Wednesday, March 31

திரை துளிகள்  கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் ராவணா
   63 வது கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்குபெறுவதற்கு விண்ணப்ப படிவத்தை மணிரத்னம் அனுப்பி உள்ளார்
ஏற்கனவே இப்படத்தில் ஐஸ்வர்யா மற்றும் ரஹ்மான் என்னும் இரண்டு உலக புகழ் பெற்ற கலைஞர்கள் இருப்பதால்
கேன்ஸ் திரைப்பட விழாவில் இப்படம் ஒரு தனி மதிப்பு பெரும் என எதிர் பார்க்கலாம்

சன் நெட்வொர்க்கில் டிஸ்னி

 


 ஏப்ரல் 1 இன்று முதல் சன் நெட்வொர்க் தன் சன் குழுமம் தன் டிஸ்ரிபுஷன் மூலம் டிஸ்னி சேனல் எல்லாம் ஒளிபரப்பும் .இதன் மூலம் அழ வைக்கும் சீரியல் தொல்லையில் இருந்து குழந்தைகள் உலகத்தை கொஞ்சம் பார்க்கலாம் சன் கேபிள் மற்றும் டி டி எச் மூலம் இந்த் சேனல்களை பார்க்கலாம்
ஏப்ரல் 14 கேப்டன் டிவி 


 
                     தமிழ் நாட்டில் இந்த டிவி தொல்லை வர வர கொசு தொல்லை விட மோசமா பொய் விட்டது
தூர்தர்சனுக்கு மாற்றமா இருக்கேன்னு சன்னை உள்ளே விட்ட இப்போ தூர்தர்சன் எங்கோ பொதிகை மலைக்கே போய்டுச்சு .இருக்குற தொல்லை போதாதுன்னு கேப்டன் தன் பங்குக்கு ஒரு சேனல்
யப்பா நாடி ஜோதிடம் ,சித்த  வைத்யம் செய்றவன்களே உங்களுக்கு விளம்பரம் செய்ய மேலும் ஒரு சேனல் 

நிச்சயம் இப்போ இருக்கும் அரசியல் சூழ்நிலையில் நல்ல மாற்றாக வர அனைத்து வாய்ப்பும் இருக்கும் விஜய காந்த் அவர்களே உங்கள் தொலைக்கட்சியில் சினிமா தவிர்த்து நல்ல விஷயங்கள் போடுங்க சாரே

மீண்டும் தொடங்கியது சுல்தான்
     இந்த ஆண்டு ரஜினி ரசிகர்களுக்கு நிஜமாலுமே இரட்டை தீபாவளி ஒன்று எந்திரன் மற்றது ரொம்ப நாட்களாக அதே நேரத்தில் இந்திய திரை உலகில் ஒரு நடிகரை வைது முழுவதும் அனிமேஷன் மூலம் தயாராகும் சுல்தான் மீண்டும் தன் படபிடிப்பு (கணினி வரை கலை )தொடங்கி உள்ளது .இதில் மற்றும் ஒரு ப்யூட்டி ரஜினிக்கு படத்திற்கு உரிய டைட்டில் பாட்டு இருக்கு
சுல்தான் தி வார்ரியர் ட்ரைலர்


சினிமா செய்திகளை கூட படிப்பதில்லை விஜய காந்த்
மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் கோரிப்பாளையம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.
அப்போது இதை சொன்னார்
என்ன கொடுமை சார் இந்த சினிமா ஒன்று இல்லை என்றால் விஜய காந்தா யார் அது என்று கேட்பார்கள் ?
ஏறி வந்த ஏணி எட்டி உதைப்பதற்க்கு சமம் சார் இது
பேசுவது என்பது ஒரு கலை அதை எப்படி பேசுவது என்று இருக்கு நீங்கள் முதலில் ஒரு நடிகர் பிறகுதான் அரசியல்வாதி புரிந்தால் சரி

திருச்சியில் 24 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடிகர் விஜய் நடத்தி வைத்தார்

 

  அன்பு விஜய் அவர்களுக்கு வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரிய கூடாது இதைதான் உண்மையான தானம் என்று சொல்வார்கள் .
ஆனால் அதை விட்டு விட்டு நோட்டு புத்தகம் ,பேனா ,பென்சில் போன்றவைகளை கொடுத்து பத்து பக்கத்திற்கு விளம்பரம் தேடுவது நன்றாக இல்லை
நீங்கள் உண்மையான மனதுடன் உதவி பூரிய வேண்டும் என்றால் யார்க்கும் தெரியாமல் கொடுத்து பாருங்கள் அதன் உண்மையான மதிப்பே அதிகம்

இவை எல்லாம் படித்தது கேட்டவை இதனால் நாட்டுக்கு ஒரு முக்கியமும் இல்லை இருந்தாலும் திரை உலகையும் தமிழனையும் பிரிக்க முடியாது அல்லவா அதனால் என் சிறு பதிவு படிச்சா மட்டும் போதாது

மறக்காமல் ஓட்டையும் போடுங்க
வர்ட்டா ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅTuesday, March 30

IPL கலக்குது TV ரேட்டிங்
இப்போது நடைபெறும் இந்த IPL விளையாட்டு பற்றி தான் எங்கும் பேச்சு லலித் மோடியின் வியாபார தந்திரம் மற்றும் தரப்படும் மீடியா முக்கியதுவம்
இந்தியா முழுவதும் ஒரு தேசிய விளையாட்டு ஆகி விட்டது அது உண்மை என்பதற்கு ஒரு ஆதாரம்

டெலிவிஷன் ரேட்டிங் IPL எந்த அளவு என்றால் எப்போதும் முதல் இடத்தில் சீரியல் எல்லாம் பின்னுக்கு தள்ளி இந்திய அளவில் அதிகம் பார்த்த நிகழ்ச்சி டாப் 10இல் 8 மற்றும் டாப் 100 IPL கிரிக்கெட் மட்டுமே 21இதில் ஒரு சிறப்பு என்ன வென்றால் டாப் நூறில் எப்போதும் முதல் இடத்தில இருக்கும் சன் டிவி கூட இரண்டாம் இடத்திற்கு சென்று விட்டது .இது ஆரம்ப TRP மட்டுமே இன்னும் இறுதி போட்டிகள் நடக்கும் போது மற்ற தொலைக்காட்சிகள் வீணாக நிகழ்ச்சி போட வேண்டாம் எப்படியும் IPL முடியும் வரை IPL தான் ராஜாஎன்ன ஒரு கொடுமை சார் விஜய் பற்றி தப்பா எழுதினா வோட்டு பறக்குது ஆனா விஜய் பற்றி நல்ல விஷயங்கள் எழுதினா வோட்டு ரொம்ப கம்மியா இருக்கு ஏன் அது ?
இன்றைய தத்துவம்

எப்படியும் வாழலாம் என்பது மிருக வாழ்க்கை
இப்படிதான் வாழனும்ங்கறது மனித வாழ்க்கை


பதிவு பிடித்து இருந்தா மறக்காம வோட்டையும் போடுங்க நல்லவங்களே

Sunday, March 28

விஜய் இடம் பிடித்ததும் பிடிக்காததும்  எப்படியும் இன்னும் கொஞ்ச நாள்ல விஜய் சுறா படம் வந்துடும் அதுக்கப்புறம் .விஜய் பற்றி பதிவுலகம் ஒரே விஜய் பதிவாத்தான் இருக்கும் அதனால நான் கொஞ்சம் முன்னே முந்திக்கிறேன்

 அப்போவும் சரி இப்போவும் சரி எனக்கு பிடித்த படங்கள் என்றால் திரை அரங்கு சென்றால் படம் பார்க்கும் இரண்டு மணி நேரமும் நிம்மதியா ஜாலிய இருக்கணும்

இப்போ படம் பார்த்து அதில் வர்ற கருத்துக்களை கற்று நான் ஒன்றும் மகான் ஆவ போவதும் இல்லை .அந்த படத்தில் வர்ற மாதிரி ஒரே நாள்ல கோடிஸ்வரன் ஆவ போறதும் இல்லை 


அப்படி இருக்கும் போது படத்திற்கு போவது சும்மா ஒரு ஜாலிக்கு தான்
இப்போ விஜய் பற்றி சொல்ல வரும் போது இந்த விஷயம் எதுக்கு என்று நீங்கள் கேட்பது புரிகிறது 
இதில் உள்ள சில விஷயங்கள் விஜய் படம் பற்றி பேசும்போது வரும்
பொதுவா விஜய் மீது கூறும் குற்றசாட்டு அவர் அப்பா இல்லை என்றால் இந்த் அளவிற்கு வர முடியாது 


சரி அப்படியே வைத்து கொள்வோம் அப்படி என்றால் அப்பாவின் துணையுடன் வந்த எத்தனை நடிகர்கள் இந்த அளவிற்கு வளர்ந்து உள்ளார்கள் "அருண் குமார் " சத்யன் "இன்னும் எத்தனையோ நடிகர்களை சொல்லலாம் .அப்பாவின் நிழலையும் மீறி தங்கள் திறமை மூலம் வளர்ந்தவர்கள் விஜய் ,சிம்பு
இந்த பதிவில் விஜய் இடம் பிடித்தவை மட்டும் 


     விஜய் படங்கள் என்றால் பாடல்கள் நன்றாக இருக்கும் இன்று வரை அதை காப்பற்றி வருவது அவர் கதை கேட்பது மற்றும் நடிப்பதுடன் தன வேலை முடிந்ததது என்று இல்லாமல் பாடல்கள் உருவாக்கத்தில் அவரின் ரசனை இருப்பதும் என சொல்லலாம்
காதலுக்கு மரியாதை ,துள்ளத மனமும் துள்ளும் ,கில்லி ,சிவகாசி ,பிரியமானவளே குஷி என அவர் பாடல்கள் தொகுப்பை சொல்லி கொண்டே  செல்லலாம் .


நகைச்சுவை
           இதில் அவர் ரஜினி பயன்படுத்திய அதே யுக்தியை தன் படங்களில் பயன்படுத்தியது சொல்லலாம்
நகைச்சுவையுடன் கூடிய அவரின் வெற்றி படம் சிவகாசி ,சொல்லலாம்
அவரின் படங்களில் நடிக்கும் நகைச்சுவை நடிகரின் பகுதியும் சிறப்பாக இருக்கும் போக்கிரி படத்தில் வரும் வடிவேலு ,சச்சின் படத்தில் கூட  வடிவேலு நகைச்சுவை பகுதி சிறப்பாக இருக்கும்
மின்சார கண்ணா ,மற்றும் கோயம்புத்தூர் மாப்பிள்ளை இரண்டு படங்களும் சொல்லும் படியான வெற்றி இல்லை என்றாலும் நல்ல நகைச்சுவை உள்ள படங்கள் என சொல்லலாம் பிரெண்ட்ஸ் படத்தில் வரும் வடிவேலு மற்றும் சார்லி நகைச்சுவை இப்போது நினைத்தாலும் வயிறு வலிக்கும் .வசீகர படத்தில் அவரின் நகைச்சுவை உடன்கூடிய நடிப்பு
தன் படங்களில் தான் சம்பந்தப்பட்ட காட்சிகள் மூலமோ இல்லை மற்ற நடிகர்கள் மூலம் நகைச்சுவை காட்சிகள் அதிகம் இருக்கும் படி கதைகளில் தேர்ந்த்தெடுத்து நடித்து அவரின் முக்கிய வெற்றி என சொல்லலாம்
 


 ஆக்சன் படங்கள்
                     தெலுங்கு மொழியில் வெற்றி பெற்ற நல்ல ஆக்சன் படங்களை வாங்கி நடித்தது கூட சிறந்த வழி என சொல்லலாம் ஏன் எனில் தன்னை நம்பி பல கோடி பணம் போடும் தயாரிப்பளருக்கு லாபம் தருவதுடன் தன் திரை உலக வாழ்க்கையும் சிறப்பாக அமைய இந்த வழி அமைந்தது எனலாம்
அவரின் சிறந்த ஆக்சன் படங்களில் முக்கியமான படம் என்றால் பத்ரி ,கில்லி, போக்கிரி படங்களை சொல்லலாம் .நேரிடை படங்கள் திருமலை ,மதுரே ,சிவகாசி சொல்லல்லாம் .(திருப்பாச்சி படத்தை ஒரு படமாக கூட சேர்க்க மாட்டேன் )

நாங்க யூத் இல்ல
                   ஒரு கால கட்டத்தில் அவரின் படங்களில் சிறப்பான படங்கள் என்று சொல்லும் படியான படங்கள் காதலுக்கு மரியாதை ,குஷி, யூத்,ஷாஜஹான் ,படங்கள் என்று இவரின் இளமையான கல்லூரி சார்ந்த படங்கள் பாடல்களும் சரி ,அவரின் இளமையான நடிப்பு எல்லாம் அவரின் வெற்றி பாதையில்நல்ல படங்களாக அமைந்தன

விஜய் அவர் ஆரம்பகாலங்களில் தேர்ந்தெடுத்த படங்கள் அல்லது அவரின் அப்பாவின் படங்கள் அவரின் திரை வாழ்க்கையில் மோசமான படங்கள் என்று சொல்லலாம்
நாளைய தீர்ப்பு ரசிகன் தேவாஎன்று இவரின் ஆரம்ப கால் படங்கள் சொல்லலாம் எந்த ஒரு கல்லும் நல்ல சிற்பியின் கையில் கிடைக்கும் போதுதான் நல்ல சிலையாக மாறும்.

அதுபோல விஜய் நல்ல இயக்குனர்களின் இயக்கத்தில் நல்ல கதை தேர்ந்தெடுத்து நடித்து அவரை வைத்து படம் எடுக்க அணைத்து தயாரிப்பாளர்களும் ஆசைப்பட்டது காரணம். 

புது இயக்குனருக்கு
வாய்ப்பு தருகிறேன் என்று தன்னை நம்பி வரும் தயாரிப்பளருக்கும் சரி திரை அரங்கு உரிமையாளருக்கும் நஷ்டத்தை ஏறபடுதாமல் வெற்றி கதையில் நடித்தது கூட அவரின் வெற்றி எனலாம்
விக்ரமன் .பாசில் ,சித்திக் ,சூர்யா ,என நல்ல இயக்குனர் நல்ல கதை என தேர்ந்த்தெடுத்து நடித்து அவருக்கு என ரசிகர் கூட்டத்தை ஏற்படுத்தினார்

 கடைசியாக எனக்கு விஜய் இடம் பிடித்தவை
           *தந்தையின் உதவியுடன் திரை உலகுக்கு வந்து தனக்கென ஒரு தனியான இடத்தை தன் திறமை மூலம் பிடித்தது
*தன்னை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பளருக்கு லாபம் வரும் படியானா படங்களில் நடித்தது
*தன் படங்களின் நகைச்சுவைக்கு முக்கியதுவம் கொடுத்ததுது
*விஜய் படம் என்றால் பாடல்கள் நன்றாக இருக்கும் என்ற பெயரை இதுவரை காப்பற்றியது
*நகைச்சுவையுடன் கூடிய ஆக்சன் படங்களை தந்தது

இந்த பதிவில் விஜய் இடம் எனக்கு பிடித்த விஷயங்கள் சொல்லி உள்ளேன் .அடுத்த
விஜய் இடம் பிடித்ததும் பிடிக்காததும் பதிவில் பிடிக்காதவை பற்றி இன்றைய தத்துவம்
              "அடுத்தவன் நம்மை விட ஒரு படி முன்னே சென்று விட்டானே என்று நினைக்கும் போது நாம் இரண்டு இரண்டு படி பின்னே செல்கிறோம்
"


       பதிவு பிடித்து இருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும் 

                            HAI ARUMBAVUR


Saturday, March 27

சினிமா செய்தி தோரணம்


கதிர் இயக்கம் தெலுங்கு படத்திற்கு ரஹ்மான் இசை
காதலர் தினம் காதல் தேசம இதயம் படங்களின் இயக்குனர் கதிர் தெலுங்கு மொழியில் வருண் சந்தேஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் ரஹ்மான் இசை அமைக்கிறார் 
உத்தமபுத்திரன்
தெலுங்கு மொழில் சூப்பர்ஹிட் ஆனா "ரெடி "படம் தமிழ் மொழியில் தயாராகிறது இதில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார் இப்படத்தை அவரை வைத்து இதற்க்கு முன் யாரடி நீ மோகினி ,குட்டி படங்களை தந்த ஜவஹர் இயக்குகிறார் 
விண்ணை தாண்டி வருவாயா

சென்னை பாக்ஸ் ஆபீஸ் வசூலில் மூணு வர முடிவில் இன்னும் விண்ணை தாண்டி வருவா
யா முதல் இடத்தில உள்ளது இது வரை இந்த படம் ரூ 3.90 கோடி வசூல் பெற்று வெற்றி படமாக உள்ளது இதற்க்கு காரணம் கௌதம் இயக்கம் மற்றும் சிம்புவின் அலட்டல் இல்லாத நடிப்பு ரஹ்மான் இசை என சொல்லாம்


IIFA விருதுகள் ஸ்ரீ லங்காவில் 
இந்தியாவின் ஆஸ்கர் என சொல்லப்படும் IIFA விருதுகள் உலகத்தின் முக்கிய நாடு பலவற்றில் நடத்தப்படுகிறது .இவ்வுருதுகள் இந்த ஆண்டு ஸ்ரீ லங்காவில் ஜுன் 2,3,4 தேதிகளில் சுகததாச இண்டோர் அரங்கு கொழும்புவில் வழங்க படும் என அறிவித்து உள்ளது 


இதில் திரை கலைஞர்கள்  மற்றும் கிரிக்கெட் வீரர்கள் இடம் பெரும்20/20 கிரிக்கெட் போட்டியும் உண்டு 

இதற்க்கு முன் இந்த விருது ஆப்ரிக்கா லண்டன் துபாய் ஆஸ்திரேலியா நாடுகளில் வழங்கப்பட்டது


ரஹ்மானின் இசை ஏப்ரலில்

இந்த ஆண்டு ரஹ்மானின் இசையில் விண்ணை தாண்டி வருவாயா இசை ரசிகர்களை கலக்கியது இதை தொடர்ந்து ரஹ்மானின் இசையில் மற்றும் ஒரு இசை தொகுப்பு ராவணா வரும் ஏப்ரலில் ஆடியோ வரும் என தெரிகிறது .மணிரத்னம் இயக்கத்தில் வரும் இந்த பட பாடல்கள் உயிரே பம்பாய் போல வெற்றி அடையும் என எதிர்பார்க்கலாம் உண்மையான வெற்றி படம் என்பது 
 
சினிமா விமர்சகன் சொல்லும் "சிறந்த படம்" என்னும் கருத்தை விட
       " சராசரி மனிதன் சொல்லும் ரெண்டு மணி நேரம் படம் ஜாலியா போனது" என்ற உண்மையான வார்த்தையில் உள்ளது பதிவு பிடித்து இருந்தால் மறக்காமல் ஒட்டு போடவும்
பேஸ் புக் &ஆர்குட் முலம் ஷேர் செய்யவும்

நன்றியுடன்
                     ஹாய்  அரும்பாவூர்


Friday, March 26

செய்தியும் கோணமும் கல்வி செய்திகள்

நீங்கள் கொடுக்கும் தானத்திலே சிறந்த தானம் கல்வி தானம் என்பேன்

அதுதான் மனிதன் உள்ளே இருக்கும் மிருகத்தை அழித்து மனிதனை மனிதனாக வாழ வைக்கும்

ஒரு கல்வியின் அருமை அதை கற்றவனை விட கற்க வாய்ப்பு இல்லதவனுக்குதான் அதிகமாக தெரியும்


செய்தி 1
ஸ்ரீ வைகுண்டம் அருகே பேட்துரைச்சாமிபுரத்தில் ஊராட்சி ஒன்றிய காமராஜர் தொடக்கப்பள்ளி கட்டிட மேற்கூரை உத்திரம் இடிந்தது விழுந்து சுவர் கீறியது .நள்ளிரவில் நடந்ததால் மாணவர்கள் தப்பினர்
முழு செய்தி படிக்க இதை அழுத்தவும்


சராசரி குடும்பங்கள் நம்பி இருப்பது அரசு பள்ளிக்கூடங்களை நம் வருங்கால இந்தியாவை வழி நடத்தும் மாணவர்களின் கல்வியை சரியான முறையில் மட்டும் இல்லாமல் பாதுகாப்பாக இருக்க அரசு முயற்சி செய்ய வேண்டும் இது போன்ற சிறு சிறு தவறுகள் இல்லாமல் பார்த்து கொள்வது அரசின் கடமை


செய்தி 2கும்மிடிபூண்டிர் அருகே தங்குவதற்கு வீடில்லாமல் மேம்பாலத்தில் அடியில் படிக்கும் மாணவர்கள்

ஆரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி காரணமாக அகற்றப்பட 50 குடும்பதினர் வேறு எங்கும் வீடு இல்லாத காரனத்தால் பெரியபாளையம் மேம்பாலத்தின் அடியில் தங்கி உள்ளனர்


அதுவும் தேர்வு நேர காலத்தில் அந்த மாணவர்கள் படிப்புக்கு என்ன செய்வார்கள் அவர்களின் வாழ்க்கை முடிவை மாற்றும் இறுதி தேர்வு வரும் இந்த நேரத்தில் அரசு இதற்க்கு உடனடி தீர்வு காண வேண்டும் பணம் இருப்பவர்கள் அவர்கள் குழந்தைகளை தனியார் பல்லில் சேர்த்து விடுவார்கள் ஆனால் ஆதற்கு வசதி இல்லாத இந்த ஏழை மாணவர்கள் நிலை அரசு என்ன செய்யும்

செய்தி 3


பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் முதல் தாள் தேர்வில் கேள்வி தாள் மாற்றி கொடுக்கப்பட்டது

இதை என்னவென்று சொல்வது முன்பு சம்பளம் போதவில்லை என்று சொன்னவர்கள் இன்று
எல்லா வசதியும் பெற்று இருக்கும் போது ,இப்படி ஒரு குளறுபடி யாரோ ஒருவர் செய்யும் தவறு அந்த மாணவர்களின் எதிர்காலம் என்னவாகும் என்று நினைத்து பார்க்க வேண்டும்
உலகத்திலே மிகவும் புனிதமான வேலை என்றால் கல்வி கற்று கொடுப்பது  ஒரு மனிதனை குடும்பத்தை ஊரை தேசத்தை மாற்றும் சக்தி கல்விக்கு மட்டும் உண்டு அப்படிப்பட்ட கல்வி துறையில் இது போன்ற சிறு சிறு தவறுகள் பெரும் களங்கத்தை ஏற்படுத்தும் என்பதே உண்மை

இலவசமாக கொடுக்கும் எந்த பொருளுக்கும் ஒரு வரை முறை மட்டுமே மரியாதை ஆனால் கல்வி பல தலைமுறை தாண்டி நிற்கும்

எனவேகல்வி சம்பந்த பட்ட இந்த் விசயங்களில் தவறு இல்லாமல் பார்ப்பது அரசின் முக்கிய கடமை

இளநீர், மோர் மற்றும் பெப்சி கோலா

இப்பதிவு எழுத மூல காரணமாக இருந்த வெண்ணிற இரவுகளுக்கு நன்றி

உலக நியதி
உலகம் என்பது இப்போது ஒரு கிராமம் ஆகா மாறி விட்டது அமெரிக்காவில் ஒருவன் தும்மினால் அமிஞ்சிகரையில் கேட்க்கும் காலம் இது

சின்ன தத்துவம்
உலக கிழவியை விட உள்ளூர் அழகியே மேல்

இப்போ நான் சொல்ல வர விஷயம் என்ன வென்றால்

கோக கோல மற்றும் பெப்சி இரண்டையும் நிறுத்த வேண்டும் என்று ஒரு பலமான எதிர்ப்பு கிளம்பி உள்ளது
கேரளா பிளாசிமடா தமிழகத்தில் செங்கல்பட்டு அருகே உள்ள மாமண்டூர் பாலாற்று தண்ணீரை உறுஞ்சியது பெப்சி. இதை போல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோக் கம்பெனி ஆரணி ஆற்றை ஒன்றும் இல்லாமல் ஆக்க பார்க்கிறது

இப்படி நம் மண்ணில் ஆதார சுருதியாக உள்ள நீரை உறிஞ்சி விவசாயம் இப்போது இல்லை
எப்போது தங்க முட்டை இடும் வாத்தை ரியல் எஸ்டேட் என்னும் அரக்கன் இடம் கொடுத்தோமோ அன்றே
நம் மண்ணின் ஆதார சுருதியான விவசாயம் அழிவை நோக்கி செலுத்த ஆரம்பித்து விட்டோம்

இப்போது நான் சொல்ல வந்த விஷயம் உலகம் என்பது நாம் அனைவரயும் சார்ந்தே இருக்க வேண்டி உள்ளது அதுதான்
நியதி கூட

இல்லை நான் இந்தியா பொருளை மட்டுமே பயன்படுத்வேன் என்று கூறினால்
அதை போல மேலை நாட்டவர் நம் பொருளை வாங்க மறுத்தால் நம் ஏற்றுமதி என்னாவது .நம் தயாரிக்கும் பொருளை நாம் மட்டுமே பயன்படுத்தும் நிலை வரும்

இன்று நம் மக்கள் அதிகமான பேர் வெளிநாடு செல்ல காரணம் என்ன இங்கு உழைப்புக்கேற்ற ஊதியம் சரியாக கிடைத்தால் ஏன் வெளிநாடு என்ற மோகம் வர போகிறது

ஊரிலே பிழைக்க சரியான வழி .சமச்சீர் சம்பளம் என்பது இருந்தால் யாரும் வெளிநாடு என்பதை நினைத்து கூட பார்க்க மாட்டார்கள்
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு சம்பளம் தனியார் பள்ளி ஆசிரியகர்களுக்கு ஒரு சம்பளம் என்று இருக்கும் போது குறைவான சம்பளம் வாங்கும் அவனின் மனநிலை எப்படி இருக்கும்
அவன் தன சூழ்நிலை மாற நினைப்பது இயல்பு அதற்க்கு அவன் தேர்ந்தெடுக்கும் களம வெளி மாநிலம் வெளி நாடு இங்கு தனியார் பள்ளியிலோ அல்லது நிறுவனத்திலோ பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு அவன் அடையும் நிலையை வெளிநாட்டு வாழ்க்கை விரைவில் தருகிறது
இந்த விஷயம் எல்லோருக்கும் சரிப்பட்டு வராது என்று நீங்கள் நினைப்பது சரி
ஆனால் இதே விசயம் பல பேருடைய வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளதே .அவன் வாழக்கை வீணாக போனாலும் அவன் வரும் தலைமுறைக்கு இந்த பணம் பயன் படுகிறதே
இந்திய அரசுக்கு மிக பெரும் உதவியாக இருப்பதே இந்த அந்நிய செலவாணி வருமானம் கூடத்தானே

யாரும் வேண்டும் என்று இந்த வெளி நாட்டு வாழ்க்கையை தேர்ந்தெடுப்பது இல்லை அவர்கள் படிப்பு தொழிலுக்கு ஏற்ற சரியான சூழ்நிலை மற்றும் சம்பளம் கருதியே இந்த வெளிநாட்டு வாழ்க்கை தேர்ந்து எடுக்கின்றனர்

அதே போல  கோலா மற்றும் பெப்சி
 நம் மண்ணில் எத்தனையோ தரமான தயாரிப்புகள் உள்ளன
நம் மண்ணின் ஆதார சுருதியான விவசாயத்தை சார்ந்த மோர் இளநீர் நுங்கு போன்றவைகள்

இன்றைய இளைய தலைமுறை குடிப்பதை கௌரவ குறைச்சல் என்று நினைக்க காரணம்
அயல் நாட்டு நிறுவனங்கள் செய்த மூளை மழுங்கடிக்கும் விளையாட்டு சினிமா கலைஞர்களின் ஆடம்பர விளம்பரம் தவிர வேறு எதுவும் இல்லை .இவர்களுக்கு தேவை கோடிக்கணக்கான பணம் மட்டுமே இதனால் ஏற்படும் பாதகம் பற்றி இவர்களுக்கு என்ன கவலை

நாம் ஒவ்வொரு முறை மோர் குடிக்கும் போதும் ஒரு விவசாயி நன்றியுடன் நம்மை பார்ப்பான் .இளநீர் விற்கும் சாலையோர வியாபாரி இடம் நாம் கொடுக்கும் பணம் அவன் வீட்டில் அடுப்பெரிய உதவியாக இருக்கும்

நான் அந்நிய பொருள்களை முழுவதும் ஆகா புறக்கணியுங்கள் என்று சொல்ல வில்லை
ஆனால் அந்த பொருள்களை நாம் பயன் படுத்துவதால் நம் இந்திய மண்ணிற்கு வருங்கால இயற்கைக்கு நாம் எவ்வளவு பெரும் தீமை செய்கிறோம் என்று மட்டும் நினைத்து பாருங்கள்

" வரும் கோடை காலம் முழுவது மோர் ,மற்றும் இளநீர் மட்டும் குடிப்போம் என்று சபதம் எடுப்போம் அனைவரிடம் இதை எடுத்து செல்வோம் "


 அதிகமான அளவில் இந்திய பொருளை பயன்படுத்துவோம் .

    இந்த பதிவு சொல்ல வந்த நோக்கம் புரிந்தால் மட்டும் வாக்களிக்கவும் இல்லை என்றால்
என்ன தவறு என்று பின்னுட்டம் இடவும்

         உலக வாழ்க்கையில் நாம் அனைவரயும் சார்ந்தே இருக்க வேண்டும் ஆனால் அதிகமாக சார்ந்து இருக்க வேண்டாம் என்பதே என் கருத்து 

Wednesday, March 24

புகைப்பட பரிமாற்ற தளங்களும் சில தகவல்களும்

இன்று இரு விதமான தகவல்கள் அடங்கிய ஒரு பதிவு
முதல் தகவல் இந்த விஷயம் எலோருக்கும் தெரிய வாய்ப்பு இல்லை அப்படின்னு நான் நினைக்கிறேன்

(அது அந்த காலம் எங்களுக்கு உன்னை விட அதிகம் தெரியும் என்று சிலர் சொல்வது எனக்கு கேட்கிறது நன்றி )

இரண்டாவது இது போன்ற ஒரு தளத்தில் என் நண்பர் அவர் மனைவி குடும்பம் என்று நூற்றுக்கு மேலான போட்டோ ஏற்றி என்னிடம் சொன்னார் போட்டோ பக்கெட் என்று ஒரு தளம் இருக்கு அதில் நம் போட்டோ எல்லாம் ஏற்றி வச்சா ரொம்ப பாதுகப்ப இருக்கும் யாரும் பார்க்க முடியாது என்று

நானும் அப்படியா சார்?  ஒரு நாள் என் ரூமுக்க வாங்க என்று அழைத்து அந்த போட்டோ பக்கெட் தளத்தில் தேடு என்ற இடத்தில அவர் பெயரை மட்டும் தட்டினேன் அவர் ஏற்றி வைத்த  377 போட்டோக்களும் அவருக்கு முன் .

இதில் அந்த நண்பர் தவறு ஏதும் இல்லை அவர் செய்ய நினைத்தது இது போன்ற தளங்களில் புகைப்படம் வைத்தால் பாதுகாப்பாக இருக்கும் நாம் விரும்பும் நேரத்தில் பார்க்கலாம் என்பது

இதில் அந்த தளத்தில் எந்த தவறும் இல்லை இவர் அதில் உள்ள ஒரு வசதியை மட்டும் பயன்படுத்த மறந்து விட்டார்

அது நம் புகைப்படம் நம் மட்டும் பார்ப்பதா அல்லது யாரும் பார்க்கலாமா என்று உள்ள விசயத்தில் பப்ளிக் என்று இருப்பதை பிரைவேட் என்று மாற்ற மறந்து விட்டார்லாகின் செய்த பின் அக்கௌன்ட் செட்டிங்க்ஸ் சென்று
பப்ளிக் என்பதை ப்ரைவேட் என மாற்றவும்
இது போன்ற தளங்களில் முடிந்த அளவிற்கு நம் சார்ந்த புகைப்படம் வைப்பது தவறு இல்லை
இதில் நம் குடும்ப பெண்கள் புகைப்படம் இல்லாமல் இருக்குமாறு பார்த்து கொள்ளவும்

இனி சில சிறந்த புகைப்பட பரிமாற்ற தளங்கள் உங்குக்காக
போட்டோ பக்கெட்


இதில் நம் நூற்றுக்கணக்கான புகைப்படங்கள் ஏற்றலாம் அதை நம் விரும்பும் நபர்களுக்கு மெயில் வடிவில் ஓர்குட் பேஸ் புக் போன்ற தளங்களுக்கு பரிமாற்றம்  செய்யலாம்
Visit photobucketஇதை அழுத்தவும்
 
புகைப்பட பரிமாற்றம் செய்ய சிறந்த தளம்
பிக்சா அஸ்

இதுவும் போட்டோ பக்கெட் போன்ற தளம்
இதை அழுத்தவும்
Visit pixa.usஇதை அழுத்தவும்
 

TINY PIC BEST 


இதை அழுத்தவும் Visit tinypic


எந்த ஒரு தளத்திலும் புகைப்படம் ஏற்றும் முன் அந்த புகைப்படம் எந்த அளவிற்கு முக்கியம் என்று ஒரு முறை யோசித்து ஏற்றவும்


கடந்த பதிவில் செய்தியும் கோணமும் எழுத்து பிழைகளை சுட்டி காட்டிய அன்புடன் மல்லிகா அவர்களுக்கு நன்றி

வேலன் சார் வழங்கிய கணினி விளையாட்டில் என் புகைப்படம் இருப்பதை பார்த்து வடிவேல் சொல்ற மாதிரி "அப்படியே ஷாக்கயிட்டேன்"
நன்றி வேலன் சார்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்

எனக்கு தொடர் ஆதரவு அளிக்கும் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி

                 அன்புடன் உங்கள்
                                                      ஹாய் அரும்பாவூர்

Tuesday, March 23

செய்தியும் கோணமும் 24 /03/10


செய்தி 1
    தமிழகத்தில் 86 கிராமங்களில் புகையிலை பொருள்களை விற்பதில்லை கிராம மக்கள் முடிவு செய்து உள்ளனர்

நிச்சயம் வரவேற்க வேண்டிய விஷயம் புகையிலை சார்ந்த விசயங்கள் அதை புகைப்பவரை விட அவரின் அருகில் இருக்கும் நபர்களை அதிகம் பாதிக்கும்
    கிராம மக்கள் எடுத்த இந்த முடிவை ஏன் அரசு எடுக்க கூடாது
நடிகர்கள் சிகரட் குடிப்பதை பற்றி பேசி வீண் விளம்பரம் தேடும்  நபர்கள் ஏன் இந்த
விசயத்தை பற்றி விளம்பரம் செய்ய கூடாது


செய்தி 2
   தேர்வு அறைகளில் சூ பெல்ட் டை அணிந்து வர தடை
என்ன கொடுமை சார் மாணவர்கள் தேர்வு அறையில் பிட் அடிக்கணும் என்றால் எப்படியும் அடிப்பார்கள் இது போன்ற சட்டம் என்னவோ சூ பெல்ட் டை அணிந்து வரும் மாணவர்கள் மட்டும் பிட் அடிப்பது போல  உள்ளது

 இதே நிலை போனால் சட்டையில் பாக்கெட், உள்ளே பனியன் அணிய கூடாது என்று சட்டம் வந்தாலும் வரும் போலசெய்தி 3
  300 கோடியில் தயாராகும் 4 படங்களில் ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார்

   சும்மாவா பிக் பி வீட்டின் மருகல் இல்லையா ? கவர்ச்சி மட்டும் காட்டி கொண்டு இருந்தால் இந்நேரம் வீட்டிற்கு அனுப்பி இருப்பாங்க நடிப்பு என்பதையும் சேர்த்து கலக்கிங்கவங்க இல்லையா ?
இருவர் படத்தில் அவரின் நடிப்பு போதுமே
  இந்த ராணி எந்திரன் ராணி அல்லவோ

 செய்தி 4
  நித்யானத்த  உடன் மேலும் ஒரு நடிகை தொடர்பா ?

   போதும் செத்து போன பாம்பை மேலும் அடித்த அது வீரம் இல்லை நாட்டில் வேறு எத்தனையோ விஷயம்  இருக்கு 


        கலக்கல் செய்தி
வளைகுடா
இந்தியர்கள் 2 லட்சம் கோடி அனுப்பினர் 

    இந்தியாவிற்கு வளைகுடா வாழ்
இந்தியர்கள் 2 லட்சம் கோடி அனுப்பி உள்ளனர் இது மற்ற நாட்டில் வாழும் இந்தியர்கள் அனுப்பியதை விட அதிகம்
சந்தோச பட வேண்டிய விஷயம் ஆனால் இதே வளைகுடா நாட்டில் கட்டிட வேலை மற்றும் கடினமான வேளைகளில் சரியான சம்பளம் இன்றி வாடும் மக்களுக்கு
பிலிப்பைன் அரசாங்கம் கொண்டுள்ள சட்டம் போல நம் மக்களுக்கும் ஒரு சம்பளம் நிர்நைக்க வேண்டும் அதற்க்கு கீழ் சம்பளம் வழங்கினால் வேளைக்கு ஆட்களை அனுப்ப மாட்டோம் என்று சட்டம் கொண்டு வர வேண்டும்   அடுத்தவன் சொல்ற தத்துவம் கேட்க்க நல்ல இருக்கும் பசிக்கு உதவாது
    உழைத்தால் தான் உனக்கு சோறு  செய்தியும்  கோணமும் பகுதி பிடித்து இருந்தால் பின்னுட்டம் மூலம் தெரிவிக்கவும் பிடிக்கவில்லை என்றாலும் ஏன் என்று தெரிவிக்கவும் இதை உடனே நிறுத்தி விடுகிறேன்

உங்கள் ஆதரவை நாடி
                                               ஹாய் அரும்பாவூர்

Monday, March 22

பழைய பாடல்களும் நினைவுகளும் (ஹிந்தி)

சில பாடல்கள் கேட்க்கும் காலம் நமக்கு நினைவில் இருப்பதில்லை ஆனால் அந்த பாடல் ஏற்படுத்தும் தாக்கம் மீனும் அந்த பாடல்களை கேட்க்கும் பொது மீண்டும் நம்மை அந்த கால சூழ்நிலைக்கே இட்டு செல்லும் அப்படிப்பட்ட சியல் பாடல்கள் உங்களுடன் இந்த பாடல்களை நான் வீடியோ வடிவில் பார்க்க வில்லை ஆனால் பலமுறை வானொலிகளிலும் பழைய கேசட் பிளேயர்களில் கேட்டு உள்ளேன்
என்ன கொடுமை சார் இப்போ கேசட் என்றால் சிடி என்று மாறி விட்டது எல்லாம் தொழினுட்ப முன்னேற்றம்

ஆனாலும் இந்த பழைய பாடல் இன்றும் அதே புத்துணர்ச்சியுடன் தான் உள்ளது

அந்த வகையில் என்னை கவர்ந்த சில பழைய ஹிந்தி பாடல்கள்

பாபி படம் இப்போதான் தொலைக்கட்சியில் இதை காதல் படம் என்பதை விட கவர்ச்சி படம் என்பதே சிறந்தது

படமா முக்கியம் அதில் வந்த பாடல்" மெயின் சாயர் நஹின் "
அர்த்தம் முழுசா தெரியாவிட்டாலும் பாடல் இசை குரல் ஏற்படுத்தும் மயக்கம்
இது ஒரு ரொமாண்டிக் ஆனா பாடல் என்ன அருமையான் குரல்
ஒரு முறை கேட்ட மறுமுறை கேட்க்க வைக்கும்
"ஹம் தும் ஏக் கம்ப்ரமே "
தமிழில் வந்த விடுதலை படத்தின் ஒரிஜினல்
"க்யா தேக் தெ ஹோ "
என்னத்தை பார்க்கறது
லட்சுமி இப்படி கூட நடிச்சாங்கள என்று சொல்ல வைக்கும் படம்
பார்க்க கொள்ளை அழகு
"தில் க்யா கரே "
அமிதாப் இந்த வயதிலும் இந்த அளவிற்கு நடிக்க காரணம் அவருக்குள் இருக்கும் உண்மையான கலைஞன் இன்னும் இளமையாக இருப்பதே காரணம்
அமிதாப் எவர் கிரீன் ஹிட்
"கபி கபி தில் மெய்ன்"
இந்த பாடல் என்ன படம் என்று தெரியாது ஆனால் குரலும் இசையும் நம்மை ஒரு தனி உலகத்திற்கு இட்டு செல்லும்
கே ஜே யேசுதாஸ் பாடகர்
"கோரி தேரா காவும் பட "


இன்னும் சில பழைய பாடல்கள் இருக்கு அவைகள் விரைவில்

"ஒரு உண்மையான இசை என்பது அந்த மொழி சார்ந்த ஒருவனை மட்டும் ஆஹா ஓஹோ என்று புகழ்வது இல்லை மொழி தெரியாத ஒருவன் கூட அதை ரசிக்கும் வகையில் கொடுப்பவனே உண்மையான கலைஞன்"
எப்படி என் பன்ச்

பாட்டு புடிச்சி இருந்த நெட்ல பாட்டு நல்ல முறையில் ஓடினா பாட்டை நிம்மதியா கேட்டா? மட்டும் வோட்டு போடுங்க பின்னுட்டம் இடுங்க வர்ட்டா

Sunday, March 21

செய்தியும் கோணமும்செய்தி 1

ஐ பி எல் கொச்சி மற்றும் புனே நகரத்தை அடிப்படையாக கொண்ட இரு அணிகள் அறிவிப்பு


செய்தி 2
    கொச்சி அணி சார்பாக விளையாட விருப்பம் ஸ்ரீசாந்த்

இது வரை கிரிக்கெட் விளையாட்டு என்றாலே பிடிக்காது  நாங்கள் எல்லாம் புட் பால் மட்டுமே பாப்போம் என்று கூறி வந்த கேரளாகாரன் ஸ்ரீ சாந்த் விளையாட ஆரம்பித்த பின் இந்திய அணி வெற்றி பெறுகிறதோ இல்லையோ ஸ்ரீ சாந்த் எவ்வளவு அடித்தார் எவ்வளவு விக்கெட் எடுத்தார் என்பதுதான்
      இனி அவர்கள் மாநிலம் சார்பாக ஒரு அணி நல்ல விஷயம் தான் ஆனால் இனி அவர்கள் வீர பிரதாபங்கள் கேட்க முடியாது

 அதற்குள் ஸ்ரீ சாந்த் ஒரு அறிக்கை வெளியுட்டுள்ளார் என் மாநிலம் சார்பாக உள்ள அணியில் விளையாடுவது எனக்கு மகிழ்ச்சி என்று
இது  தமிழர் மலையாளி என்றால் ஒரு பாகுபாடு அதிகமா இருக்கும் .
இனி இந்த இரு அணி விளையாடும் ஆட்டம் இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் போலதான்

 கொச்சி அணியில் சேர்க்க விட்டால் அழுதே சாதித்து விடுவார் 

செய்தி 3
 காலாவதியான மருந்து பொருட்களை விற்ற கும்பல் கைது
           மக்கள் கடவுளுக்கு அடுத்ததாக நம்புவது மருத்துவர் அவர்களை தான் அவர்கள் எழுதி கொடுக்கும் மருந்து தங்கள் உடல் நிலைசரி ஆக்கும் என்று தான் அதை பயன் படுத்துகின்றனர் ஆனால் அந்த மருந்து  பொருட்களை காசு சம்பாதிக்கும் ஆசையில் இப்படி காலாவதியான மருந்து விற்கும் இவர்களை எப்படி தண்டிப்பது
சட்டம் போட்டு திருத்துவதை விட இவர்களாக திருந்தினால் மட்டுமே உண்டுசெய்தி 4
பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறார் ஏ.ஆர்.ரகுமான். இதுபற்றி அவர் கூறியதாவது: இந்த வருடம் முழுவதும் பிசியாக உள்ளேன்.

  அப்படியே கொஞ்சம் அதிகமா  தமிழ் /ஹிந்தி படங்களுக்கு இசை அமையுங்க


தண்ணிர் சிக்கனம் தேவை  இக்கணம்

தண்ணிர் தினம் 


செய்தி பற்றி ஏதும் நிறை குறை இருந்தால் பின்னுட்டம் இடவும்
மறக்காமல் உங்கள் வாக்கை இடவும்     

Saturday, March 20

ஹாய் அரும்பாவூர் நூறாவது பதிவு

அப்படி இப்படி என்று தத்தி நானும் நூறாவது பதிவு போட்டுவிட்டேன்


என் மனதிற்கு எட்டிய வரையில் இது எண்ணிக்கையில் மட்டுமே
நூறாவது பதிவு நினைத்தாலே பிரமிப்பாக இருக்கு இதற்க்கு என் முதல் நன்றி திரு கூகுலப்பருக்கு(GOOGLE)


முதலில் இணைய வசதி என்றாலே மிகவும் கஷ்டம என்று நினைத்த எல்லோரையும் ஒரு நொடியில் ஜி பூம்ப பூதம் போல எல்லோருக்கும் வலைபதிவு அதுவும் எளிய வசதிகளுடன் என்னும் பொது பிரமிப்பாக இருக்கு


ஒரு நாளைக்கு எத்தனை பதிவுகள் எத்தனை ஸ்டார் பதிவர்கள்
எல்லோருக்கும் ஒரு முறை வாய்ப்பு கிடைத்தால் விகடன் குமுதம் இதழ்களுக்கு ஆசிரியர் ஆகா இருக்கும் தகுதி உள்ளோர் எத்தனை பேர்
முகம் தெரியாத நபர்கள் எத்தனை பேர் எனக்கு வாக்களித்து என் எழுத்து பதிவு பல பேரை சென்றடைய உதவி புரிந்தோர்


என்னை மதித்து என் எழுத்துக்களுக்கு பின்னுட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி
மிக முக்கியமாக நான் நன்றி சொல்ல வேண்டிய நபர்கள் தமிழிஷ் மற்றும் தமிழ் 10 எழுத்து என்பது திறந்து பார்க்கும் போதுதான் அதன் அர்த்தம தெரியும் இல்லை என்றால் மூடி வைத்த புத்தகம் எப்படி ஒரு வெள்ளை பேப்பருக்கு சமமோ அது போல் நம் எழுதி வைத்த எழுத்து எல்லா பேரையும் சென்றடைய உதவி புரிந்த தமிழிஷ் மற்றும் தமிழ் 10, உலவு போன்ற இணைய திரட்டிகளுக்கு நன்றி


தமிழிஷ் மற்றும் தமிழ் 10 திரட்டிகளில் என் பதிவு முன்னே வர முக்கிய காரணம் உங்கள் வாக்கு மட்டுமே அதற்க்கு ஒரு பெரும் நன்றி


மற்றும் என்னை மதித்து தொடரும் நண்பர்கள்
@ tamilwebmedia.com  @ sankar ganesh @ Dr PKandaswamy PhD @ nige k
@Senthil


@மலர் @வன்னி தகவல் தொழில்நுட்பம் ,@Kaviulagam
@Selva Kumar @PrabhagarRamasamy @Arnie@செ.சரவணக்குமார்@vijaya @A.சிவசங்கர்@guna


@Jegankumar.SP@சங்கர் @எப்பூடி .@Digital King @cinema pulavan @suresh @viswam
santhosh kumar


@ரெத்தினசபாபதி@santhosh kumar@பூங்குன்றன்@Sulfikkar Ali@உலவு.காம் @Dineshkumar Balasundaram
@வெற்றி@reekaZ@karthik n@வெண்ணிற இரவுகள்..@jeyakannan Ramaraj@mint@yesuwin@gmail.com


@raja mohamed@Thenammai Lakshmanan@சும்மா@sabesm@naleer@mubarak123@ass
அனைவருக்கும் நன்றி இனி தொடர போகும் நண்பர்களுக்கும் நன்றி
இனி வரும் காலங்களில் சிறப்பான பதிவு போடுவேன் என்று நம்பிக்கையில்
நம்பிக்கைதானே சார் வாழ்க்கை


சில நடிகர் இயக்குனர் இசை அமைப்பாளர்களின் நூறாவது படம்
@ரஜினி                                    = ஸ்ரீ ராகவேந்திரா
@கமல்                                     =  ராஜ பார்வை
@விஜய காந்த்                      =  கேப்டன் பிரபாகரன்
@ எம் ஜி ஆர்                          = ஒலி விளக்கு
@சிவாஜி                                 =நவராத்திரி
@எம் எஸ் விஸ்வநாதன் =அன்பே வா
@ஜெமினி                               = சீதா
@இளையராஜா                    = மூடு பனி
@பிரபு                                         =ராஜ குமரன்
@சத்யா ராஜ                          =வாத்தியார் வீட்டு பிள்ளை
@முத்துராமன்                       = புன்னகை
@சிவகுமார்                                 =  ரோசப்பு ரவிக்கைகாரி
@ஜெய் சங்கர்                              =  இதயம் பேசுகிறது


செய்தி 1

ஏழை பெண்கள் திருமண உதவி தொகை 25 ஆயிரமாக உயர்வு


மிகவும் நல்ல செய்தி ஆனால் அதே நேரத்தில் ஏழை பெண்களின் திருமணம் வரதச்சனை எனும் ஒரு அவல செயலால் தடைப்படுவதை தடுக்க ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த சிறு தொகை ஒதுக்கலாமே


செய்தி  2

குடிசை விடுகள் காங்க்ரிட் வீடுகளாக மாற்ற ருபாய் 1800கோடி


இது மிகவும் நல்ல செய்திதான் ஆனால் அந்த வீடுகள் அதிக நாள் நீடித்து வந்து அதில் வாழும் மக்களுக்கு சந்தோஷம் தர நேர்மையான நல்ல ஒப்பந்த காரர்களை அவ்வீடுகள் கட்ட பணம் ஒதிக்கினால் அதில் வாழ போகும் மக்கள் சார்பாக மனமார வாழ்த்துவோம் பதிவு பிடித்து இருந்தால் உங்கள் வாக்கை இடவும்


உங்கள் எண்ணத்தில் இருப்பதை மறக்காமல் பின்னூட்டம் இடவும் நன்றியுடன் அரும்பாவூர்

Wednesday, March 17

சாமியின் மன அலைகள் VS ஹாய் அரும்பாவூர்

சிரிப்பு படங்கள் பற்றி அடுத்து என்ன படத்தை பற்றி போடலாம் என்று ஒரே குழப்பம் ஒன்றும் இல்லை அது எல்லாம் சும்மா என் கணினியில் சில ஹார்ட்வேர் பிரச்சினை அதனால் இரண்டு நாட்களாக பதிவு போடுவது தமிளிஷ் வாக்களிப்பது எல்லாம் தடை

நம்ம சாமி சார் அவர்கள் "சாமியின் மன அலைகள்" பதிவில் ஒரு பின்னுட்டம் கேள்வி கேட்டு இருந்தேன் ஒன்றும் இல்லை மழை வராமல் போனதிற்கு கருவேல மரம் கூட ஒரு காரணமா ? என்று
அதற்க்கு கக்கு மாணிக்கம் சிறு விளக்கம் அதே பதிவில் பின்னுட்டம் மூலம் கொடுத்து இருந்தார்

பிரச்சினை இங்கு இல்லை சாமியின் மன அலைகள் அடுத்த பதிவில் இதை பற்றி விளக்கம் கொடுக்கம் போது சிறு தவறு காரணாமாக பெயர் மாறி விட்டது இதை இதை பற்றி படிக்க இதை அழுத்தவும்

 இந்த வயதிலும் சிறு பயன் போல சுறு சுறுப்பாக பதிவு எழுத வேண்டும் என்ற அவரின் ஆசை நிச்சயம் பாராட்ட பட வேண்டிய விஷயம் அவர் பதிவுக்கு வாழ்துக்கள்

பழனியப்பன் சார் தவறுக்கு வருந்துகிறேன் உங்கள் ஆதரவு எனக்கு தேவை

கக்கு மாணிக்கம் சார் தெரியாத விசயதை புரிய வைத்ததிற்கு வாழ்த்துக்கள்


செய்தி1
கந்தஹார் படத்தில் இருந்து சூர்யா விலகல்          வாழ்த்துக்கள் சூர்யா நல்ல வேலை தப்பிச்சிங்க மலையாளி படத்தில் நடிப்பது பிரச்சினை இல்லை ஆனால்
இந்த படத்தில் அமிதாப் இருக்கார் சூர்யா இருக்கார் இது மலையாள படம் என்கிறதால தான் அமிதாப் நடிக்கிறார் என்ற சில மலையாளி பீலா தாங்க முடிய வில்லை
திறமை இருக்கோ இல்லையோ நல்ல ஒற்றுமை இருக்கு அதுதான் மலையாள ஸ்பெஷல்செய்தி 2
மீண்டும் டைடானிக் 3D யில்                          உலகம் முழுவதும் வசூல் சாதனை புரிந்த டைடானிக் அதன் 100 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மீண்டும் புது தொழிநுட்பம் பயன் பாடு மூலம்  APRIL /15/2012 அன்று   3D யில் வருகிறது
இன்னும் என்ன என்ன வசூல் சாதனை செய்ய போகிறதோ வாழ்துக்கள் கமரோன்
 

ஒரு விஷயம் நடக்கவில்லை என்றால் விதி
நம்மால் நடக்க வில்லை என்றால் சதி 

        

Sunday, March 14

மாடிப்படி மாது "எதிர் நீச்சல்"

பாமா விஜயம் படத்தில் வந்த அதே கூட்டணி
ஆனால் அதை விட நகைச்சுவை அதிகம் உள்ள படம்


பாடல்களும் சரி படம் ஆக்கப்பட்ட விதமும் சரி உங்களை சிரிப்பு கடலில் ஆழ்த்துவது மட்டும் இல்லாமல் சிந்திக்க வைக்கும் மாடிப்படி மாதுவின் கதைதான் இந்த எதிர் நீச்சல்

கே பாலசந்தருக்கு சிறப்பாக வரும் நகைசுவை திரைக்கதையில் சிந்திக்க வைத்து இருப்பார்

படத்தின் ஆரம்பத்தில் வரும் சீர்காழி சிதம்பரம் பாடிய 'வெற்றி வேண்டுமா போட்டு பாரடா எதிர் நீச்சல் " பாடலாக இருக்கட்டும் அதில் வரும் ஒவ்வொரு வரியும் சிந்திக்க வைக்கும் வாலி வரிகள்

இப்படத்தில் நாகேஷ் ஒரு தனி ஆவர்த்தனம் செய்து இருப்பார்
நகைச்சுவை துக்கம் சோகம் காதால் இயலாமை வெற்றி என ஒரு நகைச்சுவை நடிகன் ஒரு நவரச நடிகனாக மாறி இருப்பார்

படத்தின் ஆரம்ப கட்டத்தில் ஒவ்வொரு கதா பாத்திரத்தையும் அறிமுகம் செய்யும் காட்சியாக இருக்கட்டும்
மாது என்னும் அப்பாவி தன படிப்பிற்காக அவமானங்களை தாங்கி கொண்டு அவர் செய்யும் வேலைகளை பார்க்கும் போது நமக்கு அந்த பாத்திரம் மீது பரிதாபம் வரும் அதையும் மீறி அந்த பாத்திரம் அவமானங்களை வெற்றி கள்ளகாக மாற்றி வெற்றி அடையும் போது நாமும் நமை அறியாமல் அந்த மாது கிரேட் என சொல்ல சொல்லும்


ஸ்ரீ காந்த் சௌகர் ஜானகி ஜோடி படத்தில் அடிக்கும் லூட்டி தனி காமடி ஆகா இருக்கும் காட்சிகள் ஒவ்வொரு விசயத்தையும் சினிமா உடன் சம்பந்தபடுத்தி பேசும் அவரின் காட்சிகள் கல கல
இப்போது உள்ள சீரியல் பத்தி பெண்கள் பேசுவது போல் அப்போது சௌகார் பேசி இருப்பர் அவர்க்கு சரியான வேகத்தில் செல்லும் கதாபாத்திரம் ஸ்ரீ காந்த் ஒரு அப்பாவி கணவனாக கலக்கி இருப்பார்
அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேள பாடல் மூலம் பெண்கள் போராமி கொள்ளும் விஷத்தை நகைச்சுவையாக சொல்லி இருப்பர்
பட்டு மாமியாக வாழ்ந்து இருப்பார் சௌகார்
கடைசி வரை படத்தில் முகத்தை காட்டாமல் ஆனால் படத்தில் முக்கிய பாத்திரமாக இருமல் தாத்தா கேரக்டர் இயக்குனர் சாமர்த்தியம்


இடையில் கட்டப்படும் திருட்டு பட்டதை அந்த நேரத்தில் நாகேஷ் முகத்தில் காட்டும் அந்த இயற்கையான அப்பாவி முகம் வாவ் எப்பேர்ப்பட்ட மேதை அவர்
காதல் காட்சியில் என்ன பேசுவது என்று தெரியாமல் ஔரகசிப் அக்பர் என்று காதலிஇடம் பாடங்கள் பற்றி பேசி எனக்கு இவ்வளவு தான் தெரியும் என்று சொல்லும் போது ஆகட்டும்
ஒவ்வொரு காட்சியும் நகைச்சுவை தோரணத்தை கட்டி இருப்பார் இயக்குனர்

எம் எஸ் விஸ்வநாதன் ஒரே பாடல் மட்டும் இசை அமைத்து இருப்பார்
இப்படத்தின் முக்கியமாக சொல்ல கூடிய கதாபாத்திரங்கள் சுந்தர் ராஜன் நாயராக வரும் முத்துராமன் படம் முழுவதும் மாது என்ற ஒரு அப்பாவிக்கு உதவு புரியும் நல்ல மனிதர்களாக வாழ்ந்து இருப்பார்கள்
ஒரு ஏழை அப்பாவி மாணவன் எப்படி தன்னம்பிக்கை கொண்டு படித்து சிறந்த நிலை அடைகிறான் என்பதை
கே பாலச்சந்தர் தன்னுடைய சிறப்பான இயக்கம் மூலம் ஒவ்வொரு நடிகரையும் வாழ வைத்து இருப்பார்
முத்து ராமன் இடம் பேசும் போது "நாயர் நண்பனின் மரணத்தை கூட தாங்கலாம் ஆனால் நட்பின் மரணத்தை தாங்க முடியாது "என்ன வரிகள்

(இப்போதும் பேசுறாங்க வசனம்? கேட்க்க முடியல சாமி )

முடிந்தால் மாடிப்படி மாதுவை ஒரு முறை பாருங்கள் மீண்டும் ஒரு முறை பார்ப்பிங்க அப்பாவி மாதுவுக்காக


காலத்தால் அழிக்க முடியாத சிறந்த நகைசுவை கலந்த சிறந்த காவியம் எதிர் நீச்சல்


நாகேஷ் என்ற ஒரு உண்மையான சிறந்த நடிகன் ஒருவரின் சிறந்த நடிப்பிற்காக பல முறை பார்க்கலாம்
படம் போரடித்தால் அது உங்கள் தவறாக இருக்குமே தவிர படத்தில் இல்லை
மாது என்ற கதாபாத்திரத்தில்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் பின்னுட்டத்தையும் வாக்கையும் மறக்காமல் இடவும்

உங்கள் ஆதரவை  வேண்டி  ஹாய் அரும்பாவூர் 

                                   buy original edhir neechal cd/dvd

Friday, March 12

பாமா விஜயம் ஒரு வெற்றி கதை

  
  மனிதனை திருத்த மதமே தவிர
     மனிதன் திருத்த இல்லை


ஒரு முறை இந்த படத்தை பார்க்க யோசித்த நண்பர்கள் பல முறை பார்த்த அனுபமே இந்த பதிவு  

பாமா விஜயம் என்னன்னு சொல்றது முதல்ல ரூம்ல இந்த படத்தை போடும்போது ரூம்ல இருக்கும் நண்பர்கள் சொன்னது என்னது பழைய படமா வேணாம் எதாவது புது படம் இருந்தால் போடு என்பதுதான்

அவர்களுக்கு இந்த படத்தை பற்றி தெரிய அதிகம் வாய்ப்பு இருக்க சான்ஸ் இல்லை.
நான் அவர்களுக்கு சொன்ன ஒரே வார்த்தை ஒரு முறை இந்த படத்தை பார்ப்போம்
சரி இல்லை என்று நீங்கள் சொன்ன நான் வேறு புது படம் பார்க்கலாம் என்பது தான்

எனக்கு கூட சந்தேகம் தான் இவர்கள் எங்கு இந்த படத்தை பார்க்க போறாங்க என்றுதான்

படம் போட்டாகிவிட்டது  மனோகர் பிக்சர்ஸ் பாமா விஜயம் என்று டைட்டில் ஓட ஆரம்பித்தது அப்போவே சொன்னேன் ஒரு நல்ல புது படம் பார்க்கலாம் என்று கருப்பு வெள்ளை படம் இதை போய் இப்போ பார்ப்பங்கள என்று ஆரம்பித்தான் நண்பன்
எனக்கு கூட நாம் ரொம்ப தைரியமா சொல்லிட்டோமோ என்று கவலை

படத்தின் முதல் காட்சி டி எஸ் பாலையா  அகர முதல் எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதேற்ற உலகு
 என்று பாலையா  திருக்குறள் உடன் படம் ஆரம்பித்த போது,
மற்றும் ஒரு நண்பன் என்னை ஒரு மாதிரி பார்த்தார்
இருந்தாலும் எனக்கு நம்பிக்கை இருந்தது படம் எல்லோருக்கும் பிடிக்கும் என்று
வீட்டின் ஒற்றுமை காட்டும் முதல் காட்சி அழகிய துளசி மாடம் மருமகள் அறிமுக காட்சி என மெதுவாக ஆரம்பித்த படம்
நாகேஷ் அறிமுகத்துடன் ஆரம்பித்தது நகைச்சுவை  "போன வருடம் திருவாதிரை வந்தே என்ன ஆச்சு" என்று சுந்தர் ராஜன் கேட்க்கும் போது நாகேஷ் அதற்க்கு உடனே சொல்வர் என்ன திருவாதிரை வத்திசசு போய்டுச்சு


அதற்க்கு பிறகு நகைச்சுவை வசனம் மற்றும் சரியான அளவில் திரைக்கதை என்று ஆரம்பிக்கும் படம் சொல்ல வேணுமா முதலில் வேண்டாம் என்று சொன்ன நண்பன் படத்தில் ஆழ்ந்து பார்க்க ஆரம்பித்தான்

ஐநுரு ருபாய் போனஸ் பணத்தை நாகேஷ் அப்பா பாலையா இடம் தராமல் ஏமாற்றும் போது நாகேஷ் பெஞ்ச மீது நிற்கும் காட்சியாகட்டும் அந்த நேரத்தில் அவர் பேசும் காட்சிக்கு ஏற்ற நகைச்சுவை வசனம்
வாத்தியார் என்பவன் ஏணி  மாதிரி மற்றவரை ஏற்றி விட்டு வாத்தியார் ஏ ணி மட்டும் அப்படியே இருக்கும் என்று சொல்லும் போது நாகேஷ்  அதான் வாத்தியார் ஏணி ஏற்றி விட்டு நிற்கிறதே என்று சொல்லலும் போது
அந்த நேரத்திற்கு ஏற்ற காமெடி ஆகா இருக்கட்டும்


பாமா என்ற நடிகை தங்கள் வீட்டிற்கு வருவதற்க்காக வீண் செலவு செய்து செய்யும் ஆர்பாட்டம் என்று படம் முழுவதும் இழையோடும் மெல்லிய நகைச்சுவை காட்சிகள்

என்று ஒவ்வொரு காட்சியும் அன்று அறையில் ஒரு நகைச்சுவை மனத்தை பரப்பியது

கே பாலா சந்தர் நகைச்சுவை கலந்த வசனம் அழகிய இயக்கம் இப்படத்திற்கு பெரும் பலம் எனலாம்

பாமா அவர்களின் வீட்டிற்கு முதல் நாள் வரும் போது ஒவ்வொருவர் மனைவியும் அவர்களின் கணவன் பதவியை உயர்த்தி சொல்ல்வதும் கணவன்மார்கள் தங்கள் உண்மையான பதவியை சொல்லி சிக்குவதும்
கலகல காட்சிகள்
அதிலும் நாகேஷ் சொல்லும் அந்த வசனம் நீங்கள் ஒரே ஒரு படத்தில் மட்டும் ரொம்ப நல்ல நடிச்சு இருப்பிங்க அந்த படத்தில் கூட இடைவேளை விட்டதும் ரசிகர்கள் எல்லாம் ரொம்ப சந்தோச படுவாங்க என்று சொல்லும் போது அதில் உள்ள உள் குத்து நகைச்சுவை

பாமா வருவதற்கு ஒரு நாள் முன்னே வீட்டில் உள்ள எல்லா பொருள்களையும் மாறும் போது
பாலையா இடம் நாகேஷ் சொல்வார் வீட்டில் இருக்கும் எல்லா பழைய பொருளையும் மாற்ற போறோம் என்று
அதற்கு பாலையா சொல்வார்  ஆடே வீட்டில் நான் ஒருத்தன் பழைய ஆள் இருக்கேன் என்ன செய்ய போறீங்க என்று கேட்க்கும் போது கஷ்டம்தான் இருந்தாலும் மாத்றோம் என்று சொல்லும் காட்சியாக இருக்கட்டும்
சொல்லிக்கொண்டே போகலாம்

படத்தின் நகைச்சுவை வசனம் மட்டும் எழுத பல பதிவுகள் தேவை 

இப்போ சொல்ல வந்த விசயம் இப்படி ஒரு முறை படத்தை பார்த்தவங்க கடந்த மூன்று மாதத்தில் ஐந்து முறைக்கு மேல் வெற்றிகரமாக பார்த்து இன்னும் நேரம் இருந்தால் படம் பார்ப்பாங்க போல
இதற்க்கு முக்கிய காரணம் ஆர்ப்பாட்டம் இல்லாத அழகிய திரைகதை  அதற்கேற்ற கதாபாத்திரங்கள் 

என்று சொல்லி கொண்டே செல்லலாம்
முடிந்தால் உங்கள் அருகில் உள்ள ஒரு வீடியோ கடையில் ஒரிஜினல் கேசட் வாங்கி படத்தை பார்க்கவும்
ஒரு முறை இல்லை பல முறை பார்த்தாலும் போரடிக்காத நகைச்சுவை நிறைந்த அமர்க்களமான திரை காவியம் பாமா விஜயம்
எங்கள் அறையில் இந்த படத்தின் மதிப்பெண் 10க்கு 11

எங்கள் அறையில் அதிக நாள் ஓடிய மற்ற  வெற்றி படங்கள் விரைவில் 
பதிவு பிடித்து இருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும் 
உங்கள் அன்பு ஹாய் அரும்பாவூர் 

Tuesday, March 9

தேர்வு காலம் தொடர் பதிவுகதை ,விளையாட்டு என்று பலவற்றிக்கு தொடர் பதிவு எழுதிய வலைபதிவு நண்பர்களே நம் வருங்கால மாணவர்களுக்கு தேர்வு ,மேற்கொண்டு என்ன படிப்பது பற்றி தொடர் பதிவு எழுதலாம்

இது தேர்வு காலம் மற்றும் தேர்வு முடிவுகள் வரும் காலம் எனவே கல்வி பற்றிய அழகிய உங்கள் கருத்துக்கள் அடங்கிய தொடர் பதிவை தொடருங்கள்

இப்போது பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு காலம்
இல்லை அவர்களின் வாழ்க்கை பாதையை மற்ற போகும் காலம் என கூட சொல்லலாம்

இனி மேல் படித்து தேர்வு எழுதி பாஸ் செய்வது கஷ்டம் அதை பற்றி பேச வேண்டாம்


எல்லா மாணவர்களுக்கும் இருக்கும் மிகபெரும் குழப்பம் ,மேற்கொண்டு  என்ன படிப்பது இனி வரும் காலங்களில் படிப்புக்கு என்ன செய்வது பற்றிய பெரும் சிந்தனை மட்டுமே

ஒரு மாணவனின் தலை எழுத்தை மற்றும் இந்த தேர்வு காலமும்  சரி அதை தொடார்ந்து வரும் முடிவுகளும் தான்

நகர் புற மற்றும் தனியார் பள்ளி மாணவர்களின் நிலை பரவயில்லை என சொல்லலாம்


கிராமப்புற மாணவர்களுக்கு மேற்கொண்டு  என்ன படிப்பது  எந்த கல்லூரியில் சேர்வது கணினி படித்தால் வாழ்க்கையா ?
பொறியியல் படிப்பா? வணிகம் சார்ந்த படிப்பா ?ஆசிரியர் பயிற்சி படிப்பா என்று அவன் எண்ணம் பலவாறு இருக்கும்

ஏன் இதை சொல்கிறேன் என்றால் பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெரும் மாணவன் மேற்கொண்டு சேரும் மேல் நிலை பள்ளி பிரிவுகள் தான் அவன் கல்லுரி படிப்பிற்கு அஸ்திவாரமாக  இருக்கும் 

 அப்படி இல்லாமல் ஏதோ பள்ளி படிப்பு படித்தோம் கல்லூரியில் பணம் கட்டினால் இடம் கிடைக்கும் என்ற எண்ணம்
பிற்கால அவன்  வாழ்க்கையில் வடிவேலு சொல்வது போல
 "பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மென்ட் வீக் "
என்ற நிலை அடைய கூடாது

 நாம் இந்த நிலைமைக்கு வர என்ன காரணம் என்று சொல்லலாம்
நம்மால் முடிந்த சிறு சிறு உதவிகள் செய்யலாம் எப்படி என்றால்
 பள்ளிகளில் அறிஞர்களை வைத்து மேற்கொண்டு என்ன படிக்கலாம் என்ற நிகழ்ச்சிக்கு நாம் படித்த பள்ளிக்கு நம்மால் முடிந்த உதவி செய்யாலாம்

மேற்படிப்பு பற்றி பதிவுகள் போடலாம்

நமக்கு தெரிந்த அளவில் நான்கு மாணவர்களுக்கு நம்மால் முடிந்த அளவில் சிறு சிறு உதவி செய்யலாம்

 மீண்டும் சொல்கிறேன்  கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கு இந்த தேர்வு காலத்திலும் சரி தேர்வு முடிவு நேரத்திலும் சரி நம்மால் முடிந்த உதவி செய்யல்லாம்

தேர்வு மற்றும் மேற்படிப்பு பற்றிய உங்களின் சிறப்பான பதிவு தேவை
எனக்கு அந்த அளவு அறிவு இல்லை அதனால் படிப்பு பற்றி சிறப்பான எண்ணம் உள்ளவர்கள் தொடர் பதிவு இடவும்  '" ஒருவனுக்கு ஒரு மீனை கொடுப்பதை விட  அவனுக்கு மீன் பிடிக்க கற்று கொடுப்போமே "


 "ஒரு தீபம் இருளை விளக்குவது போல நல்ல கல்வி சமுதாய இருட்டை நீக்கும் "

"தன் மக்களுக்கு ஒரு வீட்டை கொடுப்பதை விட அவனுக்கு அழகிய கல்வி எனும் கோவிலை கொடுக்கலாம் "தேர்வு காலம் பதிவை பிடித்து இருந்தால் உங்கள் கருத்துடன் உங்களால் முடிந்த அளவில் தொடரவும்
அன்புடன் ஹாய் அரும்பாவூர்

பதிவு பிடித்து இருந்தால் மறக்காமல் வோட்டை மறக்காமல் போடவும்

Monday, March 8

நான் யாருக்கும் ரசிகன் இல்லைங்கோ

திறமை உள்ளவன் வெற்றியை  யாராலும் தடுக்க முடியாது
        அது அது அவனால் மட்டுமே முடியும்
                                                                          உண்மை மொழி

அப்புறம் போன பதிவில்
"நித்யானந்தா பற்றி எழுதலாம் என்று பார்த்தல்
அவர் பற்றி வேட்டைக்காரன் படத்திற்கு பிறகு ரொம்ப நாள் ஓடுற வலை தலைப்பு நித்தி மட்டுமே"

என்ற வரியை பார்த்த உடன் xxx என்பவர் ரொம்ப காரமா ஒரு மெயில் அனுப்பி உள்ளார் நீங்கள் எல்லாம் அஜித் ரசிகர் ஆதனால் தான் விஜய் பற்றி தப்பா எழுதுறது  உங்க வேலை என்று எழுதிய அன்பருக்கு ஒரு பணிவான வேண்டுகோள் யாரும் விஜய் பற்றி தப்பா எழுதினா ஏன் உடனே அஜீத் ரசிகர் சூர்யா ரசிகர் என்று நீங்களே முடிவு செய்து கொள்கிறிர்கள்

  நாங்கள் ஒன்றும் அவரை பற்றி தப்பா எழுதுறதால அவர் படம் ஓடாம போக வில்லை நல்ல கதை இதைதான் ரசிகன் எதிர்பார்க்கிறான்

  ஏதோ ரஜினி அண்ணாமலை பாட்சாபடையப்பா  படங்களில்  அவருக்கு ஏற்ற கதையில் நடித்தார் அதனால் அவர் படங்கள் ஓடியது

அவர் படம் ஓடியதே என்று அதே மாதிரி கதையில் எத்தனை  முறை நடிப்பிங்க


 அவரே தன் பாணி மாற்றி நடித்த சந்தரமுகி  பெரும் வெற்றி அடையவில்லையா ?


   அந்த மிக பெரும் கலைஞனே தன் நடிக்கும் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரங்களில்   நடிக்கும் போது (சிவாஜி மொட்டை )

  வில்லன் வருவாராம் அவர் இவர் இருக்கும் பகுதிக்கு தீங்கு செய்வாராம் இது இடைவேளைக்கு முன்

இடைவேளை நேரத்தில் இவர்  வீர வசனம் பேசி நாலு சண்டை போட்டு  பின் பகுதியில் ஆட்டம் போட்டு ஜெயிப்பார் என்ன கொடுமை சார் .என்ன சிறப்பான கதை சார் இவை எல்லாம்
இதை பற்றி பேசினா உடனே  அஜீத் ரசிகர் என்று பெயர்

 அது அஜீத் ஆகா இருந்தாலும் சரி விஜய் ஆகா இருந்தாலும் சரி எங்களுக்கு தேவை நாங்க தர்ற காசுக்கு நல்ல பொழுது போக்கு மட்டுமே உங்கள் வம்பு புடித்த  வசனம் இல்லை

   விஜய் நடித்த போக்கிரி ,கில்லி ,சிவகாசி படங்களை சலிக்க சலிக்க பார்த்த ரசிகன் நான் வில்லு குருவி வேட்டைக்காரன் படத்தை பாதி கூட பார்க்க புடிக்காமல் போனதிற்கு  காரணம் எல்லோருக்கும் தெரியும்இதே மாதிரிசொன்ன நாங்க எல்லாம்
 வம்பு தளபதி வருங்கால விடியல் வெள்ளி நாளைய தமிழகம்  உலக சூப்பர் ஸ்டார் தமிழ் படம் சிவா 
சங்கம் சார்பாக கண்டனம் தெரிவிப்போம்
இது எப்படின்னா புலியை பார்த்து  CAT  சூடு போட்டு கொண்ட கதைதான்மறக்காம உங்கள் கருத்தை பின்னுடம் இடவும்
தனியாக மெயில் பண்ண வேணாம் mr XXX


மறக்காம வோட்டை போடுங்க சாரே