Monday, January 11

விண்ணை தாண்டி வருவாயா,கோவா,தீராத விளையாட்டு பிள்ளை

வருடத்திற்கு நூறு படம் வந்தாலும் சில பட பாடல்களே முழுவதும் கேட்க்கும் படி இருக்கும் அப்படி பட்ட சிறந்த் பாடல் தொகுப்பு உள்ள திரை இசை இவைகள்


வாங்க கூடிய பாடல்கள் இந்த ஆண்டு வர இருக்கும் படங்களில் முக்கியமான படங்களில் சொல்லும்படியான இசை தொகுப்பு என்றால்



என் பார்வையில் இந்த மூன்று படங்களின் பாடல் தொகுப்பு சொல்லலாம்



வர வர யுவன் இசையில் இசை ஞானி போன்று மாறி வருகிறார் என்றால் அது நிதர்சன உண்மை.

அதிலும் அவர் இசை அமைக்கும் பாடல் தொகுப்பில் எல்லா பாடல்களும் சிறப்பனதாக் இருக்கும் படி இருப்பது மற்றும் ஒரு சிறப்பு



இந்த ஆண்டின் தொடக்கத்தில் பல பாடல் தொகுப்பு வந்து இருந்தாலும் அவற்றில் மிக முக்கியமான இசை தொகுப்பு என்றால்

அவற்றில் ஒன்று கோவா

கோவா

கோவா ரஜினி மகளின் முதல் தயாரிப்பு என்ற எதிர்பார்ப்பு சரோஜா படதின் அதே பட்டாளம் இதில் நகைச்சுவை வெடி கொளுத்துவார்கள் என்று நம்புகிறேன் யுவன் ஷங்கர் ராஜா நிச்சயம் ஒரு குட்டி இசை ஞானி என்று நிருப்பித்து உள்ளார் 1980 இளையராஜா இசை கேட்டால் எப்படி நம்மை அறியாமல் நம் உடல் எப்படி ஒரு தாள கட்டு போடுமே அதே போன்ற பாடல்
ஏழேழு தலைமுறை
கார்த்திக் ராஜா,வெங்கட் பிரபு பவதாரிணி யுவன் என ஒரு குடும்ப பொங்கல் இந்த பாடல் நீண்ட நாட்களுக்கு பிறகு கேட்கும்படியான பாடல் என்றால் நூறு சதம் உண்மை .பாடலின் வரும் உறுமி நாயனம் கேட்க்க கேட்க்க நம்மை அறியாமல் தாலாட்டும் அழகான பாடல் வரி சரியான இசை இது


அடிடா நையாண்டி மேளம்

   யுகேந்திரன் சரண் இதவும் அதே போன்று நம்மை 1980 க்கு கூட்டி செல்லும் பாடல் கிராம பாடல் என்றாலே என்ன என்று கேட்க்கும் இன்றைய தலை முறை திரை அரங்கில் ஒரு குத்தாட்டம் போடா வைக்கும் பாடல் பாத்து முறை தொடர்ந்து கேட்டாலும் சலிக்காது வாழ்த்துக்கள் யுவன்

இதுவரை நம்மை

அஜீஸ் அன்றிய குரல் யுவன் இசை மீண்டும் 2010 க்கு  வரும் பாடல் மின்னலே வசீகர போன்ற மாடர்ன் பாடல் கேட்க்க கேட்க்க சூப்பர்

வாலிபம் வா

  இளையராஜா தன கணிர் குரலில் தான் பாடுவதிலும் ராஜாதான் உரக்க நிருர்ப்பிது உள்ளார் அவர் தன தான என்று கூறும் அழகு அவருக்கு மட்டுமே இசை அமைப்பாளர்களில் பின்ண்ணணி பாடல் பாடல் படுவதிலும் தான் ஒரு ராஜா என்று கூறி உள்ளார் என்ன அழகான நெளிவு சுளிவு அவர் குரலில் ராஜா நீங்க ராஜாதான்
காதல் என்றல்

யுவன் ஷங்கர் ராஜா பாடி உள்ளார் முதலில் மன்மதன் பாடலை நபகப்டுதினாலும் அப்படியே மாற்றி சிறப்பாக பாடலை கொண்டு சென்று உள்ளார் வர வர யுவன் பாடல் பாடுவதில் சிறந்து வருகிறார்

ஊரு நல்ல ஊரு

ராஜாவின் பேவரிட் சோக பாடல் அவர் குரலில் சோக பாடல் கேட்டால் நம்மையும் அறியாமல் சோகத்தை நம் மனதில் ஏற்றும் அவர் குரல் குடும்ப சண்டை மையபடுத்தி இருக்கும் பாடலும் யுவனின் இசை ராஜாவின் குரல் வாவ்

கோவா ரீமிக்ஸ்

கோவா
படத்தின் கருத்து கூறும் பாடல் என்று நினைக்கிறேன் கோவா &கோவா ரீமிக்ஸ் இரண்டும் இளைஞர்களின் தேசிய கீதம் ஆகும் .சிறப்பான ஒரு இசை
நீங்கள் நம்பி வாங்க ஒரு சிறந்த்த இசை தொகுப்பு


தீராத விளையாட்டு பிள்ளை
விசால் தொடர் தோல்விக்கு பின் நம்பி இருக்குக்ம் முக்கியமான படம்
இதில் காமெடி என்னும் வண்டி ஏறி வந்து உள்ளளர் அதில் யுவன் என்னும் கௌ பாய் தன் சிறப்பான இசை என்னும் அராபிய குதிரை பூட்டி உள்ளார் ஆனால் பாடல் எல்லாம் அராபிய குதிரை டைப்

தீராத விளையாட்டு பிள்ளை தீம் இசை

ஒரு நிமிடமே வந்தாலும் சிறப்பான டெக்னோ ரக பாடல்
பூ முதல் பெண் வரை

யுவனின் குரல் இதிலும் டாலடிக்கிறது சிறப்பாக ஒரு ப்ளே பாய் கூறும் கருத்தாக அமைந்துள்ளது .
இசை  ஒரு சிறப்பான பாடலாக மாற்றி விடுகிறது

என் ஜன்னல் வந்த

ரோஷினி பிரியா குரல் இந்த பாடல் ஒரு நல்ல திரை அரங்கில் கேட்டால் நம் கை கால் மட்டும் இல்லாமல் உடம்பும் ஆட வைக்கும் குத்து பிட்டு இசை ரங்கா ரங்கா என்று குரலும் அதற்க்கு ஏற்ற ட்ரம்ஸ் இசை வரே வாவ்

தீராத விளையாட்டு பிள்ளை

அன்ரிய வினிதா தன்வி மற்றும் ஒரு கலக்கல் பாடல் யுவனின் இசை.மற்றும் ஒரு ஹிட்

என் ஆசை எதிரி

பாடல் தொடங்கும் பொது வரும் இசை அதை தொடர்ந்து வரும் வினிதா ஹம்மிங் பாடல் மீது எதிர் பார்ப்பு உண்டாக்கி விடுகிறது விஜய் யேசுதாஸ் குரலும் சரி சிறப்பான உழைப்பு மற்றுமொரு சிறப்பான பாடல்

ஒரு புன்னகை

ரஞ்சித் படி உள்ள பாடல் தீராத விளையாட்டு பிள்ளை பாடல்களின் ராஜா இந்த பாடல் என்ன ஒரு சிறப்பன இசை அழகான குரல் எல்லாம் சரியாக அமைந்த பாடல் சொல்லுவதை விட கேளுங்கள் கேட்டுகொண்டே இருப்பிங்க
எல்லா எப் எம் சேனல்களிலும் இதுதான் ஒரு ரவுண்டு அடிக்கும்


விண்ணை தாண்டி வருவாயா
ரஹ்மானின் நீண்ட நாட்கள் பின் தாய் வீட்டு பிரசவம் அழகான இசை குழந்தை
முதலில் கேட்கும் போது என்ன இசை என்று கேட்க வைத்து இரண்டு மூன்று முறை கேட்ட பின் ஆஹா என்ன இசை என சொல்ல வைத்து விட்டார் ரஹ்மான் ஒவ்வொரு பாடலும் ஒரு வைரம் முத்து பவளம் அதை கேட்க்க கேட்க்க வாவ்
விண்ணை தண்டி வருவாயா

கார்த்திக் குரல் புதுமையான பழைய இசை சிறப்பான இசை எந்த பாடல் சொல்லல எல்லாம் கேட்க கேட்க உங்களை கவரும் உங்களுக்குக் பிடித்த பாடல் எது
எனக்கு எல்லா பாட்டும் ஆஹா
மன்னிப்பாயா ,அன்பில் அவன் ,ஓமன பெண்ணே ஆரோ மலே (மலையாள பாடல் )ஆனால் இசை அதை மறைக்கும்

அஆஹா மொத்தத்தில் நீண்ட்ட நாட்களுக்கு பின் வந்தாலும் இசை புயல் ஒரு இசை தென்றலை நமக்கு தந்துள்ளார்

கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருப்பிங்க விண்ணை தாண்டி வருவாயா

ஆஹா மொத்தத்தில் மூன்று முத்துக்கள் இரண்டு யுவனின் ராஜ்ஜியம் ஒன்று ரஹ்மானின் ராஜ்ஜியம்

ஒரு படத்தின் பாடல் வாங்கும் ஒருவன் முதலில் பார்ப்பது இசை யார்
அந்த கருத்தை பொய்யாக்கவில்லை யுவனும் ரஹ்மானும் நம்பி வாங்கலாம் பாஸ் இந்த இசை பேழை

என் இசை மதிப்பெண்

கோவா 10 /9.4

தீராத விளையாட்டு பிள்ளை 10 /8

விண்ணை தாண்டி வருவாயா 10 /9.5

இன்றையா பதிவின் சிறந்த ப்ளாக் மொத்த பதிவே ஏழு அத்தனையும் டெண்டுல்கர் ஹிட் என்பார்களே அந்த ஹிட்
அதுதான் அண்ணாமலையான் ப்ளாக் ஸ்பாட் வாங்க கை கட்டி இருக்கும் சார் என்ன சொல்றார் என்று பாருங்க
அண்ணாமலையான் ப்ளாக் ஸ்பாட் பார்க்க இதை அழுத்தவும்


இன்றைய தத்துவம்

சொர்க்கம் நரகம் இரண்டும் அடுத்தவர் கையில் இல்லை நம் வாழும் வாழ்க்கையில் உள்ளது

                      DONT MISS MY VOTE 














3 comments:

  1. இன்னமும் நான் மூன்று படப்பாடல்களையும் கேட்கவில்லை என்பதுதான் உண்மை, நான் கேட்கும் பாடல்கள் ராஜாவினதும் ரகுமானினதும் 2000 இக்கு முன்னைய பாடல்களும் 2005 வரையான வித்தியாசாகரின் மெலடி பாடல்களுமே. அதுதவிர புதிய பாடல்கள் நண்பர்கள் சொல்லும் நல்ல பாடல்கள் அடிப்படையில்தான் கேட்பது வழக்கம். இதற்க்கு காரணம் 2000 இக்கு பின்னர் ரகுமானின் இசையையும், ஹாரிஸின் இசையையும் ரசிக்கும் அளவிற்கு என் ரசனை வளராமையாக கூட இருக்கலாம். உண்மையில் இப்போதெல்லாம் நல்ல விஷுவல் உடன் வரும் பாடல்கள் தான் என்னை கொள்ளை கொண்டுள்ளன. உதாரணமாக 'கண்கள் இரண்டால்' , 'அழகாய் பூக்குதே ', 'சிறு வெட்கம் 'போன்ற பாடல்களை சொல்லலாம்.

    ReplyDelete
  2. I am also have same feelings with எப்பூடி ...

    ReplyDelete
  3. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை