
தமிழ் திரை உலகம் எப்போது இந்த பாழா போன வெட்டி பந்தா மற்றும் வீண் பிரமாண்டங்கள் பின் போனதோ அன்றே தமிழ் திரை உலகின் சோக காலம் உண்டானது .
முன்பு எல்லாம் பாத்து படம் வந்தால் அதில் இரண்டு படம் நகைச்சுவை படமாக இருக்கும் ஆனால் இன்றைய நிலைமை அப்படி இல்லை இன்று வரும் புது நடிகர் கூட தனக்கு ஒரு ஓபனிங் பாட்டு அநியாயத்தை தட்டி கேட்கும் ஆக்ரோஷ கதாபாத்திரம் .இரண்டு படம் வந்த உடன் புரட்சி பட்டம் என்ற வட்டத்திற்குள் ஓடியது கூட ஒரு முக்கிய காரணம்
அது இல்லை என்றல் சைகோ கதைகள் பழிவாங்கும் கதைகள் என்று ஒரு குப்பை ஓடினால் அதை போன்றே பத்து குப்பைகள் வந்தால் ஒரு சராசரி ரசிகன் இந்த உருப்படாத கதைகளை எத்தனை முறை பார்ப்பான்.
முதலின் ஹீரோ தோற்பதும் இடைவேளைக்கு பின் ஹீரோ வெற்றி பெறுவது எத்தனை படத்தில் பார்ப்பது
முதலின் பார்க்கும் பொது யாருக்கும் ஆர்வம் இருக்கும் மீண்டும் மீண்டும் பார்ப்பார்கள் ஆனால் இதே புளித்து போன கதைகளை யாரும் மீண்டும் பார்க்க மாட்டார்கள்
அதற்க்கு பெரும் எடுத்துக்காட்டு குருவி ,ஜனா ,அழகிய தமிழ் மகன் ,தோரணை ,சத்யம் ,வில்லு ,என்று எத்தனை படங்கள் சொல்லலாம் .
கடந்து சென்ற சில ஆண்டில் எத்தனை நகைச்சுவை படங்கள் வந்தன ?
விரல் விட்டு எண்ணி விடலாம் "பொய் சொல்ல போறோம் " திரு திரு துரு துரு "அதிலும் மிகவும் முக்கியமான ஒரே ஒரு படம்


மற்ற படத்திற்கும் நகைச்சவை படத்திற்கும் உள்ள வித்தியாசம் நகைச்சுவை படத்தை எத்தனை முறை பார்த்தாலும் புது படத்தை பார்த்ததை போன்று இருக்கும் மனதிற்கும் ஆறுதல் அளிக்கும் .
ஒரு காலத்தில் நகைச்சுவை படத்திற்கு பெயர் போன தமிழ் திரை உலகம் இன்று சிரிக்க மறக்க காரணம் என்ன நல்ல நகைச்சுவை நடிகர் இல்லையா அல்லது நல்ல இயக்குனர் இல்லையா

இதற்க்கு யார் காரணம் இயக்குனரா ?நடிகரா ?மக்களா ? மீடியா உலகமா ?
இதை பற்றி அடுத்த பதிவில் ஏதும் உங்கள் கருத்து மறக்காமல் தெரிவிக்கவும் ?
இயற்க்கை காப்போம் மரம் வளர்ப்போம் !!!!
முடியா விட்டால் செடியாவது வளர்ப்போம் !!!
ஊருகோர் மரம் வளர்ப்போர் சங்கம் வைப்போம் !!!
No comments:
Post a Comment
நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை