Friday, January 15

பதிவர் உலகமும் தரமான திரை விமர்சனமும்

முதலில் ஒன்றை நான் சொல்லிக்கொள்ள  விரும்புகிறேன் பதிவர் உலகம் படத்தை பிடிக்க வில்லை என்றால் மிகவும் தாறுமாறாக விமர்சனம் செய்கிறார் என்ற கூறும் ஒரு சார்பானவர்களின் கருத்தை தூக்கி குப்பையில் போடுங்கள்



 யோசித்து மிகவும் அழகாகவும் சிறப்பான விமர்சனம் என்றால் அது வலை பதிவர் விமர்சனம் என்பேன்

அதற்க்கு மிக சிறந்த எடுதுக்கட்டு ஆயிரத்தில் ஒருவன் விமர்சனம் சொல்லலாம் .நிச்சயம் தமிழில் புது முயற்சி  என்பது .மிகவும் குறைவே அதையும் மீறி செய்யப்படும் புது முயற்சிகளுக்கு ஆதரவு என்பது மிகவும் குறைவே



மசாலா தனம் நிறைந்த திரை உலகை நல்ல கதை  படத்தின் மூலம் மற்ற விரும்பும் இயக்குனர்கள் அப்படிப்பட்ட படம் எடுக்க பயப்படுவது  அவர்களுக்கு நல்ல விளம்பரம் கிடைக்குமா நம் படம் பற்றி பத்திரிக்கை ,ரேடியோ ,டிவி .இணையம் போன்றவை நல்ல முறையில் ஆதரவு தருமா என்பதே

   இது நாள் வரை விமர்சனம் என்றால் அனைவரும் காத்திருப்பது புகழ் பெற்ற இணைய தளம் மற்றும் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி போன்றவைகளை மட்டுமே

  சில தொலைக்கட்சிகள் தங்களுக்கு பிடித்த   படம் ஓட வேண்டும் என்ற ஒரே காரணத்தால்  நல்ல படங்களை பற்றி
விமர்சனம் செய்யாமல் அந்த படத்தை ஓடாமல் செய்கின்றன

 அப்படிப்பட்ட இந்த நேரத்தில் திரை உலகிற்கு அதுவும் வெளிநாட்டு உரிமை நன்றாக செல்லும் படத்திற்கு வரப்பிரசாதமாக அமைந்தது வலை பதிவர்களின் விமர்சனம் படம் வந்த முதல் காட்சி முடிந்த சில மணி நேரத்தில் உலகின் ஏதாவது ஒரு பகுதியில் இருந்து வரும் விமர்சனம் அந்த படத்தின் வெற்றிக்குஉதவுகிறது

  அதுவும் நல்ல படத்திற்கு விமர்சனம் மிகவும் முக்கியம்
நீங்கள் கேட்க்க வருவது எனக்கு புரிகிறது ஏன் சிலபடங்களை அதே வலை பதிவர்கள் தானே கிழித்து துவைத்து காயப்போட்டனர் என்று அதுவும் உண்மைதான்



 அதற்காக ஒன்றும் இல்லாத அல்லது தன்னை அறிவு ஜீவி என நினைத்து எடுக்கும் படத்தை எப்படி ஒத்துக்கொள்ள முடியும் அதற்க்கு சிறந்த எதுதுக்கட்டு பொக்கிஷம் ,வேட்டைக்காரன் ,யோகி படங்களை சொல்லலாம்


ஒரு  நல்ல படம் என்றால் எந்த வலை பதிவரும் பாராட்டுவார்கள் அதற்க்கு சிறந்த எடுத்துக்காட்டு ரேணிகுண்டா,நாடோடிகள் என்று பல படங்களை சொல்லலாம்
 வலை பதிவர்கள் குறை சொன்ன படங்களில் எந்த படம் நல்ல படம் சொல்லுங்கள் ,ஒன்றும் இருக்காது அந்த மாதிரியான படங்கள் எவ்வளவு விளம்பரம் செய்தாலும் ஓடாது
வேண்டும் என்றால் படம் வெற்றி என்று அவர்கள் மட்டும் சொல்லி விளம்பர செய்யலாம்

 நான் சொல்ல வருவது ஆயிரத்தில் ஒருவன் விமர்சனம் பற்றி இந்த படத்தை பற்றி வலை பதிவர்  விமர்சனம் மோசமாக இல்லை .அதே நேரத்தில் இது போன்ற படம் தமிழ் மொழியில் வர வேண்டும் எனவே படத்திற்கு ஆதரவு தாருங்கள் இதுதான் எல்லா விமர்சனத்திலும் உள்ள கருத்து .

  ஆகா மொத்தத்தில் விமர்சனம் என்ற விசயத்தில் செல்வா ராகவன் கார்த்தி ரீமா போன்றவர்களை பார்க்கவில்லை  இது போன்ற கதை களத்தை எடுத்ததிற்கு  எல்லா விமர்சனத்திலும் பாராட்டி இருந்தனரே தவிர சில குறைகள் இருந்தாலும்  அதை ஒரு குழந்தை நடக்கும் போது முதலில் தத்தி.தத்தி  கீழே  விழுந்து பின் நன்றாக நடக்கும்  அதில் சில தவறுகள் இருந்தால் மன்னிப்பது போல் இருந்தது  வலை பதிவரின் விமர்சனம்

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல்

 நெஞ்சின் அடியில் ப்ளாக் ஸ்பாட் ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு எழுதிய விமர்சனத்தில் கடைசி கருத்து மட்டும்

                      இறுதியாக ஒரு வேண்டுகோள் : எப்போதாவது வரும் இது போன்ற படைப்புகளை முதல் நாளிலேயே படத்தின் குறைகளை மட்டும் சொல்லி, புதிய முயற்சிகளை புறந்தள்ளி விடாதீர்கள்..தமிழ் சினிமா என்னும் 75 வயது குழந்தை இப்போதுதான் நிமிர்ந்து நடை போட ஆரம்பித்திருக்கிறது..தடுமாற்றங்களை கண்டு கொள்ள வேண்டாமே  ப்ளீஸ்!!

ஆகா மொத்தத்தில் மொக்கை படம் என்றால் மொக்கையே ,நல்ல படம் என்றால் வாழ்த்துக்களே புது முயற்சியை பாராட்டும் வலை பதிவு விமர்சனம் என்றுமே நேர்மை மட்டுமே

 அது விஜய் என்றாலும் சரி அஜித் என்றாலும் சரி கதை நன்றாக இருந்தால் யாரும் பாராட்டுவார்கள்  . கதை ஒன்று  மட்டுமே உண்மையான  கதாநாயகன் 


இன்றைய பதிவின் சிறந்த ப்ளாக்



 வேலன் (velang ) ப்ளாக் ஸ்பாட்  தகவல் தொழில் நுட்பம் பற்றி மற்றும் ஒரு சிறந்த் ப்ளாக் இப்போது 250 பதிவு எழுதி வெற்றி நடை போடும் ப்ளாக் சிறந்த தொழில்நுட்பம் பற்றி படிக்க
வேலன் ப்ளாக் ஸ்பாட் பற்றி படிக்க இதை எழுதவும்
வேலன் ப்ளாக் ஸ்பாட் பற்றி படிக்க இதை எழுதவும்




            
                          இயற்க்கை காப்போம் மரம் வளர்ப்போம் !!!!




        
                                           DONT MISS MY VOTE
                               

5 comments:

  1. விமர்சனம் எழுதுற அளவுக்கு நமக்கு பக்குவம் வரலைங்க..சில பேரோட காட்டமான விமர்சனத பார்த்து நொந்து போய்தான் அந்த பதிவ எழுதினேன்..

    ReplyDelete
  2. //இது நாள் வரை விமர்சனம் என்றால் அனைவரும் காத்திருப்பது புகழ் பெற்ற இணைய தளம் மற்றும் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி போன்றவைகளை மட்டுமே//

    இதுதான் தமிழ் சினிமாவின் சாபக்கேடு

    ReplyDelete
  3. Anonymous16.1.10

    நூறு சதவீதம் உண்மை சார்.அனால் பலபேர் பதிவர்களின் விமர்சனத்தை வேண்டுமென்றே குறைசொல்கிறார்கள்.

    ReplyDelete
  4. ///......... அதில் சில தவறுகள் இருந்தால் மன்னிப்பது போல் இருந்தது வலை பதிவரின் விமர்சனம் //
    ஐயா
    புதிய முயற்சிகள் பாராட்டப்படவேண்டும் என்பதி„ல் இருவேறு கருத்துக்கள் இருக்கமுடியாது, அதற்காக குறைகளை மறைப்பது விமர்சனமாகாது!! நடுநிலை விமர்சனங்கள் அருகிவிட்டது என்பதே உண்மை!!
    பெரும்பான்மையானவர்கள் ஒன்றில் தமக்கு பிடித்தவர்களின் படத்தில் குறைகளை மறைக்கின்றனர்!அல்லது பிடிக்காதவர்களின் குறைகளை தூக்கிபிடிக்கின்றனர்!!

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை