.
தமிழ் தமிழ் திரை உலகில் நகைச்சுவை படங்கள் வராமல் போனதற்கு முக்கிய காரணம் இன்றைய முக்கிய கதாநாயகர்கள் கூட காரணம்.
விஜய் அஜித் தனுஷ் சிம்பு என்று இவர்களுக்கு ஹீரோ மாஸ் உள்ள படம் தேவை அதற்க்கு இவர்கள் நம்புவது ரஜினி பார்முலா.
ரஜினி கூட எல்லா வித கதா பாத்திரங்கள் செய்த பின்தான் ஆக்சன் கதைக்கே மாறினார்
அவர் ஹிட் கொடுத்த படம் பாஷா கூட அவர்க்கு அமைந்த படம் .
இதை பார்த்து புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதையாக எல்லோரும் ரஜினி போல் ஆகா வேண்டும் என்று ஒரே ஆக்சன் கதையாக எடுத்து ரசிகர்களை முட்டாள் ஆக்கி விடுகின்றனர்
இன்றைய ஹிந்தி திரை உலகின் ஆக்சன் ஹீரோ அக்சய் குமார் கூட தான் பெரிதும் நம்புவது நகைச்சுவை கலந்த படங்களை தான் .
அவரின் வெற்றி படங்கள் கம்பட் இஷ்க் ,சிங் இஸ் கிங் ,என்று அவர் படங்கள் எல்லாம் நகைச்சுவை படங்களாக இருக்கும்
அங்கு புகழ் பெற்ற இயக்குனர்கள் மற்றும் பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் நகைச்சுவை படத்திற்கு முக்கியதுவம் தர காரணம்
முன்னணி நடிகர்கள் அவர்கள் எப்படி பட்ட படத்தில் நடிக்க ரெடி அவர்களுக்கு தேவை நல்ல கதை மட்டுமே.
ஆனால் நம் நாயகர்களோ இன்னும் ரசிகன் என்பவனை சிந்திக்க விடாமல் அவன் அறிவை இன்னும் பத்து வருடம் பின்னோக்கி தள்ளி அவனை பகடை காய் ஆக்குகின்றனர்
இந்த விசயத்தில் மற்றும் ஒரு பெரும் பஞ்சம் நல்ல நகைச்சுவை இயக்குனர்கள் இல்லை . சுந்தர் சி ,என்று ஒரு நல்ல இயக்குனர் இருந்தார் அவர் கூட நடிப்பு என்ற எல்லைக்கு சென்ற பின் இப்போது சொல்லும் படி நல்ல இயக்குனர் இல்லை
கடைசியாக் இதே நிலைய சென்றால் தமிழில் ஒரு காலத்தில் நகைச்சுவை படம் என்று வந்தது என்று சொல்லும் நிலைக்கு தள்ள படலாம்
கடைசியாக இந்த நகைச்சுவை படங்கள் வராமல் போனதற்கு முக்கிய காரணம்
இன்றைய முக்கிய கதாநாயகர்கள்
இயக்குனர்கள்
நகைச்சவை படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்
கடைசியாக இந்த உருப்படாத நாயகர்கள் பின் செல்லும் நாம் எல்லோரும்
ஒரே மாற்ற முடியாத கருத்து நாம் இப்போது வரும் இந்த உருப்படாத நடிகர்கள் நடிக்கும் படத்தை காசு கொடுத்து பார்க்காமல் இருப்பதே
நகைச்சுவை படம் வருவதற்கு நாம் செய்யும் பெரும் உதவியாக இருக்கும்
No comments:
Post a Comment
நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை