Tuesday, September 20

ஹாரிஸ் ஜெயராஜ் இசை துளிகள் பகுதி 1



   ஹாரிஸ் ஜெயராஜ் தன்னுடைய முதல் படமான மின்னலே தொடங்கி விரைவில் வரும் ஏழாம் அறிவு வரை அவர் காட்டும் உழைப்பும் இசையில் காட்டும் புதுமை மட்டுமே அவரை இந்த அளவிற்கு தமிழ் மொழியில் முதல் இடத்தில வைத்து உள்ளது அவரை பற்றிய இசை துளிகள் 



  ஹாரிஸ் ஜெயராஜ் பிறந்தது  ஜனவரி எட்டு 1975  அதாவது அவர் முதல் படமான மின்னலே படத்திற்கு இசை அமைக்க நுழைந்த பொது அவரின் வயது 26 மட்டுமே  

   அவரின் முதல் படமான மின்னலே தமிழ் திரை உலகில் ஒரு இசை சுனாமியை ஏற்படுத்தியது என்னவோ உண்மை இந்த படத்தின் ஆடியோ கேசட் வரலாறு படைக்கும் அளவிற்கு விற்பனை ஆனது மற்றும் ஒரு சரித்திரம் 


  இந்த படத்தின்  வெற்றிக்கு மிக முக்கிய காரணம் ஹாரிஸ் அவர்களின் இசை என்பதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை
   வேறென்ன வேறன்ன வேணும் மற்றும் வசீகரா பாடல்கள் வசீகரிக்கத தமிழ் சினிமா ரசிகர்கள் இருக்க மாட்டார்கள் 


 சென்னையில் பிறந்து வளர்ந்த ஹாரிஸ்  அவர்களின் தந்தை கூட இசை துறையில் வந்த ஒருவர் எஸ்.எம் .ஜெயகுமார் சொல்லும்படியான் ஒரு கிடார் கலைஞர் மற்றும் இல்லாமல் இசை மீது ஆர்வம் உள்ளவர்
மலையாள படங்களில் உதவி இசை அமைப்பாளராக பணியாற்றி உள்ளார்

   ஹாரிஸ் ஜெயராஜ் பற்றி குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம்  சிறு வயது முதலே கர்நாடிக் இசை மற்றும் ட்ரினிட்டி இசை கல்லூரியில் பட்டம் பெற்றவர் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்கள்

  இப்போ ரஹ்மான் மற்றும் ஹாரிஸ் சில ஒற்றுமைகள் :1


ரஹ்மான் பிறந்தது ஜனவரி 8  ஹாரிஸ் பிறந்த நாள் ஜனவரி 6 


ரஹ்மான் மற்றும் ஹாரிஸ் பிறந்தது சிங்கார சென்னையில்


இருவரும் ட்ரினிட்டி கல்லூரியில் இசை பட்டம் பெற்றவர்கள் 



                                                                                                               
தொடரும்

No comments:

Post a Comment

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை