Tuesday, April 20

காதல் பைத்தியங்கள்

அந்த ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பூங்காவில் ஓரமாக இருந்த பெஞ்சில் அதிலும் ஒரமாக பவி உட்கார்ந்து இருந்தால்

அந்த பூங்கா முழுவதிலும் அனைவரும் மகிழ்ச்சியாக இருபது போலவும் தான் மட்டும் சோகத்தில் இருப்பதை போல உணர்ந்தார் விஜய் குமார்
அவள் மட்டும் தனியாக வந்து இருக்கிறாள் என்று உறுதிபடுத்தி கொண்டு அவள் அருகில் சென்றான் . விஜய் குமார்

"ஹும் !ஹும் !" மெல்ல இருமினான்
அவனின் இருமல் சத்தம் கேட்ட பவி மெதுவாக திரும்பி பார்த்து "நீங்களா ? என்ன வேணும் உங்களுக்கு ஏன் இன்னும் என் பின்னே வர்ரிங்க "என்று கோபமாக கேட்டல்


" நான் ஏன் உன் உன் பின்னே வரேன் என்று உனக்கு தெரியாத ?" என்று ஏக்கமாக கேட்டு அவள் முகத்தை நோக்கினான்

அந்த பார்வை சொல்ல வருவது என்ன கோபமா இல்லை கெஞ்சலா என்று எதுவும் தெரியாமல் தவித்தான்

" நீ என்னை மன்னிசேன் என்று ஒரு வார்த்தை சொன்ன போதும் இனி உன் பக்கமே வர மாட்டேன் இது சத்யம் "
என்று கெஞ்சினான் விஜய்
'முடியாது உங்களை மன்னிக்க முடியாது, அப்படி உங்களை மன்னித்தால் அது நான் என் அப்பாவிற்கு செய்யும் பெரும் துரோகம் "

"நீங்கள் ஏன் அத்தை பையன் என்பதால் நீங்கள் என்னுடன் பேசுவது யாருக்கும் சந்தேகம் வர வில்லை ஆனால் அதையே நல்ல சந்தர்பமாக வைத்து என்னை நீங்கள் பார்க்க வருவதை நான் விரும்ப வில்லை "உங்களை நான் காதலித்தேன் அந்த பெரும் தவறு செய்து விட்ட காரணத்தால் மட்டுமே உங்களை நான் இந்த அளவில் பேச விட்டேன் அதை நீங்கள் பயன் படுத்தி மீண்டும் பேச வந்தால்
"கடைசியாக சொல்கிறேன் நீங்கள் மீண்டும் தொந்தரவு நான் தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை"அவளின் அந்த அமிலம் ஊற்றிய பேச்சை கேட்ட நொடி துடித்து போனான் விஜய் குமார்

"பவி நான் விளையாட்டு தனமாக செய்த அந்த விஷயம் நிச்சயம் மன்னிக்க முடியாது தான்? அதனால் தான் உன் மன்னிப்பு கிடைத்தால் நான் சாகும் போது என் ஆத்ம சாந்தி அடையும் என்று உன்னை அடிக்கடி தொந்தரவு செய்து விட்டேன். என்னை மன்னித்து விடு இனி நீ இருக்கும் பக்கமே திரும்பி பார்க்க மாட்டேன் "



என்று சொல்லிக்கொண்டு தன் ஊன்று கோலை எடுத்து கொண்டு மெதுவாக நடக்க ஆரம்பித்தார் அறுபத்தைந்து வயது விஜய குமார்

தனக்கு திருமனாமாகி நாற்பது வருடம் கழித்தும் இன்னும் முன்னே காதலித்த தப்பிற்காக இப்படி தொந்தரவு தருகிறாரே என்று விஜய குமார் போன திசையை கவலை கலந்த கோபத்துடன் நோக்கினால் அறுபது வயது பவித்ரா பாட்டி

இது வரை திட்டமா படித்ததிற்கு நன்றி

இதுவும் சும்மா ஒரு டைம் பாஸ் கதைதான்

படித்து மறக்காம ஒட்டு போடுங்க சாரே

7 comments:

  1. சிரிச்சு முடியல.....!

    ReplyDelete
  2. வோட்டு போட்டாச்சு போட்டாச்சு.. இருந்தாலும் இப்படி ஏமாத்தியிருக்க கூடாது நீங்க..!!
    சும்மா தான்... கிண்டல் பண்றேன்.. கதை நல்லா இருக்கு..

    ReplyDelete
  3. கதை நல்லா இருக்கு அரும்பாவூர்..உங்கள் புகைப்படம் புத்தகத்தில் வந்துள்ளது...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  4. @சித்ரா
    நிச்சயம் ஒரு பதிவு பிரபலம் அடைய வாக்கு என்பது முக்கியம் அதிலும் உங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றி
    @ஆனந்தி
    உங்கள் பாராட்டுக்கு நன்றி ஆனந்தி
    @வேலன்
    கதை நல்லா இருக்கா ? ரொம்ப சந்தோஷம் வேலன் அப்படியே எந்த புத்தகம் என்று சொன்னால் சந்தோஷம்

    ReplyDelete
  5. காதல் கிறுக்கு பிடிச்சிருச்சு போல.. அருமை நண்பா

    ReplyDelete
  6. நல்ல பதிவு நண்பா, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை