Wednesday, March 31

திரை துளிகள்  கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் ராவணா
   63 வது கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்குபெறுவதற்கு விண்ணப்ப படிவத்தை மணிரத்னம் அனுப்பி உள்ளார்
ஏற்கனவே இப்படத்தில் ஐஸ்வர்யா மற்றும் ரஹ்மான் என்னும் இரண்டு உலக புகழ் பெற்ற கலைஞர்கள் இருப்பதால்
கேன்ஸ் திரைப்பட விழாவில் இப்படம் ஒரு தனி மதிப்பு பெரும் என எதிர் பார்க்கலாம்

சன் நெட்வொர்க்கில் டிஸ்னி

 


 ஏப்ரல் 1 இன்று முதல் சன் நெட்வொர்க் தன் சன் குழுமம் தன் டிஸ்ரிபுஷன் மூலம் டிஸ்னி சேனல் எல்லாம் ஒளிபரப்பும் .இதன் மூலம் அழ வைக்கும் சீரியல் தொல்லையில் இருந்து குழந்தைகள் உலகத்தை கொஞ்சம் பார்க்கலாம் சன் கேபிள் மற்றும் டி டி எச் மூலம் இந்த் சேனல்களை பார்க்கலாம்
ஏப்ரல் 14 கேப்டன் டிவி 


 
                     தமிழ் நாட்டில் இந்த டிவி தொல்லை வர வர கொசு தொல்லை விட மோசமா பொய் விட்டது
தூர்தர்சனுக்கு மாற்றமா இருக்கேன்னு சன்னை உள்ளே விட்ட இப்போ தூர்தர்சன் எங்கோ பொதிகை மலைக்கே போய்டுச்சு .இருக்குற தொல்லை போதாதுன்னு கேப்டன் தன் பங்குக்கு ஒரு சேனல்
யப்பா நாடி ஜோதிடம் ,சித்த  வைத்யம் செய்றவன்களே உங்களுக்கு விளம்பரம் செய்ய மேலும் ஒரு சேனல் 

நிச்சயம் இப்போ இருக்கும் அரசியல் சூழ்நிலையில் நல்ல மாற்றாக வர அனைத்து வாய்ப்பும் இருக்கும் விஜய காந்த் அவர்களே உங்கள் தொலைக்கட்சியில் சினிமா தவிர்த்து நல்ல விஷயங்கள் போடுங்க சாரே

மீண்டும் தொடங்கியது சுல்தான்
     இந்த ஆண்டு ரஜினி ரசிகர்களுக்கு நிஜமாலுமே இரட்டை தீபாவளி ஒன்று எந்திரன் மற்றது ரொம்ப நாட்களாக அதே நேரத்தில் இந்திய திரை உலகில் ஒரு நடிகரை வைது முழுவதும் அனிமேஷன் மூலம் தயாராகும் சுல்தான் மீண்டும் தன் படபிடிப்பு (கணினி வரை கலை )தொடங்கி உள்ளது .இதில் மற்றும் ஒரு ப்யூட்டி ரஜினிக்கு படத்திற்கு உரிய டைட்டில் பாட்டு இருக்கு
சுல்தான் தி வார்ரியர் ட்ரைலர்


சினிமா செய்திகளை கூட படிப்பதில்லை விஜய காந்த்
மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் கோரிப்பாளையம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.
அப்போது இதை சொன்னார்
என்ன கொடுமை சார் இந்த சினிமா ஒன்று இல்லை என்றால் விஜய காந்தா யார் அது என்று கேட்பார்கள் ?
ஏறி வந்த ஏணி எட்டி உதைப்பதற்க்கு சமம் சார் இது
பேசுவது என்பது ஒரு கலை அதை எப்படி பேசுவது என்று இருக்கு நீங்கள் முதலில் ஒரு நடிகர் பிறகுதான் அரசியல்வாதி புரிந்தால் சரி

திருச்சியில் 24 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடிகர் விஜய் நடத்தி வைத்தார்

 

  அன்பு விஜய் அவர்களுக்கு வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரிய கூடாது இதைதான் உண்மையான தானம் என்று சொல்வார்கள் .
ஆனால் அதை விட்டு விட்டு நோட்டு புத்தகம் ,பேனா ,பென்சில் போன்றவைகளை கொடுத்து பத்து பக்கத்திற்கு விளம்பரம் தேடுவது நன்றாக இல்லை
நீங்கள் உண்மையான மனதுடன் உதவி பூரிய வேண்டும் என்றால் யார்க்கும் தெரியாமல் கொடுத்து பாருங்கள் அதன் உண்மையான மதிப்பே அதிகம்

இவை எல்லாம் படித்தது கேட்டவை இதனால் நாட்டுக்கு ஒரு முக்கியமும் இல்லை இருந்தாலும் திரை உலகையும் தமிழனையும் பிரிக்க முடியாது அல்லவா அதனால் என் சிறு பதிவு படிச்சா மட்டும் போதாது

மறக்காமல் ஓட்டையும் போடுங்க
வர்ட்டா ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ5 comments:

 1. கலியுக கர்னனாம் எங்கள் தளபதியின் கொடையை சந்தேகபட்டதற்கு கடுமான கண்டனங்கள்.
  இப்படிக்கு S.A.சந்திரசேகர்.

  ReplyDelete
 2. தகவல் அருமை

  ReplyDelete
 3. \\ திருச்சியில் 24 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடிகர் விஜய் நடத்தி வைத்தார் //

  இவங்க ஒரு முடிவோட தான்யா இருக்காங்க.அடுத்த CM இக்கு எனது வாழ்த்துகள்

  ReplyDelete
 4. @எப்பூடி
  உன் வருகைக்கு நன்றி நண்பா
  @கார்த்திக்
  நன்றி கார்த்திக்
  @பார்வை
  பார்வை உங்கள் முதல் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 5. டிட்பிட்ஸ்..நைஸ்

  ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை