ஆனால் இன்றைய கால கட்டத்தில் நகைச்சுவை படம் என்றால் என்ன என்று கேட்கும் நிலையில் உள்ளது இதற்க்கு முக்கிய காரணம் என்ன ?
இன்றைய வெட்டி பந்தா நடிகர்கள் கூட காரணமாக இருக்கலாம்
அவர்களுக்கு தேவை ரசிகனை முட்டாள் ஆக்கும் சண்டை சூடேற்றும் ஆக்ரோஷ காட்சிகள் என்று தமிழ் ரசிகன் என்றால் நகைச்சுவைக்கு அப்பாற்பட்டவன் என்று நினைப்போ என்னவோ ?
கமல் ஹாசன்
கமல் நகைச்சுவை படத்திற்கு தரும் முக்கியத்துவம் பாராட்ட தக்கது
அவரின் மைகேல் மதன காமரசான்,அவ்வை சண்முகி ,பம்மல் கே சம்பந்தம் ,வசூல் ராஜ எம் பி பி எஸ் என பல படங்கள் சொல்லாம்
அவருடன் பணியாற்ற தனி கலைஞர்கள் ஒரு அமைப்பாக இருந்தது கிரேசிமோகன் சிங்கிதம் ஸ்ரீநிவாஸ் ராவ்
காலம் சென்ற நாகேஷ் என ஒரு குடும்பமாக இருந்தனர்
அனால் கமல் ஹாசன் கூட இப்போது அந்த நகைச்சுவை கூடாரத்தை விட்டு வெளியே வந்து விட்டாரோ என்று தோன்றுகிறது

ரஜினி
நிச்சயம் நகைச்சுவைக்கு மிகவும் முக்கியத்துவம் தருவார் அது அவரின் தனி பாணி ஆனதே அவரின் ஸ்டைல் கலந்த சண்டை மற்றும் நகைச்சுவை ஒரு காரணம் .
ஆரம்ப கால ரஜினி படங்களில் சொல்லும் படியான நகைச்சுவை படம் என்றால் தில்லு முல்லு படத்தை சொல்லலாம
சத்யராஜ்
அன்று முதல் இன்றுவரை நக்கல் லொள்ளு நகைச்சுவை என்றால் தனி இடத்தை தனக்கென வைத்து இருப்பவர் சத்யராஜ் அதுவும் சத்யராஜ் அவருக்கென தனி கூட்டணி இருந்தது கவுண்ட மணி


கார்த்திக்
இவரின் படங்களின் சொல்லும் படியான படம் உள்ளதை அள்ளித்தா மேட்டுக்குடி என்று பல படம் சொல்லலாம் ,அதுவும் கவுண்ட மணி கூட்டணி என்றால் படம் முழுக்க தனி நகைச்சுவை ஆவர்த்தனம் நடக்கும்
கே பாக்யராஜ்
நகைச்சுவையுடன் தனி திரைகதை அமைப்பில் இந்திய முழுவது பெரும் வெற்றி பெற்றவர் இவர் ஒருவர் மட்டுமே
அதிலும் இன்று போய் நாளை எதனை முறை பார்த்தாலும் புது படமாக தெரியும் வண்ணம் நகைச்சுவை சரவெடி
இந்த படம் முந்தானை முடிச்சு தாவணி கனவுகள் ,எங்க சின்ன ராசா ,என்று அவர் எடுத்த எல்லா படமும் நகைச்சுவை கலந்த படமாக இருக்கும்
விஜய் காந்த அவர் படத்தில் நகைச்சுவை காட்சிகள் இருக்கும்
ஆனால் சொல்லும் படி இருக்காது

நகைச்சுவை படமும் இயக்குனர்களும் அடுத்த பதிவில்

கே.பாலா சந்தர் ,
ஸ்ரீதர் ,கோபு ,நாகேஷ், சோ, மற்றும் காலத்தால் அளிக்க முடியாத படத்தை அளித்தவர்கள் பற்றி அடுத்தபதிவில்

இன்று போய் நாளை எதனை முறை பார்த்தாலும் புது படமாக தெரியும் வண்ணம் நகைச்சுவை சரவெடி இந்த படம்
ReplyDeleteநகைச்சுவையுடன் தனி திரைகதை அமைப்பில் இந்திய முழுவது பெரும் வெற்றி பெற்றவர் கே பாக்யராஜ் ஒருவர் மட்டுமே
100% correct.....