Monday, April 25

மதுரை கவிஞர் மஷூக் ரஹ்மான்சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை நகரில் எனக்கு முக புத்தகம்(facebook) மூலம் கிடைத்த நண்பர்கள் பலர் அவர்களின் முக்கியமாக சொல்ல கூடியவர் நண்பர் வருங்கால இசை அமைப்பாளர் பாடகர் கவிஞர் சாப்ட்வேர் துறை சேர்ந்தவர் என பலமுகம் கொண்ட சாய் சுதர்ஷன் அவர்கள்

அதே மதுரை மண்ணில் பிறந்த மற்றும் ஒரு நண்பர் மஷூக் ரஹ்மான் பற்றி இந்த பதிவு

சாய் மற்றும் ரஹ்மானுக்கு ஒரு ஒற்றுமை இருவரும் பணி நிமித்தமாக இருப்பது சிங்கார சென்னையில்

மஷூக் ரஹ்மான் இளம் வயது முதல் கவிதை மீது கொண்ட காதலால் இவர் இது வரை
கவிதைகள் மொத்தம் 1600 க்கும் மேல்
கதைப் பாடல்கள் 19 தொகுப்புகள் - சில கதைப்பாடல்கள் குறும்படம் ஆக்கும் தகுதி உடையவை
1 பாட்டிவீடு
2 ரயிலடிக் காடு
3 நெய்தலில் ஒரு முல்லை...

ஆங்கில கவிதை நூல் ஒன்றும் விரைவில் வெளியிட உள்ளார் - தலைப்பு felt
திரு நபி வலிமார் புகழ்மாலை - சூபி கவிதைகள் தொகுப்பு வெளியிட்டுள்ளார்


 

மஷூக் ரஹ்மான் மக்கள் டிவி க்கு அளித்த பேட்டி

அதிலும் இவர் மழையை மையப்படுத்தி வெளியிட்டுள்ள "மழையுதிர் காலம்" கவிதை நூலில் வெகு சிறப்பாக மழை சம்பந்தபடுத்தி நூற்றுக்கும் மேலான கவிதைகள் ஒன்றாக் தொகுத்து இவர் வெளியுட்டுள்ள இந்த புத்தகதிற்கு கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்கள் முகப்புரை வழங்கி சிறப்பித்துள்ளார் 
 

மஷூக் ரஹ்மான் சங்கமம் நிகழ்ச்சியில் சொற்பொழிவு

இவர் ரஹ்மான் அவர்களின் ஆஸ்கர் சாதனை பாராட்டி எழுதிய புத்தகம் "இசைக்கு இசை" இந்த கவிதை புத்தகத்தில் எனக்கு பிடித்த வரிகள் இவை
இரவை இழைத்து
இரவை இழைத்து
பகலை எடுப்பவன் -ஒரு
நாளின் அந்தி பொழுதில்
மீண்டும் நிலவாய் பிறப்பவன்

இவரின் விரைவில் வர இருக்கும் கவிதை தொகுப்பு "ஐ"
 

ஒரு தனியார் கல்லூரியல் விரிவுரையாளர் பணி செய்து அதன் இடையே தன்னுடைய கவிதை தாகத்தை தீர்த்து கொள்பவர்
முழு நேர கவினராக மாற தகுதி உள்ளவர் .
இவரின் மற்றும் ஒரு சிறப்பு ரஹ்மான் உலக அதிசம் தாஜ்மஹாலை மையப்படுத்தி வெளியிட்ட ஒன் லவ் ஆல்பத்தின் தமிழ் பாடலுக்கு பாடல் இயற்றியவர் நம் மஷூக் ரஹ்மான் அவர்கள்
அது மட்டும் இல்லாமல் ஹிந்தி மொழியில் வந்த ஜோதா அக்பர் படத்தின் தமிழ் மொழி பெயர்ப்பில் க்வாஜா எங்கள் க்ஹாஜா என்ற பாடலையும் இயற்றியவர் 


சென்னை பற்றிய அன்தெம் எழுதி வெளியிட்டுள்ளார் - அதன் பெயர் முதல் அகம்
சில பாடல்கள் எழுதி மெட்டமைத்தும் உள்ளார் அவைகள் ஆல்பம் ஆக்க விருப்பம் கூட உள்ளது

கவிதை சம்பந்தமாக பல தொலைக்காட்சிகளில் சிறப்பு பேட்டிகள் கொடுத்துள்ளார் மஷூக் ரஹ்மான் அவர்கள் டி டி பொதிகை தொலைக்காட்சியில் இன்று (26.04.2011) காலை 7.30 am  மணிக்கும் அதே நிகழ்ச்சி இரவு 11.30 pm மணிக்கு மறு ஒளிபரப்பாக போகிறது
முடிந்தால் இந்த பேட்டியை யு டியுப் மூலம் அப்லோட் செய்யவும் )

மஷூக் ரஹ்மான் பற்றி இன்னும் பல விஷயங்கள் அடுத்த பதிவில் இது ஒரு அறிமுகம் மட்டுமே


உலக கோப்பையை இந்தியா வென்ற போது மஷூக் இயற்றிய கவிதை இது 
 
வெற்றியின் வணக்கம்

காற்றில் ஒருவித வாசம்
இம்மண்ணின் மைந்தர்கள்
வெளிவிடும் சுவாசம்

எந்தன் கதிரொளி வீசும்
இம்மண்ணின் பெருமையை
காலங்கள் பேசும்!

என் இதழ் இவர் பதம் தொடும்போதும்
பணிவின் கண்ணீர் கர்வம் அணைக்கும்
தாய்மையின் நிரல் இவர் உள்ளம்
இனி எந்தன்முகவரி இவர் பெயர் ஆகும்

வெற்றி எந்தன் வணக்கம்
இம்மண்ணுக்கு என்று உரித்தாகும் நாளும்


சில பதிவுகள் போடும்போது மறக்காமல் உங்கள் வாக்குகளை அளிக்குமார் கேட்பேன் அப்படிப்பட்ட பேட்டி இது மறக்காமல் உங்கள் ஆதரவை தரவும் மறக்காமல் வோட் பண்ணவும் 

 

2 comments:

  1. உங்கள் பதிப்பில் இருந்து நண்பர் மஷூக் ரஹ்மான் அவர்கள் மிகுந்த திறமை உடையவர் என்று தெரிகிறது !! அவர் சாதனைகள் மேலும் தொடர வாழ்துக்கள்... அவரோடு என் பெயரையும் இந்த பதிப்பில் இடம்பெற செய்ததற்கு மிகவும் நன்றி முபாரக்!!

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை