Friday, April 30
கோடை திரைப்படங்கள் ஒரு பார்வை
ஐ பி எல் சீசன் முடிந்ததது .இனி மேல் படங்கள் எல்லாம் ஓடும் என்ற நம்பிக்கையில் இருக்கும் திரை உலகம் (நல்ல திரை கதை? இருந்தால் எப்போவும் படம் ஓடும் )
இனி அதிக அளவில் படங்கள் வரும் என்று எதிர்பார்க்கலாம் அதுவும் இல்லாமல் கோடை காலம் வர கோடை படங்கள் பற்றி
(இந்த வரிகள் பழசுதான் இருந்தாலும் மீண்டும் படிக்கவும் ) :(
ரசிகன் எப்போதும் கதை என்ற விஷத்தை விட அவன் விரும்புவது திரை அரங்கு சென்றால் இரண்டு மணி நேர பொழுதுபோக்கு மட்டுமே .அதை விட்டு விட்டு உங்களின் வெட்டி பந்தா பார்க்க அல்ல .
அதற்க்கு ரசிகன் என்ற ஏமாளிகள் இருக்கார்கள் அவர்களையும் ஒரே அளவில் மட்டுமே எமாற்ற முடியும் .?பிறகு அவனே ஐயோ இந்த கொசு தொல்லை தாங்க முடிய வில்லை என்று சொன்னால்
இந்த வரிகளுக்கும் சுறா படத்திற்கும் சம்பந்தம் இல்லை
கோடை காலத்தில் ரசிகர்களை குளிர்விக்க வரும் படங்கள் பற்றி
இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்
இம்சை அரசன் ,அறை எண் 305 கடவுள் படங்களை தொடர்ந்து சிம்பு தேவன் சரவெடி ஆகா இருக்கும் .அறை எண் 305 கடவுள் சொல்லும்படி நகைச்சுவை இல்லாத காரணத்தால் இந்த படத்தில் அவரின் ட்ரேட் மார்க் நகைச்சுவைக்கு முக்கியதுவம் கொடுத்து இருக்கும் படம் என்ற நம்பிக்கையில் .ஜெய் சங்கர் அவர்களுக்கு பின் தமிழில் கௌ பாய் படம் எடுக்க ஆட்கள் இல்லாத (அல்லது தைரியம்)காரணத்தால் நீண்ட நாட்களுக்கு பின் வரும் படம் .ராகவா லாரன்ஸ் நடிக்கும் இந்த படம் கௌ பாய் படத்திற்கு ஏற்ற எல்லா விஷயங்களுடன் வரும் என்ற நம்பலாம் (கௌ பாய் படத்தின் கவர்ச்சி காட்சிகள் இல்லாமல் இருந்தால் சரி )
மே 7 இரும்பு கோட்டை சிங்கம் எப்படி உறுமுதுன்னு பார்க்கலாம்
குரு சிஷ்யன்
லொள்ளு பட இயக்குனர் லொள்ளு பட நாயகர் என்று நகைச்சுவை பிளாட்பாரத்தில் வரும் படம் .ஒரு பக்கம் சத்யராஜ் சுந்தர் c மறுபக்கம் சந்தானம் (முதலில் வடிவேலு நடிப்பதாக இருந்து பின் சந்தானம் கையில் சென்றபடம் ). படத்தின் ஸ்டில் பார்க்கும் போதே படத்தின் மீது எதிர்பார்ப்பு உண்டாக்கும் (ஆனா முக்கள் வாசி படம் ஸ்டில் பார்க்கும் போது மட்டும் நல்ல இருக்கு )
மாஞ்சா வேலு
மலை மலை படத்திற்கு பின் வரும் அதே கூட்டணி அதே கதை இல்லாமல் இருந்தால் சரி .தமிழ் திரை உலகின் விக்ரமாதித்தன் அருண் விஜய் நடிக்கும் படம் .மசாலா பட இயக்குனர் A .வெங்கடேஷ் இயக்கம் படம் .நீண்ட நாட்களுக்கு பின் கார்த்திக் நடிக்கிறார்
மஞ்சா வேலு மஞ்சா பலிக்குமா கோடையில் தெரியும்
மதராசா பட்டிணம்
தமிழ் திரை உலகிற்கு நீண்ட நட்ட்களுக்கு பின் வரும் வரலாற்று சம்பந்தம் உள்ள படம் .1940 இல் (புது சென்னை )பழைய மதராசில் நடக்கும் கதை .படத்தில் நடிக்கும் ஆர்யா ஸ்டில் பார்க்கும் போது அவர் இப்படத்திற்கு தனி சிரத்தை எடுத்து உள்ளது தெரிகிறது
கிரிடம் ,பொய் சொல்ல போறோம் படத்திற்கு பின் A L விஜய் இயக்கம் படம் .ஜி வி பிரகாஷ் இசை
இதுவரை நல்ல திரைகதை உள்ள திரை படங்களை ரசிகர்கள் ஏமாற்றுவதில்லை(தமிழ்ப்படம் ,விண்ணை தாண்டி வருவாயா ,பையா ) அந்த வகையில் மேல் உள்ளபடங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்
Wednesday, April 28
சுட்டி டிவி 4 ஆண்டு வாழ்த்துவோம்
தமிழ் குழந்தைகள் விருப்ப உலகம் சுட்டி டிவி வரும் வரை தமிழ் குழந்தைகள் சேனல் என்ற இடம் இல்லாமல் இருந்தது ஆனால் கலாநிதி மாறன் அவர்களின் சன் டிவி சுட்டி டிவி ஆரம்பிக்கும் வரை
டோராவின் உலகத்தில் குழந்தைகள் சந்தோஷம் அடைய உதவிய சன் டிவி க்கு நன்றி
ஆனால் இன்று குழந்தைகளுக்கு தனி உலகம் சுட்டி டிவி டோரா ,ஜாக்கிசான் ,அவதார் ,காட்சில்லா ,ஹி மென் ,மென் இன் ப்ளாக் என பல ஆங்கில கதாபாத்திரங்கள் தமிழ் பேச உதவியது ,சுட்டி டிவி
குழந்தைகள் அறிவு செய்திகள் ,அறிவோம் அறிவியல் ,பிறந்த நாள் வாழ்த்துக்கள் என குழந்தைகளை வைத்து குழந்தைகளுக்கு என சிறப்பு வழங்கிய சுட்டி டிவி .
இன்று தன மூன்றாம் வருடத்தை முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது அதற்க்கு உங்கள் வாழ்த்தை தெரிவிக்கலாமே
சுட்டி டிவி நான்காம் ஆண்டு தொடக்கத்திற்கு என் வாழ்த்துக்கள்
கவிதை மாதிரி ?
அழகிய விழிகள் பார்க்கும் பார்வை !
செவ்விதழ் உதடுகள் பேசும் பேச்சு !
ஆப்பிள் போன்ற முகம்
வெண்ணிற மேனி பளிங்கு போன்ற முகம்
கண்ணே உன் புற அழகை கண்டு மையல் கொண்டேன்
அக அழகை காணும் வாய்ப்பில்லா குருடனாய்?
நேற்று என்ற முடிந்த கனவில் !
இன்று என்னும் நிஜத்தை கொன்று !
நாளைய சமாதிக்கு அடித்தளம் போடும்
முடிந்து போனவைகள் பற்றிய- நினைவுகள் .
திருமணமான புதியதில் முதல் சம்பளத்தில்
மனைவிக்கு நகை வாங்கும் போது
நினைவுக்கு வந்து கொன்றது
முதல் சம்பளத்தில் அம்மாவுக்கு வாங்காத சேலை?
விலைவாசி உயர்வு சட்டம் ஒழுங்கு
எதிர்கட்சிகள் பந்த் ஆர்பாட்டத்துடன் முடிந்தது
மாலை பத்திரிக்கை செய்தி "பந்த் மாபெரும் வெற்றி"
மாற்றம் இல்லாத தெருவோர கிழவன் வாழ்க்கை!
எப்படி உங்களுக்கு கவிதை(இது கவிதையா?) பிடித்து இருந்தால்
மறக்காமல் பின்னுட்டம் இடவும்
குறை இருந்தால் கூறவும் திருத்தி கொள்கிறேன்
நன்றியுடன்
ஹாய் அரும்பாவூர்
Monday, April 26
P for நீங்கள் " புத்தக விமர்சனம் "
ஒரு மனிதன் பர்ஃபெக்ட் ஆகா மாற மிக சிறந்த வழி கொஞ்சம் நாம் செய்வது சரியா என்று யோசித்தாலே போதும் அவன் பெர்பெக்ட் ஆகா முடியும் என்பதை நகைச்சுவையாக அதிலும் ஒரு நகைச்சுவை நூலா? இல்லை நம்மை பெர்பெக்ட் ஆகா மாற்றும் நூலா? என்று யோசிப்பதை விட சிறந்த ஒரு நூல் என்பது சிறந்ததது
9 ஆம் பக்கத்தில் ஆரம்பிக்கும் ஆசிரியர் 140 கடைசி பக்கம் வரை ஒவ்வொரு பக்கமும் சிரிக்க வைது சிந்திக்க வைப்பது ஆசிர்யரின் தனி கலை எனலாம்
ஒவ்வொரு பக்கத்திலும் சிறு சிறு நகைச்சுவை துணுக்கு மூலம் நாம் தினம் தோறும் செய்யும் சிறு சிறு தவறுகளை நாசுக்காக சுட்டி காட்டி உள்ளார் ஆசிரயர் ஜே எஸ் ராகவன்
புத்தகத்தின் முதல் தொடக்கத்திலே ஆசிரியர் வேண்டுகோள் என்று தொடங்கும் போதே நகைச்சுவை சர வெடி தொடங்கி விட்டது
*அறையில் தனியாக உட்கார்ந்து கொள்ளுங்கள்
*குல தேவதை வேண்டி கொள்ளுங்கள்
*மனசாட்சியை உசுப்பி விட்டு கொள்ளுங்கள்
மேற்கொண்டு சொல்ல ஆசைதான் ஆனால் புக்கை வாங்கி பாருங்கள் சிரிப்புடன் பெர்பெக்ட் ஆகா மாறுவிர்கள்
பர்ஃபெக்ட் ஆகா மாற்ற சிறந்த புத்தகம் சார் வேண்டும் என்றால் கீழே உள்ள ஆசிரியர் சொல்லி உள்ள இரண்டு சாம்பிள் மட்டும் படித்து பாருங்க
ஆனால் இதை போல் நூற்றுக்கு மேல் இருக்கு சிரிச்சு சிரிச்சு வயிறு வலிப்பதுடன் உங்களை நம்மை அறியாமல் செய்யும் தவறை திருத்த வைக்கும் சிறந்த நூல்
சாம்பிள் 1
கீதா கபேயில் பொங்கல் வடை காபியை வெட்டி விட்டு ,ஓவராக சாராயம் போட்ட குடி மகன் வாந்தி எடுக்கும் சத்தத்துடன் வாஷ் பேஸினில் வாயைக் கழுவிச் சுத்தம் செய்யும் வழக்கம் உண்டா ?
சாம்பிள் 2
சாலையில் நடந்து போகும் போது ,குதப்பிய பீடாவின் மிச்சத்தை ,பறந்து கொண்டே காக்காய் நினைத்த இடத்தில திடிரென்று "கக்கு" போடுவது போல டெக்னிகலர் குவியலாகத் துப்புவிரா ?
இது போன்று படிக்கும் போதே நாம் நம்மை அறியாமல் (அறிந்து ) செய்யும் சிறு சிறு தவறுகளை நாசுக்கான (நகைச்சுவையாக ) சிறப்பான முறையில் எழுதி உள்ளார்
சுய விமர்சனம் முதல் செல்லும்,அலெக்சாண்டார் பெல்லும் ! என்று 15 தலைப்புகளில் ஒரு ஒரு மனிதனின் வாழ்க்கையில் செய்யும் சிறு சிறு தவறுகளை திருத்தி கொள்ள சிறந்த நூல்
(அதிலும் சிறப்பு ஒரு நகைச்சுவை நூல் வாங்கியது போலவும் ,சுயமுன்னேற்ற நூல் என ஒரு கல்லில் இரண்டு வாழை பழம் )
வாழ்க்கையில் தினம் தினம் நாம் செய்யும் சிறு சிறு தவறுகளை மாற்றி நம்மை ஒரு பெர்பெக்ட் ஆகா மாற்றி நம்மை வாழ்க்கையில் சிறந்த நிலை அடைய உதவும் சிறந்த நூல்
ஒரு முறை இல்லை பல முறை நீங்கள் படிக்க வைக்கும் சிறந்த நூல்
அடுத்த முறை புத்தக கடை செல்லும் போது சரியா பராக்கு பார்த்து மறக்காம வாங்கி படிச்சு பாருங்க (சிரிச்சிக்கிட்டே படிப்பிங்க )
P for நீங்கள் சிறந்த நூல் சிரிப்புடன் சிந்திக்க வைக்கும் உங்களை ஒரு பர்ஃபெக்ட் ஆகா மாற்ற சிறந்த நூல்
மீண்டும் ஒரு சாம்பிள் 3
வாஸ்து பிரகாரம் கட்டப்பட்டது என்று பில்டர் சொன்ன பிளாட் ,சி.எம் .டி.எ. விதிகள் பிரகாரம் கட்டப்பட்டிருக்கிறதா என்று வாங்குமுன் சரி பார்த்து கொண்டால் நீங்கள் ஒரு உஷாரான mr . பெர்பெக்ட்
அப்போ ஒரு சிறந்த நூல் வாங்க நீங்க ரெடியா ?
இந்த நூல் உங்களிடம் இருந்தால் அதை பற்றி பின்னுட்டம் மூலம் தெரிவிக்கவும்
நூலின் பெயர் : P for நீங்கள்
ஆசிரியர் : ஜே .எஸ் .ராகவன்
வெளியிடு : கிழக்கு பதிப்பகம்
விலை : ரூ 60
உங்கள் ஆதரவை வேண்டி
ஹாய் அரும்பாவூர்
Sunday, April 25
இதற்க்கு பெயரா கவிதை ?
ரொட்டி துண்டின் மதிப்பு
பத்து ருபாய் நோட்டு புக்குக்கு
பத்தாயிரம் செலவு செய்து விளம்பரம் செய்பவனை
படம் பிடிக்கும் கேமராவுக்கு தெரியாது
ரோட்டோர நாய்க்கு ரொட்டி துண்டை போட்ட
பிச்சைக்காரன் பெருந்தன்மை
இந்தியனின் கவலை
ஐ பி எல் விளையாட்டும் முடிந்ததது
மோடியும் நிறுத்தியாகிவிட்டது
சுப்பர் கிங் கோப்பையும் வாங்கிவிட்டது
நாளைய இந்தியாவுக்கு
அடுத்த கவலை
உலக கோப்பை இருபது இருபது
இந்திய கோப்பை வாங்குமா ?
இவைகள் எல்லாம் கவிதை என்னும் வரிசையில் சேருமா என்று தெரியாது ஏதோ எழுதுகிறேன் என்று சொல்வதை விட
என் எழுத்து பாணியை நான் புதுபிகிறேன் என்று சொல்வது சிறந்தது
பத்து நிமிட எழுத்து உங்கள் எண்ணத்தில் ஏதும் மாற்றத்தை ஏற்படுத்தினால்
அதுதான் என் எழுத்தின் உண்மையான வெற்றி என்பேன்
இதற்க்கு முன் எழுதிய லஞ்சத்தின் வலி உங்கள் ஆதரவுக்கு நன்றி
Saturday, April 24
லஞ்சத்தின் வலி
லஞ்சம் வாங்குபவனுக்கு தெரியாது
அதை கொடுப்பவன் வலி என்ன என்று
மனம் எரிந்து கொடுத்தவன் காசில் அடுப்பெரிக்கும்
பிணம் தின்னி பிழைப்பு என்று
அடுத்தவன் கோவணத்தை உருவி -தன் மனைவிக்கு
பட்டுசேலை என்னும் நிர்வாணத்தை போர்த்தும் ஈனபொழைப்புகாரன்
கழுத்தை தாண்டி விட்டால்- உணவுக்கு கூட வேறு பெயர்
இது கூட தெரியாத பிச்சை பொழப்புக்கு மறுபெயர் - லஞ்சம்
உங்கள் ஆதரவுக்கு நன்றி
Friday, April 23
காலாண்டும் டாப் 10பாடல்களும்
இந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரை வந்த பாடங்களில் சிறந்த டாப் 10 பாட்டுக்கள்
இது என் பார்வையில் மட்டுமே
10 எப்படி என்னுள் காதல் வந்தது
படம் :கந்த கோட்டை
பாடகர்
9 .ஒரு புன்னகைதான் வீசி
படம் :தீராத விளையாட்டு பிலை
பாடகர் ரஞ்சித்
8 யாரோ என் நெஞ்சை திருடியது
படம் :குட்டி
பாடகர் சாகர் ,சுமகனலி
7 ஏழேழு தலை முறை
படம் :கோவா
பாடகர் கார்த்திக் ராஜ வெங்கட் பிரபு
6 அவள் அப்படி ஒன்றும அழகில்லை
படம் :அங்காடி தெரு
பாடகர் பிரசன்னா
5 ஒ மஹசியா
படம்: தமிழ்ப்படம்
பாடகர் ஹரிஹரன்
4 துளி துளி
படம் :பையா
பாடகர் :ஹரிசரண் தன்வி
3 ஹோசன
படம் :விண்ணை தாண்டி வருவா
பாடகர் விஜய் பிரகாஷ் ,சூசன
2 அடடா மழைடா
படம் :பையா
பாடகர் ராகுல் நம்பியார்
1 மன்னிப்பாயா
படம்:விண்ணை தாண்டி வருவாயா
பாடகர் எ ஆர் ரஹ்மான் ஸ்ரேயா கோசல்
இந்த காலாண்டில் சிறந்த பாடல்கள் அதிகம் கொடுத்த இசை அமைப்பாளர்
யுவன் ஷங்கர் ராஜா
பெஸ்ட் ஆல்பம்
பையா ,விண்ணை தாண்டி வருவாயா
சிறந்த பாடகர்
ராகுல் நம்பியார்
பாடல் :அடடா மழைடா
பதிவை படித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி
தொடரட்டும் உங்கள் ஆதரவு
நன்றியுடன் ஹாய் அரும்பாவூர்
படிச்சுட்டு அப்படியே ஒரு வோட்டையும் போட்டுட்டு போறது
Thursday, April 22
ஐ.பி.எல் இறுதி போட்டியில் AR ரஹ்மான் இசை மழை
ஏப்ரல் 24 மணிரத்னம் ராவணா ஹிந்தி இசை வெளியுடு மும்பை யாஷ் ராஜ் ஸ்டுடியோவில் தேர்ந்தெடுக்கப்பட ரசிகர்கள் மற்றும் திரை உலக பிரபலங்கள் மத்தியில் நடைபெறுகிறது . இதில் ராவணா மற்றும் தேர்ந்தெடுக்கப்பட மணிரத்னம் பட பாடல்களை ரஹ்மான் இதில் பாடுவார்
இது ஏற்கனவே எல்லோருக்கும் தெரிந்த விஷயம்
ஆனால் அடுத்த நாள் நடைபெறும் ஐ பி எல் இறுதி போட்டியில் ரஹ்மானும் பங்கு பெறுவார் என்பது இரட்டை சந்தோஷம் மும்பை வாசிகளுக்கு ஏப்ரல் 25 பட்டில் ஸ்டேடியத்தில் நடைபெறும் ஐ பி எல் இறுதி போட்டியில் ரஹ்மான் சில பாடல்களை தன குழுவுடன் பாடுவார் என எதிர்பார்க்கப் படுகிறது (நிச்சயம் ஜெய் ஹோ பட்டு இருக்கும் )
இதுவரை ஆதரவு தந்தவர்களுக்கும் நன்றி !!
இனி வரும் காலங்களில் ஆதரவு தர போகிறவர்களுக்கும் அட்வான்ஸ் நன்றி !!!
உங்கள் ஆதரவை வேண்டி
ஹாய் அரும்பாவூர்
Wednesday, April 21
செய்தியும் கோணமும் சினிமா செய்திகள்
கமல் ஹாசன் "யாவரும் கேளிர்" பெயர் மாற்றம் "காருண்யம் "
கமல் ஹாசன் த்ரிஷா இனைந்து நடிக்க உதயநிதி ஸ்டாலின் தயாரிக்க கே எஸ் ரவிக்குமார் இயக்கும் இப்படத்தின் பெயர் காருண்யம் என மாற்றப்படுகிறது
எது எப்படியோ கமல் ரவிக்குமார் என்றால் நூறு சதம் காமெடி என்பதை மட்டும் மாற்றாமல் ஒரு நல்ல நகைச்சுவை படமாக கொடுத்தால் சந்தோஷம் (பம்மல் கே சம்பந்தம் ,தெனாலி,பஞ்ச தந்திரம் படங்களை போல )
தயாநிதி அழகிரி தயாரிக்கும் மல்டி ஹீரோ படம்
தமிழ் திரை உலகில் ஒரு காலத்தில் இருந்த இப்போது இருக்கும் பந்த நடிகர்களால் இல்லாமல் போன ஹிந்தி மொழியில் இப்போதும் ஹிட் தரும் மல்டி ஹீரோக்கள் நடிக்கும் படம் போல தமிழிலும் தயாரிக்கும் முயற்சியில் தயாநிதி இறங்கி உள்ளார் . இந்த முயற்சிக்கு ஆதரவு தர போகும் பிரபல நடிகர்கள் யார் என்று தெரியவில்லை
இருந்த போதும் பாரட்ட வேண்டிய விஷயம் ஒரு காலத்தில் ரஜினி கமல் பாகுபாடு இல்லாமல் நடித்தது போல இப்போது யார் வர போகிறார் என்று பார்க்கலாம் (தமிழ்ப்படம் எடுத்து ஒரு எதிர்ப்பும் இல்லாமல் வெற்றி படம் கொடுத்தவர் அதே போல மீண்டும் வெற்றி தருவார் என எதிர்பார்க்கலாம் )
IIFA திரை விழாவும் தமிழ் திரை கலைஞர்களும்
உலகம் முழுவதும் நடத்தப்படும் IIFA திரை விருது விழ இந்த ஆண்டு இலங்கையில் அமைதி திரும்பி விட்ட காரணத்தால் இந்த ஆண்டு இலங்கையில் நடத்தபடுகிறது .இந்த விழாவில் கலந்து கொள்ள தமிழ் திரை உலகில் உள்ள பிரபல திரை கலைஞர்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது .ஆனால் இந்த விழாவில் கலந்து கொண்டால் உலகம் முழுவதும் உள்ள இலங்கை தமிழ் மக்கள் தங்கள் படத்தை புறகனிப்பார்களோ என்ற பயத்தில் தமிழ் திரை கலைஞர்கள் கலந்து கொள்ள தயக்கம் காட்டுகிறார்கள் ( முக்கிய நேரத்தில் கை கழுவி விட்டு இப்போ என்ன தயக்கம் )
சென்னை பாக்ஸ் ஆபீஸ்
சென்னை பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் ஏப்ரல் 16 முதல் ஏப்ரல் 18 வரை
3 விண்ணை தாண்டி வருவாயா
விண்ணை தாண்டி வருவாயா ஏழு வார முடிவில் 5 .46 கோடி வசூலுடன் மூன்றாம் இடத்தில உள்ளது
2 அங்காடி தெரு
சிறப்பான கதை களம் நல்ல திரை கதையுடன் வந்த இப்படம் மூன்று வார முடிவில் ரூ 1 .20 கோடி வசூலித்து இரண்டாம் இடத்தில உள்ளது
1 பையா
IPLஐ போய்யா என்று சொல்லி இந்த படம் வெற்றி படமாக மாற காரணம் பழகிய கதை என்றாலும் சோர்வு இல்லாத திரை கதை மற்றும் யுவனின் இசை மட்டுமே இரண்டு வார முடிவில் ரூ 3 .22 கோடி வசூலித்து வெற்றி படமாக மாறி உள்ளது
"காதல் பைத்தியங்கள்" கதை படித்து மனதிற்குள் திட்டிய/பாராட்டிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி

Tuesday, April 20
காதல் பைத்தியங்கள்
அந்த ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பூங்காவில் ஓரமாக இருந்த பெஞ்சில் அதிலும் ஒரமாக பவி உட்கார்ந்து இருந்தால்
அந்த பூங்கா முழுவதிலும் அனைவரும் மகிழ்ச்சியாக இருபது போலவும் தான் மட்டும் சோகத்தில் இருப்பதை போல உணர்ந்தார் விஜய் குமார்
அவள் மட்டும் தனியாக வந்து இருக்கிறாள் என்று உறுதிபடுத்தி கொண்டு அவள் அருகில் சென்றான் . விஜய் குமார்
"ஹும் !ஹும் !" மெல்ல இருமினான்
அவனின் இருமல் சத்தம் கேட்ட பவி மெதுவாக திரும்பி பார்த்து "நீங்களா ? என்ன வேணும் உங்களுக்கு ஏன் இன்னும் என் பின்னே வர்ரிங்க "என்று கோபமாக கேட்டல்
" நான் ஏன் உன் உன் பின்னே வரேன் என்று உனக்கு தெரியாத ?" என்று ஏக்கமாக கேட்டு அவள் முகத்தை நோக்கினான்
அந்த பார்வை சொல்ல வருவது என்ன கோபமா இல்லை கெஞ்சலா என்று எதுவும் தெரியாமல் தவித்தான்
" நீ என்னை மன்னிசேன் என்று ஒரு வார்த்தை சொன்ன போதும் இனி உன் பக்கமே வர மாட்டேன் இது சத்யம் "
என்று கெஞ்சினான் விஜய்
"நீங்கள் ஏன் அத்தை பையன் என்பதால் நீங்கள் என்னுடன் பேசுவது யாருக்கும் சந்தேகம் வர வில்லை ஆனால் அதையே நல்ல சந்தர்பமாக வைத்து என்னை நீங்கள் பார்க்க வருவதை நான் விரும்ப வில்லை "உங்களை நான் காதலித்தேன் அந்த பெரும் தவறு செய்து விட்ட காரணத்தால் மட்டுமே உங்களை நான் இந்த அளவில் பேச விட்டேன் அதை நீங்கள் பயன் படுத்தி மீண்டும் பேச வந்தால்
"கடைசியாக சொல்கிறேன் நீங்கள் மீண்டும் தொந்தரவு நான் தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை"அவளின் அந்த அமிலம் ஊற்றிய பேச்சை கேட்ட நொடி துடித்து போனான் விஜய் குமார்
"பவி நான் விளையாட்டு தனமாக செய்த அந்த விஷயம் நிச்சயம் மன்னிக்க முடியாது தான்? அதனால் தான் உன் மன்னிப்பு கிடைத்தால் நான் சாகும் போது என் ஆத்ம சாந்தி அடையும் என்று உன்னை அடிக்கடி தொந்தரவு செய்து விட்டேன். என்னை மன்னித்து விடு இனி நீ இருக்கும் பக்கமே திரும்பி பார்க்க மாட்டேன் "
என்று சொல்லிக்கொண்டு தன் ஊன்று கோலை எடுத்து கொண்டு மெதுவாக நடக்க ஆரம்பித்தார் அறுபத்தைந்து வயது விஜய குமார்
தனக்கு திருமனாமாகி நாற்பது வருடம் கழித்தும் இன்னும் முன்னே காதலித்த தப்பிற்காக இப்படி தொந்தரவு தருகிறாரே என்று விஜய குமார் போன திசையை கவலை கலந்த கோபத்துடன் நோக்கினால் அறுபது வயது பவித்ரா பாட்டி

'முடியாது உங்களை மன்னிக்க முடியாது, அப்படி உங்களை மன்னித்தால் அது நான் என் அப்பாவிற்கு செய்யும் பெரும் துரோகம் "
"நீங்கள் ஏன் அத்தை பையன் என்பதால் நீங்கள் என்னுடன் பேசுவது யாருக்கும் சந்தேகம் வர வில்லை ஆனால் அதையே நல்ல சந்தர்பமாக வைத்து என்னை நீங்கள் பார்க்க வருவதை நான் விரும்ப வில்லை "உங்களை நான் காதலித்தேன் அந்த பெரும் தவறு செய்து விட்ட காரணத்தால் மட்டுமே உங்களை நான் இந்த அளவில் பேச விட்டேன் அதை நீங்கள் பயன் படுத்தி மீண்டும் பேச வந்தால்
"கடைசியாக சொல்கிறேன் நீங்கள் மீண்டும் தொந்தரவு நான் தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை"அவளின் அந்த அமிலம் ஊற்றிய பேச்சை கேட்ட நொடி துடித்து போனான் விஜய் குமார்
"பவி நான் விளையாட்டு தனமாக செய்த அந்த விஷயம் நிச்சயம் மன்னிக்க முடியாது தான்? அதனால் தான் உன் மன்னிப்பு கிடைத்தால் நான் சாகும் போது என் ஆத்ம சாந்தி அடையும் என்று உன்னை அடிக்கடி தொந்தரவு செய்து விட்டேன். என்னை மன்னித்து விடு இனி நீ இருக்கும் பக்கமே திரும்பி பார்க்க மாட்டேன் "
என்று சொல்லிக்கொண்டு தன் ஊன்று கோலை எடுத்து கொண்டு மெதுவாக நடக்க ஆரம்பித்தார் அறுபத்தைந்து வயது விஜய குமார்
தனக்கு திருமனாமாகி நாற்பது வருடம் கழித்தும் இன்னும் முன்னே காதலித்த தப்பிற்காக இப்படி தொந்தரவு தருகிறாரே என்று விஜய குமார் போன திசையை கவலை கலந்த கோபத்துடன் நோக்கினால் அறுபது வயது பவித்ரா பாட்டி
இது வரை திட்டமா படித்ததிற்கு நன்றி
இதுவும் சும்மா ஒரு டைம் பாஸ் கதைதான்
படித்து மறக்காம ஒட்டு போடுங்க சாரே
Monday, April 19
செய்தியும் கோணமும் "கலாநிதி மாறன் "
போர்ப்ஸ் வருடம் வருடம் உலக பணக்காரர்கள் பட்டியல் வெளிவரும் .உலகின் சிறந்த பணக்காரர்கள் பற்றி விவரம் அப்போது வெளி வரும்
உலக பணக்கரகள் பட்டியலில் இந்த வருடம் உலகின் பெரும் 500 பணக்காரர்கள் வரிசையில் இந்திய கோடீஸ்வரர்கள் 25 பேர் இடம் பெற்றுள்ளனர்
அதிலும் நம் குறிப்பாக சன் டிவி உரிமையாளர் கலாநிதி மாறன் இந்திய அளவில் 18 வது பெரும் கோடிஸ்வர ஆகவும் உலக அளவில் 342 இடத்திலும் உள்ளார்
அதாவது கடந்த ஆண்டு இந்திய அளவில் 20 ஆவது இடத்தில இருந்த கலாநிதி மாறன் இந்த ஆண்டு அவர் நிறுவனத்தின் லாபம் காரணாமாக இந்த ஆண்டு 18 ஆவது இடத்தில உள்ளார் .
இந்திய அளவில் வேகமா வளரும் சன் டி டி ஹெச் ,சன் ஹெச் டி சேவை என தன் வழங்கும் சேவைகளில் புதுமை காரணாமாக அவர் இந்த அளவிற்கு வந்துள்ளார் என நினைக்கிறேன்
அரசியல் பலம் போன்றவைகளை அவர் பயன்படுத்தி இருக்கலாம் ஆனால் அதையும்மீறி மக்களை நிகழ்சிகள் பார்க்க வைக்க ஒரு திறமை வேண்டும் .
என்னதான் அரசியல் பலத்தை மட்டும் பயன் படுத்தினாலும் மக்களை தொடர்ந்து ஒரே நிகழ்ச்சியை பார்க்க வைக்க முடியாது .
ஒரே தொலைக்காட்சியை பார்க்க வைக்க முடியாது காலத்திற்கு ஏற்ப தன்னையும் மாற்றினால் மட்டுமே தொடர் வெற்றி கிடைக்கும் அதற்க்கு எடுத்து காட்டு சன் குழுமம் மற்றும் கலாநிதி மாறன்
மாற்று கருத்து இருந்தால் கருத்து இடவும்
என் பதிவுகள் தொடர் வெற்றி பெற முக்கிய காரணம் உங்களின் வாக்குகள் மட்டுமே காரணம் அதற்க்கு நன்றி
தொடர்ந்து ஆதரவு தரவும்
Sunday, April 18
"கவுண்ட் டவுன் " புத்தக விமர்சனம்
நேர நிர்வாகம் பற்றி சிறந்த புத்தகம்
புத்தகம் படிப்பது ஒரு பொழுது போக்கு சில நேரங்களில் சில புத்தகம் படிக்கும் போது நமக்கு பயனுள்ள தகவல்கள் இருக்கும் .சில புத்தகம் படிக்கும் போது நம் நேரம் மட்டும் வீணாகும் ,பாட புத்தகம் படித்தால் வாழ்க்கையில் ஒரு முன்னேற்றம் கிடைக்கும் அப்படிப்பட்ட ஒரு புத்தகம் தான் சிபி. கே .சாலமன் அவர்கள் எழுதிய கவுண்ட் டவுன்
புத்தகம் படித்தால் மட்டும் முன்னேற போவதில்லை அதன் படி நடக்கும் போதுதான் வெற்றியின் சதவிதம் உயரும்
அதற்க்கு உதவும் சிறந்த புத்தகம் "கவுண்ட் டவுன் "
புத்தகத்தின் ஆரம்பமே சிறு விளக்கம் என்றாலும் சிறப்பான விளக்கம்
"நேரத்தை காற்றாக எண்ணிக்கொண்டால் நம் லட்சியம் அதை பலுனில் அடைத்து சில்லறை காசு ஆக்குவது அல்ல.காற்றலை அமைத்து அதிலிருந்து மின்சாரம் உருவாக்கி கோடிஸ்வரர் ஆவதுதான் "
சுவாரசியத்துடன் சிறப்பாக நேர நிர்வாகம் பற்றி விளக்கி உள்ளார் ஆசிரியர்
1.உள்ளங்கையில் அல்ல மணிக்கட்டில்
2.நேரம் போத வில்லை என்று புலம்ப்புவரா நீங்கள் ?
3.களவு போகும் நேரங்கள்
4. நேரத்தை வசப்படுத்துவது எப்படி
5.எது முக்கியம்
6.நேரத்தோடு விளையாடுவது
7.டைம் டேபிள் மாஜிக்
8.ஒரு நாளைக்கு ௨௫ மணி நேரம்
9.நேரத்தை சேமிக்க சில டிப்ஸ்
10.நேரம் உங்களை துரத்த சில டிப்ஸ்
என்று பத்து தலைப்புகளில் ஒவ்வொரு தலைப்பிலும் அழகிய கதை ,புகழ் பெற்றவர்களின் வாழ்க்கை உதாரணம் மூலம் சிறப்பான முறையில் நேர நிர்வாகம் பற்றி விளக்கி உள்ளது இந்த புத்தகத்தின் சிறப்பு எனலாம்
சில சிறு அழகிய விளக்கங்கள்
உதவி இயக்குனர்களுக்கு அகிரா குரசோவ சொல்லும் யோசனை "தினசரி ஒரு பக்கம் எழுதுங்கள் எத்தனை சோர்வாக இருந்தாலும் மூட் அவுட் ஆகா இருந்தாலும் படுப்பதற்கு முன் ஒரு பக்கம் எழுதி விடுங்கள் வருஷ கடைசியில் உங்களிடம் 365 எழுதிய பக்கங்கள் இருக்கும் "
நீண்ட நேரம் தூங்கினால் நீண்ட நேரம் முழித்திருப்போம் நம்மிடம் நிறைய சக்தி மீதம் இருக்கும்
"இது தவறானா தகவல் நீண்ட நேரம் தூங்கினால் நீண்ட நேரம் முழிதிருப்போம் என்று எண்ணுவதே மருத்துவ ரீதியாக தவறு .மாறாக நம் உடலில் பயோலாஜிக்கல் சிஸ்டத்தையே நீண்ட நேர தூக்கம் குழப்பி விடும்
போன்ற மருத்துவ விளக்கம்
ஒரு நிமிட நேரம் என்பதில்
பூமி 950 மைல்கள் தன்னை தானே சுற்றி விடுகிறது
நூற்றி பத்து கார்கள் தயாராகிறது
நூற்றி ஐம்பது குழந்தைகள் பிறக்கின்றன
என்ற தகவல்கள் ஆகட்டும்
நேர நிர்வாகம் பற்றி நம்மை நாமே சோதித்து பார்க்க உதவும் சிறந்த் புத்தகம்
இருபத்தோராவது வயதில் முதல் தோல்வியில் அப்ரகாம் லிங்கன் சோர்ந்து போய் இருந்தால் இன்று நாம் அப்ரகாம் லிங்கன் அவர்களை மறந்து போய் இருப்போம் போன்ற உதாரண புருசர்கள் பற்றி தகவல் என அழகிய முறையில் புத்தகம் முழுவதும் உள்ளது நிச்சயம் நம் புத்தக சேமிப்பில்இருக்க வேண்டிய சிறந்த புத்தகம் கவுண்ட் டவுன்
புத்தகத்தில் கடைசியில் உள்ள வரிகள் போல
" விநாடி முள்ளாக மாறுங்கள் .விமானங்கள் எட்ட முடியாத உயரத்தை தொடுவது அப்போது சுலபம் ஆகி விடும் "
மீண்டும் புத்தகம் கடை சென்றால் மறக்காமல் வாங்க வேண்டிய சிறந்த புத்தகம்
"கவுண்ட் டவுன் "
நூலின் பெயர் : கவுண்ட் டவுன்
ஆசிரியர் : சிபி .கே .சாலமன்
வெளியுடு : கிழக்கு பதிப்பகம்
விலை : ரூ 70
Saturday, April 17
ராவணா இசை வெளியுடு ஏப்ரல் 24 & மூன்று புத்தகம்
எதிர்பார்ப்பு உள்ள ரஹ்மான் மணிரத்னம் கூட்டணியில் இசை வரும் ஏப்ரல்24 வரும் ஏன் எதிர்பார்க்க படுகிறது
ரஹ்மான் ரத்னம் கூட்டணி என்றாலே இசை பற்றி எதிர்பார்ப்பு இந்தியா முழுவதும் இருக்கும்
அதுவும் இந்த படம் அபிசேக் பச்சன் ஐஸ்வர்யா ராய் நடிப்பில் ஹிந்தி மொழி மற்றும் விக்ரம் ஐஸ்வர்யா ராய் நடிப்பில் தமிழ் மொழி மற்றும் தெலுகு மொழி என மூன்று மொழிகளில் வருகிறது
வீடியோ முன்னோட்டம்
இந்த படத்தின் சிறு திரை முன்னோட்ட வீடியோ இப்படத்தின் இசை மற்றும் படம் பற்றி ஒரு எதிபார்ப்பை உண்டாக்கி உள்ளது
இப்படம் இசை முதலில் ஹிந்தி மொழியில் வரும் என எதிர்பார்க்க படுகிறது
இசை வெளியுடு : டி சீரீஸ் ஆடியோ
இந்த பதிவில் ரஹ்மான் பற்றி வந்துள்ள மூன்று புத்தகம் பற்றி சின்ன தகவல்கள்
முதலில் கிழக்கு பதிப்பகம் வெளியுட்டுள்ள புத்தகம் பற்றி
ஜெய் ஹோ ரஹ்மான் (என் .சொக்கன் )
கிழக்கு பதிப்பகம் இப்போது தமிழ் சிறந்த புத்தகம் வெளியிடும் பிரசுரம் என்றால் அது மிக பெரும் உண்மை
வியாபாரம் ,சினிமா ,விளையாட்டு ,தொழிநுட்பம் ,வரலாறு என்று சொல்லி கொண்டே செல்லலாம் அந்த வகையில்
வரலாறு வரசையில் கிழக்கு பதிப்பகம் வெளியுட்டுள்ள சிறந்த புத்தகம்
ரஹ்மான் பற்றி அறிந்து கொள்ள சிறந்த புத்தகம் ரஹ்மான் ரசிகர்கள் நிச்சயம் வாங்க வேண்டிய புத்தகம்
இந்த புத்தம் வெளியுடு பற்றி கிழக்கு பதிப்பகம் மற்றும் ஆஹா எப் எம் வழங்கிய பாட்காஸ்ட் ஒலிபரப்பு கிடைத்தால் வரும் பதிவுகளில் போடுகிறேன்
நூல் :ஜெய் ஹோ ரஹ்மான்
ஆசிரியர் :என் சொக்கன்
வெளியுடு :கிழக்கு பதிப்பகம்
விலை :ரூ 80
அடுத்த புத்தகம் ஒரு கனவின் இசை
ஆனந்த விகடன் புத்தகத்தில் தொடராக வந்து பின் புத்த வடிவில் வந்துள்ள புத்தகம் கிருஷ்ணா டாவின்சி எழுதிய இந்த புத்தகம் ரஹ்மான் பற்றி அறிய விரும்பும் அவர் ரசிகர்கள் விரும்பும் வடிவில் இருக்கிறது
நூல் :ஒரு கனவின் இசை
ஆசிரியர் :கிருஷ்ணா டாவின்சி
வெளியுடு :விகடன் பிரசுரம்
next: a r rahman the musical storm
ரஹ்மான் பற்றி ஆங்கிலத்தில் வந்துள்ள புத்தகம் அதிலும் புகழ் பெற்ற பென்குயின் பதிப்பகம் வெளியுட்டுள்ள புத்தகம்
இந்த புத்தகம் பற்றி முழு விவரம் தெரிய வில்லை என்ற போதும் ரஹ்மான் பற்றி ஆங்கிலத்தில் வந்த புத்தகம் என்ற அளவில் தெரியும்
நூல் : a r rahman the musical storm
ஆசிரியர் : kamini mathai
வெளியுடு : Penguin Books
ஒரு பதிவின் முக்கிய வெற்றியே அதன் படிக்கும் உங்களின் போன்றோரின் வாக்கே.
பதிவு பிடித்து இருந்தால் மறக்காமல் ஒட்டு போடுங்கோ
Wednesday, April 14
கொச்சி அணியும் சேட்டன்மார்களும்
கொச்சி அணியும் சேட்டன்மார்களும்
ஐ.பி.எல் கிரிக்கெட் அணி தொடர்பான புகாரின் ஆதாரம் இருந்தால் சசி தரூர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் பிரதமர் மன்மோகன் சிங்
(அதுக்கு அப்புறம் )
கொச்சி அணியை கை விடுமாறு தாவூத் இப்ராஹிமிடமிருந்து சசி தருரூருக்கு கொலை மிரட்டல் வந்தததாக சசி தரூர் உதவியாளர் தெரிவித்துள்ளார்
(ஒசாமா பின்லேடேன் மிரட்டல் விடவில்லையா ?)
(ஒசாமா பின்லேடேன் மிரட்டல் விடவில்லையா ?)
ரூ 70 கோடி மதிப்புள்ள 18 சதம் பங்குகளை காஸ்மீர் மாநிலத்தை சேர்ந்த அழகு கலை நிபுணர் சுனந்த புஸ்கர் என்பவருக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது
(எவன் அப்பன் வீட்டு சொத்து )
சுனந்தாவை சசி தரூர் திருமணம் செய்ய போவதாக செய்திகள் வெளி வந்துள்ளன
(நாட்டுக்கு ரொம்ப முக்கியம் )
கொச்சி ஐ.பி.எல். அணியை பொறுத்தவரை இது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால், அணியை ஏலம் எடுக்க செய்தவர்களுக்கே கூட அந்த அணியின் உண்மையான உரிமையாளர் யார் என்பது தெரியாது என்று லலித் மோடி சொன்னார்
(தெரிஞ்சா என்ன செய்விங்க? )
கிரிக்கெட் விளையாட்டு என்பது இந்தியாவில் தேசிய விளையாட்டு என்று சொன்னால் மிகை இல்லை
ஆனால் இந்த விளையாட்டை வைத்து எத்தனை கோடி பணம் ,அரசியல் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த ஒரு நல்ல திட்டத்தையோ கொண்டு வருவதை விட அரசியல் பலத்தை பயன்படுத்தி விளையாட்டை வாங்குவதால் என்ன பயன் என்று தெரியவில்லை
ஒரு வேலை நாங்கள் தமிழ் நாட்டை தோற்கடித்து விட்டோம் என்று (விளையாட்டில் மட்டும் )
சொல்லி சந்தோசப்பட கூட இருக்கலாம்
மாநிலத்தில் எத்தனையோ பிரச்சினை இருக்க விளையாட்டை நிறுவனங்கள் வாங்கினால் அது அவர்கள் நிறுவனத்திற்கு விளம்பரம் ஆகா அமையும்
ஆனால் ஒரு மாநில மந்திரி பெயர் இந்த அளவிற்கு அடிப்படுவது என்னவென்று சொல்வது
சர்ச்சையில் அடிப்படுவது சசி தருருக்கு புதுசு இல்லையே .
புட் பாலை கிழித்து விட்டு இப்போது கிரிக்கெட் பந்தை ஒரு கை பார்க்க போகும் சேட்டன்களுக்கு வாழ்த்துக்கள்
என்ன கருமாந்திரம்டா இது ?
இது நீங்க நினைப்பது
(இது ரொம்ப முக்கியமான பதிவா ?)
வருகைக்கு நன்றி
Monday, April 12
காதலிக்க நேரமில்லை
நம் மனம் வருத்தமாக இருக்கிறது நல்ல வருத்தத்தை போக்க என்ன வழி இப்படி கேட்டால் ஆளாளுக்கு ஒரு விளக்கம் கொடுப்பார்கள் அவர்கள் அனுபவத்தில் சிலது நல்லதாக இருக்கும் .சிலது கேட்டதாக இருக்கும்
என் அனுபவத்தில் மனதுக்கு இதம் அளிக்கும் விசயங்களில் ஒன்று பாட்டு கேட்பது மற்றது
நல்ல நகைச்சுவை கலந்த திரை படங்கள் பார்ப்பது அந்த வகையில் ஏற்கனவே பாமா விஜயம் ,மற்றும் எதிர் நீச்சல் பற்றி எழுதி விட்டேன் இந்த பதிவில் நான் சொல்ல போற படம் காதலிக்க நேரமில்லை
இந்த படத்தை பற்றி குறை சொல்ல வேண்டும் என்றால் படம் ஆரம்பித்ததே தெரியல்ல அதுக்குள்ள படம் முடிஞ்சிடுச்சுன்னு சொல்வதை தவிர ..
ஸ்ரீதர் இயக்கிய இப்படம் ஒரே குறிக்கோள் மட்டுமே படத்தை பாருங்கள் சிரிங்க சிரிச்சிட்டு போங்க
நாகேஷ் முத்துராமன் ரவிச்சந்திரன் பாலையா காஞ்சனா சச்சு என்று இப்படத்தில் ஒரு நடிகர் பட்டாளமே நகைச்சுவை கூட்டணி படம் முழுவதும் ஒரே சிரிப்பு மழை தூவி இருக்கும்
அதிலும் நாகேஷ் செல்லப்பா என்ற வேடத்தில் படம் தயாரிக்கிறேன் என்று அவர் அடிக்கும் லூட்டி இருக்கே இப்போது பார்த்தாலும் படம் புதிதாக இருக்கும் அதுதான் இந்த படத்தின் நகைச்சுவை திரை கதை யுக்தி
ரவிச்சந்திரன் காதலுக்கு உதவி புரிய வரும் முத்துராமன் வயதான வேடத்தில் செல்வந்தராக பாலையா இடம் ஏமாற்றும் காட்சியாகட்டும் .அவர் உதவி புரிய வந்த இடத்தில அவர் காதலிக்கும் பெண் காஞ்சனா இருப்பது .முத்துராமன் தந்தையாக வரும் ராகவன் தன மகன் வயதான வேடத்தில் இருப்பது தெரியாமல் அவரிடமே .தன் மகன் கல்யாண விஷயம் பற்றி பேசுவது என்று படம் முழுவதும் சிறப்பான திரை கதை இப்படத்தில் .
ஒரு அழகிய காதல் கதையில் நகைச்சுவை என்னும் தேரை சிறப்பாக ஒட்டி இருப்பார் ஸ்ரீ தர் .
ரவி சந்திரன் ராஜஸ்ரீ , முத்துராமன் காஞ்சனா சம்பந்தப்பட்ட காதல் காட்சியாகட்டும் .
பாலையா நாகேஷ் இடையேயான வசனங்கள் ஆகட்டும் .நகைச்சுவை வசனங்கள் முக்கியமாக் இருக்கும் ஓஹோ ப்ரொடக்சன் என்று அவர் அடிக்கும் லூட்டி படத்தின் கதை நாயகன் இவர் எனலாம்
"ஏன்டா என் மானத்தை வாங்குற "என்று பாலையா கேட்க்க வேற என்ன செய்வது பணம் தான் வாங்க முடியலியே "என்று நாகேஷ் அடிக்கும் டைமிங் வசனம்
நாகேஷ் பாலையா இடம் கதை சொல்லும் காட்சி அதற்க்கு அவர் காட்டும் முக பாவங்கள் .பாலையா பயந்து போய் கதை ரொம்பா பயங்கரமா இருக்கு என்று அவர் பயப்படும் காட்சிகள்
பணக்கார வேடத்தில் இருக்கும் முத்துராமன் இடம் பணம் கேட்டு நாகேஷ் வரும் போது பாலையா அந்த இடத்தில இருப்பார் அப்போது பாலையா "உன்னை மகனா பெத்தேனே என்னை செருப்பால அடிக்கணும் என்பார் "அதற்க்கு நாகேஷ் உங்களுக்கு மகனாக பிறந்தேன அதற்க்கு என்னை நானே செருப்பால அடிக்கணும்" என்பார் நான் அடிச்சு செருப்பை கீழே போடுறேன் அதை எடுத்து நீ அடிச்சுக்கோ என்பார் உடனே நாகேஷ் வேண்டாம்பா செருப்பால அடி வாங்கின குடும்பன்னு ஊர் பேசும் என்பார்
பாமா விஜயம் போல இந்த படத்தில் உள்ள நகைச்சவை வசனங்கள் எழுதினால் பல பதிவு போட வரும்
மற்றும் ஒரு சிறப்பு விஷயம் இப்படத்தின் குளுமையான ஒளிபதிவு கோவை பொள்ளாச்சி என்று கண்ணுக்கு சிறப்பாக இருக்கும்
இசை விஸ்வநாதன் ராம மூர்த்தி என்ன பார்வை உந்தன் ,விஸ்வநாதன் வேலை வேண்டும் ,உங்க பொன்னான கைகள் ,காதலிக்க நேரமில்லை என்று எல்லா பாடல்களும் சிறப்பாக அமைந்த படம்
ஒரு நல்ல காதல் கதையை வயிறு குலுங்க சிறிது பார்க்க வேண்டும் என்றால் அது காதலிக்க நேரமில்லை
மிக சிறந்த நகைச்சவை படங்களில் முக்கியமான படம் காதலிக்க நேரமில்லை
இப்போதும் படம் எடுக்கிறான் என்று மண்டை காய வைக்கும் இன்றைய இயக்குனர்கள் பார்க்க வேண்டிய படம்
எனக்கு தெரிந்த வரை படம் எடுப்பதில் அதிலும் நகைச்சவை படம் எடுப்பது ரொம்ப கஷ்டம்
அதனால் தான் இப்போது நகைச்சவை படம் வருவதில்லை எனலாம்
முடிந்தால் ஒரு நல்ல கம்பெனி டி வி டி வாங்கி வைத்து கொள்ளவும்

Saturday, April 10
பின்னுட்டமும் சில பிரச்சினைகளும்
நாம் ஒரு பதிவை படிக்கும் போது எல்லோருக்கும் அந்த பதிவு பிடித்து இருந்தால் வாக்களிப்பதும் மற்றும் அந்த பதிவை பற்றி கருத்து கூறுவதும் இயல்பு
இப்போ நான் சொல்ல வர்ற விஷயம் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் எழுதுகிறேன் எனக்கு கணினி பற்றி சில விஷயங்கள் தெரியும் ஆனால் முழுவதும் தெரியாது .நான் மொஸிலா மொசில்ல firefox பயன் படுத்துகிறேன்
சில பதிவுகளுக்கு பின்னுட்டம் இடும் போது கீழே உள்ள வகையில் உள்ள பதிவுகளுக்கு பின்னுட்டம் இடும் போது
சில பதிவுகளுக்கு பின்னுட்டம் இடும் போது கீழே உள்ள வகையில் உள்ள பதிவுகளுக்கு பின்னுட்டம் இடும் போது எனக்கு பாதுகாப்பு எச்சரிக்கை வருகிறது இது போல் warining :-contains unauthendicated content
என்று வருகிறது.மற்றும் பாதுகாப்பு பூட்டில் சிவப்பு அடையாளம் வருகிறது . அதே பதிவில் முதல் பின்னுட்டம் நம் பின்னுட்டமாக இருந்தால் இந்த எச்சரிக்கை வருவதில்லை
இது பற்றி எனக்கு விவரம் தேவை இதனால் பல பதிவுகளுக்கு பின்னுட்டம் போடுவதில்லை
ஆனால் கீழே இருப்பதை போன்று
embedded below பின்னுட்டமாக இருந்தால் எந்த எச்சரிக்கை வசனம் வருவதில்லை
இது பற்றி நான் பல வெப் சைட் மூலம் சரி செய்யலாம் என்றால் சரியான தீர்வு இல்லை
இது எனக்கு ஏற்பட்ட பிரச்சினை உங்களுக்கும் இது போன்று பிரச்சினை இருந்தால் அதை சரி செய்தவது எப்படி என்று தெரிந்தால் பின்னுட்டம் போடவும் அல்லது சரி செய்யும் தீர்வு பற்றி தளங்கள் இருந்தால் தெரிவிக்கவும்
இந்த பிரச்சினையில் தான் நான் பல பதிவுகளுக்கு பின்னுட்டம் போடுவதில்லை என்று தாழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்
settings comment
கீழே இருப்பதை போன்று மாற்றினால் இந்த எச்சரிக்கை வருவதில்லை
இதே பிரச்சினை சபாரி ,குரோம் பிரௌசர் இதே பிரச்சினை வருகிறது
அல்லது இந்த பிரச்சினை பற்றி தீர்வு பற்றி ஏதேனும் வலை தளம் இருந்தால் தெரிவிக்கவும்

Wednesday, April 7
சும்மா ஒரு நீதி கதை
ஒரு பாதையோரம் இருந்த குளத்துக்கு பக்கத்துல ஒருத்தன் சின்ன சின்ன கற்களை அடுக்கி வைத்து ஒவ்வொரு கல்லா எடுத்து குளத்துல போட்டு கொண்டு இருந்தான்
அந்த பாதையில போன எல்லாருக்கும் என்னடா இவன் இப்படி கல்லை ஒவ்வொன்ன போடுறானேன்னு .சந்தேகம் "ஏம்பா தம்பி உனக்கு வேற வேலை வெட்டி இல்லையா இப்படி கல்லை குளத்துல போடறியே அப்படின்னு கேள்வி கேட்டு பார்த்தாங்க "
அவன் அவர்கள் இப்படி கேட்பதை கண்டுக்காம ஒன்னு ரெண்டு அப்படின்னு எண்ணிக்கிட்டே மீண்டும் கல்லை குளத்துல போட ஆரம்பித்தான்
இவன் இப்படி குளத்துல கல்லை போடறதும் வழியில் போறவங்க கேள்வி கேட்பதும் அவன் ஒன்னு ரெண்டுன்னு எண்ணுறதும் இதை எல்லாம் ரொம்ப நேரமா தூரத்தில் இருந்து பார்த்துகிட்டே இருந்து அவன்
" தம்பி நான் கேட்கிறேன்னு தப்ப நினைக்காதே இப்படி இவ்வளவு கல்லை வைச்சு குளத்துல ரொம்ப நேரமா போடுறியே உனக்கு வேற வேலையே இல்லையா நீ தப்ப நினைக்கிலன்ன ஏன் இப்படி பண்றேன்னு சொல்ல முடியுமா ?"அப்படின்னு கேட்டான்
ரொம்ப நேரமா பேசாம இருந்த அவன் சொன்னான்
"இந்த உலகத்தில் யாரும் வெட்டின்னு செய்றது இல்லை அவன் அவன் செய்ற வேலை பற்றி அவனுக்கு தெரியும் .
எனக்கு தெரிஞ்சு உலகத்திலே வெட்டி வேலை அப்படின்னு சொன்ன அடுத்தவன் என்ன செய்றான் ஏன் செய்றான் அப்படின்னு ஆராய்ச்சி செய்றது கேள்வி கேட்கிறதே வேலையா இருக்கறவனை சொல்வேன் அப்படிப்பட்ட ஆட்கள் எதனை பேர் இங்கே இருக்காங்கன்னு எண்ணி பார்த்தேன்" அப்படின்னு சொன்னான்
இவ்வளவு நேரமா இதை பார்த்த கேள்வி கேட்ட எல்லோரையும் வேலை வெட்டி இல்லாதவன் ஆக்கி விட்டு அவன் பாட்டுக்கும் எழுந்திரித்து போனான்
நீதி 1
அடுத்தவன் செய்றது எல்லாம் வெட்டி வேலை என்று நினைத்து கேள்வி கேட்டு நேரத்தை வீனாக்குவதே மிக பெரும் வெட்டி வேலை
சும்மா டைம் பாஸ் கதை படித்து விட்டு திட்டதிங்கோ
உங்கள்
ஹாய் அரும்பாவூர்
DONT MISS MY VOTE
OK
Tuesday, April 6
தினமணியில் வலைபதிவு திரட்டி
தமிழ் வலைபதிவு இப்போது மிகவும் புகழ்பெற்று விளங்க காரணம் வலைபதிவு திரட்டிகள் என்றால் மிகை இல்லை நாம் எழுதும் பதிவு எவ்வளவுதான் சிறப்பாக இருந்தாலும் அது எல்லோருக்கும் சென்றடைய உதவி செய்வது தமிளிஸ் தமிழ்10, உலவு தமிழ் மணம் நம் குரல் போன்ற எத்தனையோ வலைபதிவு திரட்டிகள் உதவி புரிகின்றன
இப்போது உள்ள புகழ் பெற்ற பத்திரிக்கை எல்லாம் வலைப்பதிவு தகவல்களுக்கென தனி இடம் தருகின்றன
இப்போது அந்த வகையில் தினமணி தன் இணைய பகுதியில் தமிழ் வலைபதிவு திரட்டிக்கென தனி இடம் ஒதுக்கி உள்ளது
மற்ற திரட்டிகள் போல நேரிடையாக நம் வலைபதிவு சேர்க்க முடியாது .முதலில் நம் வலைபதிவு பற்றி விஷயங்கள் நம் விவரங்கள் எல்லாம் கொடுத்தால் ஆசிரியர் குழு பரிசிலித்து அதன் இணைய பகுதியில் வெளியிடும்
புகழ் பெற்ற தின மணி இதழில் உங்கள் வலை பதிவு இடம் பெற வேண்டுமா ?
உடனே தின மணி இணையத்தில் உங்கள் வலைபதிவு பற்றி தகவல் தாருங்கள் உங்கள் பதிவு புகழ் பெற்ற தினமணி இணையதில் இடம் பெறட்டும்
தின மணி பதிவு திரட்டி பார்க்க இதை அழுத்தவும்
பதிவு பிடித்து இருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்
Subscribe to:
Posts (Atom)