Monday, June 25

கலைப்பொரியாளர்கள் வழங்கும் "உடன்பிறப்புகளே" குறும்பட சகுனியாட்டம்



    பெங்களுரு குறும்பட வெற்றிக்கு பின்பு கலைபொரியாளர்கள் வழங்கி இருக்கும் வெற்றி குறும்படம் 


தங்களுடைய அலுவல்களுக்கு  இடையே  தங்கள் கலைதாகத்தை தீர்க்கும் இந்த சாப்ட்வேர் இளைஞர்களின் சொல்லும்படியான படைப்பு உடன்பிறப்புகளே 


       " சகுனி படத்திற்கு இருவேறுவிதமான விமர்சனம் வந்தாலும் கதையில் கரு என்னவோ ஒவ்வொரு  இடத்திலும்  சகுனி இருக்கான் என்று சொல்லும் குறும்பட சகுனி இந்த உடன்பிறப்புகளே
   இக்கதையில் நடித்து இருக்கும் அரவிந்த் ,பலராமன் ,சந்தோஷ் ,ராஜேஷ் ,தனசேகர் ,சுப்ரமணியன்  பெங்களுரு ஹீரோ சரவண குமார்  ஜெய் ஷங்கர் கார்த்திக் அருள் போன்றோர்களின் நடிப்பு 
ஆஹா என்று பாராட்ட விட்டாலும் குறை   சொல்ல  முடியாத முயற்சி 

  நண்பர்   பலராமன் ஒலிப்பதிவு கதை திரைக்கதை வசனம் என்று பலதுறைகளில் புகுந்து  கலக்கி  இருக்கிறார் 



இவர்கள் தங்களின் பணிகளுக்கு இடையே இப்படி ஒரு படைப்பை தர மற்றும் ஷூட்டிங் மற்றும் இட தேர்வுக்கு மற்றும் அவர்களின் நடிப்பும் அவர்கள் உழைப்பை பாராட்ட  வேண்டும் 
  அதிலும் அரசியல்வாதியாக நடித்து இருப்பவரின் நடிப்பும் சரி பலராமனின் தம்பி கதாபாத்திரத்திற்கு   விருமாண்டி டைப் மீசை சிம்ப்லி சூப்பர்
ஒரு அரசியல் கதை ஒரு ரௌடி கதை இவற்றில் அரசியல்வாதிகள் செய்யும் நம்பிக்கை துரோகம் போன்றவைகளை ஒரு குறைவான நேரத்தில் தந்து இருக்கும் கலைபொரியாளர்கள் உழைப்பை பாராட்ட வேண்டும்
     இந்த படைப்பில் குறை என்று சொல்ல முடியாது , இன்னும் ஒளிப்பதிவில் முன்னேற்றம் தேவை

   
  ஒரு அரசியல் கதையை மிகவும்  குறைவான   நேரத்தில்  சிறப்பான திருப்பங்களுடன் அமைத்துள்ளார் பலராமன்
 இந்த குறும்படத்தில் இன்னும் சொல்லும்படியான விஷயம் பேஸ்புக்  நண்பர்
சாய்  சுதர்சன்  அவர்களின் இசை
ஆக மொத்தத்தில் நீங்கள் பார்ப்பது மட்டும் இல்லாமல் மற்றவர்களுக்கும் சொல்ல தகுதி வாய்ந்த படைப்பு


 உடன்பிறப்புகளே YOUTUBE VIDEO 

Saturday, June 9

vote for 'The Greatest Indian' உங்களுக்கு பிடித்த தலைவருக்கு வாக்களிக்கவும்


            சி என் என் ஐ பி என் டிவி  மற்றும் ரிலையன்ஸ் டிவி இணைந்து மகாத்மா காந்திக்கு பிறகு யார் சிறந்த இந்தியர் என்ற ஒரு  நிகழ்ச்சியை நடத்துகிறது

   அதில் இந்தியாவில் அரசியல் வியாபாரம் கலை மக்கள் பனி போன்ற துறைகளில் சிறந்து விளங்கும் சிறப்பு மிக்கவர்களை தேர்ந்தெடுக்க உள்ளது



தலைவர்களின் சர்வதேச புகழ், மக்கள் மீதான அவர்களின் தாக்கம், உதாரணத்தன்மை என பல விஷயங்களின் அடிப்படையில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
பிபிசியின் வாக்கெடுப்பு விதிகளின் அடிப்படையில் நடத்தப்படும் இதில் 50 இந்திய தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
        இப்போது முதல் இடத்தில் அம்பேத்கர் உள்ளார் இரண்டாம் இடத்தில் கன்ஷி ராம் உள்ளார்

டாப் 10 இல் ரஜினி மற்றும் ரஹ்மான் உள்ளனர்

   நீங்கள் இதில் உள்ள எண்ணுக்கு மிஸ்ஸுடு கால் கொடுத்தாலே போதும் இந்த எண்ணிற்கு போன் செய்வது

  உங்களுக்கு பிடித்த தலைவருக்கு வாக்களிக்கவும்  


வெளிநாட்டில் உள்ளவர்கள் முதலில் உள்ள  பூஜியத்தை நீக்கி விட்டு  0091  சேர்த்து போன் செய்யலாம்

இதன் இணையத்தால் முகவரி இதோ vote for 'The Greatest Indian'