Wednesday, February 3

உத்ரவாதம்

எனக்கும் ரொம்ப நாள் கதை எழுதணும் ஆசை ஆனால் நாம் எழுதுறதை யார் படிப்பாங்க என்ற எண்ணத்தில் எழுத வில்லை இது என் முதல் முயற்சி இது வெற்றி அடைந்தால் தொடரும் இல்லை என்றால் இல்லை
கதை படிங்க தவறு என்றால் பின்னுட்ட்டம் இடவும்
உங்கள் ஆதரவு இருந்தால் தொடருவேன்

                                                 
அந்த ஜன சந்தடி மிக்க மார்கெட் ராம் சென்ற அன்று இன்னும் நெரிசலுடன் ஒரே பரபரப்பாக இருந்தது .

ராமுக்கு அன்று அந்த மார்க்கெட் செல்லும் வேலை இல்லை இருந்த போதும் வீட்டில் இருந்த ஒரு டிவிடி பிளேயர் பழுதாகி பயன் படுத்த முடியாத நிலை
இதற்க்கு முன் அந்த பிளேயர் பல முறை தொல்லை தந்த போது அவன் அந்த பிளேயர் வாங்கும் போது கொடுத்த உத்ரவாதத்தை பயன்படுதி பல முறை சரி செய்து விட்டான்
ஆனால் இனி அது பயன்படுத்த முடியாத நிலை,
அதனால் இன்று ஒரு நல்ல கம்பனி டிவிடி பிளேயர் வாங்க வேண்டும் என்று அந்த பஜார் பகுதிக்கு வந்தான்
அன்று நல்ல ஜன சந்தடி இருந்தது திரும்பி போகலாம் என நினைத்தான் ஆனால் இதற்காக இன்று இவ்வளவு தூரம் வந்து விட்டோம் வாங்கி செல்வது நல்லது என நினைத்தான்

அது மட்டும் இல்லாமல் இந்த கடையில் தான் நல்ல பொருள் உத்ரவாதத்துடன் கிடைக்கும் என மனதிற்குள் நினைதவானாக மெதுவாக டிவிடி பிளேயர் பிரிவில் இருந்த அந்த விற்பனையாளரை அணுகினால் ராம்


" ஹலோ எனக்கு ஒரு நல்ல பிளேயர் வேண்டும் ஆனால் உத்ரவாதம் சிறப்பாக கொடுக்கும் கம்பனி எதுவோ அதை கொடுங்கள் "என கேட்டான்
இங்கே நாங்க எல்லா வித நல்ல கம்பனி பொருளும் விக்கிறோம் உங்களுக்கு எந்த கம்பனி வேண்டும் எப்படி பட்ட மாடல் வேண்டும் சொன்ன அதை காட்டுறேன்
என்று கூறினான் அந்த விற்பனை பிரதிநிதி

ராமுக்கு பிளேயர் வாங்கும் விஷயத்தை விட உத்ரவாதம் என்ற விசயத்தில் மட்டும் குறியாக இருந்தான்

இந்த இடத்தில ராமுடைய குணத்தை சொல்ல வேண்டும் ஒரு சின்ன குண்டூசி வாங்குவது என்றாலும் உத்ரவாதம் இருக்க என்று பார்க்கும் பழக்கம உள்ளவன்
அவன் விவரம் தெரிந்து நாள் முதல் இந்த குணம் அவனிடம் பெரும் அளவில் வளர்ந்து விட்டது.

உத்ரவாதம் பற்றி அவன் வாங்கிய பொருள்களை உத்ரவாதம் கொண்டு சரி செய்ததை கதை கதையாக நண்பர்கள் இடம் சொல்வதில் அவனுக்கு ஒரு அலாதி சந்தோஷம்
" இந்த டிவி நான் வாங்க ஒரு மாதத்தில் சரியா வேலை செய்ய வில்லை விட்டேனா க்யாராண்டி இருக்கு இல்லே அதை பயன்படுத்தி சண்டை போட்டு புது டிவி இல்ல வாங்கினேன்" என்று தம்பட்டம் அடிப்பது அவனின் மற்றும் ஒரு குணம்

கடைசியாக ஒரு டிவிடி பிளேயர் வாங்கி முடிக்கும் போது நண்பனிடம் இருந்த அவன் செல் போனுக்கு அழைப்பு வந்தது

அவனிடம் பேசிக்கொண்டு டிவிடி பிளேயர் வாங்கி கொண்டு வெளிய வந்து கார் நிறுத்திய வந்து காரினுள் டிவிடி பிளேயர் வைத்து காரை எடுதது வீட்டை நோக்கி காரை செலுத்த ஆரம்பித்தான்

பாதி தூரம் வரும் போது திடீர் என அவனுக்கு அந்த விற்பனையாளர் டிவிடி பிளேயர் உத்ரவாதம் வாங்க வில்லை என ஞாபகம வந்ததது நண்பன் இடம் பேசும் ஆர்வத்தில் உத்ரவாத விஷயம் பற்றி பேச வில்லை

மீண்டும் அந்த கடை செல்லு வாய்ப்பு குறைவு வந்தது வந்தோம் ஒரே வேலையாக முடிப்போம் என நினைத்து அந்த கடை நோக்கி தன காரை திருப்பினான் ராம்

மீண்டும் அந்த கடை உள்ளே சென்ற ராம் "மன்னிக்கனும் நான் இப்போ வாங்கிய டிவிடி பிளேயர்க்கு உத்ரவாதம் வாங்க மறந்து விட்டேன் சரியான உத்ரவாத அட்டை கொடுத்தால் நன்றாக இருக்கும் "

" ஸாரி சார் நானும் மறந்து விட்டேன் "
என்று டிவிடி பிளேருக்கு உண்டான சரியான் உத்ரவாத பேப்பரை ராமின் கையில் கொடுத்தான்
ஒரு பெரும் செயல் செய்து விட்ட களிப்பில் அந்த உத்ரவாத பேப்பரை காரின் முன் பக்கத்தில் வைத்து விட்டு மீண்டும காரை வேட்டை நோக்கி திருப்பினான்

மனதில் ஏதோ எண்ணங்கள் நினைது கொண்டு அந்த வளைவில் வரும் போதுதான் எதிரே தாறுமாறாக வந்த லாரியை பார்த்தான் ஒரு நொடி ராம் சுதாரிக்கும் முன் லாரி தன் கட்டுப்பாட்டை இழந்து பெரும் சத்தத்துடன் அவன் காரில் மோதியது
ரத்த வெள்ளத்தில் கிடந்து ராம் மீதி அந்த உத்ரவாத பேப்பர் வீசிய காற்றின் காரணாமாக அவன் மீது விழுந்தது

இந்த கதை பிடித்தது இருந்தால் உங்கள் வாக்கை அளிக்கவும்
ஏதும் குறை என்றால் பின்னுட்டம் இடவும்

7 comments:

 1. குறை இருந்தால் மட்டும்தான் பின்னூட்டம் போடணுமா? நல்லாயிருந்தா போடக்கூடாதா? இருந்தாலும் பின்னூட்டம் போடுவன், சூப்பரு,தொடர்ந்தும் எழுதுங்க.

  ReplyDelete
 2. நண்பரே முயற்சிக்கு வாழ்த்துகள் சொல்ல நினைத்த விசயத்தை சொல்லிவிட்டீர்கள் இருப்பினும் எழுத்து நடையில் மாற்றம் வேண்டும்


  வாழ்க வளமுடன்

  என்றும் அன்புடன்
  ஞானசேகர்

  ReplyDelete
 3. நல்ல முயற்சி நண்பரே, தொடர்ந்து எழுதுங்கள். இன்னும் சிறப்பாக எழுத வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. ஏன் இப்டி கொன்னுட்டீங்க?

  ReplyDelete
 5. ஹலோ அரும்பாவூர்! வெற்றி தோல்வி என்பதெல்லாம் நாம் முடிவு செய்வதில்லை... கதை எழுதுவதென்பது இங்கிலீஷ் பேசுவது போலத்தான்...யாராலும் தொடர்ந்து மோசமான கதைகள் எழுத முடியாது. தொடர்ந்து எழுதுங்கள்.

  ReplyDelete
 6. ஹலோ அரும்பாவூர்! வெற்றி தோல்வி என்பதெல்லாம் நாம் முடிவு செய்வதில்லை... கதை எழுதுவதென்பது இங்கிலீஷ் பேசுவது போலத்தான்...யாராலும் தொடர்ந்து மோசமான கதைகள் எழுத முடியாது. தொடர்ந்து எழுதுங்கள்.

  ReplyDelete
 7. //அண்ணாமலையான் said...
  ஏன் இப்டி கொன்னுட்டீங்க?
  //

  yes Arumbaavuur een ippadii???
  :-(((

  ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை