Saturday, December 12

சிரிக்க மறந்த திரையுலகம் 4



கலவர காலம் இதுதான் இப்போதைய தமிழ் திரைஉலகின் போக்காக இருக்கிறது


இது நிச்சயம் தமிழ் ரசிகர்களின் தவறு   இல்லை  தமிழ் ரசிகர்களை ஏமாற்றும் ஒரு கலை என்று சொல்லலாம்.


ஏன் ஒரு காலத்தில் சண்டை படங்கள் உடம்பை சூடேற்றும் வெட்டி பந்தா படங்கள் பார்த்த நம் ரசிகர்கள் அதற்க்கு முற்று புள்ளி வைத்ததிற்கு எடுத்துகாட்டு  குருவி ,தினா, தோரணை ,ஆஞ்சநேயா ,வில்லு ,என்று பல படங்களை சொல்லலாம்.

 இது போன்று படங்கள் ஒரே கருவை மட்டுமே கொண்டு இருக்கும் அது ரசிகனை  முட்டாள் ஆக்கு ,போட்டி நடிகரை திட்டு ,இதனால் இரு நண்பர்களுக்குள் சண்டை இருக்குமே தவிர வேறு ஒன்றும் இருக்காது .


இது போன்ற  கதைகளுக்கு இப்போது ஒரு நபரே போதும் அவர் கூட தன் படங்களில் போட்டி நடிகரை திட்டியதில்லை .அவர் படங்கள் அது அவருக்கே உரிய தனி தன்மை

அந்த சிறந்த மனிதர் ரஜினி காந்த மட்டுமே அவரை பார்த்து அவரை போன்று நடிப்பது
 புலியை பார்த்து பூனை சுடு போட்டுக்கொண்ட கதை தான்

நகைச்சுவை படம் வராமல் போனதிற்கு மற்றும் ஒரு காரணம் புது இயக்குனர்கள்.   ஏன் என்றால்  நகைச்சவை படம் எடுப்பது மிகவும் கஷ்டமான வேலை என்று அவர்கள் நினைத்து இருக்கலாம்.
ஆனால் அது கூட உண்மைதான் சோக படத்தை விட ,சண்டை படத்தை விட நகைச்சுவை படம் எடுத்து  அனைவரையும்   சிரிக்க வைப்பது மிகவும் கஷ்டமான  வேலைதான்
ஆனால் இது கூட காரணம் என்றால் இல்லை .தமிழ் ரசிகர்கள் நல்ல படத்தை ரசிப்பார்கள்.

இப்படியே  போனால் ஒரு காலத்தில் நகைச்சுவை படம் ஒன்று இருந்தது  என்று சொல்லும் நிலைக்கு தமிழ் திரை உலகம் ஆளாகி விடுமோ என்று பயமாக இருக்கிறது

ஏன் ஹிந்தி  திரை உலகில் இன்றும் நகைச்சவை படங்கள்  வருகிறது வெற்றி பெறுகிறது.


பிரியதர்சன் ,டேவிட் தவான் போன்ற இயக்குனர்களும் சரி ,அக்சய் குமார் ,ஷாருக் கான் .அமீர் கான் போன்ற நடிகர்களும் நகைச்சுவை படத்திற்கு தரும் முக்கியத்தும் ஏன்  நம் தமிழ் நடிகர்கள் தருவதில்லை அதற்க்கு காரணம் என்ன?

போட்டி நடிகரை திட்ட வாய்ப்பு கிடைக்காது அதனாலா ?

இந்த விசயத்தில் ரஜினி கமல்  சத்யராஜ் பற்றி பேச தேவை இல்லை அவர்கள் நகைச்சவை படத்திற்கு ஆற்றிய
பங்களிப்பு சிறப்பானது

வந்த ஒரு சில நகைச்சுவை  படங்களும் சரியாக ஓடவில்லை .அந்த படம் தந்த விதம் கூட காரணம் ஆகா இருக்கலாம் அவை , பொய் சொல்ல போறோம் ,திரு திரு துரு துரு போன்றவை

இப்போது இறுக்கும் இந்த வன்முறை பட கலாச்சாரம் மாற என்ன வழி ?



இயற்க்கை காப்போம் மரம் வளர்ப்போம் !!!!

முடியா விட்டால் செடியாவது வளர்ப்போம் !!!

ஊருகோர் மரம் வளர்ப்போர் சங்கம் வைப்போம் !!!

1 comment:

  1. innum tamil cinema marketyai expand panna vendum thala

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை