Thursday, September 16

இளையராஜா சார் இது சரியா ? இதுவா உங்கள் தரம் ?

உங்களை வாழ்த்தி ஒரு நாள் ஆகா வில்லை அதற்குள் இப்படி ஒரு பதிவு போடா வேண்டியி நிலைக்கு உங்களில் விருது பற்றிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டி உள்ளது

உங்கள் கருத்து 1
மேற்கத்திய இசைக் கருவிகள்தான் இப்போது இசை உலகை ஆளுகிறது





  இது மாடர்ன் உலகம் சார் இப்போ மேற்கத்திய இசை கருவிகள் தான் உலகை ஆளுகிறது என்பது உங்கள் கருத்தாக  இருக்கலாம் .இப்போது இருக்கும் இந்த தகவல் தொழில் நுட்ப உலகில் மேற்கத்திய இசை இந்தியா இசை என்பதை விட இசை எப்படி பயன்படுத்த படுகிறது என்பதை பாருங்கள் சுப்ரமணிய புறம் ,பூ ,களவாணி பட பாடல்கள் ஆகட்டும் மற்றும் இப்போது உங்களின் மகனின் இசையில் தமிழகத்தை கலக்கிய பைய பட பாடல்கள் ஆகட்டும் எந்த விதத்தில் குறை உள்ளது .இசை என்பது காலத்திற்கு காலம் மாற கூடியது 1977 முந்தைய எம் எஸ் வி  ராமமூர்த்தி அவர்களின் பாடல்கள் ஆகட்டும் அதற்க்கு பிந்திய உங்கள் பாடல்கள் ஆகட்டும் ஒரே மாதிரியாகவா இருந்ததது 1990 பிந்திய உங்கள் இசை எடுத்து கொள்ளுங்கள் தளபதி சிங்காரவேலன் இன்னும் பல படங்கள் சொல்லலாம் சார்
அதில் நீங்கள் எந்த விட மேற்கத்திய இசை கருவி பயன்படுத்தவில்லை என சொன்னால் இந்த கருத்தை சொல்ல உங்களுக்கு உரிமை உள்ளது முதலில் கிராமாபோனில் பாட்டு கேட்டவன் பிறகு டேப் ரெகார்டரில் பாட்டு கேட்டான் பிறகு வாக் மென்  சிடி எம்பி 3   ஐ  போட் மாறி விட்டன இப்போது உலகம் முழுவதும் ஐ போட் இருக்கிறது இது சரி இல்லை என்று சொன்னால் எப்படி. சின்ன புள்ள  தனமாக இருக்கோ அதை போல இப்போ மேற்கத்திய இசை கருவிகள் உலகை ஆளுகிறது என்று நீங்கள் சொல்வது இருக்கு 



உங்கள் கருத்து 2
ஆனால், இப்போது இசையின் நிலை அப்படி இல்லை. இசைக்கு மொட்டை அடித்து புருவத்தையும் எடுத்து விட்டார்கள். இசை மொட்டையாக இருக்கிறது. இன்று இருந்த நிலை, இசைக்கு அன்று இருந்திருந்தால், நான் இந்தத் துறைக்கே வந்திருக்க மாட்டேன்.
(அப்புறம் ஏன் இன்னும் இசை அமைப்பில் இன்னும் இருக்கிர்கள் )

  இது எப்படி இருக்கு என்றால் கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு இப்போ இந்த வீடு சரி இல்லை என்று கல்லை எறிவது போல இருக்கு .நீங்கள் இந்த வீட்டில் இருந்து கொண்டு அதிலே பிழைத்த கொண்டு இன்று உங்களின் தேவைகள் எல்லாம் நிறைவேறிய பின்பு நீங்கள் மட்டும் ஜீவனுள்ள இசைகள் கொடுத்தது போலவும் இப்போது இருக்கும் இசை அமைப்பாளர்கள் எல்லாம் ஜீவன் இல்லாத மொட்டை இசை கொடுப்பது போல சொல்வது
உங்கள் தரத்தை ஏன் நீங்களே குறைத்து கொள்கிறிர்கள் மற்ற இசை அமைப்பாளர்கள் இசை உலகம் முழுவதும் போனபோது நீங்கள் யார் எங்கே சென்றால் என்ன நான் இங்கே என் மக்களுக்கு இசை அமைப்பேன் என்று சொன்னிர்கள் உங்களை யார் போக வேணாம் என்று சொன்னது உங்களாலும் உலக தரத்திற்கு இசை கொடுக்க முடியும் என்றால் போங்கள் அதை விட்டு விட்டு உங்களின் இது போன்ற தரம் குறைந்த கருத்துக்களை சொல்லி இப்போ இருக்கும் இசை அமைப்பாளர்களை மட்டும் தட்டுவதுடன் இசை ரசிகர்களையும் கேவலப்படுத்த வேணாம்

இசைக்கு அன்று இருந்திருந்தால், நான் இந்தத் துறைக்கே வந்திருக்க மாட்டேன்.  இது சொல்வது எப்போ இருந்து சார் பழசி ராஜா படத்திற்கு பின்பா அல்லது உங்களின் அடுத்த படத்திற்கு பின்பா ?
ஏன் என்றால் நீங்கள் இன்னும் இசை அமைத்து கொண்டு இருக்கிறிர்கள் இல்லை இப்போ இசை சரி இல்லை மொட்டை அடித்து மோசமாக இருக்கு நான் முடி வளர்ந்த உடன் இசை அமைக்கிறேன் என்று நீங்கள் வெளியே ஏன் இன்னும் செல்லவில்லை சார் ?

அதாவது உங்களுக்கு மட்டும்தான் இசை பற்றி முழுமையாக தெரியும் என்ற நினைப்ப அப்படி என்றால் ஏன் சார் உங்கள் வாரிசுகளை இசை அமைக்க விடுகிறிர்கள் .உங்கள் பேச்சை உங்கள் மகன்கள் கேட்க்க மாட்டார்களா ?

உங்களின் நல்ல இசைவிட உங்களின் இது போன்ற மோசமான வார்த்தைகள் ஒரு நொடியில் உங்கள் இசை மீது உள்ள மதிப்பை கெடுத்து விடுகிறது
நல்ல இசை கலைஞனுக்கு தேவை கர்வம் இல்லாத உண்மையான மரியாதை மட்டும் சார்


உங்கள் கருத்து 3
நான் யாரையும் நம்பி இசைத் துறைக்கு வரவில்லை. பெரிய இசை மகான்கள் வாழ்ந்த மண் இது. எல்லோரும் போய் சேர்ந்து விட்டார்கள். அவர்கள் முன் நிற்பதற்கே பயமாக இருக்கும். பெரிய ஜாம்பவான்கள் முன் நாம் என்ன செய்து விட போகிறோம் என எண்ணத் தோன்றும். அவர்கள் எல்லாம் உன்னதமான இசையைத்தான் தந்து சென்றார்கள்.


இது உண்மை சார் இசை மேதைகள் என்பவர்கள் யார் வரும் காலத்தில் உங்களையும்  சிறந்த இசை மேதை என்று உலகம் சொல்லும் அதற்க்கு பின்பு உங்கள் மகனையும் சிறந்த இசை மேதை என்று சொல்லும் அது காலத்தில் கையில் உள்ளது இசை மேதைகள் காலம் முடிந்து போனது போல உள்ளது உங்கள் வாக்குமுலம்

இது போன்ற கருத்துக்களை சொல்லி ஒரு நொடியில் உங்கள் இசை தரத்தை குறைத்து கொள்ள வேண்டாம்


இந்த் பதிவு உங்களுக்கு பிடித்து மறக்காமல் பின்னுட்டம் மூலம் பாராட்டவும் /திட்டவும்

மறக்காமல் ஓட்டை போடவும்






 

21 comments:

  1. இது போன்ற கருத்துக்களை சொல்லி ஒரு நொடியில் உங்கள் இசை தரத்தை குறைத்து கொள்ள வேண்டாம்







    மொட்டைத்தலைக்கும் மொலங்ககாளுக்கும் எப்படி
    முடிச்சு போடுகிறீர் என்று புரிய வில்லை .இதனால்தான்
    அந்த மனிதன் ஒதுங்கி ஒதுங்கி போகிறார் அனால் நீங்கள்
    தான் அவரை துரத்தி துரத்தி வாயை கிளபுகிரிர்கள்

    ReplyDelete
  2. இந்த பதிவை படிக்கும்பொழுது...
    ஒரு பாடல் (சேனல் மாற்றும் பொழுது)

    ஏன் பேரு மீனாக்குமாரி...
    போவோமா குத்திர சவாரி...
    ஏன் ஏன் ஏன் பேரு....பேரு... பேரு.....

    ReplyDelete
  3. enna koduma sir ithu

    ReplyDelete
  4. Your interpretation of what was reportedly said by Raja is more confusing to me than his statements. From what I understand, he was talking about the present generation of Carnatic instrumental vidwans and feeling nostalgic about the status commanded by the yesteryear masters!

    ReplyDelete
  5. எப்போது ஏ ஆர் ரஹ்மான் வந்தாரோ அப்பவே இவர் இது போல கேவலாமா பேசி தன் தரத்தை கெடுத்துக்க ஆரம்பிச்சிட்டார்...

    ஹே.ராம் படத்துக்கு இசை அமைக்கும் போது இவர் பேசியதை டீவியில் கேட்டபோது ச்சே...இப்படி ஒரு கேவலமான மனுஷனா இவர் என்று துப்ப தோன்றியது. மகா மட்டமான கருதை சொன்னதை யாரும் மறந்திருக்க மாட்டாங்க ..

    சுருக்கம் இதுதான் ::. என்னை தவிர யாருக்குமே இசை தெரியாது...

    வரும் புதியவர்களை பாராட்ட வேனாம் .. இது மாதிரி கேவலமா பேசாம இருக்கலாமே..

    இனியாவது (( திருந்துவாரா )) செய்வாரா..???

    ReplyDelete
  6. வரவர bad ராஜாவா மாறிட்டீங்க ராஜா சார்.

    ReplyDelete
  7. Anonymous17.9.10

    //
    உங்களின் நல்ல இசைவிட உங்களின் இது போன்ற மோசமான வார்த்தைகள் ஒரு நொடியில் உங்கள் இசை மீது உள்ள மதிப்பை கெடுத்து விடுகிறது
    நல்ல இசை கலைஞனுக்கு தேவை கர்வம் இல்லாத உண்மையான மரியாதை மட்டும் சார்
    //

    இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். பல சமயங்களில் அவர் இப்படிப் பேசி எரிச்சலைக் கிளப்புகிறார்.

    ReplyDelete
  8. Anonymous17.9.10

    //இந்த பதிவை படிக்கும்பொழுது...
    ஒரு பாடல் (சேனல் மாற்றும் பொழுது)

    ஏன் பேரு மீனாக்குமாரி...
    போவோமா குத்திர சவாரி...
    ஏன் ஏன் ஏன் பேரு....பேரு... பேரு..... //

    இன்று இந்த நிலையும் இருக்கத்தானே செய்கிறது, பல பாடல்கள் காதுகளை பழுதாக்கவும் செய்வதை நம்மால் மறுக்கவே முடியாது. மேற்கத்திய இசைக் கருவிகளை, தவறான விகிதத்தில் கலப்பதால் வரும் கொடூரங்களையும் நாம் கேட்டுக் கொண்டுதானே இருக்கிறோம்.

    ReplyDelete
  9. araivekaatuthanamaana padhivu. thittuvadharkaana tharam kooda idhil illai

    ReplyDelete
  10. உங்கள் கருத்து 2
    ஆனால், இப்போது இசையின் நிலை அப்படி இல்லை. இசைக்கு மொட்டை அடித்து புருவத்தையும் எடுத்து விட்டார்கள். இசை மொட்டையாக இருக்கிறது. இன்று இருந்த நிலை, இசைக்கு அன்று இருந்திருந்தால், நான் இந்தத் துறைக்கே வந்திருக்க மாட்டேன்.

    பாஸ் இளையராஜா ஒரு இசை மேதை... இன்றைய இசை காலம் மாறும் போது அதுவும் மாறி விட்டது என்பது உண்மை தான்... ஆனால் இளையராஜா அந்த அடிபடையில் பேசவில்லை... இசை என்பது ஒரு அறிய படைப்பு... அந்த படைப்புகள் அனைத்தும் நின்று போய் பல வருடங்கள் ஆகி விட்டது... எ.ஆர். ரஹ்மான் இசை அமைத்த மெலடி பாடல்களை விட... இளையராஜா இசை அமைத்த மெலடி பாடல்கள் தான் அதிக ஹிட். இன்றைய பாடல்கள் படம் ஓடும் வரை மட்டுமே மனதில் நிற்கிறது... அதற்க்கு காரணம் இசை தான்... அவர்கள் அவ்வாறு இசை அமைக்க காரணம் வியாபாரம்... பாடல் ஹிட் ஆக வேண்டும் அவளு தான்... யோசித்து மியூசிக் அமைக்க இப்பொது யாரும் முன் வருவதில்லை... ஒரு பார்முலா உண்டு... ஒரு குத்து பட்டு ரெண்டு பைட்டு... இந்த பார்முலா இபோ மாறி ஒரு மெலடி பாட்டு, ஒரு குத்து பாட்டு... ஒரு பைட்டு... இந்த மாதிரி இசையை சுருக்கி விட்டார்கள்... இதற்க்கு பேர் தான் இசைக்கு மொட்டை அடித்து புருவத்தையும் எடுத்து விட்டார்கள். இசை மொட்டையாக இருக்கிறது.

    ReplyDelete
  11. சார்... உங்களுக்கெல்லாம் வேறு வேலயே இல்லயா? எப்ப பார்த்தாலும் இளயராஜாவையும் ஏ ஆர் ரகுமான் யும் வச்சு காமெடி பன்னிகிட்டே இருக்கீங்க..! அவுங்க பொளப்ப அவுங்க நல்லாவே பார்கிறாங்க... அவுங்க எப்படி பேசிகிட்டு இருங்தாலும் அவுங்க வயிறும் பையும் நிரம்பிடும், நாம எப்படி பேசினாலும் அவுங்கலுக்கு விளம்பரம்தான்... இப்படியே பால்டிக்ஸ் பேசிகிட்டு இருந்தா நம்ம பொலப்பு நாறிடும்.... இதெல்லாம் விட்டுட்டு ஆக்கப்பூர்வமான சிந்தனைய தூண்டுகிற மாதிரி நல்ல பதிவுகளா கொண்டுவாங்கப்பா!?

    கடுப்பேத்துகிறார்கள் மை லார்ட்...

    ReplyDelete
  12. எப்பொழுது A .R .ரகுமான் திரை உலகில் காலடி எடுத்து வைத்தாரோ

    அப்பொழுதே MELODI செத்து விட்டது.ஒரே இரைச்சல் மயமாகி விட்டது

    தமிழ் பாடல்களின் தரம்.வரிகள் புரிவதில்லை.பாடல்களும் மனதில்

    தங்குவதில்லை.புதிய பாடல் வந்ததும் பழைய பாடல்கள் மறந்து போய் விடுவதும்,

    என்று இன்னும் பல காரணங்கள் இருக்கிறது,A .R .ரகுமானின் வருகையால்.

    இன்று இருக்கும் பல இசையமைப்பாளர்கள் அனைவரும் இவர் வழி வந்தவர்களே.
    --

    ReplyDelete
  13. நல்ல வார்த்தைகள் கொண்டு இளையராஜவுக்கு செல்லிருக்கு அறிவுரை என்று தான் நான் செல்லுவேன் சூடு என்று செல்மாட்டேன்.

    ReplyDelete
  14. raja sir patria ungal vimarsanam migavum mosamanadhu....

    ReplyDelete
  15. இளையராஜா அவர்களின் இசை எப்போதுமே மனதை வருடும். . ஆனால் இப்போது இருக்கின்ற மிகப் பெரிய இசை அமைப்பாளரின் பாடல்களுக்கு ஆயுள் சரியாக 3 மாதம். இரைச்சல் சத்தத்தை அதிகமாக எழுப்பி கவிஞர்களின் எழுத்தை மறைத்த புண்ணியம் எல்லாம் இவருக்கே சேரும். சர்வதேச விருதுகள் கிடைப்பதாலேயே எல்லாம் அவர்கள் இசை எல்லாம் இசை என்று முழுமையாக ஒத்துக் கொள்ள முடியாது. ஒரு கட்டத்தில் தமிழக ரசிகர்களின் இசை ரசனையினை சரியான பாதையில் கொண்டு சென்ற பெருமை எல்லாம் இளையராஜவிற்கே சாரும். கடைக்கோடி ரசிகனும் கேட்கும்படி இசை அமைப்பதில் வல்லவர் இளையராஜா தான்.
    ஒரு துறை மோசமான நிகழ்வினை நோக்கி போய்க் கொண்டிருந்தால் அந்த துறையினை சார்ந்தவர்களுக்கு இப்படி வருத்தம் வருவது சகஜம் தானே.
    பாடல்களை புரிந்து கொள்ளமுடியாதபடி மேற்கத்திய இசையினை பின்பற்றுபவர்களை போல இல்லாமல் இளையராஜா இருப்பது ஒருவேளை தவறோ ? என்னவோ

    ReplyDelete
  16. திறமை + கர்வம் = பொறாமை

    ReplyDelete
  17. இளையராஜாவின்  கருத்தை தவறாகபுரிந்து கொண்டிர்கள்  இசையளுமை இப்பொது குறைந்துள்ளாது உண்மையே  அவரை நீங்கள்  உயர்த்தாட்டியும்  தாழ்த்தவேண்டாம்

    ReplyDelete
  18. இளையராஜாவின் கருத்தை தவறாகபுரிந்து கொண்டிர்கள் இசையளுமை இப்பொது குறைந்துள்ளாது உண்மையே அவரை நீங்கள் உயர்த்தாட்டியும் தாழ்த்தவேண்டாம் Repeat...

    He is a very emotional person that everyone knows (as most top class talented artisans in the world), you do not need to take his points word by word to criticize him. I love Rehman's music but if I need peace I listen Ilayaraja's melody, it will immediately change your mood. Even as a listener how his music doing the magic to change anyone's emotions means you have to understand how much emotions, passion he would have put in to that music. How many times your mother or father or people in their age group would have scolded you "we are all at your age like this or like that" it is just like that, for this your criticism is too much for a genius like him

    ReplyDelete
  19. ஹலோ நீங்கள் எதோ அதி மேதாவி போல எண்ணிக்கொண்டு இசைமேதைக்கு பேச கத்துக்கொடுக்க வேண்டாம் ....விருதுகளைத் தூக்கி எறியுங்கள் ...ராஜாவின் இசையை எதிரியால் கூட புறக்கணிக்க முடியாது ...ஏன் உங்களால் கூட... அப்படியிருக்க, இப்படி நீங்கள் அதிமேதாவிலாசம் காட்டி விளம்பரம் தேடாதிர்கள் ....உங்களுக்காக என்றால் இந்த பின்னூட்டம் வீண் வேலை ...என் ராஜாவிற்காக எனில் இது என் கடமை ..தேவை எனில் வாருங்கள் வண்டி வண்டியாக விளக்கம் வைத்திருக்கிறேன் முழுமையாக எதையும் புரிந்துகொண்டு பேசப் பழகுங்கள் ...

    ReplyDelete
  20. இந்த கால இசை பற்றி விமர்சனம் செய்யவும் கருத்து தெரிவிக்கவும் இளையராஜாவுக்கு அணைத்து தரமும் ,தகுதியும் உண்டு .அனால் அவர் இந்த கால இசை பற்றி விமர்சித்ததை விமர்சனம் செய்ய எவருக்கும் தகுதி இல்லை .

    பல உனர்வு ரீதியான விஷயங்களை இசையாக எடுத்து கொடுத்தவர் அவர்தான் ,அவருடைய உனர்வு ரீதியான பேச்சை ஏன் விமர்சனம் செய்கிறிர்கள் ..

    ReplyDelete
  21. A.R.ரகுமான் பாராட்டு விழாவில் இளையராஜா அவர்கள் MSV க்கு விருது கிடைக்க வில்லை MSV அப்படி இப்படி என்று புகழ்ந்தார், A.R.R பற்றி ஒரு வார்த்தை கூறவில்லை! ஆஸ்கர் குடுத்தவன் முட்டாளா? இளையராஜா அவர்கள் தன்னை விட சிறியவன் ஆஸ்கர் வாங்கி விட்டானே என்று பொறாமை படுவது போல் தோன்றியது, யாராக இருந்தாலும் ஏன்? குழந்தைகள் கூட இன்று இசையில் கலக்குகின்றது பாராட்டுங்கள் சார்
    நீங்கள் இந்த அளவு உயர்ந்ததுக்கு பாராட்டு தான் சார் காரணம் அதை ஏன் புரிந்து கொள்ள இயலவில்லை? உங்கள் பாடல் களுக்கு மரணமில்லை என்பது உண்மை! ஆனால் அடுத்த தலைமுறைக்கு உங்கள் பெருமைகளை கொண்டு செல்வது இளைய இசையமைப்பாளர்கள் அவர்கள் உங்களை ஒதுக்கினால் இந்த தலைமுறையோடு உங்கள் பாடல்களுக்கு மரணம் என்பதை தெளிவுபடுத்திக்கொள்கின்றேன்.

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை