இப்பதிவு எழுத மூல காரணமாக இருந்த வெண்ணிற இரவுகளுக்கு நன்றி
உலக நியதி
உலகம் என்பது இப்போது ஒரு கிராமம் ஆகா மாறி விட்டது அமெரிக்காவில் ஒருவன் தும்மினால் அமிஞ்சிகரையில் கேட்க்கும் காலம் இது
சின்ன தத்துவம்
உலக கிழவியை விட உள்ளூர் அழகியே மேல்
இப்போ நான் சொல்ல வர விஷயம் என்ன வென்றால்
கோக கோல மற்றும் பெப்சி இரண்டையும் நிறுத்த வேண்டும் என்று ஒரு பலமான எதிர்ப்பு கிளம்பி உள்ளது
கேரளா பிளாசிமடா தமிழகத்தில் செங்கல்பட்டு அருகே உள்ள மாமண்டூர் பாலாற்று தண்ணீரை உறுஞ்சியது பெப்சி. இதை போல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோக் கம்பெனி ஆரணி ஆற்றை ஒன்றும் இல்லாமல் ஆக்க பார்க்கிறது
இப்படி நம் மண்ணில் ஆதார சுருதியாக உள்ள நீரை உறிஞ்சி விவசாயம் இப்போது இல்லை
எப்போது தங்க முட்டை இடும் வாத்தை ரியல் எஸ்டேட் என்னும் அரக்கன் இடம் கொடுத்தோமோ அன்றே
நம் மண்ணின் ஆதார சுருதியான விவசாயம் அழிவை நோக்கி செலுத்த ஆரம்பித்து விட்டோம்
இப்போது நான் சொல்ல வந்த விஷயம் உலகம் என்பது நாம் அனைவரயும் சார்ந்தே இருக்க வேண்டி உள்ளது அதுதான்
நியதி கூட
இல்லை நான் இந்தியா பொருளை மட்டுமே பயன்படுத்வேன் என்று கூறினால்
அதை போல மேலை நாட்டவர் நம் பொருளை வாங்க மறுத்தால் நம் ஏற்றுமதி என்னாவது .நம் தயாரிக்கும் பொருளை நாம் மட்டுமே பயன்படுத்தும் நிலை வரும்
இன்று நம் மக்கள் அதிகமான பேர் வெளிநாடு செல்ல காரணம் என்ன இங்கு உழைப்புக்கேற்ற ஊதியம் சரியாக கிடைத்தால் ஏன் வெளிநாடு என்ற மோகம் வர போகிறது
ஊரிலே பிழைக்க சரியான வழி .சமச்சீர் சம்பளம் என்பது இருந்தால் யாரும் வெளிநாடு என்பதை நினைத்து கூட பார்க்க மாட்டார்கள்
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு சம்பளம் தனியார் பள்ளி ஆசிரியகர்களுக்கு ஒரு சம்பளம் என்று இருக்கும் போது குறைவான சம்பளம் வாங்கும் அவனின் மனநிலை எப்படி இருக்கும்
அவன் தன சூழ்நிலை மாற நினைப்பது இயல்பு அதற்க்கு அவன் தேர்ந்தெடுக்கும் களம வெளி மாநிலம் வெளி நாடு இங்கு தனியார் பள்ளியிலோ அல்லது நிறுவனத்திலோ பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு அவன் அடையும் நிலையை வெளிநாட்டு வாழ்க்கை விரைவில் தருகிறது
இந்த விஷயம் எல்லோருக்கும் சரிப்பட்டு வராது என்று நீங்கள் நினைப்பது சரி
ஆனால் இதே விசயம் பல பேருடைய வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளதே .அவன் வாழக்கை வீணாக போனாலும் அவன் வரும் தலைமுறைக்கு இந்த பணம் பயன் படுகிறதே
இந்திய அரசுக்கு மிக பெரும் உதவியாக இருப்பதே இந்த அந்நிய செலவாணி வருமானம் கூடத்தானே
யாரும் வேண்டும் என்று இந்த வெளி நாட்டு வாழ்க்கையை தேர்ந்தெடுப்பது இல்லை அவர்கள் படிப்பு தொழிலுக்கு ஏற்ற சரியான சூழ்நிலை மற்றும் சம்பளம் கருதியே இந்த வெளிநாட்டு வாழ்க்கை தேர்ந்து எடுக்கின்றனர்
அதே போல கோலா மற்றும் பெப்சி
நம் மண்ணில் எத்தனையோ தரமான தயாரிப்புகள் உள்ளன
நம் மண்ணின் ஆதார சுருதியான விவசாயத்தை சார்ந்த மோர் இளநீர் நுங்கு போன்றவைகள்
இன்றைய இளைய தலைமுறை குடிப்பதை கௌரவ குறைச்சல் என்று நினைக்க காரணம்
அயல் நாட்டு நிறுவனங்கள் செய்த மூளை மழுங்கடிக்கும் விளையாட்டு சினிமா கலைஞர்களின் ஆடம்பர விளம்பரம் தவிர வேறு எதுவும் இல்லை .இவர்களுக்கு தேவை கோடிக்கணக்கான பணம் மட்டுமே இதனால் ஏற்படும் பாதகம் பற்றி இவர்களுக்கு என்ன கவலை
நாம் ஒவ்வொரு முறை மோர் குடிக்கும் போதும் ஒரு விவசாயி நன்றியுடன் நம்மை பார்ப்பான் .இளநீர் விற்கும் சாலையோர வியாபாரி இடம் நாம் கொடுக்கும் பணம் அவன் வீட்டில் அடுப்பெரிய உதவியாக இருக்கும்
நான் அந்நிய பொருள்களை முழுவதும் ஆகா புறக்கணியுங்கள் என்று சொல்ல வில்லை
ஆனால் அந்த பொருள்களை நாம் பயன் படுத்துவதால் நம் இந்திய மண்ணிற்கு வருங்கால இயற்கைக்கு நாம் எவ்வளவு பெரும் தீமை செய்கிறோம் என்று மட்டும் நினைத்து பாருங்கள்
" வரும் கோடை காலம் முழுவது மோர் ,மற்றும் இளநீர் மட்டும் குடிப்போம் என்று சபதம் எடுப்போம் அனைவரிடம் இதை எடுத்து செல்வோம் "
அதிகமான அளவில் இந்திய பொருளை பயன்படுத்துவோம் .
இந்த பதிவு சொல்ல வந்த நோக்கம் புரிந்தால் மட்டும் வாக்களிக்கவும் இல்லை என்றால்
என்ன தவறு என்று பின்னுட்டம் இடவும்
உலக வாழ்க்கையில் நாம் அனைவரயும் சார்ந்தே இருக்க வேண்டும் ஆனால் அதிகமாக சார்ந்து இருக்க வேண்டாம் என்பதே என் கருத்து
//நாம் ஒவ்வொரு முறை மோர் குடிக்கும் போதும் ஒரு விவசாயி நன்றியுடன் நம்மை பார்ப்பான் .இளநீர் விற்கும் சாலையோர வியாபாரி இடம் நாம் கொடுக்கும் பணம் அவன் வீட்டில் அடுப்பெரிய உதவியாக இருக்கும்//
ReplyDeleteசரியா சொல்லி இருக்கீங்க ...
தல நானும் பெரம்பலூர் தான் ...
இந்த கொக்ககோலாவை எதிர்ப்போர் சங்கங்கள் எல்லாம் வெறும் விவாதத்திற்கு மட்டும்தான் சரி, தாங்க முடியாத வெய்யிலில் நா வரண்டிருக்கும் பொது எனக்கு அருகில் கிடைப்பது கோக்கா அல்ல இளநீரா என்று பார்த்துக்கொண்டிருக்க முடியாது, எது அகப்படுகிறதோ அதைதான் குடிப்பேன். இது நானல்ல சராசரி மனிதர்கள் யாரும் இதைதான் செய்வார்கள், இல்லாத இளநீருக்காக தாகத்தை அடக்கித்தான் நாட்டை செளிப்பாகவேண்டும் என்ற எண்ணம் சராசரி மனிதனான எனக்கு அந்த தருணத்தில் வராது.
ReplyDeleteஅதே நேரம் இளநீர் மோர் குடிப்பதற்கென்று நேர காலங்கள் உண்டு, இரவில் மோரும்சரி இளநீரும்சரி பருக முடியுமா? ஒரு உணவகத்தில் நீர் தூய்மயில்லாதபோது இளநீர் அல்லது மோர் குடித்து அசைவ உணவு உண்ண முடியுமா? நான் ஒன்றும் மேட்டக்குடி இல்லை ஆனால் ஜதார்த்தவாதி, எந்த நேரம் எதை பருகவேண்டுமேன்று எனக்கு தோன்றுகின்றதோ அதை கையில் காசிருந்தால் வாங்கி பருகுவேன், அதற்காக விசத்தையும் பருகுவியா என்றால் அதற்கு எனது பதில்: அந்த கணத்தில் எனக்கு பிடித்திருந்தால் என்பதே. கோக்கும் விஷம்தான் என்றால் எனது பதில்: இன்றுவரை எனக்கு ஒன்றும் ஆகவில்லை என்பதுதான் . உனக்கு ஒன்றும் ஆகவில்லை விவசாயிகள் அல்லவா பாவமென்றால் அதற்கு எனது பதில்: உண்மைதான் ஆனால் நான் மட்டும் கோக்கை குடிப்பதை நிறுத்தினால் விவசாயிகள் காப்பாற்றப் படுவார்களா என்பதுதான். நீ உன்னை திருத்தினால் ஊர் தானாக திருந்துமென்றால் எனது பதில்: அந்தளவிற்கு நான் பக்குவப்படவில்லை என்பதாகும்,இன்றைய சில வலைப்பூ கம்யூனிஸ்றுகள் மாதிரி தங்களை மார்க்ஸின் வாரிசுகள்போல காட்டி ஓவரா சீனைபோட்டு ஊரை ஏமாத்திர வேலையெல்லாம் எனக்கு தெரியாது.
மற்றயபடி உங்கள் பதிவிற்கு வாழ்த்துக்கள்.
@ஸ்ரீ.கிருஷ்ணா
ReplyDeleteகிருஷ்ணா உங்கள் வருகைக்கு நன்றி
உங்கள் ஆதரவுக்கு நன்றி
@எப்பூடி
அன்பு நண்பன் எப்பூடிக்கு
முதலில் நான் சொல்ல வந்த கருத்தை விளக்கி விடுகிறேன் .இந்த பதிவில் நான் சொன்ன கருத்தே உலகம் எண்பது ஒரு கிராமம் ஆகி விட்டது
அதன் கருத்து நாம் அனைவரயும் சார்ந்து இருப்பது முக்கியம் ஆனால் தமிழ் நாட்டில் நிலைமையோ தலைகீழ் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த காளி மார்க் பவண்டோ வின்சிப் போன்ற நிறுவனங்கள் தத்தி பிடித்து ஓடுகிறது
அதற்க்கு காரணம் இந்த பெரிய நிறுவனங்கள் செய்யும் விளம்பரம் மட்டும் மார்கெட் பலம்
குளிர் பானகங்கள் குடிக்க வேண்டாம் என்று சொல்ல வில்லை ஆனால் அதை குடிப்பதே ஸ்டைல் என்னும் கலாச்சாரம் வேண்டாம் என்று சொல்கிறேன்
நானும் பிழைப்பிற்காக வெளிநாடு வந்த ஒருவன்தான்
நான் ஒன்றும் கம்யுனிஸ்ட் போல பேச வில்லை ஆனால் இந்திய பொருள்களுக்கு ஆதரவு தாருங்கள் என்று கேட்க்கிறேன்
"குடிப்பது தப்பு இல்லை ஆனால் அதை மட்டும் குடிப்போம் என்பதை என்ன செய்வது "
இளநீர் என்பது கோடை காலத்தில் தமிழ் நாடு எங்கும் கிடைக்கும் அதற்க்கு ரொம்ப சுற்ற வேண்டாம் (தர்பூசணி,நுங்கு )
உங்கள் வருகைக்கும் கருத்த்க்கும் நன்றி நண்பா
நல்ல பதிவு!
ReplyDeleteஹாய் அரும்பாவூர் உங்கள் கருத்தில் ஒரு நியஜமும் ,ஜாதர்தமும் உள்ளது நான் உங்களை குறிப்பிடவில்லை --சிலர்-- கோகோ கோலா குடிக்காமல் விட்டால் நாடு முன்னேறும், கோகோ கோலா குடிப்பதனால் கலாசார சீர்கேடு என்று எல்லாம் சீன் போடுறாங்க அவங்களை தான் குறிப்பிடேன்
ReplyDeleteதாகம் எடுத்தல் இளநீர்,மோர், கோகோ கோலாவோ எதாவது ஒன்று தாகத்தை தீர்த்துக்கொள்ள ...
கோகோ கோலா போன்ற கம்பெனி நாட்டுக்குள் வருவது தவறு இல்லை. நீங்கள் சொன்ன உலக மயமாக்கல் தான் அவற்றை --எந்த கட்டுப்பாடின்றி-- நாம செய்யபடவிடுவதே தவறு. இதுதான் எனது கருத்து
நன்றி நண்பா
நான் இந்த பானங்களை வாங்கி வீட்டில் அவசரத் தேவைக்கு என்று வைத்திருந்தேன். என் டாக்டர் மகள் பார்த்துவிட்டு அவைகளின் கெடுதல் குணங்களைச் சொன்ன பிறகு வாங்குவதில்லை.
ReplyDeleteஆனாலும் அவைகளின் விற்பனை நடந்துகொண்டுதான் இருக்கிறது. என்ன செய்ய?
@Chitra
ReplyDeleteஉங்கள் வருகைக்கு நன்றி
@எப்பூடி.
நண்பா நான் உன் பின்னுட்டங்கள் எல்லாம் பார்த்தவன் எதையும் மனதில் வைக்காமல் சொல்ல்பவன்
நீ உன் பாராட்டோ குறையோ என் பதிவுக்கு ஒரு உரம் என்பேன் நன்றி நண்பா
@Dr.P.Kandaswamy
மன்னிக்கணும் சார் நான் உங்கள் பதிவுகள் படிக்கிறேன் ஆனால் பின்னுட்டம் இடுவதில்லை
ஆளவந்தார் கொலைவழக்கு பதிவு சூப்பர் அப்படியே தொடருங்க
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை,செயற்கையான குளிர் பாணங்களால் தீமையே தவிர, நன்மையே,கிடையாது.இவைஎல்லோருக்கும்
ReplyDeleteதெரியும்,மீறிப் பாவிப்பவர்கள் தான் இன்று இளவயதில் சீனி வருத்தத்துடன், ஒன்றாகி விட்டார்கள்
What You have told is true, but common people are foolish, like எப்பூடி. It is not so difficult to avoid the foreign cola's but they give all types of bullshit reasons. Our Govt, Cricket players, Cinema actors all are cheating the Boom Boom Cow like people. Nobody to save our people, they are going to dogs.
ReplyDelete