Wednesday, March 24

புகைப்பட பரிமாற்ற தளங்களும் சில தகவல்களும்

இன்று இரு விதமான தகவல்கள் அடங்கிய ஒரு பதிவு
முதல் தகவல் இந்த விஷயம் எலோருக்கும் தெரிய வாய்ப்பு இல்லை அப்படின்னு நான் நினைக்கிறேன்

(அது அந்த காலம் எங்களுக்கு உன்னை விட அதிகம் தெரியும் என்று சிலர் சொல்வது எனக்கு கேட்கிறது நன்றி )

இரண்டாவது இது போன்ற ஒரு தளத்தில் என் நண்பர் அவர் மனைவி குடும்பம் என்று நூற்றுக்கு மேலான போட்டோ ஏற்றி என்னிடம் சொன்னார் போட்டோ பக்கெட் என்று ஒரு தளம் இருக்கு அதில் நம் போட்டோ எல்லாம் ஏற்றி வச்சா ரொம்ப பாதுகப்ப இருக்கும் யாரும் பார்க்க முடியாது என்று

நானும் அப்படியா சார்?  ஒரு நாள் என் ரூமுக்க வாங்க என்று அழைத்து அந்த போட்டோ பக்கெட் தளத்தில் தேடு என்ற இடத்தில அவர் பெயரை மட்டும் தட்டினேன் அவர் ஏற்றி வைத்த  377 போட்டோக்களும் அவருக்கு முன் .

இதில் அந்த நண்பர் தவறு ஏதும் இல்லை அவர் செய்ய நினைத்தது இது போன்ற தளங்களில் புகைப்படம் வைத்தால் பாதுகாப்பாக இருக்கும் நாம் விரும்பும் நேரத்தில் பார்க்கலாம் என்பது

இதில் அந்த தளத்தில் எந்த தவறும் இல்லை இவர் அதில் உள்ள ஒரு வசதியை மட்டும் பயன்படுத்த மறந்து விட்டார்

அது நம் புகைப்படம் நம் மட்டும் பார்ப்பதா அல்லது யாரும் பார்க்கலாமா என்று உள்ள விசயத்தில் பப்ளிக் என்று இருப்பதை பிரைவேட் என்று மாற்ற மறந்து விட்டார்



லாகின் செய்த பின் அக்கௌன்ட் செட்டிங்க்ஸ் சென்று
பப்ளிக் என்பதை ப்ரைவேட் என மாற்றவும்
இது போன்ற தளங்களில் முடிந்த அளவிற்கு நம் சார்ந்த புகைப்படம் வைப்பது தவறு இல்லை
இதில் நம் குடும்ப பெண்கள் புகைப்படம் இல்லாமல் இருக்குமாறு பார்த்து கொள்ளவும்

இனி சில சிறந்த புகைப்பட பரிமாற்ற தளங்கள் உங்குக்காக
போட்டோ பக்கெட்


இதில் நம் நூற்றுக்கணக்கான புகைப்படங்கள் ஏற்றலாம் அதை நம் விரும்பும் நபர்களுக்கு மெயில் வடிவில் ஓர்குட் பேஸ் புக் போன்ற தளங்களுக்கு பரிமாற்றம்  செய்யலாம்
Visit photobucketஇதை அழுத்தவும்
 
புகைப்பட பரிமாற்றம் செய்ய சிறந்த தளம்
பிக்சா அஸ்

இதுவும் போட்டோ பக்கெட் போன்ற தளம்
இதை அழுத்தவும்
Visit pixa.usஇதை அழுத்தவும்
 

TINY PIC BEST 


இதை அழுத்தவும் Visit tinypic


எந்த ஒரு தளத்திலும் புகைப்படம் ஏற்றும் முன் அந்த புகைப்படம் எந்த அளவிற்கு முக்கியம் என்று ஒரு முறை யோசித்து ஏற்றவும்


கடந்த பதிவில் செய்தியும் கோணமும் எழுத்து பிழைகளை சுட்டி காட்டிய அன்புடன் மல்லிகா அவர்களுக்கு நன்றி

வேலன் சார் வழங்கிய கணினி விளையாட்டில் என் புகைப்படம் இருப்பதை பார்த்து வடிவேல் சொல்ற மாதிரி "அப்படியே ஷாக்கயிட்டேன்"
நன்றி வேலன் சார்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்

எனக்கு தொடர் ஆதரவு அளிக்கும் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி

                 அன்புடன் உங்கள்
                                                      ஹாய் அரும்பாவூர்

3 comments:

  1. நல்ல தகவல், நன்றி

    ReplyDelete
  2. வேலன் சார் வழங்கிய கணினி விளையாட்டில் என் புகைப்படம் இருப்பதை பார்த்து வடிவேல் சொல்ற மாதிரி "அப்படியே ஷாக்கயிட்டேன்"
    நன்றி வேலன் சார்

    .... Pleasant surprise!!!

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை