Sunday, January 3

AR ரஹ்மான் பிறந்த நாள் பாகம் 2




ரஹ்மானின் இந்த அளவிலான வளர்ச்சிக்கு அனைவரும் கூறும் முக்கிய காரணம் அவர் புகழ் என்னும் போதைக்கு அடிமையாகாமல் இருப்பது தான்
ஒரு முறை அவர் தன பேட்டி ஒன்றில் முதல் இடத்தில் இருப்பதை பற்றி உங்கள் கருத்து என்ன என்ற கேள்விக்கு அவரின் பதில்

நான் முதல் இடம் இரண்டாம் இடம் என்பதை பற்றி என்றும் நினைப்பதில்லை நாளை என்னை விட ஒருவர் முதல் இடத்தில வந்து விட்டால் அந்த எண்ணமே என் வளர்ச்சியை பாதிக்கும் என்ற பதிலே அவர் என்றும் புகழ் என்னும் வார்த்தைக்கு அடிமையாகாமல் இருப்பதற்கு சான்று

அவரிடம் அனைவரும் கூறும் குறை பாடல்களை மிகவும் கால தாமதமாக தருகிறார் என்று அவரின் வெற்றி பட எண்ணிக்கையில் இல்லை பட பாடல்கள் எப்படி ரசிகனை கவருகிறது என்பதே

ஒரு இந்திய திரை இசை அமைப்பாளர் உலக அளவில் இந்த அளவிற்கு புகழ் பெற்றது ரஹ்மான் மட்டுமே
ரஹ்மானின் பாடல்கள் உலக அளவில் புகழ் பெற்றன அதில் ஷ்லம்டாக் மில்லியனர் ஜெய் ஹோ பாடல் பில்போர்ட் தர வரிசை பட்டியலில் இடம் பெற்றது ஒரு சிறப்பு
billboard.com



இசை உலகில் தான் சம்பாதித்த பணம் தனக்கும் தன் குடும்பத்துக்கும் போதும் என்ற எண்ணம் இல்லாமல் அதே இசை துறையில் அந்த பணத்தை முதலிடு செய்வது அவரின் சிறப்பு


அதனால் தான் ஆசியாவில் மிக சிறந்த ஒலி பதிவு கூடம் அவரின் பஞ்சதன் ஸ்டுடியோ என பெயர் வாங்கியது
உலக படங்களுக்கு இணையான இசையமைப்பு அவரின் உலக தர பஞ்சதன் ஸ்டுடியோ வில் சாத்தியமாகிறது

அவர் ஆங்கில படம் மட்டும் இல்லாமல் சைனிஸ் மொழி படத்திற்கும் இசை அமைத்துள்ளது அவரின் மற்றும் ஓர் சிறப்பு


ஆங்கில மேடை நாடக இசை பாம்பே ட்ரீம்ஸ்.லார்ட் ஆப் தி ரிங்க்ஸ்
ஆங்கில படம் எலிசபெத் கோல்டன் ஏஜ் ,ஷ்லம்டாக் மில்ல்லியனர் ,கப்ல்ஸ் ரெட்ரியட்


சீனா மொழி வார்ரியர் ஆப் ஹெவன் அண்ட் எர்த்
ஒரு பாடல் ஆல்பம் pray for me brother ஐ நா அமைப்புக்காக வெளியிட்டது

இன்னும் சொன்னால் அவரின் சாதனைக்கு எல்லைகள் இல்லை



இப்போதும் அவரின் விண்ணை தாண்டி வருவாயா பாடல் எப்போது வரும் என எதிர்பார்க்க வைப்பது அவரின் இசை வெற்றிக்கு சான்று

அவரின் பிரத்யோக இணைய தளத்தில் விண்ணை தாண்டி வருவாயா பாடல் ஹோசன அரை நிமிட பாடல் கேட்க்கும் போதே முழு பாடல் எப்படி இருக்கும் என்ற எதிர் பார்ப்பை உண்டாக்கி விடுகிறது
கீழே உள்ள சுட்டிய அழுத்தி அந்த பாடல் சாம்பிள் கேளுங்கள்
 VINNAI THAANDI VARUVAYA SAMBLE MUSIC

இந்த ஆண்டின் சிறந்த இந்தியர் ரஹ்மானுக்கு அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

உங்கள் வாழ்த்து கருத்துக்களை கூறவும்

8 ஜனவரி கத்தார் வாசிகளும்
16 ஜனவரி சிட்னி நகர மக்களும்
21 ஜனவரி மஸ்கட் ஓமன்
இங்கே எல்லாம் ரஹ்மான் இசை கச்சேரி பாருங்கள் சந்தோசபடுங்க


நிச்சயம் ஒரு நல்ல கலைஞன் என்பவனை எல்லாம் போற்ற காரணம் அவன் செய்யும் செயலும் புகழுக்கு ஆசைபடாத அவனின் உழைப்பே தவிர அடுத்தவர் தன்னை பாராட்ட வேண்டும் என்று நினைக்கும் போதே அவன் செயல்கள் தோல்வி அடைகிறது .
    நிச்சயம் விளம்பரம் வீண் பந்தாக்கள் உள்ள யாரும் முன்னேறியதாக வரலாறு  இல்லை
என் பார்வையில் அனைவரும் நல்லவர்களே
  சரி சரி போற போக்குல ஒரு ஓட்டை குத்திட்டு  போங்க நண்பரே

 முதல் பதிவு

No comments:

Post a Comment

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை