Friday, April 2

காலாண்டும் தமிழ் (ப்) படமும்              இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை  இது வரை 30படங்கள் வந்து உள்ளது .
இவைகள் எண்ணிகையில் வேண்டும் என்றால் அதிகமாக இருக்கலாம் ஆனால் இதில் அனைவரையும் சந்தோச படுத்திய படங்கள் என்றால் அது மிகவும் குறைவே 


முன்பு எல்லாம் ஒரு படம் வந்தால் அவற்றின் வெற்றி எண்ணிகை அதிகமாக இருக்கும்
ஆனால் இப்போது இருக்கும் இந்த தொழில் நுட்ப முன்னேற்றம் காரணமாக படங்கள் நூறு நாட்கள் ஓடுவதை விட மிக விரைவில் லாபம் பார்பதே சிறந்தது என்ற காரணாமாக
அதிகமான அளவில் படத்தின் பிரதிகள் போட படுவது  பெரும் பொருட் செலவில் தயாரிக்கும் படத்திற்கு வேண்டும் என்றால் கூட ஒத்து வரும் ஆனால்
இதன் காரனமாக சிறு பட்ஜெட் படங்களுக்கு திரை அரங்கு கிடைப்பது பெரும் சிக்கலாக இருக்கிறது

இதன் தத்துவம் ஒரு படம் நூறு நாள் ஓடி லாபம் வருவதை விட அதிக திரை அரங்கில் படங்களை வெளியுட்டு விரைவில் லாபம் பார்க்கும் பாரசூட் தியரி இப்போது வெற்றி மந்திரமாக இருக்கிறது

சரி இப்போது இந்த கால விசயத்திற்கு வருவோம்
புகைப்படம் தொடங்கி பையா வரை இது வரை 30 க்கு மேற்பட்ட படங்கள் வந்து உள்ளது இதில் விநியோகஸ்தர் திரைஅரங்க உரிமையாளர் என்று எல்லா தரப்பு மக்களையும் சந்தோச படுத்திய படங்கள் மிகவும் குறைவே
முன்பு எ பி சி என மூன்று சென்டர் ஒரு படம் ஓடினால் தான் உண்மையான  வெற்றி படம்  சொல்வார்கள் ஆனால் இப்போது இருக்கும் திரை அரங்க குறைவு காரணமாக அதிலும் கிராம புற திரை அரங்குகள் அதிகமான் அளவில் மூட பட்டதால் சி சென்டர் பற்றி யாரும் பேச மாட்டார்கள்

இவை மட்டும் இல்லை ஒரு படத்தின் வெற்றி என்பதை தீர்மானிக்கும் மிக முக்கிய ஆதாரமே ரசிகன் என்பவனின் மனம் மட்டுமே
ஒரு படத்திற்கு வழங்கப்படும் அளவிற்கு அதிகமான விளம்பரமோ ,பெரிய திரை கலைஞர்களின் உழைப்போ ஒரு படத்தின் வெற்றி ஆகி விடாது இவை வேண்டும் என்றால்
வெற்றிக்கு உதவி புரியலாம் ஆனால் ஒரு படத்தின் உண்மையான வெற்றி என்பது அப்படத்தின் ஜீவன் என்னும் கதை களத்தை கொண்டு உள்ளது
எப்படி என்றால் 

இதுதான் கதை என்பதை விட அப்படத்தை பார்க்க வரும் ரசிகன் படத்தை பார்த்து உண்மையான சந்தோசத்தோடு வெளியே செல்லும் போது தான் அப்படம் உண்மையான வெற்றி படமாக மாறும் அந்த வகையில் 

இந்த ஆண்டின் ஒரே ஒரு உண்மையான் வெற்றி படம் என்றால் அது தமிழ்ப்படம் என்று கண்ணை மூடி சொல்லி விடலாம் 

     இப்படத்தை பற்றி சலிக்க சலிக்க விமர்சனம் படித்து இருப்பிர்கள் மேற்கொண்டு சொல்ல விரும்ப வில்லை
படம் எடுப்பதிலே மிகவும் கஷ்டமான் கலை மற்றவர்களை சிரிக்க வைப்பது 

சோக படம் எடுப்பதோ ,அல்லது சண்டை படம் எடுப்பதோ பெரிய விஷயம் இல்லை ஆனால் உண்மையான நகைச்சுவை படம் எடுப்பது ஒரு தனி கலை
பழைய படங்களில் கே பாலசந்தர் கோபு பாபு மௌலி பாண்டியராஜன் கே பாக்யராஜ் என்று தனி இயக்குனர் வட்டாரமே இருந்தது
இடைப்பட்ட காலங்களில் சுந்தர் சி , கே எஸ் ரவிக்குமார் சிம்பு தேவன் என்று சில இயக்குனர்களே இருக்கின்றனர்

இப்போது தமிழ் திரை உலகம் மறந்து விட்ட ஒரு விஷயம் நகைச்சுவை படம் என்றால் மிகை இல்லை
அதுக்கு மிக முக்கிய காரணம் சில வெட்டி பந்த நடிகர்கள் தவிர வேறு யாரும் இல்லை 

எது எப்படியோ
இந்த காலாண்டில் உண்மையான வெற்றி படம்
தமிழ் படத்திற்கு வாழ்துக்கள்

இதற்க்கு அடுத்த இடம்
விண்ணை தாண்டி வருவாயா
சிறந்த பாடல்கள்
விண்ணை தாண்டி வருவாயா
சிறந்த செய்தி நாயகன் (சும்மா )
நித்தியானந்தா
சிறந்த தோல்வி
  தேர்தலில் டெபாசிட் போன பெரிய கட்சி
டிவியில் ஹிட்
ஐ பி எல்
சிறந்த இசை
யுவன் (கோவா ,பையா)
தரமான படம்
அங்காடி தெரு
சிறந்த இயக்குனர்
வசந்த பாலன்
முடியல விருது
வடிவேலு
சாதனை நாயகன்
டெண்டுல்கர்


சும்மாதான் டைம் பாஸ்
திட்டாம  படித்ததிற்கு  நன்றி 
DONT MISS MY VOTE 

7 comments:

 1. Anonymous2.4.10

  நம்ம தலையின் அசலை பத்தி ஒன்னுமேல்லையே ஓ அது superhit படம் எண்டது உலகறிந்தத விஷயம்

  ReplyDelete
 2. அட, அட, அடடா......அரை ஆண்டு ரிசல்ட் எப்போ?

  ReplyDelete
 3. நித்தியானதாவ விடுற மாதிரி இல்ல

  ReplyDelete
 4. @மேனன்
  இப்போ இருக்கிற சந்தர்ப்பத்தில் வெற்றி படம் கொடுக்கும் அனைவரும் சிறந்த நடிகர்களே
  @சித்ரா
  அடுத்த பதிவு விஜய் பற்றி படித்து மறக்காம பின்னுட்டம் போடவும்
  @சிவசங்கர்
  என்ன பண்றது சார் இதே நிலையில் போன ஆண்டு சிறந்த செய்தி நாயகர் கூட அவர் தான்

  ReplyDelete
 5. @எப்பூடி
  ;-)
  வருகைக்கு நன்றி

  ReplyDelete
 6. sir tell me how to add my blogspot in ulavu pls

  ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை