .அடுத்த
விஜய் இடம் பிடித்ததும் பிடிக்காததும் பதிவில் பிடிக்காதவை பற்றி 



இன்றைய தத்துவம்
              "அடுத்தவன் நம்மை விட ஒரு படி முன்னே சென்று விட்டானே என்று நினைக்கும் போது நாம் இரண்டு இரண்டு படி பின்னே செல்கிறோம்
"


       பதிவு பிடித்து இருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும் 

                            HAI ARUMBAVUR






14 comments:

  1. விஜய்யைப் பார்த்தால் உங்களாட்டம் நல்ல பையனாத்தான் தெரியுது. வாழ்க, வளர்க.

    ReplyDelete
  2. என்ன பேராண்டி. என் கமென்ட்ட இன்னும் பாக்கலெ போல இருக்கு. ஞாயித்துக்கிழமைன்னா நல்ல தூக்கம் போடுவீங்களோ?

    ReplyDelete
  3. மன்னிக்கனும் ரொம்ப வேலை மூணு நாளா ?
    அதனால்தான் மறு மொழி எழுத முடிய வில்லை மன்னிக்கணும்

    ReplyDelete
  4. இதன் நிறைவு பகுதிகள் மூன்று பகுதிகளாக வெளிவரும் என்று ரசிக பெருமக்களுக்கு அண்ணன் "அரும்பு" சார்பாக தெரிவிக்கப் படுகிறது

    ReplyDelete
  5. arumaiyana pathivu

    ReplyDelete
  6. "அடுத்தவன் நம்மை விட ஒரு படி முன்னே சென்று விட்டானே என்று நினைக்கும் போது நாம் இரண்டு இரண்டு படி பின்னே செல்கிறோம் "


    super....

    ReplyDelete
  7. *ஸ்ரீநி
    "அரும்பு" சார்பாக தெரிவிக்கப் படுகிறது"

    அரும்பு மலரும் ஊர் அரும்பாவூர்
    அட இது கூட நல்ல இருக்கே நன்றி ஸ்ரீ நி

    ReplyDelete
  8. எனக்கும் விஜய் பிடிக்கும். நீங்க எழுதியது ந‌ன்றாக இருக்கிறது!

    //இன்றைய தத்துவம்
    "அடுத்தவன் நம்மை விட ஒரு படி முன்னே சென்று விட்டானே என்று நினைக்கும் போது நாம் இரண்டு இரண்டு படி பின்னே செல்கிறோம் "//....எப்படி... இப்படி எல்லாம் யோசிக்கிறிங்க:) நைஸ்!

    ReplyDelete
  9. ottu appadi poduvthu

    ReplyDelete
  10. //* அப்பாவின் துணையுடன் வந்த எத்தனை நடிகர்கள் இந்த அளவிற்கு வளர்ந்து உள்ளார்கள் "அருண் குமார் " சத்யன் "இன்னும் எத்தனையோ நடிகர்களை சொல்லலாம் .அப்பாவின் நிழலையும் மீறி தங்கள் திறமை மூலம் வளர்ந்தவர்கள் விஜய் ,சிம்பு *//

    இந்த லிஸ்டில் நம்ம புரட்சி தளபதி , ஜெயம் ரவி இவர்களை மறந்துவிட்டிர்களே நண்பா. விஜய் , சிம்பு , விஷால் , ஜெயம் ரவி இவர்களின் பெற்றோரை போல வசதி வாய்ப்புக்கள் மற்றவர்களுக்கு இல்லை என்று தான் நான் நினைக்கிறேன்

    ReplyDelete
  11. @காமன் மேன்
    @விஜய்
    @பிரியா
    @ஜலால்
    @பார்வை
    @எப்பூடி
    @தாத்தா பி கந்தசாமி

    உங்கள் அனைவரின் ஆதரவு பின்னுட்டத்திற்கு நன்றி

    ReplyDelete
  12. VIJAY IS ALWAYS BEST STAR

    ReplyDelete
  13. VIJAY IS ALWAYS BEST

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை