போன பதிவில் ஆரம்பமே தவறாக இருந்தது அதை சுட்டி காட்டிய முனைவர் இரா குணசீலன் அவர்களுக்கு நன்றி
ஒன்றும் இல்லை இயற்கை என்பதுதான் சரி ஆனால் நான் இயற்க்கை என்று எழுதி இருந்தேன் சுட்டி காட்டிய குணசீலனுக்கு நன்றி
மரம் மட்டும் நடுவது நம் எண்ணம் இல்லை மரம் நட இடம் இல்லாதவர்கள் ஏன் சிறு செடி கூட நடலாம்
நம் வீட்டின் முன்னால் சிறு சிறு அழகிய செடிகள் மற்றும் அழகிய பூச்செடிகள் நடலாம் எப்படி என்பவர்கள் ராகவன் நைஜீரியா அவர்களின் இந்த பதிவை படிக்கவும்
இந்த பதிவில் அரசாங்கத்தை நம்பாமல் நம்மால் முடிந்த அளவிற்கு இயற்கைக்கு சிறு உதவிகள் செய்யலாம்
பழைய மாணவர் சந்திப்பும் மரம் நடும் விழாவும்
ஆண்டு தோறும் ஏதாவது நாட்களில் நம் படித்த கல்லுரி மாணவர்களை சந்திக்கும் நாள் நடக்கும் போது வந்தோம் பார்த்தோம் கொண்டாடினோம் என்று இல்லாமல் அந்த நாளில் வந்ததிற்கு நினைவாக மரம் நடலாம் மரம் நட்டால் மட்டும் போதுமா அந்த மரம் ஒரு நல்ல நிலை வர ஒரு வருடம் ஆவது ஆகும் அதற்க்கு என்ன செய்ய வேண்டும்
அந்த மரம் நன்றாக வளர மாதம் ஐநுறு ருபாய் என்றாலும் ஒரு
வருடத்திற்கு ஆறு ஆயிரம் மட்டுமே ஆகும்
பள்ளிக்கூடம் படத்தில் ஒரு காட்சி வரும் அதில் கதாநாயகன் சிறு வயதில் நட்ட மரம் பெரிதாக வளர்ந்து இருக்கும் அதை பார்க்கும் போது நமக்கே ஆசையாக இருக்கும்
அது ஒரு கற்பனை கதை என்றாலும் நிஜத்தில் இதை நீங்கள் நினைத்து பாருங்கள்
இதை படிக்கும் நீங்கள் ஏன் இதை ஏன் யோசிக்க கூடாது இனி வரும் காலங்களில் பழைய மாணவர்கள் தினம் மட்டும் கொண்டாடாமல் .நாம் வந்தோம் கொண்டாடினோம் என்று இல்லாமல் நாம் வந்ததிற்கு ஒரு நினைவு சின்னமாக பல வருடம் சென்று நாம் பார்த்தல் அங்கே மரம் மட்டும் இருக்காது .அது நம் நினைவுகளை தூண்டும் நினைவு சின்னமாக இருக்கும்
ஆண்டிற்கு ஒரு பள்ளியில் பத்து மரம் என்றால் நூறு பள்ளயில் ஆயிரம் மரம் கனவாக இருக்கும் இது நாம் நினைத்தால் நிஜமாக மாறும்
இது நிஜத்தில் நடந்த நிகழ்ச்சி கூட எங்கள் அரும்பாவூர் அரசு மேல் நிலை பள்ளயில் சென்ற வருடம் நட்ட மர கன்றுகள் இன்று நல்ல நிலையில் வளர்ந்து உள்ளன (அதன் புகைப்படம் விரைவில் )
இனி வரும் காலங்களில் நம் வாழ்க்கையில் ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு செலவு செய்யும் போது மரம் நடும் விழா என்று வைப்போமே மர கன்று வைத்தால் மட்டும் போதாது அதை ஒரு நிலை வரும் வரை காப்போம் தனி மரம் தோப்பகது கூடி செய்தால் நிச்சயம் முடியும்
நாம் இருக்கும் வீதிகளில் நிச்சயம் பெரும் அளவில் வளரும் மரம் நட இயலாது .
மின் கம்பங்கள் சிறு வீதி போன்ற இடைஞ்சல்கள் இருக்கும் ஆனால் அழகிய பூச்செடிகள் செம்பருத்தி ,மல்லிகை போன்ற அழகிய செடிகளை நடலாம்
நிச்சயம் கேரளா மட்டும் இயற்கையில் அழகு இல்லை நம் தமிழ் நாடும் தான் இயற்க்கை என்னும் அமைப்பு எல்லா வசதி இருந்தும் ஏன் அதிகமான இடங்கள் காய்ந்து பொட்டால் காடாக மாற நாமும் காரணம்
நாம் கட்டும் வீட்டிற்கு அழைய முறையில் வண்ணம் அடித்தால் மட்டும் போதுமா ?சிறு சிறு செடிகள் வளர்க்கலாம் இதற்க்கு ஒன்றும் அதிகம் செலவு ஆகாது ,அழகிய க்கொடி நடலாம்
நாளை வளமான இயற்க்கை நிறைந்த தமிழகம் மாற சிறு துரும்பாக இருப்போம்
நைஜரிய ராகவன் போல அரும்பாவூர் பள்ளி மாணவர்கள் போல நாமும் செய்யாலாம்
இன்றைய பதிவின் சிறந்த ப்ளாக்
ராகவன் நைஜீரியா ப்ளாக் படிக்க இதை எழுதவும்
வந்திங்க படிச்சிங்க சரின்னா ஒரு வோட்டையும் போடுங்க
நல்ல சிந்தனைப் பகிர்வு நண்பரே..
ReplyDeleteஇயற்கை சார் செய்திகளைத் தொடர் இடுகையாகவே எழுதுங்கள் நண்பரே..
நல்ல சிந்தனைப் பகிர்வு.
உங்களுக்கு 'இயற்கை பிரியர்' என்று பட்டம் கொடுக்கலாம் போலுள்ளதே.தொடர்ந்தும் கலக்குங்க....
ReplyDelete