Saturday, January 23

இயற்கை காப்போம் இயற்கையாய் 3

எப்படித்தான் நாம் தனி மனிதனாக நினைத்தாலும் வெற்றி என்பது குறைவாக இருக்கும் .அதுபோலதான் முடிந்த அளவிற்கு குழு சேர்த்து நாம் செய்யும் செயல் நல்ல பலனை தரும் எப்படி என்றால் தனி மரம் எப்படி தோப்பகாதோ அது போல் தான் இந்த செயலும்

  இயற்கை சார்ந்த விசயத்தில் நாம் மட்டும் எப்படி தனியாக செய்யாமல் . இயற்கை சார்ந்த செயல்களில் ஆர்வம் காட்டும் நல்ல உள்ளங்களுக்கு நாம் ஆதரவு தந்தாலே போதும் .  நம் வீடு நம் குடும்பம் என்று நினைக்காமல் இயற்கையும் நம் ஒரு வீடு என்று நினைக்கும் மன பக்குவம் எலோருக்கும் வர வேண்டும்  எத்தனைதான் நம் விஞ்ஞானம் அறிவியல் வளர்ந்து இருந்தாலும் இயற்கை முன் நாம் அனைவரும் பூஜ்யம் என்பதற்கு
எடுத்துக்காட்டு ஹைடி தீவு இன்று ஒன்றும் இல்லாமல் போனதற்கு காரணம் நாம்தான் .
இயற்கை அழித்து செய்யும் செயல் இன்று பார்பதற்கு அழகாக இருந்தாலும் சில நாட்களில் அதன் சுயரூபம் மிகவும் கோரமானதாக இருக்கும்

  நாம் சாதரணமாக மரம் என்கிறோம் ஆனால் உண்மையில் மரம் தான் நம் நலன் காக்கும் பாதுகாப்பு வேலியாக இருக்கின்றான ஆனால் அதை தெரியாத மனிதன் தான் சொந்த விருப்பு வெறுப்பு என்றால் அவன் வெட்டுவது மரத்தை தான் .
மரத்தை வெட்டும் அவன் அந்த மரம்  வளர ஒரு சிறு துரும்பும் தூக்காத அவன் யார் மீதோ உள்ள கோபத்தை .அந்த மரம் எவ்வளவு முக்கியம் என்று நினைக்காமல் எதற்க்கெடுத்தாலும் மரத்தைவெட்டும்  அவர்களுக்கு மரம் பற்றிய சரியான விழுப்புணர்வு வேண்டும் .

  நம் இயற்கை காப்பதிலும் சரி சரியான நேரத்தில் மழை பெய்யாமல் எங்கு பார்த்தாலும் பஞ்சம் வறட்சி ஏற்பட முக்கிய காரணம் மரம் நம் உயிர் என்ற எண்ணம் இல்லாததும் காரணம் மரங்கள் இல்லாமல் போனததால் இயற்கையாய் ஈர காற்றை மேகமாய் மாற்றாமல் மழை இல்லாமல் போய் விட்டது .
மரம் இல்லாமல் மழை  இல்லாமல் நம் காய்ந்து போன பொட்டல் காட்டில்  நாம் பணத்தை திங்க முடியாது .
இந்த மரம் வளர்ப்பு மக்களுக்கு நல்ல முறையில் முன் மாதிரியாக இருக்கும் சிலரை பற்றி



இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார்
                        இயற்கை சார்ந்த விஷயத்தில் நம் மக்களுக்கு நல்ல விழிப்புணர்வை ஊட்டியது மட்டும் இல்லாமல்
மக்களுக்காக போராடுபவர் என்றால் அனைவருக்கும் முதலில் வருபவர் இயற்கை விஞ்ஞானி என்றழைக்கப்படும்
நம்மாழ்வார் அவர்கள்
வேப்பிளைக்கான நம் காப்புரிமை போராடி வாங்கியாவர் ,ரசாயான உரங்கள் பயன்படுதுவதால் நம் மண் அதன் தரத்தை இழந்து விவசாயம் செய்ய இயலாமல் போகும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்
மரத்தின் மகத்துவதை மக்களுக்கு ஏற்படுத்தியவர்



இஷா பௌண்டசன்

    தனி மனித முயற்சி என்று இல்லாமல் ஒரு  இஷா மையம் சார்பாக 25 மில்லியன் மரங்கள் நாடும் திட்டம் ஒரு பெரும் மைல் கல் எனலாம் .நிச்சயம் ஈஷா மையம் இயற்கை விசயத்தில் காட்டும் ஆர்வம் எல்லோருக்கும் வர வேண்டும்



நாமக்கல் கலெக்டர் சகாயம்
            கலெக்டர் என்றால் எல்லோருக்கும் ஒரு முன்மாதிரியாக இருப்பவர் சகாயம் இயற்கை சார்ந்த விஷயத்தில் இவர் காட்டும் ஆர்வம் சிறப்பானது நாமக்கல் மாவட்டதில் இவர் ஆரம்பிது வைத்த 7 லட்சம் மரம் வளர்ப்பு திட்டம் எல்லா மாவட்டத்திலும் தொடர வேண்டும் .வரும் காலங்களில் இவரின் செயலால் நாமக்கல் மாவட்டமே பசுமையாய் மாற வாழ்த்துவோம்

இவர்கள் பசுமை திட்டத்தில் காட்டும் ஆர்வம் எல்லோருக்கும் வர வேண்டும் இன்னும் இவர்களை போல் பலர் இருக்கலாம் அவர்களை பற்றி பின்னுட்டம் இடவும்



இன்றைய பதிவின் சிறந்த ப்ளாக்
 வெண்ணிற இரவுகள் கவிதை திரைப்படம் எல்லாம் சிறப்பான முறையில் பதிவுகளாக தரும்.பேரன்பும் பெரும் கோபமும் கொண்டவன் இவன் வெண்ணிற இரவுகள் ப்ளாக் ஸ்பாட் இன்றைய சிறந்த பதிவு பாருங்கள் படியுங்கள் ரசியுங்கள்
வெண்ணிற இரவுகள் ப்ளாக் ஸ்பாட் படிக்க இதை எழுதவும் 


                            பாருங்கள் உங்கள் கருத்தை கூறுங்கள்



                               மறக்காமல் உங்கள் வாக்கை இடவும் 


   

4 comments:

  1. அருமையான பதிவு நண்பரே...

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  2. மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள் நண்பரே. நல்ல பகிர்வு.

    ReplyDelete
  3. நீங்கள் இயற்கைமீது வைத்திருக்கும் பிடிப்பு எல்லோருக்குமிருந்தால் நாட்டுக்கு அதைவிட வேறு என்ன நன்மை வேண்டும்.

    ReplyDelete
  4. நாம் இயற்கை மீது அன்பு வைத்தால் அவை பலமடங்கு திருப்பி தரும் .
    நல்ல பதிவு தலைவரே !

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை