Friday, April 30

கோடை திரைப்படங்கள் ஒரு பார்வை

          
                              ஐ பி எல் சீசன்
முடிந்ததது .இனி மேல்  படங்கள் எல்லாம் ஓடும் என்ற நம்பிக்கையில் இருக்கும் திரை உலகம் (நல்ல திரை கதை? இருந்தால் எப்போவும் படம் ஓடும் )
இனி அதிக அளவில் படங்கள் வரும் என்று எதிர்பார்க்கலாம் அதுவும் இல்லாமல் கோடை காலம் வர கோடை படங்கள் பற்றி 


(இந்த வரிகள்  பழசுதான் இருந்தாலும் மீண்டும்  படிக்கவும் )  :( 

 
ரசிகன் எப்போதும் கதை என்ற விஷத்தை விட அவன் விரும்புவது திரை அரங்கு சென்றால் இரண்டு மணி நேர பொழுதுபோக்கு மட்டுமே .அதை விட்டு விட்டு உங்களின் வெட்டி பந்தா பார்க்க அல்ல .
அதற்க்கு ரசிகன் என்ற ஏமாளிகள் இருக்கார்கள் அவர்களையும் ஒரே அளவில் மட்டுமே எமாற்ற முடியும் .?பிறகு அவனே ஐயோ இந்த கொசு தொல்லை தாங்க முடிய வில்லை என்று  சொன்னால்
இந்த வரிகளுக்கும்  சுறா படத்திற்கும் சம்பந்தம் இல்லை

கோடை காலத்தில் ரசிகர்களை குளிர்விக்க வரும் படங்கள் பற்றி 



  இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்  


                                                                இம்சை அரசன் ,அறை எண் 305 கடவுள் படங்களை தொடர்ந்து சிம்பு தேவன் சரவெடி ஆகா இருக்கும் .அறை எண் 305 கடவுள் சொல்லும்படி நகைச்சுவை இல்லாத காரணத்தால்  இந்த படத்தில் அவரின் ட்ரேட்  மார்க் நகைச்சுவைக்கு முக்கியதுவம் கொடுத்து இருக்கும் படம் என்ற நம்பிக்கையில் .ஜெய் சங்கர் அவர்களுக்கு பின் தமிழில் கௌ பாய் படம் எடுக்க ஆட்கள் இல்லாத (அல்லது தைரியம்)காரணத்தால் நீண்ட நாட்களுக்கு பின் வரும் படம் .ராகவா லாரன்ஸ் நடிக்கும் இந்த படம் கௌ பாய் படத்திற்கு ஏற்ற எல்லா விஷயங்களுடன் வரும் என்ற நம்பலாம் (கௌ பாய் படத்தின் கவர்ச்சி காட்சிகள் இல்லாமல் இருந்தால் சரி )  
மே 7 இரும்பு கோட்டை சிங்கம் எப்படி உறுமுதுன்னு பார்க்கலாம் 



குரு சிஷ்யன் 


                    லொள்ளு பட இயக்குனர் லொள்ளு பட நாயகர் என்று நகைச்சுவை பிளாட்பாரத்தில் வரும் படம் .ஒரு பக்கம் சத்யராஜ் சுந்தர் c  மறுபக்கம் சந்தானம் (முதலில் வடிவேலு நடிப்பதாக இருந்து பின் சந்தானம் கையில் சென்றபடம் ).  படத்தின் ஸ்டில் பார்க்கும் போதே படத்தின் மீது எதிர்பார்ப்பு உண்டாக்கும் (ஆனா முக்கள் வாசி படம் ஸ்டில் பார்க்கும் போது  மட்டும் நல்ல இருக்கு )



  மாஞ்சா வேலு

                 மலை மலை படத்திற்கு பின் வரும் அதே கூட்டணி அதே கதை இல்லாமல் இருந்தால் சரி .தமிழ் திரை உலகின் விக்ரமாதித்தன் அருண் விஜய் நடிக்கும் படம்  .மசாலா பட இயக்குனர் A .வெங்கடேஷ்  இயக்கம் படம் .நீண்ட நாட்களுக்கு பின் கார்த்திக்  நடிக்கிறார்
 மஞ்சா வேலு மஞ்சா பலிக்குமா கோடையில் தெரியும்


மதராசா பட்டிணம்

                                  தமிழ் திரை உலகிற்கு நீண்ட நட்ட்களுக்கு பின் வரும் வரலாற்று சம்பந்தம் உள்ள படம் .1940 இல் (புது சென்னை )பழைய மதராசில் நடக்கும் கதை .படத்தில் நடிக்கும் ஆர்யா ஸ்டில் பார்க்கும் போது அவர்  இப்படத்திற்கு தனி சிரத்தை  எடுத்து உள்ளது தெரிகிறது
 கிரிடம் ,பொய் சொல்ல போறோம்  படத்திற்கு பின் A  L விஜய் இயக்கம் படம் .ஜி  வி பிரகாஷ் இசை

இதுவரை நல்ல திரைகதை உள்ள திரை படங்களை ரசிகர்கள் ஏமாற்றுவதில்லை(தமிழ்ப்படம் ,விண்ணை தாண்டி வருவாயா ,பையா ) அந்த வகையில் மேல் உள்ளபடங்கள் வெற்றி பெற  வாழ்த்துக்கள்


           
 
 


2 comments:

  1. சிம்பு தேவனின் சிங்கம் கர்ச்சிக்கலாம்...
    பதிவிற்கு நன்றி

    "வட போச்சே"

    RIYAS

    ReplyDelete
  2. irumbu kottai murattu singam
    நல்லா இருக்கும்

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை