Monday, April 26

P for நீங்கள் " புத்தக விமர்சனம் "



      ஒரு மனிதன்
பர்ஃபெக்ட் ஆகா மாற மிக சிறந்த வழி கொஞ்சம் நாம் செய்வது சரியா என்று யோசித்தாலே போதும் அவன் பெர்பெக்ட் ஆகா முடியும் என்பதை நகைச்சுவையாக அதிலும் ஒரு நகைச்சுவை நூலா? இல்லை நம்மை பெர்பெக்ட் ஆகா மாற்றும் நூலா? என்று யோசிப்பதை விட சிறந்த ஒரு நூல் என்பது சிறந்ததது

    9 ஆம் பக்கத்தில் ஆரம்பிக்கும் ஆசிரியர் 140 கடைசி பக்கம் வரை  ஒவ்வொரு பக்கமும் சிரிக்க வைது சிந்திக்க வைப்பது ஆசிர்யரின் தனி கலை எனலாம்
 ஒவ்வொரு பக்கத்திலும் சிறு சிறு நகைச்சுவை துணுக்கு மூலம் நாம் தினம் தோறும் செய்யும் சிறு சிறு தவறுகளை நாசுக்காக சுட்டி காட்டி உள்ளார் ஆசிரயர் ஜே எஸ் ராகவன்

  புத்தகத்தின் முதல் தொடக்கத்திலே ஆசிரியர் வேண்டுகோள் என்று தொடங்கும் போதே நகைச்சுவை சர வெடி தொடங்கி விட்டது
  *அறையில் தனியாக உட்கார்ந்து கொள்ளுங்கள்
*குல தேவதை வேண்டி கொள்ளுங்கள்
*மனசாட்சியை உசுப்பி விட்டு கொள்ளுங்கள் 


 மேற்கொண்டு சொல்ல ஆசைதான் ஆனால் புக்கை வாங்கி பாருங்கள் சிரிப்புடன் பெர்பெக்ட் ஆகா மாறுவிர்கள்

    
பர்ஃபெக்ட் ஆகா மாற்ற சிறந்த புத்தகம்  சார் வேண்டும் என்றால் கீழே உள்ள  ஆசிரியர் சொல்லி உள்ள இரண்டு சாம்பிள்  மட்டும் படித்து பாருங்க
  ஆனால் இதை போல் நூற்றுக்கு மேல் இருக்கு சிரிச்சு  சிரிச்சு வயிறு வலிப்பதுடன் உங்களை நம்மை அறியாமல் செய்யும் தவறை திருத்த  வைக்கும் சிறந்த நூல்

  சாம்பிள் 1
கீதா கபேயில் பொங்கல் வடை காபியை வெட்டி விட்டு ,ஓவராக சாராயம் போட்ட குடி மகன்  வாந்தி எடுக்கும் சத்தத்துடன் வாஷ் பேஸினில் வாயைக் கழுவிச் சுத்தம் செய்யும் வழக்கம் உண்டா ?
சாம்பிள் 2
   சாலையில் நடந்து போகும் போது ,குதப்பிய பீடாவின் மிச்சத்தை ,பறந்து கொண்டே காக்காய் நினைத்த இடத்தில திடிரென்று "கக்கு" போடுவது போல டெக்னிகலர் குவியலாகத் துப்புவிரா ?

   இது போன்று படிக்கும் போதே நாம் நம்மை அறியாமல் (அறிந்து ) செய்யும் சிறு சிறு தவறுகளை நாசுக்கான (நகைச்சுவையாக ) சிறப்பான முறையில் எழுதி உள்ளார்
             சுய விமர்சனம்  முதல்   செல்லும்,அலெக்சாண்டார் பெல்லும் ! என்று 15 தலைப்புகளில் ஒரு ஒரு மனிதனின் வாழ்க்கையில் செய்யும் சிறு சிறு தவறுகளை  திருத்தி கொள்ள 
சிறந்த நூல்  
(அதிலும் சிறப்பு ஒரு நகைச்சுவை நூல் வாங்கியது போலவும் ,சுயமுன்னேற்ற நூல் என ஒரு கல்லில் இரண்டு வாழை பழம் )

 வாழ்க்கையில் தினம் தினம் நாம் செய்யும் சிறு சிறு தவறுகளை  மாற்றி நம்மை ஒரு பெர்பெக்ட் ஆகா மாற்றி நம்மை வாழ்க்கையில் சிறந்த நிலை அடைய உதவும் சிறந்த நூல்
  ஒரு முறை இல்லை பல முறை நீங்கள் படிக்க வைக்கும் சிறந்த நூல்


   அடுத்த முறை புத்தக கடை செல்லும் போது சரியா பராக்கு பார்த்து மறக்காம வாங்கி படிச்சு பாருங்க (சிரிச்சிக்கிட்டே படிப்பிங்க )
   P for  நீங்கள் சிறந்த நூல் சிரிப்புடன் சிந்திக்க வைக்கும் உங்களை ஒரு
பர்ஃபெக்ட் ஆகா மாற்ற சிறந்த நூல்

    மீண்டும் ஒரு சாம்பிள் 3
  வாஸ்து பிரகாரம் கட்டப்பட்டது என்று பில்டர் சொன்ன பிளாட் ,சி.எம் .டி.எ. விதிகள் பிரகாரம் கட்டப்பட்டிருக்கிறதா என்று வாங்குமுன் சரி பார்த்து கொண்டால் நீங்கள் ஒரு உஷாரான  mr . பெர்பெக்ட்
       
           அப்போ ஒரு சிறந்த நூல் வாங்க நீங்க ரெடியா ?

இந்த நூல் உங்களிடம் இருந்தால் அதை பற்றி பின்னுட்டம் மூலம் தெரிவிக்கவும்


 

நூலின் பெயர் : P for  நீங்கள்
ஆசிரியர் : ஜே .எஸ் .ராகவன்


வெளியிடு :  கிழக்கு பதிப்பகம் 




 

விலை : ரூ 60 



உங்கள் ஆதரவை வேண்டி 

ஹாய் அரும்பாவூர் 




9 comments:

  1. நல்ல அறிமுகம்.

    ReplyDelete
  2. பர்ஃபெக்ட்டான நூல் பற்றிய பர்ஃபெக்ட் இடுகை அரும்பாவூர்....

    ReplyDelete
  3. Perfect Book. Thank you.

    ReplyDelete
  4. நைஸ் போஸ்ட்

    ReplyDelete
  5. // ஒரு மனிதன் பர்ஃபெக்ட் ஆகா மாற மிக சிறந்த வழி கொஞ்சம் நாம் செய்வது சரியா என்று யோசித்தாலே போதும் //

    நல்ல வரிகள், நல்ல விமர்சனம்.

    ReplyDelete
  6. வாங்கிடுறேன்

    ReplyDelete
  7. @Dr.P.Kandaswamy
    உங்கள் வாகைக்கு நன்றி தாத்தா

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. @thenammailakshmanan
    உங்கள் வருகைக்கு நன்றி
    உங்கள் ஆதரவுக்கு நன்றி
    @Chitra
    உங்களின் தொடர் ஆதரவுக்கு நன்றி சகோதரி
    @ஜெய்லானி
    அப்புறம் என்ன விசேசம் ஜெய்லானி
    @அமைதி அப்பா
    உங்கள் வருகைக்கு நன்றி
    @கே.ஆர்.பி.செந்தில்
    நன்றி செந்தில்

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை