Sunday, April 18

"கவுண்ட் டவுன் " புத்தக விமர்சனம்நேர நிர்வாகம் பற்றி சிறந்த புத்தகம் 
  புத்தகம் படிப்பது ஒரு பொழுது போக்கு சில நேரங்களில் சில புத்தகம் படிக்கும் போது நமக்கு பயனுள்ள தகவல்கள் இருக்கும் .சில புத்தகம் படிக்கும் போது நம் நேரம் மட்டும் வீணாகும் ,பாட புத்தகம் படித்தால் வாழ்க்கையில் ஒரு முன்னேற்றம் கிடைக்கும் அப்படிப்பட்ட ஒரு புத்தகம் தான் சிபி. கே .சாலமன் அவர்கள் எழுதிய கவுண்ட் டவுன்

புத்தகம் படித்தால் மட்டும் முன்னேற போவதில்லை அதன் படி நடக்கும் போதுதான் வெற்றியின் சதவிதம் உயரும்
அதற்க்கு உதவும் சிறந்த புத்தகம் "கவுண்ட் டவுன் "

 புத்தகத்தின் ஆரம்பமே சிறு விளக்கம் என்றாலும் சிறப்பான விளக்கம்
 "நேரத்தை காற்றாக எண்ணிக்கொண்டால் நம் லட்சியம் அதை பலுனில் அடைத்து சில்லறை காசு ஆக்குவது அல்ல.காற்றலை அமைத்து அதிலிருந்து மின்சாரம் உருவாக்கி கோடிஸ்வரர் ஆவதுதான் "

  சுவாரசியத்துடன் சிறப்பாக நேர நிர்வாகம் பற்றி விளக்கி உள்ளார் ஆசிரியர்

1.உள்ளங்கையில் அல்ல மணிக்கட்டில்
2.நேரம் போத வில்லை என்று புலம்ப்புவரா நீங்கள் ?
3.களவு போகும் நேரங்கள்
4. நேரத்தை வசப்படுத்துவது எப்படி
5.எது முக்கியம்
6.நேரத்தோடு விளையாடுவது
7.டைம் டேபிள் மாஜிக்
8.ஒரு நாளைக்கு ௨௫ மணி நேரம்
9.நேரத்தை சேமிக்க சில டிப்ஸ்
10.நேரம் உங்களை துரத்த சில டிப்ஸ்

என்று பத்து தலைப்புகளில் ஒவ்வொரு தலைப்பிலும் அழகிய கதை ,புகழ் பெற்றவர்களின் வாழ்க்கை உதாரணம் மூலம் சிறப்பான முறையில் நேர நிர்வாகம் பற்றி விளக்கி உள்ளது இந்த புத்தகத்தின் சிறப்பு எனலாம்

சில சிறு அழகிய விளக்கங்கள்
                       உதவி இயக்குனர்களுக்கு அகிரா குரசோவ சொல்லும் யோசனை "தினசரி ஒரு பக்கம் எழுதுங்கள் எத்தனை சோர்வாக இருந்தாலும் மூட் அவுட் ஆகா இருந்தாலும் படுப்பதற்கு முன் ஒரு பக்கம் எழுதி விடுங்கள் வருஷ கடைசியில் உங்களிடம் 365 எழுதிய பக்கங்கள் இருக்கும் "


நீண்ட நேரம் தூங்கினால் நீண்ட நேரம் முழித்திருப்போம் நம்மிடம் நிறைய சக்தி மீதம் இருக்கும்
"இது தவறானா தகவல் நீண்ட நேரம் தூங்கினால் நீண்ட நேரம் முழிதிருப்போம் என்று எண்ணுவதே மருத்துவ ரீதியாக தவறு .மாறாக நம் உடலில் பயோலாஜிக்கல் சிஸ்டத்தையே நீண்ட நேர தூக்கம் குழப்பி விடும்
போன்ற மருத்துவ விளக்கம்

ஒரு நிமிட நேரம் என்பதில்
  பூமி 950 மைல்கள் தன்னை தானே சுற்றி விடுகிறது
நூற்றி பத்து கார்கள் தயாராகிறது
நூற்றி ஐம்பது குழந்தைகள் பிறக்கின்றன


என்ற தகவல்கள் ஆகட்டும்
நேர நிர்வாகம் பற்றி நம்மை நாமே சோதித்து பார்க்க உதவும் சிறந்த் புத்தகம்
இருபத்தோராவது  வயதில் முதல் தோல்வியில் அப்ரகாம் லிங்கன் சோர்ந்து போய் இருந்தால்  இன்று நாம் அப்ரகாம் லிங்கன் அவர்களை மறந்து போய் இருப்போம் போன்ற உதாரண புருசர்கள் பற்றி தகவல் என அழகிய முறையில் புத்தகம் முழுவதும் உள்ளது நிச்சயம் நம் புத்தக  சேமிப்பில்இருக்க வேண்டிய சிறந்த புத்தகம் கவுண்ட் டவுன்


புத்தகத்தில் கடைசியில் உள்ள வரிகள் போல

            " விநாடி முள்ளாக மாறுங்கள் .விமானங்கள் எட்ட முடியாத உயரத்தை தொடுவது அப்போது சுலபம் ஆகி விடும் "

மீண்டும் புத்தகம் கடை சென்றால் மறக்காமல் வாங்க வேண்டிய சிறந்த புத்தகம்
"கவுண்ட் டவுன் "


நூலின் பெயர் : கவுண்ட் டவுன்
ஆசிரியர் : சிபி .கே .சாலமன் வெளியுடு : கிழக்கு பதிப்பகம்


 
 விலை : ரூ 70
 

5 comments:

 1. ுத்தகம் படித்தால் மட்டும் முன்னேற போவதில்லை அதன் படி நடக்கும் போதுதான் வெற்றியின் சதவிதம் உயரும்

  ...... true. A good book. Thank you for the post. :-)

  ReplyDelete
 2. @சித்ரா

  நன்றி உங்களின் தொடர் ஆதரவுக்கு
  என் பதிவுக்கு வாக்களிப்பதிலும்
  பின்னுட்டதிலும் உங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றி சகோதரி

  ReplyDelete
 3. நல்ல புத்தகம் நல்ல அறிமுகம் நன்றி நண்பா...

  ReplyDelete
 4. நல்ல அறிமுகம் நண்பரே..

  ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை