ஒவ்வொரு ஆண்டும் முடிவின் போது அந்த ஆண்டின் சிறந்த நிகழ்வுகளை மற்றும் சிறந்த படம் மற்றும் சிறந்த பாடல் என்று போடுவது வழக்கம் அதே பாணியில் அரும்பாவூர் ப்ளாக் சிறந்த படம் நடிகர் பற்றி கருது கணிப்பை போட்டது அதன் அடிப்படியில்2009 சிறந்தவைகள்
இந்த ஆண்டின் சிறந்த மற்றம் நம் திரையுலகில் சொல்லலாம் இது நாள் வரை கடிவாளம் கட்டிய குதிரை போல ஒரே நடிகர் துதி பாடும் படங்கள் பின் சென்ற நம் திரையுலகம் நல்ல கதை மட்டுமே தேவை நடிகர்கள் இரண்டாம் பட்சம் என்று மாற்றிய, பசங்க ,நாடோடிகள் ,ஈரம் ,ரேணிகுண்டா படங்களை சொல்லலாம்
இதில் புது இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர் என்று பல துறைகளில் சாதனை புரிந்த சசி குமார் தமிழ் சினிமாவின் முக்கிய சாதனையாளர் எனலாம்
ஈரம் படம் ஷங்கர் தயாரிப்பில் வந்து எதிர்பார்க்காத வெற்றி படம் எனலாம் பேய் படம் என்றல் பயமுறுதும் மேக் அப் மிரட்டும் என்ற தமிழ் சினிமாவின் மரபை உடைத்து படம் பார்க்கும் நம்மை அந்த கதைக்குள் கொண்டு செல்லும் நுணுக்கம்
ஆதி நந்தா சிந்து மேனன் என்று புதிய முகம் இருந்தாலும் கதைக்காக ஓடிய படம்
மற்றும் ஒரு த்ரில்லர் படம் யாவரும் நலம் மாதவன் நடிப்பில் விக்ரம் கே குமார இயக்கத்தில் வந்த படம் சொல்லும் படியான படங்களில் ஒன்று
இப்படம் 13 B என்று ஹிந்தி மொழியில் வந்து பெரும் வெற்றி பெற்றது
நாடோடிகள் சசி குமார் தவிர மற்றபடி சொல்லும் படியான புகழ் பெற்ற நடிகர்கள் இல்லை ,ஆனால் இப்படம் தமிழ் நாட்டை தாண்டி ஒரு தாக்கத்தை உண்டாக்கிய படம் ,ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகி வருவது இதன் சிறந்த கதைக்கு கிடைத்த வெற்றி
சிறந்த இயக்கம் நல்ல கருத்து சிறப்பான இசை எல்லாம் சிறப்பாக அமைந்து பெரும் வெற்றி பெற்ற படம் நாடோடிகள்
ரேணிகுண்டா இவர்கள் எல்லாம் நடிகர்களா என கேட்க வைக்கும் வயது ஆனால் படம் பார்த்து வரும் ஒவ்வொருவரின் மனத்திலும் ஒரு சோகம் நிரம்பி விடுவது உண்மை .படம் முழுவதும் வன்முறை குத்து வெட்டு ரத்தம் வன்முறை என்று இருந்தாலும் அதை எல்லாம் மறக்க வைக்கும் திரை கதை சிறந்த் இசை நல்ல ஒளிபதிவு என்று இந்த ஆண்டின் சொல்லும் படியான படங்களில் இதுவும் ஒன்று
பன்னிர் செல்வம் இயக்கம் அந்தோனி எடிட்டிங் சக்தி கேமரா என சிறப்பக அமைந்த படம்
உன்னை போல் ஒருவன் ஹிந்தி மொழியில் இருந்து வந்த படம் ஆனால் அது போல் வராமல் போன படம் நிச்சயம் ஹிந்தி மொழியில் இந்த படம் பார்த்தவர்களுக்கு அது தெரியும் அனுபம் கேர் நஸ்ருதின் ஷா போன்றவர்கள் இப்படத்தில் வாழ்ந்தார்கள் தமிழ் மொழியில் ஒரு நாடகத்தனம் வெளிப்பட்டது ஆனாலும் இது ஒரு வெற்றி படம்
சன் பிக்சர்ஸ் இந்த ஆண்டில் உண்மையான இரண்டு வெற்றி படங்களை கொடுத்தது ஒன்று வெற்றி மற்றும் ஒன்று மாபெரும் வெற்றி
படிக்காதவன் இந்த படம் ஏன் ஓடியது என்றால் யாருக்கும் தெரியாது ஆனால் இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் நகைச்சுவை கலந்த திரை கதை என்றால் அது பெரும் உண்மை
விவேக் இப்படத்தின் ஒரு கதாநாயகன் போல் படத்தின் வெற்றிக்கு உதவினர்
அயன் இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் நிச்சயம் அது அயன் மட்டுமே இப்படத்தின் வெற்றிக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை கூட ஒரு காரணம் .தமிழ் சினிமா உலகின் அதே கடத்தல் கொள்ளை கதை ஆனால் அதை கொடுத்த விதம் சூர்யாவின் அலட்டல் இல்லாத நடிப்பு என்று ஒரு கமர்சியல் ஹிட் ஆகா மாறியது
வெண்ணிலா கபடி குழு கிராமிய காதலை கபடியுடன் விளையாடிய் படம் இதுவும் புது முகங்கள் நடித்து கதை என்ற சூப்பர் ஸ்டார் ஒருவருக்காக ஓடிய படம் சுசிந்திரன் இயக்கம் எ ஆர் ரஹ்மான் பட்டறையில் இருந்து வந்த வி செல்வகணேசன் இசை என சொல்லலாம்
கண்டேன் காதலை ஹிந்தி ஜப் வே மெட் ரீமேக் ஆனால் இதுவும் உன்னை போல் ஒருவன் போல் அசலை போல் வராத போலி
கந்த சாமி படத்தை பற்றி சொல்ல ஒன்றும் இல்லை சிறப்பான விஷயம் என்னவென்றால் இப்படத்திற்கு இரண்டு ஆண்டுகள் செய்த விளம்பரம் எதிர்பார்ப்பு ஆகியவற்றை சொல்லலாம் படம் வந்த பின் இதற்க இந்த பில்ட் அப் சொல்ல வைத்தது .
நான்கு வெற்றி படங்களை ஒரே படத்தில் பார்க்க வைத்ததை சொல்லலாம் மற்றபடி காசு கொடுத்த ரசிகனுக்கு ஒரு பெரிய நாமம்
எதிர்பார்ப்பை தந்து ரசிகர்களை ஏமாற்றிய படங்கள் கலைஞர்கள் அடுத்த பதிவில்
இப்படங்களை பத்து ருபாய் கொடுத்து பார்த்து அது குறை இது குறை என சொல்ல என்ன உரிமை இருக்கு என சொல்பர்களுக்கு சொல்லுங்கள் நாம் கொடுக்கும் பத்து ரூபாகுதான்இத்தனை உழைப்பு என்று
*************************************************************************
இயற்க்கை காப்போம் மரம் வளர்ப்போம் !!!!
*************************************************************************
முடியா விட்டால் செடியாவது வளர்ப்போம் !!!
*************************************************************************
ஊருகோர் மரம் வளர்ப்போர் சங்கம் வைப்போம் !!!
**************************************************************************
மறக்காமல் எனக்கு வோட்டு போடுங்க நல்லவர்களே
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteபொம்மலாட்டம் இல்லையா??
ReplyDeleteநல்ல படம்ப்பா...
உங்கள் வருகைக்கு நன்றி
ReplyDeleteஜெட்லி
U KNOW NINAITHALA INIKUM IS BEST FILIM
ReplyDelete