Monday, March 8

நான் யாருக்கும் ரசிகன் இல்லைங்கோ

திறமை உள்ளவன் வெற்றியை  யாராலும் தடுக்க முடியாது
        அது அது அவனால் மட்டுமே முடியும்
                                                                          உண்மை மொழி

அப்புறம் போன பதிவில்
"நித்யானந்தா பற்றி எழுதலாம் என்று பார்த்தல்
அவர் பற்றி வேட்டைக்காரன் படத்திற்கு பிறகு ரொம்ப நாள் ஓடுற வலை தலைப்பு நித்தி மட்டுமே"

என்ற வரியை பார்த்த உடன் xxx என்பவர் ரொம்ப காரமா ஒரு மெயில் அனுப்பி உள்ளார் நீங்கள் எல்லாம் அஜித் ரசிகர் ஆதனால் தான் விஜய் பற்றி தப்பா எழுதுறது  உங்க வேலை என்று எழுதிய அன்பருக்கு ஒரு பணிவான வேண்டுகோள் யாரும் விஜய் பற்றி தப்பா எழுதினா ஏன் உடனே அஜீத் ரசிகர் சூர்யா ரசிகர் என்று நீங்களே முடிவு செய்து கொள்கிறிர்கள்

  நாங்கள் ஒன்றும் அவரை பற்றி தப்பா எழுதுறதால அவர் படம் ஓடாம போக வில்லை நல்ல கதை இதைதான் ரசிகன் எதிர்பார்க்கிறான்

  ஏதோ ரஜினி அண்ணாமலை பாட்சாபடையப்பா  படங்களில்  அவருக்கு ஏற்ற கதையில் நடித்தார் அதனால் அவர் படங்கள் ஓடியது

அவர் படம் ஓடியதே என்று அதே மாதிரி கதையில் எத்தனை  முறை நடிப்பிங்க


 அவரே தன் பாணி மாற்றி நடித்த சந்தரமுகி  பெரும் வெற்றி அடையவில்லையா ?


   அந்த மிக பெரும் கலைஞனே தன் நடிக்கும் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரங்களில்   நடிக்கும் போது (சிவாஜி மொட்டை )

  வில்லன் வருவாராம் அவர் இவர் இருக்கும் பகுதிக்கு தீங்கு செய்வாராம் இது இடைவேளைக்கு முன்

இடைவேளை நேரத்தில் இவர்  வீர வசனம் பேசி நாலு சண்டை போட்டு  பின் பகுதியில் ஆட்டம் போட்டு ஜெயிப்பார் என்ன கொடுமை சார் .என்ன சிறப்பான கதை சார் இவை எல்லாம்
இதை பற்றி பேசினா உடனே  அஜீத் ரசிகர் என்று பெயர்

 அது அஜீத் ஆகா இருந்தாலும் சரி விஜய் ஆகா இருந்தாலும் சரி எங்களுக்கு தேவை நாங்க தர்ற காசுக்கு நல்ல பொழுது போக்கு மட்டுமே உங்கள் வம்பு புடித்த  வசனம் இல்லை

   விஜய் நடித்த போக்கிரி ,கில்லி ,சிவகாசி படங்களை சலிக்க சலிக்க பார்த்த ரசிகன் நான் வில்லு குருவி வேட்டைக்காரன் படத்தை பாதி கூட பார்க்க புடிக்காமல் போனதிற்கு  காரணம் எல்லோருக்கும் தெரியும்இதே மாதிரிசொன்ன நாங்க எல்லாம்
 வம்பு தளபதி வருங்கால விடியல் வெள்ளி நாளைய தமிழகம்  உலக சூப்பர் ஸ்டார் தமிழ் படம் சிவா 
சங்கம் சார்பாக கண்டனம் தெரிவிப்போம்
இது எப்படின்னா புலியை பார்த்து  CAT  சூடு போட்டு கொண்ட கதைதான்மறக்காம உங்கள் கருத்தை பின்னுடம் இடவும்
தனியாக மெயில் பண்ண வேணாம் mr XXX


மறக்காம வோட்டை போடுங்க சாரே

6 comments:

 1. இதே மாதிரிசொன்ன நாங்க எல்லாம்
  வம்பு தளபதி வருங்கால விடியல் வெள்ளி நாளைய தமிழகம் உலக சூப்பர் ஸ்டார் தமிழ் படம் சிவா
  சங்கம் சார்பாக கண்டனம் தெரிவிப்போம் //


  புலியும் பூனையும் படமும் அருமை அரும்பாவூர்

  ReplyDelete
 2. ஆமா யாரிந்த விஜய்? அவரு இப்ப என்ன செய்து கொண்டிருக்கிறார்?

  ReplyDelete
 3. @thenammailakshmanan
  வணக்கம் உங்கள் தொடர் பின்னுட்டத்திற்கு நன்றி

  @எப்பூடி
  என் இனிய நண்பா உன் பின்னுட்டம் பார்த்த உடன் மிக்க சந்தோஷம் உன் ஆதரவுக்கு நன்றி
  @நினைவுகளுடன் -நிகே
  உங்கள் முதல் வருகைக்கு நன்றி நிகே
  அப்படியே போடுறேன்

  ReplyDelete
 4. அது அஜீத் ஆகா இருந்தாலும் சரி விஜய் ஆகா இருந்தாலும் சரி எங்களுக்கு தேவை நாங்க தர்ற காசுக்கு நல்ல பொழுது போக்கு மட்டுமே

  சரியா சொன்னீங்க

  ReplyDelete
 5. Vice captain vittuteengale thala...

  ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை