Tuesday, September 28

தமிழ் திரைப்பட தலைப்புக்கு கேளிக்கை வரி விலக்கு! இப்போ என்ன சொல்ல வராங்க?


தமிழில் பெயரிடப்படுகின்ற திரைப்படங்களுக்கு மட்டுமே கேளிக்கை வரி முழுமையாக விலக்களிக்கப்படும் என்று ஏற்கனவே முதல்வர்,  திரைப்படத் துறையினரோடு கலந்தாலோசித்து அறிவித்ததற்கு இணங்க  அந்த அறிவிப்பையும், தமிழ் மொழி வளர்ச்சியையும் கவனமாகக் கருத்தில் கொண்டு தமிழ்ப் படங்கள் தயாரித்தவர்கள் கேளிக்கை வரி விலக்கை பெற்றுப் பயனடைந்துள்ளனர்.



தங்கள் விருப்பத்துக்கு திரைப்படங்களுக்கு பெயர் வைத்துக் கொண்டு, வரி விலக்கு கோரி பரிந்துரை செய்வது வழக்கமாகி வருவது வருத்தமளிக்கிறது' என்று, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

  நாட்டில் உள்ள எத்தனயோ ஏழை மக்களுக்கு பயன்பட வேண்டிய பணத்தை தமிழில் பெயர் வைத்தால் போதும் கேளிக்கை வரி முழுமையாக விளக்கு அளிக்கப்படும் என்று சொல்லி ,இருப்பது எந்த வகையில் நியாயம் என்று  நினைக்கும் முன்
தமிழ் மொழியில் பட தலைப்பை வைத்த ஒரு காரணத்தால் ஏழை மக்களின் பணம் வீணாக போகுதே என்று நினைக்கும் முன்
இப்போது வந்து உள்ள தமிழக அரசின்
 "தங்கள் விருப்பத்துக்கு திரைப்படங்களுக்கு பெயர் வைத்துக் கொண்டு, வரி விலக்கு கோரி பரிந்துரை செய்வது வழக்கமாகி வருவது வருத்தமளிக்கிறது' என்று, தமிழக அரசு தெரிவித்துள்ளது."  என்ற இந்த அறிக்கை என்ன சொல்ல வருகிறது என்று எனக்கு தெரிய வில்லை
       



இடையில் ஒரு சிலர் தங்கள் விருப்பத்துக்குப் பெயர்களை வைத்துக் கொண்டு, அதுவும் தமிழ்தான் என்று வாதாடுவதும் வரிவிலக்கு கோரிப் பரிந்துரை செய்வதும்.
 தற்போது வழக்கமாகி வருகிறது.
 எனவே தொடக்கத்தில் அரசு விதித்துள்ள நிபந்தனைப்படி, எந்த ஒரு திரைப்படமும் தமிழில் பெயரிடப்படாமல் வெளிவருமேயானால்
 அந்தத் திரைப்படத்திற்கு கேளிக்கை வரிவிலக்கு கண்டிப்பாக வழங்கப்பட மாட்டாது

    ஆகா தமிழகத்தில் தமிழ் வளர்ந்ததிற்கு முக்கிய காரணம் தமிழில் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர்  வைத்தது தான் காரணம்! என்று சொன்னாலும் சொல்வார்கள்

 

        இப்போது தமிழில் பெயர் உள்ளதா இல்லையா என்று அறிக்கை விடும் அரசு  அந்த படங்கள் எப்படிப்பட்ட கதை உள்ளது என்று ஒரு முறையாவது யோசித்ததா ?
மக்கள் எப்படி போனால் என்ன தங்களுக்கு பெயர் மட்டும் தான் வேண்டும் என்று நினைப்பது போல உள்ளது இந்த அறிக்கை

           அதுவும் இத்தனை நாட்கள் சென்று திடீர் என இந்த ஞானயோதம் வர என்ன காரணம் எப்படியும் இதற்க்கு காரணம் என்ன என்று விரைவில் தெரியும் (உங்களுக்கு ஏன் என்று தெரியுமா ? )




         தமிழக மக்களுக்கு பயன்பட வேண்டிய இந்த பணம்  வெறும் தமிழில் படத்திற்கு பெயர் வைத்து ,கதை மற்றும் திரைக்கதைகளில் தமிழ் மக்களுக்கு ஒரு பைசாவுக்கு பயன்படாத கருத்துக்களை பரப்பி கோடிக்கணக்கில் திரை உலகம் லாபம் பார்த்ததுதான் மிச்சம்  

2 comments:

  1. //தமிழக மக்களுக்கு பயன்பட வேண்டிய இந்த பணம் வெறும் தமிழில் படத்திற்கு பெயர் வைத்து ,கதை மற்றும் திரைக்கதைகளில் தமிழ் மக்களுக்கு ஒரு பைசாவுக்கு பயன்படாத கருத்துக்களை பரப்பி கோடிக்கணக்கில் திரை உலகம் லாபம் பார்த்ததுதான் மிச்சம் //


    unmai. pakirvukku nanri, vaalththukkal,

    ReplyDelete
  2. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா :-)

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை