Tuesday, March 9

தேர்வு காலம் தொடர் பதிவு



கதை ,விளையாட்டு என்று பலவற்றிக்கு தொடர் பதிவு எழுதிய வலைபதிவு நண்பர்களே நம் வருங்கால மாணவர்களுக்கு தேர்வு ,மேற்கொண்டு என்ன படிப்பது பற்றி தொடர் பதிவு எழுதலாம்

இது தேர்வு காலம் மற்றும் தேர்வு முடிவுகள் வரும் காலம் எனவே கல்வி பற்றிய அழகிய உங்கள் கருத்துக்கள் அடங்கிய தொடர் பதிவை தொடருங்கள்

இப்போது பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு காலம்
இல்லை அவர்களின் வாழ்க்கை பாதையை மற்ற போகும் காலம் என கூட சொல்லலாம்

இனி மேல் படித்து தேர்வு எழுதி பாஸ் செய்வது கஷ்டம் அதை பற்றி பேச வேண்டாம்


எல்லா மாணவர்களுக்கும் இருக்கும் மிகபெரும் குழப்பம் ,மேற்கொண்டு  என்ன படிப்பது இனி வரும் காலங்களில் படிப்புக்கு என்ன செய்வது பற்றிய பெரும் சிந்தனை மட்டுமே

ஒரு மாணவனின் தலை எழுத்தை மற்றும் இந்த தேர்வு காலமும்  சரி அதை தொடார்ந்து வரும் முடிவுகளும் தான்

நகர் புற மற்றும் தனியார் பள்ளி மாணவர்களின் நிலை பரவயில்லை என சொல்லலாம்


கிராமப்புற மாணவர்களுக்கு மேற்கொண்டு  என்ன படிப்பது  எந்த கல்லூரியில் சேர்வது கணினி படித்தால் வாழ்க்கையா ?
பொறியியல் படிப்பா? வணிகம் சார்ந்த படிப்பா ?ஆசிரியர் பயிற்சி படிப்பா என்று அவன் எண்ணம் பலவாறு இருக்கும்

ஏன் இதை சொல்கிறேன் என்றால் பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெரும் மாணவன் மேற்கொண்டு சேரும் மேல் நிலை பள்ளி பிரிவுகள் தான் அவன் கல்லுரி படிப்பிற்கு அஸ்திவாரமாக  இருக்கும் 

 அப்படி இல்லாமல் ஏதோ பள்ளி படிப்பு படித்தோம் கல்லூரியில் பணம் கட்டினால் இடம் கிடைக்கும் என்ற எண்ணம்
பிற்கால அவன்  வாழ்க்கையில் வடிவேலு சொல்வது போல
 "பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மென்ட் வீக் "
என்ற நிலை அடைய கூடாது

 நாம் இந்த நிலைமைக்கு வர என்ன காரணம் என்று சொல்லலாம்
நம்மால் முடிந்த சிறு சிறு உதவிகள் செய்யலாம் எப்படி என்றால்
 பள்ளிகளில் அறிஞர்களை வைத்து மேற்கொண்டு என்ன படிக்கலாம் என்ற நிகழ்ச்சிக்கு நாம் படித்த பள்ளிக்கு நம்மால் முடிந்த உதவி செய்யாலாம்

மேற்படிப்பு பற்றி பதிவுகள் போடலாம்

நமக்கு தெரிந்த அளவில் நான்கு மாணவர்களுக்கு நம்மால் முடிந்த அளவில் சிறு சிறு உதவி செய்யலாம்

 மீண்டும் சொல்கிறேன்  கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கு இந்த தேர்வு காலத்திலும் சரி தேர்வு முடிவு நேரத்திலும் சரி நம்மால் முடிந்த உதவி செய்யல்லாம்

தேர்வு மற்றும் மேற்படிப்பு பற்றிய உங்களின் சிறப்பான பதிவு தேவை
எனக்கு அந்த அளவு அறிவு இல்லை அதனால் படிப்பு பற்றி சிறப்பான எண்ணம் உள்ளவர்கள் தொடர் பதிவு இடவும்



  '" ஒருவனுக்கு ஒரு மீனை கொடுப்பதை விட  அவனுக்கு மீன் பிடிக்க கற்று கொடுப்போமே "


 "ஒரு தீபம் இருளை விளக்குவது போல நல்ல கல்வி சமுதாய இருட்டை நீக்கும் "

"தன் மக்களுக்கு ஒரு வீட்டை கொடுப்பதை விட அவனுக்கு அழகிய கல்வி எனும் கோவிலை கொடுக்கலாம் "







தேர்வு காலம் பதிவை பிடித்து இருந்தால் உங்கள் கருத்துடன் உங்களால் முடிந்த அளவில் தொடரவும்
அன்புடன் ஹாய் அரும்பாவூர்

பதிவு பிடித்து இருந்தால் மறக்காமல் வோட்டை மறக்காமல் போடவும்

4 comments:

  1. மிக நல்ல சிந்தனை, அரும்பாவூர். குறிப்பாக கிராமத்து மாணவர்களுக்கு தேவையான செய்தி. என்னுடைய ஆலோசனை, ஒவ்வொருவரும் அவர்கள் சார்ந்த துறைகளில் உள்ள படிப்பைப்பற்றியும் வேலை வாய்ப்புகளைப்பற்றியும் பதிவு இட்டார்களானால் அது மிகப்பெரிய சமூக சேவையாக அமையும்.

    என்னைப்பொருத்தவரை நான் சார்ந்திருந்த விவசாயத்துறை சம்பந்தப்பட்ட விவரங்களை ஒரு பதிவாகப்போடுகிறேன்.

    இதை மற்ற பதிவர்களுக்கு எப்படி எடுத்துச்செல்வது என்று எனக்குத் தெரியவில்லை.

    சாமியார்களைப்பற்றி எவ்வளவு பதிவுகள் வந்துவிட்டன. ஒன்று பாருங்களேன். நீங்கள் இந்த பதிவு போட்டு ஒரு நாள் ஆகியும் இந்தப் பதிவிற்கு இன்னும் ஒரு மறு மொழிகூட வரவில்லை. சாமியார் பதிவிற்கு மட்டும் எவ்வளவு மறுமொழிகள்.

    அப்போது பதிவுலகம் வெறும் கேலிக்கும் கிண்டலுக்கும் மட்டும்தானா? நமக்கு சமுதாயப்பொறுப்பு கிடையாதா?

    என்னால் முடிந்ததை செய்ய காத்துக்கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
  2. கோயிலில்லாத ஊரில் கூட குடியிருக்கலாம் கல்விநிலையமும், நூலகமும் இல்லாத ஊரில் குடியிருக்கக்கூடாது.

    ReplyDelete
  3. // தங்கள் பார்வைக்காக...

    இரண்டாவது வரியில்

    வருங்கால மாவர்களுக்கு தேர்வு

    மாணவர்கள் என்ற சொல்தானே?

    எழுத்துப்பிழை என நினைக்கிறேன்//

    ReplyDelete
  4. @Dr.P.Kandaswamy
    @முனைவர்.இரா.குணசீலன்
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
    இன்றைய பதிவுகள் சிலவற்றில் மாணவர் தேர்வு சம்பந்தமாக உள்ளது சந்தோஷம்

    உங்கள் பின்னுட்டம் இன்னும் நன்றாக எழுத உதவி செய்யும்

    முனைவர்.இரா.குணசீலன் அவர்களே என் பதிவில் ஏற்படும் தமிழ் பிழைகளை சுட்டி காட்டும் உங்களுக்கு என் நன்றி

    உங்கள் போன்றோரின் ஆதரவு இருந்தால் போதும்

    வாக்களித்த அனைவருக்கும் நன்றி

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை