Monday, April 12

காதலிக்க நேரமில்லை

நம் மனம் வருத்தமாக இருக்கிறது நல்ல வருத்தத்தை போக்க என்ன வழி இப்படி கேட்டால் ஆளாளுக்கு ஒரு விளக்கம் கொடுப்பார்கள் அவர்கள் அனுபவத்தில் சிலது நல்லதாக இருக்கும் .சிலது கேட்டதாக இருக்கும்
என் அனுபவத்தில் மனதுக்கு இதம் அளிக்கும் விசயங்களில் ஒன்று பாட்டு கேட்பது மற்றது
நல்ல நகைச்சுவை கலந்த திரை படங்கள் பார்ப்பது அந்த வகையில் ஏற்கனவே பாமா விஜயம் ,மற்றும் எதிர் நீச்சல் பற்றி எழுதி விட்டேன் இந்த பதிவில் நான் சொல்ல போற படம் காதலிக்க நேரமில்லை     இந்த படத்தை பற்றி குறை சொல்ல வேண்டும் என்றால் படம்  ஆரம்பித்ததே தெரியல்ல அதுக்குள்ள படம் முடிஞ்சிடுச்சுன்னு சொல்வதை தவிர ..
 ஸ்ரீதர் இயக்கிய இப்படம் ஒரே குறிக்கோள் மட்டுமே படத்தை பாருங்கள் சிரிங்க சிரிச்சிட்டு போங்க 
நாகேஷ் முத்துராமன் ரவிச்சந்திரன் பாலையா காஞ்சனா சச்சு  என்று இப்படத்தில் ஒரு நடிகர் பட்டாளமே நகைச்சுவை கூட்டணி படம் முழுவதும் ஒரே சிரிப்பு மழை தூவி இருக்கும்
அதிலும் நாகேஷ் செல்லப்பா என்ற வேடத்தில் படம் தயாரிக்கிறேன் என்று அவர் அடிக்கும் லூட்டி இருக்கே இப்போது பார்த்தாலும் படம் புதிதாக இருக்கும் அதுதான் இந்த படத்தின் நகைச்சுவை திரை கதை யுக்தி    ரவிச்சந்திரன் காதலுக்கு உதவி புரிய வரும் முத்துராமன் வயதான வேடத்தில் செல்வந்தராக  பாலையா இடம் ஏமாற்றும் காட்சியாகட்டும் .அவர் உதவி புரிய வந்த இடத்தில அவர் காதலிக்கும் பெண் காஞ்சனா இருப்பது .முத்துராமன் தந்தையாக வரும் ராகவன் தன மகன் வயதான வேடத்தில் இருப்பது தெரியாமல் அவரிடமே .தன் மகன் கல்யாண விஷயம் பற்றி பேசுவது என்று படம் முழுவதும் சிறப்பான திரை கதை இப்படத்தில் .


  ஒரு அழகிய காதல் கதையில் நகைச்சுவை என்னும் தேரை சிறப்பாக ஒட்டி இருப்பார் ஸ்ரீ தர் .
 ரவி சந்திரன்  ராஜஸ்ரீ , முத்துராமன் காஞ்சனா சம்பந்தப்பட்ட காதல் காட்சியாகட்டும் .
பாலையா நாகேஷ் இடையேயான வசனங்கள்  ஆகட்டும் .நகைச்சுவை வசனங்கள் முக்கியமாக் இருக்கும் ஓஹோ ப்ரொடக்சன் என்று அவர் அடிக்கும் லூட்டி  படத்தின் கதை நாயகன் இவர் எனலாம்
 
   "ஏன்டா என் மானத்தை வாங்குற "என்று பாலையா கேட்க்க வேற என்ன செய்வது பணம் தான் வாங்க முடியலியே "என்று நாகேஷ் அடிக்கும் டைமிங்  வசனம்
நாகேஷ் பாலையா இடம் கதை சொல்லும் காட்சி அதற்க்கு அவர் காட்டும் முக பாவங்கள் .பாலையா பயந்து போய் கதை ரொம்பா பயங்கரமா  இருக்கு என்று அவர் பயப்படும் காட்சிகள்


பணக்கார வேடத்தில் இருக்கும் முத்துராமன் இடம் பணம் கேட்டு நாகேஷ் வரும் போது  பாலையா அந்த இடத்தில இருப்பார் அப்போது பாலையா "உன்னை மகனா பெத்தேனே என்னை செருப்பால அடிக்கணும் என்பார் "அதற்க்கு நாகேஷ் உங்களுக்கு மகனாக பிறந்தேன அதற்க்கு என்னை நானே செருப்பால அடிக்கணும்" என்பார் நான் அடிச்சு செருப்பை கீழே போடுறேன் அதை எடுத்து நீ அடிச்சுக்கோ என்பார் உடனே நாகேஷ் வேண்டாம்பா செருப்பால அடி வாங்கின குடும்பன்னு ஊர் பேசும் என்பார்

   பாமா விஜயம் போல இந்த படத்தில் உள்ள நகைச்சவை வசனங்கள் எழுதினால் பல பதிவு போட வரும்  மற்றும் ஒரு சிறப்பு விஷயம் இப்படத்தின் குளுமையான ஒளிபதிவு கோவை பொள்ளாச்சி என்று கண்ணுக்கு சிறப்பாக இருக்கும்
இசை விஸ்வநாதன் ராம மூர்த்தி என்ன பார்வை உந்தன் ,விஸ்வநாதன் வேலை வேண்டும் ,உங்க பொன்னான கைகள் ,காதலிக்க நேரமில்லை என்று எல்லா பாடல்களும் சிறப்பாக அமைந்த படம்
  
ஒரு நல்ல காதல் கதையை வயிறு  குலுங்க சிறிது பார்க்க வேண்டும் என்றால் அது காதலிக்க நேரமில்லை
 மிக சிறந்த நகைச்சவை படங்களில் முக்கியமான படம் காதலிக்க நேரமில்லை
        இப்போதும் படம் எடுக்கிறான் என்று மண்டை காய வைக்கும் இன்றைய இயக்குனர்கள் பார்க்க வேண்டிய படம்
 எனக்கு தெரிந்த வரை படம் எடுப்பதில் அதிலும் நகைச்சவை படம் எடுப்பது ரொம்ப கஷ்டம்
அதனால் தான் இப்போது நகைச்சவை படம் வருவதில்லை எனலாம்

     முடிந்தால் ஒரு நல்ல கம்பெனி டி வி டி வாங்கி வைத்து கொள்ளவும்

7 comments:

 1. இப்போதும் படம் எடுக்கிறான் என்று மண்டை காய வைக்கும் இன்றைய இயக்குனர்கள் பார்க்க வேண்டிய படம்
  yes correct

  இந்த படம் எனக்கு பிடித்தமான படங்களில் ஒன்று

  பாடல்களும் ரொம்ப பிடிக்கும்

  தொடரட்டும் பழைய படங்களின் உங்கள் பதிவுகள்

  ReplyDelete
 2. I never miss this movie on TV. Awesome!

  ReplyDelete
 3. //இப்போதும் படம் எடுக்கிறான் என்று மண்டை காய வைக்கும் இன்றைய இயக்குனர்கள் பார்க்க வேண்டிய படம் //
  ஆமா...ஆமா...எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் எனக்கும் பிடிக்கும்...பகிர்வுக்கு நன்றி...

  ReplyDelete
 4. @r.v.saravanan kudandhai

  உங்கள் போன்றோர் ஆதரவு இருந்தால் நிச்சயம் தொடர்ந்து எழுதுவேன்

  @Chitra
  மிக்க நன்றி சித்ரா அவர்களே

  @seemangani

  சவுதி வாழ்க்கை எப்படி உங்கள் வருகைக்கு நன்றி சீமான் கனி
  ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா

  அடுத்த படம் கலாட்டா கல்யாணம் சின்ன திரை அரங்கில் வெற்றி நடை போடுது ரமேஷ்
  விரைவில் பதிவு திரையில்

  ReplyDelete
 5. Anonymous7.12.10

  HAI SARAVANAN. VERY SUPER PA

  ReplyDelete
 6. பழைய திரைபடங்களை பற்றிய விமர்சனம்கள் அருமை. மற்ற பக்கங்களும் சிறப்பாக உள்ளன. வாழ்த்துக்கள் நண்பா...
  கலாட்டா கல்யாணம் மற்றும் காசேதான் கடவுளடா திரைபடங்களை சிபாரிசு செய்கிறேன்.

  ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை