Saturday, April 3

விஜய் இடம் பிடித்ததும் (பிடிக்காததும் )

முதலில் ஒரு சின்ன கதை
(எங்கோயோ கேள்வி பட்ட கதை )
                ஒருவன் மிகவும் கஷ்டப்பட்டு ஒரு மலை மீது ஏறினான் .சாதாரண கஷ்டம் இல்லை ரொம்ப கஷ்டம் .

எப்படியோ அந்த மலை உச்சியை அடைந்த அவன் உரக்க கத்தினான் நான் மலை மீது ஏறி விட்டேன் நான் ஜெயித்து விட்டேன் என்று உரக்க கத்தினான் .
 
அப்போ கீழே இருந்து ஒருவன் அதை கேட்டு சத்தம்மாக சிரித்தான் 

அதை பார்த்த மேல் இருந்தவன் கேட்டான் ஏன் சிரிக்கிறாய் என்று
அதற்க்கு கீழே இருந்தவன் சொன்னான்" நீ மேலே போவதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டயோ அதை விட இரண்டு மடங்கு கஷ்டப்பட வேண்டும் அந்த இடத்தை தக்க வைக்க "என்றான் 


  விஜய் இடம் பிடிக்காதவை பற்றி எழுதும் போது எதற்கு இந்த கதை என்று கேட்கலாம் ஆனால் இந்த கதைக்கும் இந்த பதிவுக்கும் சம்பந்தம் இருக்கு

   விஜய் இடம் பிடித்தது அவர் படம் பார்க்க சென்றால் ஒரு டைம் பாஸ் ஆகா இருக்கும் கதை பார்த்து இலக்கிய தரமான படம் பார்க்க எனக்கு தெரியாது .நம்ம பாலிசி படம் பார்த்தா அந்த இரண்டு மணி நேரம் போரடிக்காம போனம சரி
ஆனால் விஜய் நடித்த கடைசி நான்கு படமும் இந்த ஜாலி லிஸ்டில் சேராது
அதாவது ஒரே மாதிரியான கதை அல்லது ஹீரோயிசம் பேசும் பாத்திரங்கள்
தன்னை நம்பி படம் பார்க்க வரும் ரசிகன் ரசிக்கும் விதமாக படம் இருப்பதை விட தன் ஹீரோயிசம் பற்றி சிறப்பாக பேச வேண்டும் என்று நினைப்பது கூட எனக்கு பிடிக்காது
வரும் அவர் பட பாடல்கள் எல்லாம் அவர் புகழ் பாடும் பாடல்களாக இருப்பது கூட பிடிப்பதில்லை சுறா படத்தில் வரும்  நீச்சல் போட்டும் வரும் ,தமிழன் வீர தமிழன் ,நான் நடந்த அதிரடி வர வர நல்ல பாடல்களை விட ஹீரோயிசம் பேசும் பாடல்கள இருப்பது கூட பிடிப்பதில்லை
      திரை உலக நடிகனாக புகழ் பெற்று இருக்கும் இந்த நேரத்தில் அவரின் அரசியல் பிரவேசம் பற்றிய அதை சார்ந்த அவர் செயல்கள் தான் செய்யும் ஒவ்வொரு சின்ன நல்ல செயலையும் விளம்பரம் செய்வது
  ரசிகன் என்பவன் படம் பார்ப்பது மட்டும் அவன் வேலை அதை விட்டு விட்டு தேவை இல்லாமல் நடிகர் சார்ந்த விசயங்களில் ஈடுபட வைப்பது .ரசிகன் என்பவனின் எதிர் காலம் அவன் படிப்பு என்பதை கொண்டுள்ளது 

   கல்வி அறிவு அதிகம் உள்ள இக்காலத்தில் ரசிகன் என்பவனை ஒன்றுக்கும் பயன் இல்லாத விசயங்களில் ஈடு பட வைக்கும் ரசிகர் மன்ற விசயங்களில் ஈடுபட வைக்காமல் படம் பார்ப்பது ரசிகன் வேலை நடிப்பது நடிகன் வேலை என்று இருப்பது (இது எல்லா நடிகர்களுக்கும் பொருந்தும் )

  இனி வரும் காலங்களில் ஒரு பிரியமானவளே ,துள்ளத் மனமும் துள்ளும் ,கில்லி ,பிரண்ட்ஸ் ,காதலுக்கு மரியாதை ,பத்ரி
போன்ற கலவையான  படங்களில் நடிப்பதே சிறப்பாக இருக்கும்

என்னதான் சொன்னாலும் தன்னை நம்பி படம் எடுக்கும் தயாரிப்பளருக்கு  நஷ்டம் தராத நடிகர் என்ற பெயரை மீண்டும் பெற நல்ல
நல்ல கதை உள்ள படங்களில் அது அடுத்த மொழியில் ஓடிய படம் என்றாலும் சரி

ரசிகனுக்கு தேவை நல்ல பொழுது போக்கு , தயாரிப்பளருக்கு தேவை போட்ட முதல் வந்தால் கூட பரவாயில்லை நஷ்டம் வேண்டாம்
இதற்க்கு எல்லாம் தேவை ஒரு நல்ல கதை ,திரை கதை ,கதையுடன் கூடிய நல்ல நடிப்பு மட்டுமே 
"சுறா மாபெரும் வெற்றி பெற வாழ்துக்கள்"


மற்றபடி தான் ஒரு நடிகன் என்பதை மட்டும் நினைவில் கொண்டு நல்ல நடிப்பை உண்டாக்கும் பாத்திரங்களில் நடிக்க முயற்சி செய்தாலே நல்ல சிறந்த நடிகர் என்று மாறும் வாய்ப்பு இருக்கு 

இது விஜய்க்கு மட்டும் இல்லை எல்லா நடிகருக்கும் பொருந்ந்தும்

   பதிவு பிடித்து இருந்தால் மறக்காமல் வாக்களிங்க
   வர்டாஆஆஆஆஆஆஆஆஆஆ 

7 comments:

 1. அருமையா சொன்னீங்க தலைவா அந்த கதை சூப்பரோ சூப்பர்

  ReplyDelete
 2. நடிப்போட இருந்துக்கனும் அதை விட்டுட்டு ..>>>.சரியா சொன்னீங்க!!!

  ReplyDelete
 3. @சினிமா ரசிகன்
  உங்கள் வருகைக்கு நன்றி
  @ஜெய்லானி

  நன்றி ஜெய்லானி

  ReplyDelete
 4. visit now for vote vijay's best movies 50
  www.superstarvijay.blogspot.com
  and will visit sura's release day for vijay about
  thanks
  www.superstarvijay.blogspot.com
  www.superstarvijay.blogspot.com
  www.superstarvijay.blogspot.com
  www.superstarvijay.blogspot.com

  ReplyDelete
 5. நல்ல பதிவு நண்பா, தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. @vijayfans
  உங்களின் பின்னுட்டத்திற்கு நன்றி
  @சசிகுமார்
  நன்றி நண்பா
  @karthik
  தொடரட்டும் உங்கள் ஆதரவு சேவை

  ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை