Friday, November 6
ஆங்கில கல்வியும் நம் மாணவர்களும்
இந்த இணைப்பு ஏற்கனேவே ஏற்றப்பட்டது
எனினும் இதன் கருத்து எல்லோர்ருக்கும் செல்ல வேண்டும் என்றுதான் மீண்டும் சில மாற்றங்கள் செய்து
இணையத்தில் ஏற்றப்படுகிறது தவறு என்றால் மீண்டும் இது போன்று தவறு நடக்காமல் பார்த்து கொள்கிறேன்
நம் அரசு பள்ளி மாணவர்கள் மட்டும் இல்லாமல் தனியார் பள்ளி மாணவர்கள் கூட கல்லுரி வாழ்க்கை செல்லும்போது சந்திக்கும் ஒரு மிக பெரிய பிரச்சினை ஆங்கிலம் என்றால் மிகை இல்லை
நான் சொல்லும் கருத்து நூறு சதம் எல்லோருக்கும் பொருந்தாது .ஆனால் தொண்ணுறு சதம் இது உண்மைதான்
நகர்புற மாணவர்கள் கூட பராவஇல்லை ஆனால் கிராமபுற மாணவர்கள் கல்லூரி வாழ்க்கை செல்லும் போது சந்திக்கும் மிக பெரும் பிரச்சினை
கல்லுரி செல்லும் மாணவன் முழு ஆங்கில வழி கல்வி என்னும்போது அவனால் உடனே புரிந்து கொள்ளுதல் என்பது மிகவும் கஷ்டமாக இருக்கும்
ஆங்கில வழி கல்விக்கு அவனை அங்கு சென்று பிரத்யோகமாக தயார் செய்ய வேண்டி உள்ளது ,இதற்குள் ஆங்கில் வழி கற்ற மாணவன் அவனை விட சிறப்பாக கல்வி கற்று அவனை விட ஒரு படி முன்னே சென்று இருப்பன்
நம் அரசு பள்ளிகளிலும் சரி கிராமபுற பள்ளிகளிலும் சரி இதை பற்றி ஒரு புது பார்வை தேவை உள்ளது
நிச்சயமாக தமிழ் வழி கல்வி என்பது மிகவும் சிறப்பானது தான் ஆனால் அதே நேரம் கல்லுரி செல்லும் மாணவன்
ஆங்கில வழி கல்விக்கு அவனை தயார்படுத்த முடியாமல் அவன் படும் பாடு
மிகவும் திண்டாட்டம்தான்
எனக்கு தெரிந்த ஒரு நண்பரின் மகன் பள்ளி இறுதி ஆண்டில் மிகவும் நல்ல மதிப்பெண் பெற்று முதல் நிலை மாணவனாக வெளி வந்தான்
ஒரு நல்ல கல்லுரி ஒன்றில் கணினி துறை அவனுக்கு கிடைத்தது .மிகவும் மகிழ்ச்சியான அளவில் சென்ற அவன் வாழ்க்கை இறுதி தேர்வில் தமிழ் கணிதம் தவிர மீதி பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை
சில பாடங்களில் சொற்ப மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று இருத்தன்
இதற்க்கு என்ன காரணம் என்றால் அவனால் ஆங்கிலத்தில் உடனடியாக புரிந்து கொள்ள முடிய வில்லை அல்லது மனனம் செய்து அவன் எழுதிய தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று உள்ளன்
இது ஒரு நிதர்சனமான உண்மை நான் பொதுவாக தமிழ் வழி கற்ற மாணவர்கள் எல்லாம் இப்படி என்று சொல்ல வில்லை தமிழ் வழி கற்ற எத்தனயோ மாணவர்கள் மிகவும் உயர்ந்த நிலை பெற்று உள்ளனர்
ஆனால் இப்போது உள்ள காலத்தில் நாம் காலத்திற்கு ஏற்ற வகையில் நம் மாணவர்கள் கல்வி திறன் மாற வேண்டும் என்றால்
ஆங்கில திறன் என்பது நம் மாணவர்களுக்கு இளைய வயதில் அவனுக்கு கிடைக்க வேண்டும்
மேல்நிலை கல்விக்கு சென்றும் எத்தனை மாணவர்கள் சரளமாக ஆங்கிலம் படிக்க தெரியும் என்று நீங்கள் சோதித்து பாருங்கள்
எதற்கோ எல்லாம் செலவு செய்யும் நம் அரசு ஏன் ஆங்கில வழி கல்வி தேவை இல்லை
ஆங்கிலம் என்பதை சரளம்க வேண்டம் குறைந்த அளவில் நம் மாணவர்கள் பேச
இள நிலை பள்ளி கற்கும் மாணவர்களுக்கு என்ன செய்தது
ஹிந்தி வேண்டாம் சரி ஒத்து கொள்கிறோம் .
முதல் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு எந்த அளவில் ஆங்கில அறிவு உள்ளது என்று பார்க்க வேண்டாமா ?
நம் பக்கத்துக்கு மாநில கேரளாவை பாருங்கள் என்று சொல்ல வில்லை அவர்களை விட நம் கல்வி தரம் உயர்வுதான்.
கேரளாவை சேர்ந்த ஒருவன் ஹிந்தி ஆங்கிலம் என்று சிறு வயதில் கல்வி கற்பதால் அவன் மாநிலம் தாண்டி கூட கல்வி கற்க வந்தால் அவனால் கல்லுரி கல்விஐ சிறப்பாக முடிக்க முடிகிறது
நம் மாணவர்களுக்கு ஹிந்தி படிப்பு வேண்டாம் ஆனால் ,ஆங்கில கல்விக்கு நம் அரசு என்ன செய்தது
தனியார் பள்ளி மாணவனை விட அரசு பள்ளி மாணவனுக்கு சிறப்பான ஆங்கில அறிவு கிடைக்க வழி வகை செய்ய வேண்டும்
நம் எத்தனை பெற்றோர் குழந்தைகளின் ஆங்கில அடிப்படை கல்விக்கு சிறு வயதில் முயற்சி செய்கின்றனர்
1 ) மாணவர்களின் இளநிலை பள்ளி படிப்பிலே அவர்களுக்கு ஆங்கில அடிப்படை கல்வி உள்ளத என்று பார்க்க வேண்டும்
2)பள்ளிகளில் ஆங்கிலத்திற்கு என்று பி எ ஆங்கிலம் படித்த ஆசிரியர்களை நியமிக்கலாம்
3)அவர்களுக்கு சிறு சிறு ஆங்கில வார்த்தைகள் படிக்க எழுத சிறு வயதில் நல்ல அடிப்படை கல்வி கிடைக்க வழி வகைஇப்படி எல் செய்ய வேண்டும்
இப்படி சொல்வதால் நான் தமிழுக்கு எதிரானவன் என்று நினைக்க வேண்டாம்
ஆங்கிலத்தில் நம் மாணவர்கள் நல்ல முறை கல்வி கற்று அவர்கள் வாழ்க்கை நல்ல முறை நன்றாக இருக்க வேண்டும் என்ற ஆசை கொண்டுதான்
இதில் ஏதும் தவறு இருந்தால் மனதிற்குள் திட்டவும்
சரி என்றால் உங்கள் இங்கு கருத்து இடவும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை