இன்று எங்கு பார்த்தாலும் காய்ந்து வறண்டு போய் இருக்கும் விளை நிலங்கள் .விண்ணை தொடும் காய்கறிகள் ,தண்ணிர் பஞ்சம் இது ஏன் என்று நினைப்பில் இந்த பதிவு
நமக்கு இரண்டு வீடு இருந்தால் சற்று நிம்மதியாய் இருப்போம். ஏன் ஒன்று போன என்ன மற்றது தான் இருக்கே இது மனித இயல்பு .
இருப்பதே ஒன்று என்று சொல்லும்போதுதான் அனைத்திலும் பயம் வருகிறது .
உயிர் பயம் கூட அப்படி பட்டதுதான் இதே மனித இனத்திற்கு இரண்டு உயிர் என்று அமைந்து இருந்தால் நினைத்து பாருங்கள் உலகம் எப்படி நரகமாக போய் இருக்கும் .
உயிர் பயம் இல்லா மனிதனின் செயல் எப்படி இருக்கும் நல்லவர்களை விடுங்கள் தீயவர்களை நினைத்து பாருங்கள் .
உலகம் நாம் இருக்கும் வரை ஒன்றும் ஆகாது அது வரும் சந்ததியினர் விஷயம் நமக்கு இப்போது எந்த பாதிப்பும் இல்லை என்ற எண்ணமே காரணம் .
நாளை வரும் நபர்களை பற்றி நமக்கு என்ன கவலை என்று நினைப்பதை விட அவர்கள் நம் சந்ததியினர் என்று நினைக்காத மனம் கூட காரணம் .
ஒரு புறம் மனைதை மயக்கும் இயற்கை அழகு மறுபுறம் சுட்டெரிக்கும் வெயில் ,பஞ்சம் வறுமை எல்லாதிற்கும் என்ன காரணம் உலகம் படைக்கப்பட்ட நாள் முதல் இல்லாத இந்த விஷயம் இப்போது வர யார் காரணம்.
நிச்சயம் யாரையும் குறை சொல்வதை விட நாம் தான் காரணம்
நாளை வர போகும் காங்க்ரிட் மரம் என்னும் வீடு கட்ட இன்று பூமி என்னும் குழந்தை காயப்போட்டது யார் விளை நிலங்களை நம் பசி போக்கிய நிலங்களை காயப்போட்டு .நாளை நம் கட்ட போகும் காங்க்ரிட் மரம் எந்த விதத்தில் நமக்கு பயன் தரும்
எத்தனை ஏக்கர் நிலங்களை விவசாயம் லாபம் இல்லை என்று விளை நிலங்களை விலை நிலங்களாக மாற்றியது யார் .
நிச்சயம் விவசாயி என்று மட்டும் சொல்ல முடியாது .அவன் விளைவிக்கும் மதிப்பு மிக்க உணவு பொருளுக்கு ஒரு நல்ல மதிப்பு தரமால் .விவசாயம் என்றால் நஷ்டம் என்று மாற்றி அவனின் விவசாயம் என்னும் ஆதாரம் மீது கை வைத்தால் அவன் என்ன செய்வான் தங்க முட்டை போடும் கோழி கதைதான் இங்கு நடந்துள்ளது
மனித உயிரின் ஆதாரம் உண்ணும் உணவு பொருள்கள் விலை உயர்ந்து யார் காரணம்
செல் போன் விலை குறைந்து விட்டது ,கம்ப்யூட்டர் விலை குறைந்து விட்டது இது எங்கள் சாதனை என்று கூறுவது எப்படி பட்ட முட்டாள் தனம் .
மனிதன் ஆதாரம் அவன் உண்ணும் உணவு மட்டுமே அந்த உணவு அவனுக்கு வாங்கும் விலைக்கு கிடைக்காமல் போனதிற்கு காரணம் விவசாயம் இல்லாமல் போனது மட்டுமே ,விவசாயம் போனது என்று சொல்வதை விட இயற்க்கை அழிந்து கொண்டு இருக்கு என்று சொல்வது சரியானது
அந்த காலத்தில் அசோகர் மரம் நட்டார் தண்ணிர் ஊற்றினார் என்று நம் பாட திட்டம் சொல்ல ஆரம்பித்து ஐம்பது வருடம் இருக்கும் இந்த காலத்தில் எத்தனை மரம் வளர்த்தோம் .
இனி வரும் காலங்களில் பாட திட்டங்களில் அசோகர் மரம் நட்டார் ,நாங்கள் அந்த மரத்தை எல்லாம் வெட்டினோம் என்று சொல்வது எவ்வளவு கேவலம்
வருடம் முழுவது மரம் நடும் விழா நடக்கிறது வருபவர் மரம் நடுவார் மறு நாள் அதை ஆடு தின்று இருக்கு
ஏன் நம்மால் மர கன்று நட்டு மரம் ஆக்க முடியாத முடியும் அதை பற்றி ஒரு விழுப்புணர்வு வர வேண்டும்
நிச்சயம் தனி மனிதன் செய்யும் செயலை விட சமுதாய விழுப்புணர்வே உண்மையான் வெற்றியாக இருக்கும்
இயற்க்கை வசதி அமையாத பல நாடுகள் தங்கள் முயற்சியால் பாலைவன மணலில் சோலைவனம் உண்டாக்கும் போது எல்லா வசதிகளும் அமைந்த நம் நாட்டில் அமையாமல் போனதிற்கு யார் காரணம்
அனைவரும் சொல்லலாம் வீட்டிற்கு முன் மரம் வளர்த்தல் மரத்தின் வேர் வந்து வீட்டின் சுவரை பதிக்கும் என்று நினைக்கும் ஒரு சாரார் ,மரம் வளர்க்க மூன்று நான்கு அடி வீணாக போகுமே என்று நினைக்கும் மற்றும் ஒரு பகுதி
பிளாட் போடும் வியாபாரியோ பத்தடி சாலையே அதிகம் இதில் மரம் நட வேற சில அடி தர வேண்டுமா என்று நினைப்பு இப்படி எல்லா இடத்திலும் தங்கள் சாதக பாதக விஷயம் பார்ப்பவர்கள் கூட ஒரு காரணம்
சென்னை முதல் கன்னியாகுமரி வரை சாலை முழுவது இப்போது எத்தனை மரங்கள் உள்ளது .எங்கு பார்த்தாலும் நாளை வர போகும் வீட்டிற்கு இன்று தரிசாக இருக்கும் பிளாட் மட்டுமே பார்க்க முடியும்
ஒரு நல்ல மழை பெய்தாலும் அதை தேக்கி வைக்கும் தன்மை இல்லாமல் போன நிலங்களே அதிகம்
இந்த நிலை மாற என்ன செய்யலாம் இதை பற்றி உங்கள் கருத்து
எவரேனும் மரம் வளர்ப்பு விசயத்தில் வெற்றி பெற்ற விஷயம் இருந்தால் அதை பற்றி தெரிவிக்கவும்
மீதி அடுத்த பதிவில்
இன்றைய பதிவின் சிறந்த ப்ளாக்
நம் மக்கள் ஆங்கிலம் கற்று கொள்ள இருக்கும் ஆர்வமும் அதற்க்கு செலவழிக்கும் பணமும் சொல்லி மாளாது
பாத்து நாட்களில் ஆங்கிலம் ஒரு மாதத்தில் லண்டன் ஆங்கிலம் என்று புத்தகமும் அதற்க்கு நாம் செய்யும் செலவும் ஹ்ம்ம் ஆனால் ப்ளாக் ஸ்பாட் ஒன்றில் அதவும் சிறப்பான பயிற்சி செலவே இல்லாமல் சிறப்பாக ஆங்கில மொழி பற்றி அறிந்து கொள்ள ஆங்கிலம் ப்ளாக் ஸ்பாட்
பாருங்க தொடர்ந்து படிப்பிங்க
நல்ல சிந்தனை நண்பரே..
ReplyDeleteபின்னூட்டமல்ல..
ReplyDeleteசிறு பிழை
/இயற்கை என்பதே சரி..
தலைப்பில் இயற்க்கை என்று உள்ளது../ க் என்ற எழுத்தை நீக்கிவிடலாமே..
உங்கள் சிந்தனைக்கு ஒரு சல்யூட்.
ReplyDelete//வருடம் முழுவது மரம் நடும் விழா நடக்கிறது வருபவர் மரம் நடுவார் மறு நாள் அதை ஆடு தின்று இருக்கு //
பெயருக்காகத்தானே மரங்களை நடுகிறார்கள், உண்மையில் மரங்களை நடவேண்டுமேன்று நினைப்பவன் அதற்குரிய பாதுகாப்பு வேலியையும் சேர்த்தே நாடுவான்.
அருமை. நன்றாக உள்ளது.
ReplyDeleteஅன்பரசு செல்வராசு
Nice One friend
ReplyDeleteGood Thinking
ReplyDeleteநல்லது எழுதினா பின்னூட்டம் கம்மி தான் போல.. சரி அத விடுங்க..
ReplyDelete//உயிர் பயம் கூட அப்படி பட்டதுதான் இதே மனித இனத்திற்கு இரண்டு உயிர் என்று அமைந்து இருந்தால் நினைத்து பாருங்கள் உலகம் எப்படி நரகமாக போய் இருக்கும் .//
இருக்கிறது ஒரு உசிரு. அதுவும் நாம முழுசா உணர்ந்து வாழறது 15 அல்லது 20 வருஷம் இருக்கலாம். அதுக்கே இந்த மனுஷன் இந்த ஆட்டம் ஆடறான். இதுல ரெண்டு உயிரு வேற.. கெடைக்குற கொஞ்ச வருஷத்துல பேர நிலை நாட்டீட்டு போகணும். கொறஞ்சது நம்ம பேர புள்ளைங்களாவது நம்மள நல்லவங்கன்னு சொல்லணும்.. அம்புட்டுதேன்...
நன்றி..