Monday, December 7

சிரிக்க மறந்த திரையுலகம் 3

பழைய நகைச்சுவை படங்கள் ஒவ்வொன்றும் ஒரு முத்துக்கள் அவைகளில் முக்கியமானது

1941 வருடத்தில் வந்து இருந்தாலும் இன்றும் நகைச்சுவை படங்களில் முன்னிலையில் இருக்கும் படம் சபாபதி

டி ஆர் ராமசந்திரன் கதாநாயகனாக நடித்த முழு நீள நகைச்சுவை படம் காளி என் ரத்னம் என்று நகைச்சுவை சர வெடி இந்த படம்.
அதிலும் ராமசந்திரன் தன் வேலைக்காரன் ரத்னம் இடம் சோடா உடைத்து எடுத்து வா என்று சொல்லும் காட்சியில் ரத்னம் சோடா பாட்டிலை சுக்கு நூறாக உடைத்து எடுத்து வரும் காட்சி என்று படம் முழுக்க நகைச்சுவை காட்சி நிறைந்த எ வி எம் வழங்கிய பழைய படம்



எ வி மெய்யப்ப செட்டியார் தயாரித்து வழங்கிய படம் இது



  அடுத்த     வீட்டு பெண் இதுவும் டி ஆர் ராமசந்திரன் கதா நாயகனாக நடித்த படம் தங்க வேலு இப்படத்தில் தோழனாக வந்து படம் முழுக்க ஒரு நகைச்சுவை ஆவர்தனம் நடத்தி இருப்பார் அஞ்சலி தேவி கதாநாயகியாக நடித்து இருக்கும் இப்படத்தில் அஞ்சலி தேவி காதலிக்க ராமசந்திரன் செய்யும் ஒவ்வொரு செயலும் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்



தேன் நிலவு

ஜெமினி கணேசன் வைஜந்தி மாலா தங்க வேலு நடித்த முக்கியமான நகைச்சுவை படம்

காஸ்மீரில் படம் பிடிக்கப்பட்ட இந்த படம் சிறந்த பாடல்கள் சிறப்பான லோகேசன் மற்றும் நல்ல நகைச்சுவை நிறைந்த படம் என்றால் மிகை இல்லை

இது மட்டும் இல்லாமல் என் எஸ் கிருஷ்ணன் படங்கள் ஒரு புறம் என்று பழைய திரை உலகு சிரிப்பிற்கு ஆற்றிய சேவை சொல்லி மாளாது



கே பாலா சந்தர் 
பாமா விஜயம் எதிர் நீச்சல் பூவா தலையா தில்லு முள்ளு என்றும் பல படங்கள் சொல்லலாம்

கே பாலசந்தர் நகைச்சுவை படங்களுக்கு ஆற்றிய பங்கு சிறப்பானது அவரின் சோக படம் என்றாலும் அதில் லேசாக நகைச்சுவை வாசம் இருக்கும்

இது மட்டும் இல்லாமல் உத்தரவின்றி உள்ளே வா காதலிக்க நேரமில்லை ஹலோ பார்ட்னர் நான்கு கில்லாடிகள்.
என்று பழைய நகைச்சுவை படங்கள் பட்டியல் போட்டால் ஒரு ப்ளாக் பத்தாது.

அதிலும் நகைச்சுவை படத்திற்கு ஒரு தனி ட்ரேட் மார்க் ஸ்ரீதர் இவரின் படங்களில் நகைச்சுவைக்கு தனி இடமே இருக்கும்
அதிலும் தேன் நிலவு ஊட்டி வரை உறவு உத்தரவின்றி உள்ளே வா என்று பல படங்கள் சொல்லலாம் ,

இப்படி பழைய படஉலகம் நகைச்சுவைக்கு என்று தனி மரியாதை இருந்தது
நாகேஷ் ,சோ,தங்கவேலு ,என்று பல நடிகர்கள் ஒரே படத்தில் நடிக்க எந்த நிபந்தனை போட்டதில்லை நல்ல கதை மட்டுமே .அவர்களின் தேவையாக இருந்தது .

ஆனால் இன்று அப்படி இருப்பதில்லை அது கூட ஒரு காரணமாக இருக்கலாம்
இடைப்பட்ட காலங்களில் எஸ் வி சேகர் ,பாண்டியராஜன், மௌலி ,என்று ஒரு நகைச்சுவை இயக்குனர்கள் நடிகர்கள் இருந்தனர் .
அப்படி இப்போது இல்லாமல் போனதற்கு யார் காரணம் ?
மற்றும் என்ன தீர்வு அடுத்த பதிவில் ?








இயற்க்கை காப்போம் மரம் வளர்ப்போம் !!!!

முடியா விட்டால் செடியாவது வளர்ப்போம் !!!

ஊருகோர் மரம் வளர்ப்போர் சங்கம் வைப்போம் !!!

2 comments:

  1. Please try to use commas in the sentence formation. Don't destroy tamil.

    -- Ananth

    ReplyDelete
  2. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி, இனி வரும் காலங்கள் நல்ல தமிழில் ...

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை