Thursday, September 9
அனைவருக்கும் இனிய ரம்ஜான் நல் வாழ்த்துக்கள்
இந்த மாதம் முழுவதும் பகல் பொழுதுகளில் நோன்பிருந்து உண்ணாமல் பருகாமல் இருப்பதுடன் மட்டும் இல்லாமல் மனதை தீய எண்ணங்களுக்கு அலைபாய விடாமல் இறைவனுக்காக இந்த நோன்பு இருக்க
நேர் வழி வாழ பாதை காட்டும் இந்த புனித மாதத்தின் முடிவில் ரம்ஜான் கொண்டாடும் அனைவருக்கும் இனிய ரமலான் தின வாழ்த்துக்கள்
ரம்ஜான் மாதத்தின் முக்கிய கடமையான ஜகாத் பற்றி சில துளிகள்:
இஃப்தார் எனும் உணவு உட்கொள்ளல் மற்றும் நோன்பு முடிப்பு ஆகிய சொற்களிலிருந்து பிறந்ததே இந்த ஃபித்ரா என்பதும் ஜகாத்துல் .பித்ர் என்பதுமாகும். இந்த தர்மம் புனித ரமளான் முடிவில் ஈகைத் திருநாள் தொழுகைக்கு முன்பாக வரை வழங்கப்படுவதாகும். இந்த விரும்பத்தக்க தர்மம் முஸ்லிமான அனைவரின் மீது கடமையானது . பின்வரும் நபிமொழிகள் இந்த தர்மத்தின் தலையாய முக்கியத்துவத்தைப் பறைசாற்றுகின்றன. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அடிமையான-சுதந்தரமான சிறிய-பெரிய ஆண்-பெண் முஸ்லிம்கள் மீது ஒரு ஸ’அ அளவு பேரீத்தம்பழம் அல்லது பார்லி வழங்குவதைக் கட்டாயமாக்கப்பட்டது
எவர்கள் தங்கத்தையும் வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு கடுமையான வேதனையுண்டு' (அல் குர்ஆன் 9:34)
உங்கள் செல்வத்திலிருந்து நீங்கள் அவர்களுக்கு செலவு செய்யுங்கள்' (அல் குர்ஆன் 24:33)
புண்ணியம் என்பது உங்கள் முகத்தை கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக் கொள்வதில் இல்லை. மாறாக புண்ணியம் என்பது அல்லாஹ்வை நம்பி...... ..இறைவன் மீதுள்ள நேசத்தின் காரணமாக சொந்தங்களுக்கும், அனாதைகளுக்கும், (வாய்திறந்து கேட்காத) ஏழைகளுக்கும், யாசிப்பவர்களுக்கும் செலவு செய்வதாகும். மேலும் தொழுகையை கடைப்பிடித்து ஜகாத் கொடுத்து வருவதுமாகும்.... (அல் குர்அன் 2:177)
(நபியே) அவர்களுடைய பொருட்களிலிருந்து தர்மத்தை எடுத்துக் கொண்டு அவர்களை உள்ளும் - புறமும் தூய்மைப் படுத்துவீராக' (அல் குர்ஆன் - 9:103)
Subscribe to:
Post Comments (Atom)
ஈத் முபாரக்!
ReplyDeleteAs Salamu alaykum brother,
ReplyDeleteJoyous Eid muabarak to you and your family.
wa Salam,
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவர்களுக்கும் இனிய ஈத் அல் ஃபித்ர் நல் வாழ்த்துகள்!!
ReplyDeleteஈத் முபாரக்!
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த ரமலான் பெருநாள் வாழ்த்துகள்...
ReplyDeleteEID MUBARACK
ReplyDelete