Friday, March 12

பாமா விஜயம் ஒரு வெற்றி கதை





  
  மனிதனை திருத்த மதமே தவிர
     மனிதன் திருத்த இல்லை


ஒரு முறை இந்த படத்தை பார்க்க யோசித்த நண்பர்கள் பல முறை பார்த்த அனுபமே இந்த பதிவு  

பாமா விஜயம் என்னன்னு சொல்றது முதல்ல ரூம்ல இந்த படத்தை போடும்போது ரூம்ல இருக்கும் நண்பர்கள் சொன்னது என்னது பழைய படமா வேணாம் எதாவது புது படம் இருந்தால் போடு என்பதுதான்

அவர்களுக்கு இந்த படத்தை பற்றி தெரிய அதிகம் வாய்ப்பு இருக்க சான்ஸ் இல்லை.
நான் அவர்களுக்கு சொன்ன ஒரே வார்த்தை ஒரு முறை இந்த படத்தை பார்ப்போம்
சரி இல்லை என்று நீங்கள் சொன்ன நான் வேறு புது படம் பார்க்கலாம் என்பது தான்

எனக்கு கூட சந்தேகம் தான் இவர்கள் எங்கு இந்த படத்தை பார்க்க போறாங்க என்றுதான்

படம் போட்டாகிவிட்டது  மனோகர் பிக்சர்ஸ் பாமா விஜயம் என்று டைட்டில் ஓட ஆரம்பித்தது அப்போவே சொன்னேன் ஒரு நல்ல புது படம் பார்க்கலாம் என்று கருப்பு வெள்ளை படம் இதை போய் இப்போ பார்ப்பங்கள என்று ஆரம்பித்தான் நண்பன்
எனக்கு கூட நாம் ரொம்ப தைரியமா சொல்லிட்டோமோ என்று கவலை

படத்தின் முதல் காட்சி டி எஸ் பாலையா  அகர முதல் எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதேற்ற உலகு
 என்று பாலையா  திருக்குறள் உடன் படம் ஆரம்பித்த போது,
மற்றும் ஒரு நண்பன் என்னை ஒரு மாதிரி பார்த்தார்
இருந்தாலும் எனக்கு நம்பிக்கை இருந்தது படம் எல்லோருக்கும் பிடிக்கும் என்று
வீட்டின் ஒற்றுமை காட்டும் முதல் காட்சி அழகிய துளசி மாடம் மருமகள் அறிமுக காட்சி என மெதுவாக ஆரம்பித்த படம்
நாகேஷ் அறிமுகத்துடன் ஆரம்பித்தது நகைச்சுவை  "போன வருடம் திருவாதிரை வந்தே என்ன ஆச்சு" என்று சுந்தர் ராஜன் கேட்க்கும் போது நாகேஷ் அதற்க்கு உடனே சொல்வர் என்ன திருவாதிரை வத்திசசு போய்டுச்சு


அதற்க்கு பிறகு நகைச்சுவை வசனம் மற்றும் சரியான அளவில் திரைக்கதை என்று ஆரம்பிக்கும் படம் சொல்ல வேணுமா முதலில் வேண்டாம் என்று சொன்ன நண்பன் படத்தில் ஆழ்ந்து பார்க்க ஆரம்பித்தான்

ஐநுரு ருபாய் போனஸ் பணத்தை நாகேஷ் அப்பா பாலையா இடம் தராமல் ஏமாற்றும் போது நாகேஷ் பெஞ்ச மீது நிற்கும் காட்சியாகட்டும் அந்த நேரத்தில் அவர் பேசும் காட்சிக்கு ஏற்ற நகைச்சுவை வசனம்
வாத்தியார் என்பவன் ஏணி  மாதிரி மற்றவரை ஏற்றி விட்டு வாத்தியார் ஏ ணி மட்டும் அப்படியே இருக்கும் என்று சொல்லும் போது நாகேஷ்  அதான் வாத்தியார் ஏணி ஏற்றி விட்டு நிற்கிறதே என்று சொல்லலும் போது
அந்த நேரத்திற்கு ஏற்ற காமெடி ஆகா இருக்கட்டும்


பாமா என்ற நடிகை தங்கள் வீட்டிற்கு வருவதற்க்காக வீண் செலவு செய்து செய்யும் ஆர்பாட்டம் என்று படம் முழுவதும் இழையோடும் மெல்லிய நகைச்சுவை காட்சிகள்

என்று ஒவ்வொரு காட்சியும் அன்று அறையில் ஒரு நகைச்சுவை மனத்தை பரப்பியது

கே பாலா சந்தர் நகைச்சுவை கலந்த வசனம் அழகிய இயக்கம் இப்படத்திற்கு பெரும் பலம் எனலாம்

பாமா அவர்களின் வீட்டிற்கு முதல் நாள் வரும் போது ஒவ்வொருவர் மனைவியும் அவர்களின் கணவன் பதவியை உயர்த்தி சொல்ல்வதும் கணவன்மார்கள் தங்கள் உண்மையான பதவியை சொல்லி சிக்குவதும்
கலகல காட்சிகள்
அதிலும் நாகேஷ் சொல்லும் அந்த வசனம் நீங்கள் ஒரே ஒரு படத்தில் மட்டும் ரொம்ப நல்ல நடிச்சு இருப்பிங்க அந்த படத்தில் கூட இடைவேளை விட்டதும் ரசிகர்கள் எல்லாம் ரொம்ப சந்தோச படுவாங்க என்று சொல்லும் போது அதில் உள்ள உள் குத்து நகைச்சுவை

பாமா வருவதற்கு ஒரு நாள் முன்னே வீட்டில் உள்ள எல்லா பொருள்களையும் மாறும் போது
பாலையா இடம் நாகேஷ் சொல்வார் வீட்டில் இருக்கும் எல்லா பழைய பொருளையும் மாற்ற போறோம் என்று
அதற்கு பாலையா சொல்வார்  ஆடே வீட்டில் நான் ஒருத்தன் பழைய ஆள் இருக்கேன் என்ன செய்ய போறீங்க என்று கேட்க்கும் போது கஷ்டம்தான் இருந்தாலும் மாத்றோம் என்று சொல்லும் காட்சியாக இருக்கட்டும்
சொல்லிக்கொண்டே போகலாம்

படத்தின் நகைச்சுவை வசனம் மட்டும் எழுத பல பதிவுகள் தேவை 

இப்போ சொல்ல வந்த விசயம் இப்படி ஒரு முறை படத்தை பார்த்தவங்க கடந்த மூன்று மாதத்தில் ஐந்து முறைக்கு மேல் வெற்றிகரமாக பார்த்து இன்னும் நேரம் இருந்தால் படம் பார்ப்பாங்க போல
இதற்க்கு முக்கிய காரணம் ஆர்ப்பாட்டம் இல்லாத அழகிய திரைகதை  அதற்கேற்ற கதாபாத்திரங்கள் 

என்று சொல்லி கொண்டே செல்லலாம்
முடிந்தால் உங்கள் அருகில் உள்ள ஒரு வீடியோ கடையில் ஒரிஜினல் கேசட் வாங்கி படத்தை பார்க்கவும்
ஒரு முறை இல்லை பல முறை பார்த்தாலும் போரடிக்காத நகைச்சுவை நிறைந்த அமர்க்களமான திரை காவியம் பாமா விஜயம்
எங்கள் அறையில் இந்த படத்தின் மதிப்பெண் 10க்கு 11

எங்கள் அறையில் அதிக நாள் ஓடிய மற்ற  வெற்றி படங்கள் விரைவில் 
பதிவு பிடித்து இருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும் 
உங்கள் அன்பு ஹாய் அரும்பாவூர் 









9 comments:

  1. படம் வெளிவந்த காலத்தில் மிகவும் ரசித்த படம்.

    எப்பொழுதும் ரசிக்கலாம்.

    புதிதாக கல்யாணமானவர்கள் தங்கள் மனைவிக்கு கட்டாயமாக போட்டுக்காட்ட வேண்டிய படம்.

    ReplyDelete
  2. நல்லபடம். டிவியில் பலமுறை பார்த்து ரசித்திருக்கிறேன்... நல்ல பகிர்வு...

    -
    DREAMER

    ReplyDelete
  3. நல்ல ஒரு பொழுதுபோக்கு படம் (பாடம்)

    இந்த படத்தின் குறுந்தகடு வாங்கி வைத்துள்ளேன் அடிக்கடி பார்ப்பேன்

    ஹாய் அரும்பாவூர் நல்ல பதிவு

    ReplyDelete
  4. இன்னமும் பார்க்கவில்லை, எப்படியும் பார்க்க முயற்ச்சிக்கின்றேன் .

    ReplyDelete
  5. naan paarthu rachithen . ennutan pazhakum 20 , 25 age payankalai parka sonen . rachithu parthaner. they told me " ah nice palachander "

    ReplyDelete
  6. இந்தப்படத்தின் மோஸர் பேர் டீவீடீ வைத்துள்ளேன். அடிக்கடி காண்பதுண்டு.
    //நீங்கள் ஒரே ஒரு படத்தில் மட்டும் ரொம்ப நல்ல நடிச்சு இருப்பிங்க அந்த படத்தில் கூட இடைவேளை விட்டதும் ரசிகர்கள் எல்லாம் ரொம்ப சந்தோச படுவாங்க என்று சொல்லும் போது “அதில் உள்ள உள் குத்து நகைச்சுவை //
    இந்த நாகேஷ் நகைச்சுவை சூப்பர். நான் ரொம்ப சின்னவயசில் பார்த்தது. ஒரு குழந்தைக்கு கூட பொருளாதாரத்தை பற்றிய விழிப்புணர்வு தந்த வரிகள் - ”வாடகை சோஃபா 20 ரூபாய், விலைக்கு வாங்கினா முப்பதே ரூபாய்”
    மிக நல்ல பகிர்வு. நன்றி! மறுபடியும் பார்க்கப்போறேன்.

    ReplyDelete
  7. @Dr.P.Kandaswamy
    உங்கள் வருகைக்கு நன்றி தாத்தா
    @DREAMER
    உங்கள் முதல் வருகைக்கு நன்றி
    @r.v.saravanan kudandhai
    "இந்த படத்தின் குறுந்தகடு வாங்கி வைத்துள்ளேன் அடிக்கடி பார்ப்பேன்"
    நானும்தான்

    @எப்பூடி
    உன் தொடர் ஆதருவுக்கு நன்றி நண்பா
    @senthilkumar
    மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு
    @அநன்யா மஹாதேவன்
    " மறுபடியும் பார்க்கப்போறேன்."
    எத்தனை முறை பார்த்தாலும் போரடிக்காத படம்

    அடுத்த ஹிட எதிர் நீச்சல் விரைவில்

    ReplyDelete
  8. படமும் பிடிச்சிருக்கு,பதிவும் பிடிச்சிருக்கு.!

    ReplyDelete
  9. உண்மை அரும்பாவூர் நான் மிக ரசித்த படமும் கூட இது

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை